ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

முதலாளித்துவ ஜனநாயகம்.

நம்முடைய ஈழத்து அரை அம்பிகள் தமிழகத்து முழுஅம்பிகளை விட ஒரு படி மேலே சென்று உக்ரேன் பிரச்சனையில் அமெரிக்காவை கதாநாயனாக்கி ரசியாவை வில்லனாகச் சித்தரிக்க படாத பாடு படுகிறார்கள். அடே முட்டாள் அம்பிகளா! வில்லனே அமெரிக்கா தான்‌ரா! அமெரிக்க கோதுமையையும் எரிவாயுவையும் விட ரசிய கோதுமையும் எரிவாயுவும் மலிவானவை.அமெரிக்க கோதுமையும் எரிவாயுவையும் வாங்க வைக்க வேண்டும் என்ற நிர்பந்ததை உருவாக்க வேண்டும் என்றால் ரசியாவை போர் செய்ய வைத்துப் பொருளாதார தடை விதிக்க வேண்டும்.இந்தப் பொருளாதார தடையால் பாதிக்கப்படப் போவது ரசியாவோ ரசிய மக்களோ அல்ல.அம்பிகளான நீங்கள் உட்டபட உலக மக்கள் தான்.எரிவாயவும் கோதுமையும் விலையேற அனைத்து உற்பத்திப் பொருட்களுக்கான விலைகளும் ஏற்றப்படும்.ரசியாவால் தான் இந்த விலையேற்றம் நடந்ததாக நீங்கள் நம்ப வைக்கப்படுவீர்கள்.அதாவது சதாம் ஹு சைன் அணுவாயுதம் வைத்திருக்கிறார் என்று கூறி அவரையும் அழித்து ஈராக்கையும் நாசப்படுத்தியை நீங்கள் நம்பியைதைப் போல... அடுத்து உக்ரேனிய அரசுத்தலைவர் ஒன்றும் மாகா உத்தமர் கிடையாது.அவர் ஒரு அப்படமான இனவாதி நியோ நாசி என்று கூறச் சொல்லலாம்.ரசிய மொழி பேசும் டன்பாஸ் மக்களின் உரிமைப் போராட்டத்தை ஈழத்தில் கோத்தபாய செய்ததைப் போல ஈவிரக்க மின்றி ஒடுக்கியவர்.18 ஆயிரம் மக்களைப் படுகொலை செய்தவர். இந்த மக்களுக்கு உரிமைகளை வழங்கப்பட வேண்டும் என்பதை ‌ஜேர்மன் பிரான்ஸ் நாடுகளின் மத்தியஸ்துவத் தோடு செய்யப்பட்ட உடபடிக்கைளை துாக்கி வீசியவர். நம்முடைய கோத்தபாய அண்ணாச்சி சீனாவை கொண்டு வந்து நெடுந்தீவு பிரதேசத்தில் காலுான்ற வைக்க முயற்சி செய்ததைப் போல் உக்ரேன்அரசுத்தலைவர் விலாதிமீர் செலோன்கி உலக பொலிசுக்காரரரை இந்தப் பிரதேசத்தில் காலான்ற வைத்து ரசியாவை அச்சுறுத்தி டன்பாஸ் மக்களின் உரிமைப் போராட்டத்தை முற்றாக நசுக்க திட்டமிட்டவர்.அம்பிகளா ரசியா ஒன்றும் இப்போது கெம்யுனிச நாடில்லலை. அது 10 பெரு முதலாளித்துவ குடும்பங்களால் மறைமுகமாக ஆளுமை செய்யப்படுகிற ஒரு முதலாளித்துவ நாடு. ஆனால் இந்தியாவைப் போல நம்பவைத்து கழுத்தறுக்கும் நாடில்லை. கடந்த 3 நாள் போரில் 193 பொதுமக்கள கொல்லப்பட்டிருப்பதாக உக்ரேன் அரசு அதிகார பூர்வமாக அறிவித்திருக்கிறது. உங்கள் பெரியண்ணனமார் லிபியா சிரியா ஈராக் ஈழம் முதலான நாடுகளில் நடத்திய ஒரு நாள் போரில் எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.எத்தனை குழந்தைகள் அதில் அடங்கியருந்தார்கள் என்பதை ஒரு கணம் மீட்டுப் பார்த்தீர்கள் என்றால் போர் வெறியர்கள் யார் என்பது உங்களுக்குப் புரியும். கொரோனா நெருக்கடிக்குள் பொருளாதார இழப்பை நீங்கள் சந்தித்திருக்கும் நேரத்தில் உங்கள் வருமானத்தைக் கூட்டாமல் பொருட்களின் விலையைக் கூட்டினால் வேலை நிறுத்தம் போராட்டம் ஆர்பாட்டம் என்று துள்ளிக் குதிப்பீர்கள். போரைத் திணித்து விலையைக் கூட்டினால் நிங்கள் நீதி நியாயம் பேசி மனித உரிமைகள் என்றெல்லாம் பேசி அதில் முடங்கிப்போய்விடுவீர்கள்.இது தான்டா அம்பிகளே நீங்கள் நம்புகிற முதலாளித்துவ ஜனநாயகம்.

சனி, 19 பிப்ரவரி, 2022

உமா மகேஸ்வரன் எழுச்சியும் வீழ்ச்சியும். -சிவா சின்னப்பொடி

 2

உமா மகேஸ்வரனை புரிந்து கொள்வதற்கு 1970 களில் இலங்கையின் வடக்கு கிழக்கில் இருந்த சமூக அரசியல் பொருளாதார கட்டமைப்பையும் அந்தக் கட்டமைப்புக்குள் இருந்து தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தோன்றிய பின்னணியையும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்களுடைய, குறிப்பாக இதற்கு தலைமைதாங்கியவர்கள்,முக்கிய பொறுப்புகளை வகித்தவர்கள் , கொள்கை மற்றும் போராட்ட திட்டங்களை வகுத்தவர்களுடைய வர்க்க சாதிய பின்னணிகளையும் ஆராய்வது மிகவும் அவசிமாகும்.

இலங்கை தீவிலுள்ள சிங்கள தமிழ் சமூகங்கள் ஐரோப்பிய சமூகங்களை போல படி நிலை வளர்ச்சி பெற்ற சமூக அமைப்புகளாக ஒருபோதும் இருக்க வில்லை.அவை அடிமை சமூகத்தினதும் நிலபிரபுத்துவ சமூகத்திதும்; கலாச்சார பண்பாட்டுக் கூறுகளை மீள் நிர்மாணம் செய்து கொண்ட அரை நிலப்பிரபுத்தவ சமூக அமைப்புகளாகவே இருந்தன.இப்போது நவதாராளவாதத்துக்கு எற்வாறு இந்த பண்புகளை மீள்நிர்மாணம் செய்து கொண்டு வாழும் கலப்பு சமூக அமைப்புக்களாகவே அவை இருக்கின்றன.

ஐரோப்பாவில் மதஅமைப்புகளின் பிடியிலிருந்து அரசியல் தளம் விடுவிக்கப்பட்டது போல இலங்கைத் தீவில் அரசியலை விட்டு மதம் பிரிக்கப்படவில்லை.இங்கு சிங்கள சமூகமும், தமிழ் சமூகமும் மதத்தை முன்நிறுத்தியே அரசியல் செய்தன.

கிபி 1860 களில் தோற்றம் பெற்ற சிங்கள தேசியவாதம் பௌத்தத்தை இணைத்துக்கொண்டு பௌத்த சிங்கள பேரினவாதமாக அதி வேகமாக உருமாற்றம் பெற்றது.

இதே காலப்பகுதியில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் தோற்றம் பெற்ற தமிழ் தேசியவாதம் வைதீக சைவ மத்தைதை முன்நிறுத்தி சைவம் தமிழ் என்ற அரசியல் செய்ய முனைந்து. ஆனால் அதனால் சிங்கள தேசியவாதம் வளர்ந்த அளவுக்கு வளரவில்லை.

அதற்குக் காரணம் வைதீக சைவத்தின்; ஆணிவேராக இருக்கும் வர்ணாச்சிரம கோட்பாடாகும்.இயங்கியல் மறுப்பு தன்மை கொண்ட இந்தக் கோட்பாடு மனிதர்கள் இனம்,மொழி வர்க்கம் என்ற அடிப்படையின் ஒன்றிணைவதை தடுத்து அவர்களை பிறப்பைக்கொண்டும் செய்யும் தொழிலைக்கொண்டும் சாதி ரீதியாக பிரித்து உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேற்றுமையை வளர்த்து இழிவுபடுத்தியது.

சிங்கள மக்கள் பௌத்தர்கள் கிருத்தவர்கள் என்று மத ரீதியாகவும் ,கொய்கம கரவா, துரவா,ரதா முதலான பல்வேறு சாதி அமைப்பு ரீதியாகவும்,கண்டிய சிங்களவர்,கரையோரச் சிங்களவர் என்று பிரதேச ரீதியாவும் பிளவுபட்டிருந்தாலும், இனநலன் என்று வரும் போது வேற்றுமையில் ஒற்றுமை கண்டு ஒன்றாக நின்றார்கள்.பெரும்பான்மை சிங்களவர்களின் மெய்யியல் தளமான பௌத்தம் இந்த ஒருங்கிணைப்பு சாத்தியப்படுவதற்கான நெகிழ்வுத்தன்மை உடையதாக இருந்தது.

ஆனால் இத்தகைய நெகிழ்வுத் தன்மையை பெரும்பான்மை தமிழர்களின் மெய்யியல் தளம் என்று அடையாளப்படுத்தப்பட்ட வைதீக சைவம் வழங்கவில்லை.அது சாதிரிதியாக மக்களை பிளவு படுத்தியதுடன் ஏற்கனவே பிரதேச ரீதியாகவும் மதரீதியாகவும் தமிழ் மக்களிடையே இருந்த நட்பு முரண்பாடுகளை பகை முரண்பாடுகளாக கூர்மைப்படுத்தும் வேலையைத்தான் செய்தது.

கிறித்துவர்களை சோத்துக் கிறீத்தவர்கள் என்றும்,இசுலாமியர்களை ‘சோனியள் தொப்பிபிரட்டிகள்’ என்றும் , மலையக மக்களை ‘வடக்கத்தையான் தோட்டக்காட்டான்’இழிவு படுத்தி அழைக்கும் யாழ்ப்பாணிய மனோபாவம் என்பது இந்த வைதீக சைவ பாரம்பரித்தில் இருந்து வந்தது.

இதனாலேதான் பௌத்த சிங்கள பேரினவாதிகள் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட போது, அந்த ஒடுக்குமுறையை எதிர் கொள்வதற்கு ஒன்றிணைவதற்கு பதிலாக தமிழ் சமூகம் பிளவு பட்டு நின்றது.

1949 லே மலையக தமிழர்களின் குடியுரிமை வாக்குரிமையை சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்கள் பறித்த போது தமிழ்கொங்கிரசு கட்சி அதை ஆதரித்து வாக்களித்தது.பின்னாளில் தமிழரசுக்கட்சியை ஆரம்பித்த செல்வநாயகம் அதை எதிர்த்தார்.அவர் வைதீக சைவராக இல்லாதது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் வைதீக சைவத்தின் காவலர்களாக இருந்த அன்றைய தமிழ் தேசியவாதிகளிடம் அது வடக்கத்தையானுடைய பிரச்சனை என்ற அந்நிய மனோபாவமே மிகுந்திருந்தது.

பௌத்த சிங்கள பேரினவாத ஒடுக்குமறைக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத சாதிய ஒடுக்குமறை யாழ்ப்பாணக் குடாநாட்டில் தலைவிரித்தாடியது.

இந்தக் கொடுமைகளுக்கு எதிராக இலங்கை பொதுவுடமை கட்சி, தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் சிறுபான்மைத் தமிழர் மகாசபை என்பன போராடியது போது, போலி தமிழ் தேசியம் பேசிய தமிழ் அதிகார வர்க்கத்தினர் அதற்கு ஆதரவு கொடுக்கவில்லை.மாறாக இந்தப் போராட்டத்தை ஒடுக்கும் கொச்சைப்படுத்தும் வேலைகளையே அவர்கள் செய்தார்கள்.மாவிட்டபுரம் கந்தசுவாமிகோவில் போராட்டத்தில் ஒடுக்குபவர்களுக்கு துணைபோகும் விதத்தில் இவர்கள் கடைப்பிடித்த கள்ள மௌனமும், சங்கானையை சங்காயாக மாற்ற முயற்சிக்கிறார்கள் என்று அன்றைய இலங்கை நாடாளுமன்றத்தில் அமிர்தலிங்கம் ஆற்றிய உரையும் இதற்கான சான்றுகளாகும்.

இவர்கள் பௌத்த சிங்கள பேரினவாதிகள் ஆயத வன்முறை கொண்டு தமிழர்களை ஒடுக்கியபோது திரைமறைவில் சிங்கள அதிகார வர்க்கத்துடன் சமரச அரசியல் நடத்திக் கொண்டு வெளியில் தமிழினக்காவலர்களாக தமிழ் உரிமைப்போராளிகளாக தங்களை காட்டிக் கொண்டதைப் போல, இந்த சாதிய பிரச்சனையிலும் , இவர்கள் ஒடுக்குபவனுக்கும் துணை, ஒடுக்கப்படுபவனுக்கும் தோழன் என்று இரட்டைவேடம்; போட்டார்கள்.சமபந்தி போசனம் நடத்தினால் சாதி ஒழிந்துவிடும் என்று நம்பச்சொல்லி இவர்கள் நடத்திய நாடகம் இதற்கு உதாரணமாகும்.இந்த நாடகத்தின் தலைமை இயக்குனர் அமிர்தலிங்கம் என்பது இந்த இடத்திலே குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

அடுத்து ஒரு இனக் குழுமத்தை தேசிய இனமாக அடையாளப்படுத்துவதற்கு அதன் ­புர்வீக நிலப்பரப்பென்பது மிக முக்கியமானது.இனஅழிப்பென்பது வெறும் உயிர் கொலைகளை மட்டும் உள்ளடக்கியதல்ல.அது நில அபகரிப்பு, கலாச்சார பண்பாட்டு சிதைப்பு, உரிமை மறுப்பு என்று பல்வேறு விடயங்களை உள்ளக்கியது.

தமிழர்கள் ஒரு தேசிய இனமாக இருப்பதையும் அங்கீகரிக்கப்படுவதையும் தடுப்பதற்கு அவர்களது தாயக நிலப்பரப்பை அபகரிப்பதும்,அதன் தொடர்ச்சியை துண்டாடுவதும் மிக முக்கியம் என்பதை பௌத்த சிங்கள பேரினவாதிகள் நன்கு புரிழந்து வைத்திருந்தனர்.

இதன் முதல் படியாக 1940 களில் கிழக்கு மாகணத்தின் அம்பாறை பொலநறுவை திருகோணமலை மாவட்டங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி தமிழர் தாயகத்தை சிதைக்கும் அதி முக்கியமான இனஒழிப்பு வேலைத்திட்டத்தை பௌத்த சிங்கள பேரினவாதிகள் ஆரம்பித்து வைத்தனர் .

கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது பாரிய சிங்களக் குடியேற்றம் கல்லோயாக் குடியேற்றமாகும். தமிழர்கள் பூர்வீகமாய் வாழ்ந்து வந்த பட்டிப்பளை‚ களுவாஞ்சிக்குடி‚ மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களின் எல்லையில் உள்ள கிராமங்களை இணைத்து கல்லோயா என்று பெயரிட்டு கல்லோயா பள்ளத்தாக்கு சிங்களக் “கொலனி” 1949 இல் உருவாக்கப்பட்டது.

பட்டிப்பளை என்ற புராதன தமிழ்க் கிராமம் கல்லோயா என்ற சிங்களப் பெயராக மாற்றப்பட்டு சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்பட்டது. 1949 – 1952 காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கல்லோயாக் குடியேற்றத் திட்டத்தின் மூலம் 80‚000 சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள்.

கல்லோயா குடியேற்றத் திட்டம் இங்கினியாகல என்ற இடத்திலிருந்து ஆரம்பமாகிறது. இங்கு ஆரம்பத்தில் சிங்களவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிறுதொகையினரே இருந்தனர். 1952 ஜுலை 13 ஆம் திகதி இங்கிருந்த 100 இற்கும் அதிகமான தமிழ்க் குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு இராணுவத்தினர் வற்புறுத்தி அவர்களது வீடுகளை எரித்து அழித்தனர்.

கல்லோயாக் குடியேற்றத் திட்டத்தைத் தொடர்ந்து மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் கிழக்கில் மற்றொரு பாரிய சிங்களக் குடியேற்றத் திட்டம் உருவாக்கப்பட்டது.

1970 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த மகாவலி அபிவிருத்தித் திட்டம் அம்பாறை முதல் திருகோணமலை வரையான தமிழர் மரபுவழித் தாயகத்தில் தமிழர்களைச் சிறுபான்மையினர் ஆக்குவதை நோக்கமாக் கொண்டது.

மகாவலித் திட்டத்தின் பிரதான 3 துணை நீர்பாசனத் திட்டங்களில் ஒன்றாகிய மாதுறு ஓயா நீர்ப்பாசனத் திட்டமானது தமிழர்களின் மரபுவழித் தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. இந்தத்திட்டத்திற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை‚ கதிரவெளி மற்றும் வாகரை ஆகிய பிரதேசங்களில் 1000 கெக்ரெயர் நிலம் ஒதுக்கப்பட்டது. 25000 சிங்களவர்களைக் குடியேற்றுவதை நோக்காகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்ட தெனினும் 1983 இல் நாடளாவிய ரீதியில் நிகழ்ந்த தமிழர்களுக்கெதிரான வன்முறையைத் தொடர்ந்து 30000 சிங்களவர்கள் தென் பகுதியில் இருந்து பேரூந்துகள் மூலம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்த தமிழர்களைப் பலவந்தமாக வெளியேற்றிய பின்னர் குடியேற்றப்பட்டனர். இதன்போது 900 தமிழ்க் குடும்பங்கள் சிங்கள ஆயுதப்படைகளாலும் சிங்கள குடியேற்றவாசிகளாலும் பூர்வீக நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மட்டக்களப்பில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட்ட அதேவேளை மட்டு-பொலநறுவை எல்லையில் அமைந்துள்ள வெலிக்கந்தையில் பாரியளவான நிலப்பரப்பில் ஒரு சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்பட்டது. 3000 இற்கும் அதிகமான சிங்களக் குடும்பங்கள் இங்கு குடியேற்றப்பட்டனர்;.

இதனை விட தம்பாலை‚ மாணிக்கப்பிட்டி‚ பள்ளித்திடல் முதலான முஸ்லிம்களுக்குச் சொந்தமான நிலமும் புதுவெளி‚ மன்னம்பிட்டி‚ முத்துக்கள் முதலான தமிழர் பூர்வீக நிலமும் அபகரிக்கப்பட்டு அங்கு பாற்பண்ணை அமைக்கப்பட்டு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர்.

இந்தக்காலப் பகுதியில் மாணலாறு பிரதேசமானது உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன் மணலாறு என்ற தமிழ்ப் பிரதேசமானது வெலிஓயா என்ற சிங்கள ஊராக மாற்றப்பட்டு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர்.

இவ்வாறு தொடர்ச்சியாக தமிழர்களுடைய நிலத்துக்கான உரிமை பறிக்கப்பட்ட போதும் அவர்களது மரபு வழி தாயகம் துண்டாடப்பட்டபோதும் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போhர் ஒன்றை ஆரம்பிக்கும் எந்தச் சிந்தனையும் இந்தக்காலகட்டத்தில் தமிழர் தரப்பிலிருந்து தோற்றம் பெறவில்லை.

கிழக்கில் சில விவசாயிகள் தன்னிச்சையாக தங்கள் நிலத்தை பாதுகாக்க ஆயுதமேந்தியபோது அப்போது தமிழர் தரப்பிலிருந்த அரசியல் கட்சிகளும் , தமிழ் தேசியவாதிகள் என்று தம்மை இனங்காட்டிக்கொண்டவர்களும் அவர்களுக்கு பக்க பலமாக நிற்பதற்கு முன்வரவில்லை.

தமிழர்களுக்கு அப்போது தலைமை தாங்கிய தமிழ் கொங்கிரசு கட்சியும் சரி,தமிழரசுக்கட்சியும் சரி இந்த நில ஆக்கிரமிப்பு எதிராக தொடரச்சியான எதிரப்பு போராட்டத்தை முன்னெடுத்துச் சொல்ல தயாராக இருக்கவில்லை.

நில அபகரிப்பு என்பது இனஅழிப்பின் முக்கியமான வடிவம் என்பதை இந்த இந்தக் கட்சிகளின் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.இதிலே முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் 1956 ம் ஆண்டு சிறீலங்கா நாடளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து தமிழரசு கட்சித்தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் பல போராட்டங்கள், நடத்;தப்பட்டன. யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை பகுதிகளில் அரசின் செயற்பாடுகள் இயங்க விடாது செய்யப்பட்டன.

இதே போராட்ட நடைமுறையை இவர்கள் ஏன் நில அபகரிப்புக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராக செய்யவில்லை? என்ற கேள்வியை எழுப்புவது மிக முக்கியமானது.

நில அபகரிப்பும் சிங்களக் குடியேற்றங்களும் தமிழ் அதிகாரவர்க்கத்தை நேரடியாக பாதிக்கவில்லை. அதனால் பாதிப்படைந்தவர்கள் ஏழை விவசாயிகளும் உழைக்கும் மக்களுமேயாகும்.

சிங்களம் மட்டும் சட்டம் ஏழை விவசாகளுக்கும் உழைக்கும் மக்களும் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

ஆனால் அது தமிழ் அதிகார வர்க்கத்தை நேரடியாக பாதித்தது.கல்வி வேலை வாய்ப்பு மணிஓடர் பொருளாதாரம் என்றும் அனைத்தையும் அது குறிவைத்து தாக்கியது.

இன ஓடுக்கு முறை வடிவத்தை எதிர்ப்பது என்ற அடிப்படையில் அதற்கு எதிரான போராட்டங்களை நடத்தியது நியாமானது என்றாலும் அதை விட முக்கியத்துவம் வாய்ந்த, தமிழினத்தின் இருப்பை அடையாளத்தை சிதைக்கும் நில அபகரிப்புக்கும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கும் எதிரான தொடர் போராட்டங்களை இதேயளவு முக்கியத்துவத்துடன் ஏன் நடத்தவில்லை என்பதே இங்கு எழுப்பப்பட வேண்டிய கேள்வியாகும்.

மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம். அந்த அடையாளம் நிலத்தில் இருந்து அதில் வாழும் மக்கள் கூட்டத்திலிருந்துதான் உருவாகிறது.நிலமும் மக்கள் கூட்டமும் இல்லை என்றால் மொழி அழிந்துவிடும். தேசிய இன உருவாக்கத்தில் நிலமும் மொழியும் பிரிக்க முடியாதவை.நில உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டு மொழி உரிமைக்காக பேராடுவதென்பது அப்பட்டமான பம்மாத்து நடவடிக்கையாகும்.

3

எஸ். ஜே. வி. செல்வநாயகத்துக்கு பின்னர் தமிழரசு கட்சின் தலைமைப் பொறுப்பு யாருக்கு என்பதில் யாழ்ப்பாண குடாநாட்டைச் சேர்ந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கும்,மட்டக்களப்பை சேர்ந்த செல்லையா இராசதுரைக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது.

இந்தப் போட்டியில் தான் வெற்றி பெறுவதற்காக அமிர்தலிங்கம் இரண்டு வழிமுறைகளை கையாழ்கின்றார்.

ஒன்று ‘தியாகி துரோகி’ அரசியலை அறிமுகப்படுத்தி இளைஞர்களின் இன உணர்வதை தூண்டி அவர்களை தன்பின்னால் அணி திரள வைத்தார்.

இரண்டாவது இராசதுரையை முடக்குவதற்கு அவருக்கும் அசரப்புக்கும் இடையலான முரண்பாட்டை தூண்டிவிட்டார்.அசுரப் தமிழரசுக்கட்சின் முக்க்pய துண்களில் ஒருவராக விளங்கியவர் என்பது இன்று இளைய தலைமுறையினர் பலருக்கு தெரியாது.

அமிர்தலிங்கத்தின் இந்த பிரித்தாளும் தந்திரம் இராசதுரையை தமிரசுக்கட்சிலிருந்து வெளியேற வைத்தது.அதே போல அசுரப்பையும் தமிழரசுக்கட்சியில் இருந்து பிரிந்து முஸ்லீம் காங்கிரசை உருவாக்கும் நிலைக்கு தள்ளியது.பிட்டும் தேங்காய் புவும் போல் என்று சொல்லப்பட்ட தமிழ்மக்களுக்கும் இசுலாமிய மக்களுக்குமான உறவு, கீரிக்கும் பாம்புக்குமான உறவு போல் எதிரெதிர் உறவாக மாற்றியது

அடுத்த பக்கம் அமிர்தலிங்கம் முன்னெடுத்த தியாகி துரோகி அரசியல் வெறுப்பரசிலாகவும் பழிவாங்கும் அரசியலாவும் மாற்றியது.இது அனைத்து மக்களுக்கும் அனைத்து அடக்குமுறைகளிலும் இருந்து விடுதலையை பெற்றுத்தரக் கூடிய முற்போக்கான தேசிய இன விடுதலை போராட்டமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சாதி பிரதேச வர்க்க முரண்பாடுகளை அவற்றின் போக்கில் காட்டிக்காப்பாற்றும் குறுத் தேசியவாதமாக உருவெடுக்க வைத்தது.

எதிரிகளை போட்டுத் தள்ளுவதற்கும் தமிழின அழிப்பில் ஈடுபடும் சிங்கள பொலீசு இராணுவ அதிகாரிளைஅழித் தொழிப்பதற்கும் ஆயுதம் தூக்குவது அவசியம் என்று இளைஞர்களை சிந்திக்கத் தூண்டியது.

ஒரு விடுதலைப்போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாற்றமடையும் போது அதை சரியான பாதையில் வழிநடத்தக் கூடிய புரட்சிகர கட்சியும் யுத்த தந்திரம் நடைமுறைத்தந்திரம் முதலான புரட்சிகர வேலைத்திட்டங்களும் அவசியம் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளும் வயதும் அதை அவர்களுக்கு உணர்த்துவதற்கான சரியான வழிகாட்டலும் இல்லாத ஒரு நிலையிலே இன விடுதலைக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பும் ஆர்வமும் கொண்ட இளைஞர்கள் ஒரு அமைப்பாக ஒருங்கிணைந்து செயற்பட ஆரம்பித்தார்கள் .இந்த அமைப்புக்குள் அமிர்தலிங்கத்துக்கு சார்பானவர்கள் எதிரானவர்கள் என்று இரண்டு பிரிவு இருந்தது. இந்த இளைஞர்கள் தங்கள் அமைப்புக்கு புதிய தமிழ் புலிகள் என்று பெயர் வைத்தார்கள்.

இந்த அமைப்பை தன்னிச்சையாக வளரவிடுவது தனக்கு ஆபத்தை உண்டாக்கும் என்பதை கணித்த அமிர்தலிங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு அரசியல் கட்சியாக சிறீலங்கா நாடாளுமன்றத்தில் தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தை அரசியல் ரீதியில் முன்னெடுக்கும் என்றும் தமிழ் இளைஞர் பேரவை அதனுடைய மக்கள் அமைப்பாக இயங்கும் என்றும், தமிழ் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட புதிய புலிகள் அதனுடைய இரகசிய இராணுவ அமைப்பாக இயங்க வேண்டும் என்றும் அவர் புதிய புலிகள் அமைப்பையினரை தன்வயப்படுத்த முயன்றார்.

இந்தப் பின்ணியிலே தான் அமிர்தலிங்கத்தால் தமிழின துரோகி என்று அடையாளப் படுத்தப்பட்ட அல்பிரட் துரையப்பா 27.07.1975 அன்று புதிய புலிகள் அமைப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய தாக்கததை ஏற்படுத்திய அல்பிரட் துரையப்பா கொலையைப் பற்றி ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் என்ற நூலில் ஐயர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“துரையப்பா கொலை செய்யப்பட்ட நிகழ்வானது இரண்டு பிரதான கருத்தாக்கத்தின் தோற்றுவாயாக அமைந்தது.

  1. தமிழ் மக்கள் மத்தியில், சிங்கள அடக்குமுறைக்கு எதிராக எதிர்த் தாக்குதல் நடத்த எமக்கு மத்தியில் சிலர் தயாராக உள்ளனர் என்ற உணர்வை மகக்ள் மத்தியில் ஏற்படுத்தியது.
  2. சிறிமாவோ தலைமையிலான அரசிற்குப் பெரும் சவாலாகவும் மறுபுறத்தில் சிங்கள அடிப்படை வாதிகள் மத்தியில் பய உணர்வையும் உருவாக்கியிருந்தது.

தமிழ் உணர்வாளர்களும், தேசிய வாதிகளும் இப்படுகொலையை பெரும் வெற்றியாகக் கருதினார்கள். இவ்வாறு முழுத் தேசமும் தமிழர்களின் எதிர்ப்புணர்வை ஒரு புதிய பரிணாமத்தில் அலச ஆரம்பித்திருந்தாலும், எம்மைப் பொறுத்தவரை அதற்;குக் காரணமான பிரபாகரனோடு வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தோம். அந்தக் கொலையை நிறைவேற்றிய தம்பியுடன் இருபத்தி நான்கு மணி நேரமும் எதிர்காலத் தமிழீழக் கனவு குறித்துத் திட்டமிட்டுக் கொண்டிருந்தோம். தம்பி பிரபாகரன் எமக்கெல்லாம் “ஹீரோ” வாக, எமது குழுவின் கதாநாயகனாக ஆனதற்கு இதுதான் அடிப்படைக் காரணம்.

துரையப்பா கொலையின் எதிர் விளைவுகளை ஆராய்ந்து முடிவெடுப்பதற்கும் புதிய திட்டங்களை மேற்கொள்வதற்கும் எம்மிடம் போதிய அறிவும் அனுபவமும், உலகை ஆராய்வதற்கான தத்துவார்த்தப் பின்புலமும் அற்றிருந்த காலகட்டம் அது. ஒரு புறத்தில் இடதுசாரிகள் தேசிய இன ஒடுக்குமுறையைக் கருத்தில் கொள்ளவில்லை. மறு புறத்தில் பாராளுமன்றக் கட்சிகள் எம்மைப் பாவித்துக்கொண்டனர். இந்தச் சூழ்நிலையில் எமது நடவடிக்கைகளுக்குக் கிடைத்த மக்கள் ஆதரவும், சமூக அங்கீகாரமும், எம்மை மேலும் மேலும் தூய இராணுவக் குழுவாக மாற்றியிருந்தது. அதே பாணியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள மேலும் ஊக்கம் வழங்கியது.

இந்த நேரத்தில் நாமெல்லாம் தூய தேசியவாத சிந்தனையுடனேயே செயற்பட ஆரம்பித்தோம். எமக்குத் தெரிய சண்முகதாசனின் மாவோயிசக் கட்சி போன்றன தீவிர இடதுசாரிக் கருத்துக்களுடன் வெளிவந்திருந்தாலும், தேசியப் பிரச்சனையில் அவர்கள் அக்கறை கொண்டிருக்கவில்லை. தமிழ் பிரச்சனைகள் பற்றிப் பேசுவதெல்லாம் அண்ணாதுரை, கருணாநிதி, தமிழரசுக்கட்சி என்பன என்பதே எமக்குத் தெரிந்திருந்தவை.”

இந்தப் பின் புலத்திலே தான் தம்பி பிரபாகரனை,அண்ணன் உமாமகேசுவரன் சந்திக்கிறார்.

இந்த சந்திப்பு உணர்வுபுர்வமான ஒரு சந்திப்பாக இருந்ததாக உமாமகேசுவரன் என்னிடம் தெரிவித்திருந்தார்.இந்தச் சந்திப்பைப்பற்றி உமாமகோசுவரன் என்னிடம் தெரிவித்த அதே வார்த்தைகளில் இங்கே பதிவு செய்கிறேன்.

0000

“அப்போது தம்பி துரையப்பா கொலையில் தேடப்படும் ஒருவராக இருந்தார்.நான் ஏற்கனவே புதிய புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் பலரையும் சந்திருந்தேன்.அவர்கள் மூலம் தம்பியை பற்றியும் அவரது துடிப்பான செயற்பாடுகள் பற்றியும் நான் நிறைய தெரிந்;து கொண்டேன்.

‘16 வயதில் நாங்கள் எல்லாம் நன்றாகப் படித்து டொக்டர் ஆக வேண்டும் இஞ்சினியர் ஆகவேண்டும் வசதியான வாழ்வு வாழவேண்டும்’ என்று கனவு கண்டுகொண்டிருந்த காலத்தில் ,அதே 16 வயதில் யாழ்ப்பாண சமூகத்தை சேர்ந்த ஒரு பொடியன் இனவிடுதலைக்காக ஆயுதம் ஏந்தினான் என்று மற்றவர்கள் சொன்ன போது எனக்கு அது பிரமிப்பாக இருந்தது.அந்தப் பொடியனை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு அதிகமாக இருந்தது.

தம்பி எப்பவும்; தன்னுடைய பாதுகாப்பிலும் மற்றவர்களுடைய பாதுகாப்பிலும் மிக கவனமாக இருப்பவர்.ஒருவரால் தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் ஆபத்து வரும் என்று உணர்ந்தால் அவரை தண்டிக்கவும் அவர் தயங்குவதில்லை என்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறன்.

நான் அவரை சந்திக்கப் போகிறேன் என்று தெரிந்தவுடன் அப்போது புதிய புலிகள் அமைப்பில் இருந்த சிலர்,அவருடன் கதைக்கும் பொது கவனமாக கதையுங்கோ என்று சொன்னார்கள்.(அவர்கள் யார் என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை.)

நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்வில்லை.தமிழீழ விடுதலைக்கு ஒரே வழி ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பது தான் என்று நான் நம்பினேன்.தம்பி பிரபாகரனுடைய முடிவும் அதுதான். ஒத்த கருத்துள்ள நாங்கள் சந்திக்கும் போது ஒளிவு மறைவு தேவையில்லை என்பது தான் என்னுடைய முடிவாக இருந்தது.

ஒருவரை முதன் முதலாக சந்திக்கும் போது, அவரைப்பற்றி முன்கூட்டியே ஒரு கணிப்பை மனதில் வைத்துக்கொண்டு அவருக்கு ஏற்ற மாதிரி அவர் முன்னால் நடிப்பதிலும் வேசம் போடுவதிலும் எனக்கு விரும்பமில்லை.

நான் நானாகவே இருக்க விரும்பினேன்.

நாங்கள் சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருந்த வீட்டுக்கு நான் சென்ற போது நான் அவரை விட வயதில் மூத்தவன் என்ற வகையில் தம்பி எழுந்து வந்து என்னை வரவேற்றார்.

“வாங்கோ….” என்ற ஒரு ஒரு சொல்தான் அவரது வாயிலிருந்து வந்தது.

அடுத்த கணம் என்னை நோக்கி தம்பி ஒரு தீர்க்கமான பார்வையை பார்த்தார்.

அந்த பார்வை எனது மனக்கட்டமைப்புக்குள் ஆளமாக இறங்கியது.

ஒருவரை சந்திக்கும் போது அபூர்வமாக ஏற்படும் பரவச நிலையை குறிப்பதற்கு சைவசமயத்திலே ‘தடுத்தாட்கொள்ளப்பட்டார்’ என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துவார்கள்.

தம்பியை சந்தித்த அந்த முதற்கணம் எனக்கும் அப்படித்தான் இருந்தது.

ஏனக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டது.தம்பிக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஏனென்றால்; தம்பி ஒருவரை இலகுவில் நம்பி விடமாட்டார் என்றும், மற்றவர்களுடன் அதிகம் பேசமாட்டார் என்றும், எப்போதும் தனிமையையே விரும்புவார் என்றும் அவருடன் இருந்த மற்றவர்கள் கூறக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால் என்னுடைய விடயத்தில் அவர் அப்படி இருக்கவில்லை.மனம் திறந்து கதைத்தார்.என்னை அடிக்கடி தொடர்பு கொண்டு கதைத்தார் என்னிடம் நிறைய கருத்துக்கள் கேட்டார்.குறிப்பாக சொல்வதானால் என்னுடன் அவர் மிக நெருக்கமாக பழகினார்.பாசமுள்ள ஒரு அண்ணனுக்கும் தம்பிக்குமான உறவு போலவே எங்களுடைய உறவு இருந்தது.

எங்களுடைய முதலாவது சந்திப்பிலே சோழர்கள் பற்றிய பேச்சுத்தான் அதிக நேரம் இடம்பெற்றது.

“தமிழ் அரசர்களான இராஜராஜசோழனாலும் அவர் மகன் இராஜேந்திரசோழனாலும் எப்படி பல நாடுகளைப் பிடித்து ஆட்சி செய்ய முடிந்தது.? என்று தம்பி என்னிடம் கேட்டார்.

“அவர்களிடம் சிறந்த கடற்படை இருந்தது.சிறந்த தளபதிகள் இருந்தார்கள்.பயிற்றப்பட்ட சிறந்த போர் வீரர்கள் இருந்தார்கள்.அவர்களது கடற்படையில் அப்போது ஒரு இலட்சம் பேர் இருந்ததாக சொல்கிறார்கள்.இது எந்தவுளக்கு உண்மையோ தெரியாது. நான் அறிந்த வகையில் அந்தக் காலகட்டத்தில் இந்தளவு கடற்படை பலத்தை எந்த நாடும் கொண்டிருக்கவில்லை.அதனாலே தான் இவர்களால் பல நாடுகளை பிடிக்க முடிந்தது” என்று அதற்கு நான் பதில் சொன்னேன்.

“அப்போ போர்த்துக்கேயர்; ஒல்லாந்தர் பிரித்தானியர் எல்லாம் தங்களுடைய கடற்படை பலத்தால் தானே எங்களுடைய நாட்டை பிடித்து எங்களை அடிமைப்படுத்தினார்களா? எங்களிடம் கடற்படை பலம் இருந்திருந்தால் நாங்கள் அடிமைப்பட்டிருக்கமாட்டோம் தானே?” என்று தம்பி கேட்க,

“உண்மை தான் எங்களுடைய அரசுகளிடம் கடற்படை பலம் இருந்திருந்தால் ஐரோப்பியர்கள் எங்களை அடிமைப்படுத்தியிருக்க முடியாது.சோழ சாம்ராட்சியம் வீழ்ச்சியடையாமல் இருந்திருந்தால் ஐரோப்பியர்கள் மட்டுமல்ல சிங்கள ஆட்சியாளர்களும் எங்களை அடிமைப்படுத்தியிருக்க முடியாது” என்றேன் நான்.

“சோழ சாம்ராட்சியம் ஏன் அழிந்து போனது? ஏன்ற அடுத்த கேள்வி தம்பியிடமிருந்து வந்தது.

சோழர்களுக்கு தமிழர்களான பாண்டியர்களும் சேரர்களும் எதிரிகளாக இருந்தார்கள்.இவர்கள் ஒருவரை ஒருவர் அழிப்பதற்கு அவ்வப் போது,தமிழினத்தை கருவறுப்பதை குறிக்கோளாக கொண்ட ஆரியர்களுடன் கூட்டுவைத்துக்கொண்டார்கள்.தமிழர்களை நேரடியாக போரில் வெல்ல முடியாத ஆரியர்கள் உட்பகையை தூண்டிவிட்டு ஒருவரை ஒருவர் மோதவிட்டு அழித்தார்கள். சோழ சாம்ராட்சியம் ஆரிய மற்றும் சிங்கள துணையுடன் இடம்பெற்ற பாண்டியர்களது படையெடுப்பாலேயே அழிந்து போனது.பின்னர் அதே பாண்டியர்களும் ஆரிய சதியால் அழிந்து போனர்கள்.சேரர்களுக்கும் இது தான் நடந்தது.

தமிழர்களான சேரர்களை உட்பகையை தூண்டி வஞ்சகமாக வெற்றி கொண்ட ஆரியர்களான நம்பூதிரிகள் சேரநாட்டை மகாபலி என்பவர் தங்களுக்காக கடலுக்குள் இருந்து புதிதாக உருவாக்கித்தந்த புனித நாடு என்றும் அதன் பெயர் மலையாள பூமி என்றும் மாற்றிவிட்டார்கள்” என்றும் இதற்கு ஒரு நீண்ட பதிலை நான் தம்பியிடம் தெரிவித்தேன்.

இதைக் கேட்டு சிறிது நெரம் யோசித்த தம்பி

“தமிழர்கள் பிளவு படாமல் ஒன்றாக ஒரே அரசாக இருந்திருந்தால் இன்றைக்கு யாராலும் அசைக்க முடியாத பெரிய வல்லரசாக இருந்திருப்பார்கள் தானே?” என்று கேட்க நான் அதை ஆமோதித்தேன்.எனக்கு அந்தக் கருத்தில் உடன்பாடிருந்தது.

00000

இருவருக்கும் இடையில் இடையில் இடம்பெற்ற இந்த முதல் சந்திப்பும் அதன் போது இடம்பெற்ற உரையாடல்களும் பாசமுள்ள ஒரு அண்ணனுக்கும் தம்பிக்குமான உரையாடலாக இருந்ததாக உமாமகேஸ்வரன் என்னிடம் தெரிவித்திருந்தார்.

4

1972 ல் சிறிய குழுவாக ஆரம்பித்த புதிய தமிழ் புலிகள் அமைப்பு ஆர்வமுள்ள பலரை புதிதாக இணைத்துக்கொண்டு படிப்படியாக விரிவடைய ஆரம்பித்தது.வன்னிக்காட்டில் பண்ணைகளை உருவாக்கி இயங்கிவந்த இந்த அமைப்பு 5.5.1976 ல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் என்று பெயர் மாற்றம் பெற்றது.

இந்தப் பெயர் மாற்றத்தை அடுத்து புதிய மத்திய குழு ஒன்றும் உருவாக்கப்படுகிறது.இந்த மத்திய குழுவில் தம்பி பிரபாகரன்,பேபி சுப்பிரமணியம்,நாகராஜா, கணேசன் வாத்தியார், தங்கா, விச்சு, கணேசன் (ஐயர்) குலம், பற்குணம் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.இந்த மத்திய குழுவில் தம்பி பிரபாகரனின் ஆளுமை அதிகம் இருந்தாலும் கூட்டுமுடிவே எடுக்கப்படுகிறது.இயக்க உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் இயக்கப் பெயர் வைக்கப்படுகிறது.

இந்தகாலகட்டத்தில் உமாமகேஸ்வரன் கொழும்பிலிருந்து அடிக்கடி வந்து இயக்க உறுப்பினர்களை சந்திக்கிறார்.

இந்தக் காலகட்டத்தில் தம்பி பிரபாகரனுடனான அவரது உறவு இன்னும் வலுப்படுகிறது.

அவரை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மத்திய குழுவில் இணைக்க வேண்டும் என்று தம்பி பிரபாகரன் விரும்புகிறார்.அவரது விருப்பத்துக்கு அன்றைய மத்திய குழுவில் இருந்த எவரும் மறுப்புச் சொல்லவில்லை.

தம்பி பிரபாகரனின் விருப்பப்படி 1977 ம் செப்டம்பர் மாதம் உமாமகேஸ்வரன் ‘முகுந்தன்’ என்ற பெயருடன் தமிழீழ விடுதலைப்பலிகள் இயக்கத்தில் இணக்கப்படுவதுடன் மத்திய குழு உறுப்பினராகவும் தெரிவு செய்யப்படுகிறார்.

இந்தக் காலகட்டத்தில் இலண்டனில் இருந்த இயங்கிய ஈரோஸ் இயக்கத்தினரின் தொடர்புக் கூடாக பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடம் பயிற்சிபெறும் வாய்ப்பக்கிடைக்கிறது.

இந்தப் பயிற்சிக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து 2 பேரை தெரிவு செய்து அனுப்பும்படி கோரப்படுகிறது.

இதில் தம்பி பிரபாகரன் இதற்கு செல்வதற்குரிய முதலாளாக உமாமகேஸ்வரன் பெயரை முன் மொழிகிறார்.அடுத்து இலண்டனில் இருந்து வந்த விச்சு என்ற விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்படுகிறார்.இவர்கள் இருவரும் பலஸ்தீனத்துக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை அப்போது லண்டனில் இருந்து செற்பட்ட மகா உத்தமனும், சித்தார்த்தனும் செய்தார்கள்.

3 மாத பயிற்சிக்காக பலஸ்தீனம் சென்ற உமாமகேஸ்வரன் அங்கு அல் பத்தா அமைப்பினரிடம் ஆயுதப் பயிற்சி பெறுகிறார்.அந்த காலகட்டத்தில் அல்பத்தா அமைப்பு இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்குள் சிக்கிக் கொள்ளாமல் ‘பலஸ்தீன தேசிய விடுதலை’ முற்;போக்கான பாத்திரத்தை வகித்த அமைப்பாக இருந்தது. இந்தப் பயிற்சிக்காலத்தில் பலஸ்தீன விடுதலையை இடதுசாரி பாதையில் முன்னெடுப்பதற்கான ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்ட ஜோர்ஜ் :பாஷ் தலைமையிலான பாலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி அமைப்பினரின் தொடர்பு உமாமகேஸ்வரனுக்கு ஏற்பட்;டது.அந்த அமைப்பினரிடமிருந்து அவர் நிறைய விடயங்களை கற்றுக் கொண்டார்

· ஒரு தேசிய விடுதலைப் போராட்டமென்பது எகாதிபத்திய எதிர்ப்பு தன்மையுடையதாக இருக்க வேண்டும்.இந்த உலகத்தில் எந்த அரசுமே தனியாக இல்லை.எமது எதிரியின் நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பதை நாம் இனங்கண்டு எதிரியின் எதிரி நமக்கு நண்பன் என்ற உத்தியை நாங்கள் பயன்படுத்த வேண்டும்.

· எங்களுக்குரிய ஆயுதங்களை நாங்கள் எங்கள் எதிரிகளிடமிருந்து பறித் தெடுப்பதையே முதன்மையாக கொண்டிருக்கவேண்டும். நாங்கள் ஆயுதத்துக்காக இன்னொருவரிடம் தங்கியிருந்தால் அந்த இன்னொருவரை தன்வசப்படுத்தி எதிரி எங்களை தோற்கடித்துவிடுவான்.அல்லது எங்களக்கு ஆயுதம் வழங்குபர்களின் அடியாட்களாக நாங்கள் செயற்பட வேண்டிய நிலை வரும்.

· ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தில் எப்போதும் தேசிய முதலாளிகளும் தரகு முதலாளிகளும் நடுத்தர வர்க்கத்தினரும் தான் முதலில் பாதிக்கப்படுவார்கள். அதனால் இவர்கள் தான் முதலில் உணர்ச்சி முழக்கங்களை எமுப்பிக்கொண்ட போராடவும் வருவார்கள்.ஆனால் இவர்களது போராட்ட உணர்வென்பது நிரந்தரமானதல்ல. இவர்கள் நெருக்கடி முற்றி பேராபத்து நெருங்கிவரும் போது போராட்டத்தை கைவிட்டுவிட்டு ஓடிவிடுவார்கள்.பின்னர் தங்களது இருப்பை தக்க வைத்துக்கொண்டு தங்களது நலன்களை பேணிக்கொண்டு பேராட்டத்தின் மீதும் பேராட்டத்தை நடத்தும் அமைப்பின் மீதும் போராட்ட தலைமை மீதும் அவதூறு சுமத்துவதையே இவர்கள் நோக்கமாக கொண்டிருப்பார்கள்.ஜனநாயகம் மனித உரிமை பற்றி அதிகம் பேசும் இவர்கள் எதிரிக்கு எதிராக ஒரு சிறு துரும்பைக் கூட தூக்கிப் போட்டிருக்கமாட்டார்கள்.

· ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தில் உழைக்கும் மக்கள் சற்று தாமதமாகவே பாதிக்கப்படுவார்கள்.ஆனால் அந்தப் பாதிப்பென்பது அவர்களுக்கு நிரந்தரமானதாகவும் பாரதூரமானதாகவும் இருக்கும்.

இந்தப் பாதிப்பில் இருந்து மீளுவதற்கு இவர்களுக்கு போராடுவதைத்தவிர வேறு வழி இருக்காது.பேராடினால் மட்டும் தான் வாழ முடியும் என்கிற நிலையில் உள்ள இவர்கள் பேராட்டத்தை தொய்வின்வின்றி முன்கொண்டு செல்லக் கூடிய ஆதார சக்திகளாகும்.

· ஏப்;போதும் பலம் தான் அதிகாரத்தின் அடிப்படையாக இருக்கிறது.

· போராடும் ஒரு சமூகத்திலுள்ள பலவீனமான அம்சங்கள் தான் எதிரியின் பலமாகும்.(மதம்-சாதி-பிரதேசம்)

இவை பாலஸ்தீன மக்கள் விடுதலை முன்;னணியினரிடமிருந்து உமாமகேஸ்வரன் கற்றுக்கொண்ட பாடங்களாகும்.

அவரோடு இந்தப் பயிற்சிக்குச் சென்ற விச்சு அங்கு உடன் பயிற்சி பெற்ற ஈரோஸ் உறுப்பினர்களுடன் ஏற்பட்ட தகராற்றால் பயிற்சி முழுவதையும் முடிக்காது இடையில் திரும்பிவிடுகிறார்.

பாலஸ்தீன பயிற்சியை முடித்தக்கொண்டு நாடு திரும்பிய உமாகேஸ்வரன் தமிழிழ விடுதலைப் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்த வேண்டிய வேண்டிய தேவை பற்றியும் பலஸ்தீன மக்கள் விடுதலை முன்;னணியின் அமைப்பு வடிவம் மற்றும் அவர்களது போராட்ட வடிவம் என்பவை பற்றியும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மத்திய குழுவில் எடுத்துரைத்தார்.

‘தனிநபர் அழித்தொழிப்;பு என்ற நிலையில் இருந்து அரசுக்கும் அரசபடைகளுக்கும் எதிரான தாக்குதல்களை நடத்துவதற்கு விடுதலைப்புலிகள் இயக்கம் தயாராக வேண்டும்’ என்ற கருத்து இந்த மத்திய குழுக் கூட்டத்தில் முன் வைக்கப்படுகிறது.

‘தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உண்மைத்தன்மையை சர்வேதேசத்துக்கு தெரியப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இந்தப் போராட்டத்தை ஆதரிக்கக் கூடிய சத்திகளை இனங்கண்டு அவர்களுடன் தொடர்ச்சியான உறவுகளை பேண வேண்டும்’ என்ற முடிவும் எட்டப்படுகிறது.இந்தப் பொறுப்பு உமாமகேஸ்வரனிடம் ஒப்படைக்கப்படுகிறது.

அவரை பற்றிய விபரங்கள் எதுவும் சிறீலங்கா அரசாங்கத்துக்கு தெரியாத நிலையில் அவர் தனது நில அளவையாளர் வேலையை தொடரந்து கொண்டு இயக்கம் கொடுத்த வேலைகளை திறம்பட செய்து வந்தார்.

அவரது அர்பணிப்புடன் கூடிய செயற்பாடுகளை அவதானித்த தம்பி பிரபாகரன் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவராக தெரிவு செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார்.

இது பற்றி கணேசன் என்கிற ஐயர் தனது நூலிலே இவ்வாறு குறிப்பிடுகிறார்…

“ஏற்கனவே இளைஞர் பேரவையின் செயலாளர் என்ற வகையில் அறியப்பட்டவராகவும், எம்மை விட அதிகமான தொடர்புகளைக் கொண்டிருந்தவருமான உமா மகேஸ்வரனை தமிழீழ விடுத்லைப் புலிகளின் தலைவராக நியமிக்கலாம் என பிரபாகரன் தனது கருத்தை முன் வைக்கிறார்.

உமா மகேஸ்வரன் அதை மறுக்கவில்லை. நாங்கள் அனைவரும் அதனை ஏற்றுக்கொள்கிறோம். இறுதியில் நமது இயக்கத்தின் முதலாவது தலைவராக உமா மகேஸ்வரன் நியமிக்கப்படுகிறார். அரசியல்ரீதியான சட்டத்திற்கு உட்பட்ட வேலைகளை முன்னெடுக்க அரசால் தேடப்படாத ஒருவரின் பிரசன்னம் தேவைப்பட்டது. இந்த வகையில் உமாமகேஸ்வரன் இதுவரை அரசால் தேடப்படாத நிலையில் இருந்ததால் இவரைத் தலைவராக நியமிப்பது நியாயமானது என அனைவரும் கருதினர்.

ஊமாமகேஸ்வரன் ஒரு கடின உழைப்பாளி. வரித்துக்கொண்ட வேலையச் செய்து முடிக்கும் வரை அவர் ஓய்வதில்லை. சிறிய தொகைப் பணத்திற்கும் கணக்கு வைத்துக்கொள்ளும் நேர்மை அவரிடமிருந்தது. நிர்வாக ஒழுங்கும் திறமையும் படைத்தவர்.”

உமாமகேஸ்வரன் தமிழீழ விடுதலைப்புலிகளின்; தலைவரானதை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் விரும்பவில்லை. உமாமகேஸ்வரனும் பிரபாகரனும் ஒன்றிணைவது தங்களது பம்மாத்து கனவான் அரசிலுக்கு பாதகமாக அமையும் என்று அவர் அஞ்சினார்.

உமாமகேஸ்வரனை அழைத்து அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கு வாயப்புத் தருவதாகவும்,படித்து நல்ல வேலையிலுள்ள அவரை ஆபத்தை விலைக்கு வங்கவேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.தமிழர் விடுதலைக் கூட்டணியின் சர்வேதேச தொடர்பாளாராக நியமிப்பதாவும் அவர் ஆசை காட்டினார்.

ஆனால் அவரையும் அவரது அரசியலையும் ஏற்கனவே நன்கு புரிந்து கொண்டிருந்த உமாமகேஸ்வரன், அவரது கோரிக்கையை நிராகரித்தார்.

அதே நேரம் உமாமகேஸ்வரன் கணக்கு விடயத்திலும் இயக்க செயற்பாடுகளிலும் காட்டிய கண்டிப்பும் பகுதி நேரமாக இயக்கத்துக்குள் வந்து வேலை செய்த சிலருக்கு பிடிக்கவில்லை. அவர்கள் உமாமகேஸ்வரன் மீது அதிருப்தியில் இருந்தார்கள்.தம்பி பிரபாகரனுக்கு பயந்து அவர்கள் அதை வெளிக்காட்டவில்லை.

5

உமாமகேஸ்வரன் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவராக பதவி ஏற்ற காலகட்டத்தில் அமிர்தலிங்கம் சிறீலங்காவின் எதிர்கட்சித் தலைவராகியிருந்தார்.

பௌத்த சிங்கள பேரினவாதியான ஜே.ஆர் ஜெயவர்த்தனா சிறீலங்காவின் பிரதமாராகவும் (23 ஜுலை 1977) பின்னர் சிறீலங்காவின் ஜனாதிபதியாகவும்(04 பெப்ரவரி 1978) வருகிறார்.

தமிழ் மக்களுக்கு எதிரான இரண்டாவது பெரிய இனக்கலவரமான 1977 இனக்கலவரம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது.

ஒரு தமிழருக்கு எதிர்கட்சித்தலைவர் பதவி கிடைத்திருக்கிறது என்று அமிர்தலிங்கம் தரப்பினர் பூரிப்படைந்திருந்தாலும் அதை வைத்துக்கொண்ட தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை.

“போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்” என்று பாராளுமன்றத்தில் வைத்து எக்காளமிட்ட ஜே.ஆர் ஜெயவர்த்தனாவுக்கு வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் சத்தியை ஒன்று திரட்டி நிர்வாக முடக்கலை செய்து நெருக்கடியை கொடுப்பதற்கு அமிர்தலிங்கம் தரப்பால் முடியவில்லை.

“தமிழீழ விடுதலை தான் ஒரே தீர்வு” என்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தை அங்கீகரிப்பதற்கு வாக்களியுங்கள்” என்று 1977 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற பின்னர், சிறீலங்காவின் எதிர் கட்சித்தலைவர் பதவியை பெற்றுக்கொண்டு சிங்கள ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழர்களின் உரிகளை பெறலாம் என்று கதையை மாற்றிய அமிர்தலிங்கத்தின் செயற்பாடு மக்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் வெறுப்பை ஏற்படுத்தியது.

நான் முதலிலிலே குறிப்பிட்டபடி எஸ் ஜே வி செல்வநாயகத்தின் மறைவுக்குப் பின்னர் கட்சித் தலைமைத்துவத்தை தக்க வைப்பதற்காக அமிர்தலிங்கம் மேற்கொண்ட பிரித்தாழும் தந்திரோபாய செயற்பாடுகள் கிழக்கு மாகாணத்தில் மக்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் வடக்கு தலைமைகளால் தாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற அதிருப்தியை தோற்றுவித்திருந்தது.

இதை ‘அரசியல் நரி’ என்று பெயர் பெற்ற ஜே.ஆர் ஜெயவர்த்தனா திறமையாக கையாண்டு வடக்கு கிழக்கு முரண்பாடாகவும், இஸ்லாம் தமிழ் முரண்பாடாகவும் மடைமாற்றிவிட்டார்.

இந்தக் காலகட்டத்தில் அம்பாறை மாவட்டம் பொத்துவில் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கனரத்தினம் அமிர்தலிங்கத்தின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்து ஜே.ஆர் பக்கம் சாய ஆரம்பித்தார்.

1977 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் திகதி கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி நியூஸ் பத்திரிகைக்கு அவர் அணித்த செவ்வியில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா மீது தான் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அவர் தமிழ் மக்களிற்கு நீதி வழங்குவார் என்றும், கிழக்கு மக்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்களித்த போதும், தனித் தமிழ் நாட்டை விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார்.

இது தமிழர் தரப்பில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த செவ்வி வெளிவந்த மறுநாள் கனகரத்தினம் தமிழ் மக்களை காட்டிக்கொடுத்த துரோகி என்ற குறிப்பிட்டு அமர்தலிங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அமிர்தலிங்கத்தின் இந்த அறிக்கை, தமிழீழ விடுதலைப்புலிகளின் கவனத்தை பெறுகிறது. ‘தனி நபர் அழித்தொழிப்பை கைவிட்டு அரசபடைகளின் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்த வேண்டும்’ என்ற முடிவுக்கு புறம்பாக கனகத்தினத்தை கொலை செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு அந்த அமைப்பு வருகிறது.

கொழும்பிலுள்ள அவரது வீட்டில் வைத்தே அவரை கொலை செய்ய தீர்மானிக்கப்படுகிறது.

1978ம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி அவரை கொலை செய்வதற்காக உமா மகேஸ்வரன் பிரபாகரன் செல்லக்கிளி ஆகிய மூவரும் செல்கிறார்கள்.

அவர்கள் சென்ற போது கனகரத்தினம் தனது பாதுகாவலர்களுடன் காரில் வெளியே செல்ல புறப்பட்டுக்கொண்டிருந்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்பு கிளை செயலாளராக உமா மகேஸ்வரன் இருந்ததால், கனரத்தினத்துக்கு அவரை தெரிந்திருந்தது.

அவர் காரை நிறுத்தி , “தம்பி ஏன் வந்தனீங்கள்?” என்று கேட்க உமா மகேஸ்வரன் பிரபாகரன் செல்லக்கிளி ஆகிய மூவரும் தங்கிடமிருந்த கைத் துப்பாக்கியால் அவரை சுடுகிறர்கள்.

இந்தத் தாக்குதலில் அவர் உடனே கொல்லப்படவில்லை. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளித்த பின்னர் 3 மாதங்கள் கழித்தே உயிரிழந்தார்.

கொழும்பில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது தமிழ் இளைஞர்களால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதல் நடவடிக்கைக்கான ஒழுங்கமைப்பை செய்வதில் இலங்கை வானொலியில் பணிபுரிந்த நாகராசா முக்க்pய பங்கு வகித்தார்.அவர் அப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மத்திய குழுவிலும் இருந்தார்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட மூவரும் தாக்குதல் முடிந்த பின்னர் மேப்ப நாய்கள் தங்களை பின் தொடராது இருப்பதற்காக ஒரு கடதாசியில் மிளகு தூளை கட்டிச் சென்றிருந்தனர்.அந்த கடதாசி நாகராசா இலங்கை வானொலியில் தனது தட்டச்சு இந்திரத்தில் தட்டச்சு செய்த கடதாசியாகும்.

இந்த கடதாசியை கண்டெடுத்த பொலீசார் அதை ஒரு முக்கியமான தடயமாக வைத்து விசாரணையை ஆரம்பிக்கின்றனர்.

அல்பிரட் துரையப்பாவின் கொலையை விசாரித்த பஸ்தியாம்பிள்ளையே இதற்கும் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

புலனாய்வுத்துறையில் தன்னை பெரிய சூரராக காட்டிக்கொண்ட பஸ்தியாம்பிள்ளை, இந்த கொலையில் நாகராசாவின் தொடர்பை கண்டுபிடித்து அவரை கைது செய்கிறார்.

பஸ்தியாம்பிள்ளையின் கொடூரமான சித்திரவதையில் நாகராசா உமாமகேஸ்வரன் பற்றி தகவலை தெரிவித்துவிடுகிறார்.கட்டுவனில் உள்ள அவரது வீட்டைக் காட்டுவதற்காக பஸ்தியாம்பிள்ளை குழுவினர் அவரை யாழப்;பாணத்துக்கு அழைத்துச் செல்கின்றனர்.

உமாமகேஸ்வரன் அங்கு இருக்க மாட்டார் என்பது அவர்களுக்கு தெரியும்.ஆனால் நாராசாவை வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் இருப்பிடத்தை கண்டறியவும் முக்கிய உறுப்பினர்களை கைது செய்வும் அவரை தப்ப விடுகின்றனர்.

தொடர்ந்து தனது புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட பஸ்தியாம்பிள்ளை விடுதலைப்புலிகளின் மற்றொரு மத்திய குழு உறுப்பினரான ‘கனேஸ் வாத்தி’ யை கைது செய்து அவர் மூலம் உமாமகேஸ்வரன் தனது சகாக்களுடன் மடுக்காட்டுப்பகுதில் உள்ள பண்ணையில் தங்கியிருக்கும் தகவலை தெரிந்து கொண்டார்;.

04.07.1978 அன்று அவர் கணேஸ் வாத்தி வழிகாட்ட, துணை நிலை காவல்துறை அதிகாரி பேரம்பலம், மூத்த காவலர்; பாலசிங்கம், சாரதி சிறிவர்த்தனா ஆகியோரை அழைத்துக் கொண்டு விடுதலைப்புலிகளின் மடு பண்ணையை முற்றுகையை இடுகிறார். உமா மகேஸ்வரன், செல்லக்கிளி, நாகராசா, ரவி, ஐயர் உட்;பட பலர் அங்கிருந்தனர். தம்பி பிரபாகரன் அந்த நேரத்தில் அங்கிருக்கவில்லை.

உமாமகேஸ்வரனும் அவருடன் தங்கியிருந்த ஏனையோரும் இந்த முற்றுகையை எதிர்பார்க்கவில்லை.ஆனாலும் அவர்கள் பதட்டமடையவில்லை.

6

இந்த சம்பவத்தை பற்றி உமாமகேஸ்வரன் என்னிடம் தெரிவித்த தகவல்கள் மற்றும் இதில் அவருடன் அந்த நேரத்தில் அங்கிருந்த ஐயர் என்று அழைக்கப்படும் கணேசன் தன்னுடைய நூலில் எழுதிய தகவலின் அடிப்படையிலும் அவற்றை இங்கே பதிவிடுகிறேன்.

மடுவுக்கு அண்மையில் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் அமைந்திருந்த அந்தப் பண்ணை அங்கிருப்பவர்களின் பாதுகாப்புக்கு முக்கித்துவம் கொடுத்து அமைக்கப்பட்டிருந்தது.

பண்ணைக்கு வரும் வெளியாட்களை கண்காணிக்கும் விதத்தில் மரங்களில் பரண்கள் அமைக்கப்பட்டிருந்தது. காட்டு விலங்குகளில் இருந்து தப்புவதற்காக அடர்ந்த காட்டு மரங்களின் மேல் படுத்து உறங்குவதற்கான பரண் வீடு; ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அந்த பரண்வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் குடிசை ஒன்றும் அதற்கு அண்மையில் சமையல் செய்வதற்கான குடிசை ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.இந்தக் குடிசைகளில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கிணறு ஒன்று இருந்தது.

இந்தச் சம்பவம் நடந்த அன்று உமாமகேஸ்வரனும், ஐயரும் நாகராஜாவும் பரணில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். கீழே இருந்த குடிசையில் செல்லக்கிளி, ராகவன், நிர்மலன், ரவி, சித்தப்பா, யோன் ஆகியோர் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அதிகாலை ஐந்து மணி அளவில் பொலீஸ் வாகனத்தில் அங்கு வந்த பஸ்தியாம்பிள்ளை அந்த வாகனத்தின் சாரதியையும் தங்களுக்கு அந்தப் பண்ணை பற்றிய தகவலை தந்து வழிகாட்டி அழைத்து வந்த கணேசையும் தூரத்தில் நிறுத்திவிட்டு தனது உதவியாளர்களான பேரம்பலம், பாலசிங்கம் ஆகியோரோடு சென்று அந்தக் குடிசையை முற்றுகையிடுகிறார்.

குடிசையில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தது செய்வதறியாது திகைத்துப் போகின்றனர்.

ஆதன் பின் என்ன நடந்தது என்பதை ஐயர் தனது நூலில் பின்வருமாறு பதிவு செய்கிறார்.

“பஸ்தியாம்பிள்ளை திறமைமிக்க அதிகாரி. அந்த நேரத்தில் தீவிரவாத அரசியலில் ஈடுப்படுள்ளவர்களின் தரவுகள் பல அவரின் மூளைக்குள்ளேயே பதியப்பட்டிருந்தது. ஆக செல்லக்கிளி போன்ற தேடப்படுகின்றவர்களை அவர் அடையாளம் கண்டுகொண்டிருப்பார் என்பது எமது எல்லோரதும் ஊகம்.

அங்கிருந்த போராளிகள் தாம் வந்திருப்பது விவசாயம் செய்வதற்காகத் தான் என்று பொலீசாருக்குச் சொல்கின்றனர். அக்காலப்பகுதியில் இளைஞர்கள் காடுகளைச் சுத்திகரித்து விவசாயம் செய்வது வழமையன நிகழ்வு என்பதால் அவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள். பஸ்தியாம் பிள்ளை குழுவினர் இவர்கள் கூறியதை நம்பினார்களோ என்னவோ நம்புவது போல் நடித்துக்கொண்டிருந்தார்கள்.

நான் ஏனைய பண்ணைகளுக்குச் சென்று வேலைகளை கவனிக்க வேண்டும் என்பதால் வழமையாகவே நேரத்துடன் எழுந்துவிடுவேன். அன்றும் பாதி உறக்கத்தில் என்னோடு பரணில் இருந்த உமாமகேஸ்வரன்,நாகராஜா ஆகியோரிடம் விடைபெற்றுக்கொண்டு மற்றப்பண்ணைகளுக்குச் செல்லும் வழியில் குடிசையை நோக்கி நடக்கிறேன். அங்கு நிலைமைகள் வழமைக்கு மாறானவையாக இருப்பதை சற்று அண்மித்ததும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அதிகாலையில் அமைதியாக இருக்கும் பண்ணையில் ஆள் அரவமும் பேச்சுக்குரல்களும் கேட்டன. இவற்றை அவதானித்த நான் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதாக எண்ணி மிக அவதானமாக ஓசை படாமல் அருகே சென்ற போது அன்னியர்களின் பேச்சுக் குரல்களை அவதானிக்கின்றேன். உடனே பரணுக்குத் திரும்பிச் சென்று உமாமகேஸ்வரனையும், நாகராஜாவையும் உசார்படுத்துகிறேன்.

உறக்கம் கலைந்த அவர்கள், பரணைவிட்டு இறங்கி மூவருமாக குடிசையை நோக்கிச் செல்கிறோம்.

நாங்கள் மூவரும் மெதுவாக அடர்ந்த காட்டு வழியில் வேறு வேறு திசைகளில் சென்று குடிசையைச் சுற்றி வளைத்துக்கொள்கிறோம். நாகராஜவிடம் ஒரு குறிசுடும் துப்பாக்கியும் உமாவிடமும்,என்னிடமும் ஒவ்வொரு கைத்துப்பாக்கியும் இருந்தது. அருகே சென்றதும் அங்கிருப்பது பொலீஸ் என்பது எமக்குத் தெரியவருகிறது. நாம் மூவரும் நகரவில்லை நடப்பதை மறைவிலிருந்தே அவதானிக்கிறோம்.

இதற்கிடையில் குடிசையிலிருந்த எம்மவர்கள் பஸ்தியாம் பிள்ளை குழுவினருடன் சாதரணமாக பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தனர்.

பஸ்தியாபிள்ளை குழுவினருக்கு அவர்கள் அனைவரையும் பொலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் நோக்கமும் இருந்தது.

பொலீஸ் அதிகாரிகளைத் தேனீர் தயாரித்து அருந்த அழைத்ததும் அவர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். அவ்வேளையில் அங்கே இருந்த குறி சுடும் துப்பாக்கியைக் கண்ட பஸ்தியாம்பிள்ளை அது எதற்காக எனக் கேள்வியெழுப்புகிறார். யானைகள் அதிகமான காடு என்பதால் பாதுகாப்பிற்காக வைத்திருக்கிறோம் எனக் கூறி எம்மவர்கள் தப்பித்துக்கொள்ள முனைகின்றனர்.

தேனிர் தயாரித்தாயிற்று. குடிசையைச் சூழ மரக் குற்றிகள் இருந்தன. அவற்றின் மேல் அமர்ந்து இளைப்பாறியபடியே தேனீர் அருந்துகின்றனர்.

(…)

மரக் குற்றிகளில் அமர்ந்திருந்த போது பஸ்தியாம்பிள்ளை கொண்டு வந்திருந்த இயந்திரத் துப்பாகியை தனக்கு அருகில் வைத்துவிட்டு பேசிக்கொண்டிருந்தார். எம்மில் அனைவரும் இயந்திரத் துப்பாக்கி பற்றி அறிந்திருந்தோம் ஆனால் யாரும் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி துப்பாக்கியக் கைப்பற்றினால் தப்பித்துவிடலாம் என அங்கிருந்த எம்மவர் மௌனமாகத் திட்டமிட்டுக்கொண்டனர். அதற்கு முதலில் பொலீஸ் அதிகாரிகள் ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்த வேண்டும் என்பதையும் திட்டமிடுகிறார்கள்.

இவ்வேளையில் பேரம்பலம் முகம் கழுவிக்கொள்ள கிணற்றுக்கு அருகே அழைத்துச் செல்லப்படுகிறார். கிணறும் கூப்பிடு தொலைவில் இருந்தாலும் குடிசைக்கு மறைவாகவே இருந்தது.

யோனும், சித்தப்பாவும் பேரம்பலத்தைக் கிணற்றிற்குக் கூட்டிச் செல்கின்றனர். அவர் போக மற்றைய இருவரும் இன்னும் உரையாடலில் இருந்தனர். ஆக இரண்டு பொலீசார் நான்கு போராளிகள் அங்கு எஞ்சியிருந்தனர்.

நாகராஜாவும் தொலைவிலிருந்தே என்ன நடக்கப் போகிறது என்பதை ஊகித்துக்கொண்டதால் குறிசுடும் துப்பாகியோடு குடிசையை மேலும் அண்மிக்கிறார்.

இவ்வேளையில் தான் திகில் சம்பவம் ஒன்று நிகழ்கிறது. ரவி பஸ்தியாம்பிள்ளையின் இயந்திரத்துப்பாகியை எடுத்துவிடுகிறார். பதட்டம் பரபப்பு எல்லாம் ஒருங்கு சேர ரவிக்கு அதனை இயக்கத் தெரியவில்லை. அங்கும் இங்குமாக பல தடவை இயக்குவதற்கு முனைகிறார்.

ரவி துப்பாகியைக் கைப்பற்றிய அதே கணத்தில் விரைந்து செய்ற்பட்ட ராகவன் பஸ்தியாம்பிள்ளையை மடக்கிக் கட்டிப் புரள்கிறார். மறுபுறத்தில் பாலசிங்கத்தை மடக்கிய கறுப்பி என்ற நிர்மலன் அவரோடு குறிசுடும் துப்பாகியொன்றைக் கைப்பற்றுவதற்காக மல்யுத்தம் நடத்திக்கொண்டிருந்தார். இவ்வாறு இரு முனை யுத்தம் நடக்க திகில் நிறைந்த திரைப்படக் காட்சிபோல அனைத்தையும் நாம் அவதானித்துக்கொண்டிருந்தோம்.

இதே வேளை பாலசிங்கத்தை நோக்கி மறைவிலிருந்த நாகராஜா தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுடுகிறார். இதனால் நிர்மலனது கையில் கூட ஒரு காயம் ஏற்படுகிறது.

ரவி இயந்திரத் துப்பாகியை இயக்க முனைந்து கொண்டிருந்த வேளையில் விரைந்து செய்ற்பட்ட செல்லக்கிளி பஸ்தியாம் பிள்ளையின் தலையில் குறிசுடும் துப்பாக்கியால் அடித்துவிடுகிறார். அடிவிழுந்ததும் பஸ்தியாம்பிள்ளை நினைவு குலைந்த நிலையிலேயே ராகவனோடு கட்டிப்புரழ்கிறார்.

இது நடந்துகொண்டிருந்த வேளையில் கிணற்றுக்கு முகம்கழுவச் சென்ற பேரம்பலம் என்பவரை அவரோடு சென்ற யோனும் சித்தப்பாவும் கிணற்றுகுள் தள்ளிவிடுகின்றனர். இவ்வேளை ஒரு எதிர்பாராத சம்பவமும் நிகழ்ந்தது. அவரைத் தள்ளி விழுத்தும் போது யோனும் சேர்ந்து கிணற்றினுள் விழுந்துவிடுகிறார். அதிஷ்டவசமாக யோனுக்கு நீச்சல் தெரிந்திருந்ததால் அவர் நீந்திக்கொண்டிருக்க பேரம்பலம் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டுருந்தார்.

அனைத்துமே திகில் நிறைந்த திரைப்படம் போல் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்கின்றன. கண்ணிமைக்கும் நேரத்துள் அனைத்தும் தலை கீழ் நிகழ்வுகளாகிவிடுகின்றன. ஆரம்பத்திலிருந்தே எம்மவர்கள் யாரும் சரணடைவதற்கோ விட்டுக்கொடுப்பதற்கோ தயாராக இருக்கவில்லை. இறுதிவரை போராடுவதாகவே தீர்மானித்திருந்தனர்.

ரவியிடமிருந்து இயந்திரத் துப்பாக்கியை வாங்கிக்கொண்ட செல்லக்கிளி சில கணங்களுள் அதனை எவ்வாறு இயக்குவது என்று கற்றுக்கொள்கிறார். உற்சாகமாகிவிட்ட அவர் விழுந்துகிடந்த பஸ்தியாம்பிள்ளையைச் சுட்டுக்கொல்கிறார். உடனடியாகவே கிணறு இருந்த திசையை நோக்கி ஓடிய செல்லக்கிளி அங்கு கிணற்றினுள் தத்தளித்துக் கொண்டிருந்த பேரம்பலத்தையும் சுட்டுக்கொல்கிறார்.

மூன்று பொலீசாரும் திகில் நிறைந்த சில கண நேரத்துள் மரணித்து விடுகின்றனர்.ஆர்ப்பாட்டமில்லாத இராணுவ வெற்றி நிலைநாட்டப்படுகிறது.”

0000

இந்தச் சம்பவம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பலத்தையும் தமிழ் மக்கள் திருப்பி அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்ற செய்தியையும் பௌத்த சிங்கள பேரினவாதிகளுக்கும் அவர்களின் காவலராக இருந்த சிறீலங்காவின் அரசுத்தலைவர் ஜே ஆர் ஜெயவர்த்தனாவுக்கும் வெளிச்சம் போட்டு காட்டியது.

1978ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் திகதி இலங்கையிலுள்ள அனைத்து பத்திரிகை அலுவலகங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடிதத்தலைப்பில் தம்மால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு உரிமை கோரும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தக் கடிதம் சிறீலங்கா நாடாளுமன்றத்தில் இருந்த அமிர்தலிங்கத்தின் அலுவலக(எதிர்கட்சி தலைவர்) தட்டச்சு இயந்திரத்தில் ஊர்மிளாவால் தட்டச்சு செய்யப்பட்டது.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்ட அந்தக் கடிதத்தில் உமா மகேஸ்வரன் கையொப்பமிட்டிருந்தார்.

இந்த கடிதம் தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் வெளியிடப்பட்ட முதலாவது கடிதமாகும்.

இந்தக் கடிதத்தின் பிரதி ஒன்று சிறீலங்கா புலனாய்வுப் பிரிவுக்கும்,கொழும்பிலிருந்த பல வெளிநாட்டு தூதரகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தக்கடிதம் சிங்கள மக்களின் அமோக அதரவுடன் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனாவுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.

சிங்கள பௌத்தர்களின் காவலன் என்று அவர் கட்டிக்காத்த வந்த பிம்பம் கலைந்துவிடும் என்று அவர் அஞ்சினார்.

இந்திய பின்புலம் இல்லாமல் தமிழ் இளைஞர்களால் இப்படியான செயற்பாடுகளை செய்திருக்க முடியாது என்று அவர் நம்பினார்;

உமா மகேஸ்வரன் எழுச்சியும் வீழ்ச்சியும். -சிவா சின்னப்பொடி

1
உமா மகேஸ்வரன்

தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கத் தலைவர்களில்; அதிகளவுக்கு விமர்சனத்துக்கு உள்ளான ஒருவர்.

அதேவேளை தமிழிழு விடுதலைப் போராட்ட இயக்கத்தலைவர்களில் சொந்த இயக்கத்தினரால் படுகொலை செய்யப்பட்ட ஒரே ஒரு தலைவரும் அவரே.

அதேபோலத் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அடுத்த படியாக இந்திய அதிகார வர்க்கத்தால் அதிகளவுக்கு குறிவைக்கப்பட்ட ஒருவரும் கூட.

விடுதலைப்புலிகளால் ‘துரோகி இயக்கக் கட்டுப்பாட்டை மீறியவர்’ என்று சாவொறுப்பு தண்டனை வழங்குவதற்கு இலக்கு வைக்கப்பட்ட போதும் பின்னர் அவர்களது அந்த இலக்கிலிருந்து விலக்களிக்கப்பட்ட ஒரேயோரு தலைவரும் அவரேயாகும்.

அவரை நேசிப்பவர்கள், அவரைப் பெரியையா அல்லது பெரியவர் என்றும் மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி என்றும் அழைக்கிறார்கள்.

அவரை அரசியல் ரீதியாக விமர்சிப்பவர்கள் அராஜகவாதி என்றும் கொலைகாரன் என்றும் சந்தர்ப்பவாதி என்றும் கூறுகிறார்கள்.

அவரைத் தமது வர்க்க நலம் சார்ந்தும் எசமானர்களின் நலம் சார்ந்தும் கொலை செய்தவர்களும் அதற்குத் திட்டமிட்டவர்களும் நம்பிக்கைத் துரோகி என்றும், தலைமை பொறுப்புக்குத் தகுதில்லாதவர் என்றும் கூறுகிறார்கள்

உண்மையில் அவர் யாhர்?ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கும் ஆளுமை அவருக்கு இருந்தா?அவர் அதை வளர்த்துக்கொண்டாரா?எப்படி அவரால் முதலில்

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால தலைவராகவும் பின்னர் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவராகவும் வர முடிந்தது?

அவர் ஒன்றும் பிறவிப் புரட்சியாளரோ, பிறவி அரசியல்வாதியோ அல்ல.

சாதிய சமூகமாகப் பிழைப்புவாத சமூகமாகச் சீரழிந்து போயிருந்த யாழ்ப்பாண சமூகத்தில் 18 பெப்ரவரி 1945 ல் மேல் தட்டுக் குடும்பம் ஒன்றில் பிறந்த ஒரு சராசரி மனிதர்.

1984 ம் ஆண்டு ஜனவரி மாதம் அவரது வரலாற்றைப் பதிவு செய்யும் நோக்கத்தோடு தமிழீழத்தின் குரல் வானொலிக்காக அவரை நான் செவ்விகண்டிருந்தேன்.

அந்தச் செவ்வியில் அவர் குறிப்பிட்ட சில விடயங்களை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

1968 வரை சாராசரி யாழ்ப்பாண உயர் குடியினருக்கு இருக்கக்கூடிய சாதிய பெருமையும் சைவ வெள்ளாளிய சாதியப் பார்வையும் தனக்கு இருந்ததாகவும், ஆனால் தனது அயலூரான மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்குள் அனைவரும் செல்வதற்கான ஆலய நுழைவு போராட்டமும் அதையொட்டி அரங்கேற்றப்பட்ட கந்தன் கருணை நாடகமும் தன்னை மாற்றியதாகவும் அவர் தெரிவித்தார்;.

சாதி என்பது பிறப்பால் வருவது, ஒருவர் முற்பிறப்பில் செய்த கருமவினைப் பலனாகவே, அடுத்த பிறப்பில் உயர்ந்த சாதியிலும், தாழ்ந்த சாதியிலும் பிறக்கின்றனர் என்று தனக்குள் இருந்த சைவ வெள்ளாளியக் கருத்தியலை இந்தப் போராட்டமும், இந்த நாடகமும் தகர்த்ததாக அவர் குறிப்பிட்டாரார்.

ஆயுதம் ஏந்தி போராடினால் தான் அடக்குமுறையை ஒழிக்க முடியும். அடிப்பவனுக்கு அடிவாங்குபவன் திரும்பி அடிக்காதவரை அடிப்பவன் அடிப்பதை நிறுத்தப் போவதில்லை என்ற எண்ணக்கருவை அந்தப் போராட்டமும் கந்தன் கருணை நாடகமும் தன்னுள் விதைத்ததாக அவர் கூறினார.;

அதே நேரம் 1970 களின் ஆரம்ப காலகட்டத்தில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மங்கையற்கரசி அமிர்தலிங்கம் முதலான தமிழரசுக்கட்சித் தலைவர்கள் மேடைகளிலே அறிமுகம் செய்த உணர்ச்சி அரசியலின் பால் தான் ஈர்க்கப்பட்டதாவும் ‘தமிழ், தமிழன், தமிழின விடுதலை’ என்ற கருத்துருவாக்கம் இந்தக் காலகட்டத்தில் தன்னுள் நிகழ்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்;.

அவர் நில அளவையாளராகக் கொழும்பில் பணியாற்றிய காலத்தில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளையின் தீவிர செயற்பாட்டாளராக இருந்திருக்கிறார்.

1974 ல் தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகிய பின்னர் அதன் கொழும்பு கிளையின் செயலாளராக இருந்தார்.

1970 க்கும் 1974 க்கும் இடைப்பட்ட காலகட்டத்திலே கொழும்பு பம்பலப்பிட்டியில் இருந்தவர்கள் அங்குள்ள கதிரேசன் கோவிலில் சிறந்த பக்திமானாகப் பயபக்தியுடன் சுவாமி கும்பிடும் ஒருவராகக் காலையும் மாலையும் அவரைப் பார்த்திருக்க முடியும்.கொழும்பில் நடைபெற்ற வேல் விழா, முதலான இந்து சமய விழாக்கள் மற்றும் கருத்தரங்குகளில் ஒரு தொண்டனாக முன்னணி செயற்பாட்டாளனாக அவரைப் பார்த்திருக்க முடியும்.

சைவமும் தமிழும் தமிழினத்தின் இரண்டு கண்கள் போன்றவை, சிங்களமும் பௌத்தமும் அதற்கு எதிரானவை என்ற குறுங்குழு வாதப்பார்வைதான் அவரிடமும் அந்தக்காலத்தில் இருந்தது.

1974 ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் பிரபல மனோதத்துவ நிபுணரும் பகுத்தறிவுவாதியுமான டொக்டர் ஏபிரகாம் கோவூரை கொழும்பில் சந்திக்கிறார்.

இந்தச் சந்திப்பு அவரது மனக்கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

மத அடிப்படைவாதத்தையும் கடவுளையும் முன்நிறுத்தி அதிகாரத்தைத் தக்கவைக்க மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளையும் ஏமாற்றுக்களையும் டொக்டர் ஆபிரஹாம் கோவூர் உமாமகேஸ்வரனுக்கு புரிய வைத்தார்.

“கடவுளால் படைக்கப்பட்ட மனித உயிரியைச் சேர்ந்த ஒரு தாய் தான் பெற்ற பிள்ளைகளிடம் பாராபட்சம் காட்டுவதில்லை. ஒரு பிள்ளைக்குப் புதிய உணவும் மற்றப்பிள்ளைக்கு பழைய உணவும் எந்தவொரு தாயும் கொடுக்கமாட்டாள்.ஒரு பிள்ளையை உயர்ந்த நிலையிலும் இன்னொரு பிள்ளையைத் தாழ்ந்த நிலையிலும் எந்த ஒரு தாயும் வைக்கமாட்டாள்.

ஆனால் மனிதனைப் படைத்த கடவுள் ஒரு சாராரை உயர்ந்தவர்கள் என்றும் இன்னொரு சாராரை தாழ்ந்தவர்கள் என்றும் ஏன் படைத்திருக்கிறார்?ஏழை பணக்காரன், ருசிக்கு உண்பவன், பசிக்கு உணவின்றி தவிப்பவன், மாடமாளிகைகளுக்கு சொந்தக்காரன், வானமே கூரையாக வாழ்பவன் என்று கடவுளின் படைபில் எத்தனை வேறுபாடுகள்? கடவுள் என்பவர் பாராபட்சம் உள்ளவரா?கடவுள் படைத்ததாகச் சொல்லப்படும் மனிதன் தன்னுடைய முயற்சியால் பல மொழிகளைப் படித்துத் தெரிந்து கொள்கிறான். ஏன் கடவுளுக்கு மட்டும் குறிப்பிட்ட ஒரு மொழி மட்டும் தான் தெரிகிறது?” என்று டொக்டர் கோவூர் எழுப்பிய கேள்விகளும் அதற்கு அவர் கொடுத்த விளக்கங்களும் சைவ வெள்ளாளிய புத்தி ஜீவியாக இருந்த உமா மாகேஸ்வரனை பகுத்தறிவு வாதியாக மாற்றின.

டொக்டர் ஆபிரகாம் கோவூரின் அறிவுரைப்படி அவர் பெரியாரைப் படிக்க ஆரம்பிக்கின்றார்.

பெரியாருடைய எழுத்துக்கள் பார்ப்பணித்தின் கோர முகத்தை அவருக்குப் புரிய வைத்தன. பார்ப்பணியம் கர்மம் மறுபிறப்பு ஊழ்வினைப்பயன் மற்றும் வரணாச்சிரமம் என்ற சனாதன கோட்பாடுகளைப் பயன்படுத்தி தமிழினத்தை சாதிரீதியாகப் பிளவுபடுத்தி மோதவிட்டு சமூகம் கல்வி பொருளதாரம் மதம் என்று அனைத்து துறைகளிலும் ஆக்கிரமித்து , அடிமைப்படுத்தி வைத்திருக்கும் இழி நிலையை அவர் புரிந்து கொண்டார்.

தமிழ் சமூகம் பிழைப்புவாத சமூகமாக ஒற்றுமையில்லாத சமூகமாக, சீரழித்து போயிருப்பதற்கு பார்ப்பணியமே காரணம் என்பதும் யாழ்பாண அதிகாரவர்க்கத்தினரால் தமிழ் காலச்சாரமாக முன்நிறுத்தப்படும் கந்தபுராண காலாச்சாரமும்; ஆறுமுகநாவலரின் சற்சூத்திர காலச்சாரமும் பார்பணிய கலாச்சாரத்தின் நீட்சியே என்பதையும் யாழ்ப்பான வெள்ளாளிய சமூகம் அடிப்படையில் அரை பார்ப்பணிய சமுகம் என்பதையும் அவர் தெரிந்து கொண்டார்.

இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டு அரசியல் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது.

திராவிடர் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக்கழகம் என்பவற்றின் செயற்பாடுகளை அவர் ஊன்றிக்கவனிக்க ஆரம்பிக்கிறார்.

அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி முதலானோர் மீது அவருக்கு அளவுகடந்த பிடிப்பு ஏற்படுகிறது.

இந்தக் காலகட்டத்தில் புதிய புலிகள் அமைப்பின் மத்திய குழு உறுப்பினராக இருந்த பேபி சுப்பிரமணியத்துடன் உமாமகேசுவரனுக்கு தொடர்பு எற்படுகிறது.

பிற்காலத்தில் தமிழீழ கல்விக்கழகத்தின் பொறுப்பாளராக இருந்த இளங்குமரன் என்ற பேபி சுப்பிரமணியமும் பெரியாரிய கொள்கைளில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.

இந்த ஈடுபாடே இருவருக்குமான நெருக்கத்துக்கு காரணமாக அமைந்தது.

இந்த நெருக்கத்தின் காரணமாகப் பேபி சுப்பிரமணியம் உமாமேசுவரனை புதிய புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

புதிய புலிகள் அமைப்பின் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களுக்கு (தலைவர் பிரபாகரன் உட்பட) உமா மகேசுவரனை பிடித்துப் போகிறது.

புதிய புலிகள் இயக்க முத்திய குழு உறுப்பினராகவும் அதன் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவராகவும் இருந்த கணேசன் என்ற ஐயர் தனது நூலில் உமா மகேஸ்வரனைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“கொழும்பிலிருந்த உமாமகேஸ்வரனிடம் இலங்கை அரசின் தேசிய இன அடக்குமுறைக்கு எதிரான உணர்வும் அதற்கு எதிரான ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற உணர்வும் மேலோங்கியிருந்தது.”

“உமா மகேஸ்வரன் 77 ஆம் ஆண்டு தமிழ் மக்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரச வன்முறைகளால் அகதிகளான தமிழர்கள் மத்தியிலும் பல வேலைகளை முன்னெடுத்திருந்தார். டொலர் பாம், கென்ட் பாம் போன்றவற்றின் உருவாக்கத்திலும் பங்கு வகித்திருந்தார். டேவிட் ஐயா, ராஜ சுந்தரம் போன்றோரோடும் நெருங்கிய உறவுகளைப் பேணிவந்தார். தனது பல்கலைக்கழகக் காலங்களிலிருந்தே தேசியவாத அரசியலில் ஈடுபட்ட உமா மகேஸ்வரன், அகதிகள் புனர்வாழ்வில் வெளிக்காட்டிய உணர்வுபூர்வமான பங்களிப்பும் ஈடுபாடும் எமக்கெல்லாம் அவர்மீதான மதிப்பை ஏற்படுத்தியது.”

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

செவ்வாய், 29 அக்டோபர், 2013

நினைவழியா வடுக்கள் 21

நினைவழியா வடுக்கள் 21
சந்திரன் இறந்து இரண்டு வாரம் கடந்துவிட்ட நிலையில் அவனை கொலைசெய்த சாதி வெறியர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் என் மனதை வாட்டிக்கொண்டிருந்தது. ‘நாங்கள் அவனை மறந்து விட்டதாக நினைத்து அவன் ஆவியாக வந்து எங்களை வெருட்டுவானோ?’ என்ற பயம் வேறு அடிமனதில் இருந்துகொண்டிருந்தது.
இது பற்றிய பேச்சை எடுத்தாலே சின்னத்தம்பியும் நடராசனும் ‘ஆளை விட்டால் போதும் சாமி’ என்று விலகி விலகிச் சென்றார்கள்.
தனியாக எதையும் செய்வதற்கும் எனக்கு துணிவிருக்கவில்லை.
ஒரு நாள் தோழர் சிவராசா எங்கள் வீட்டுக்கு வந்த போது, ‘சிறுவர்களான நாங்கள் அவர்களது போராட்டத்துக்கு என்ன செய்யலாம்’ என்று கேட்டேன்.
‘நன்றாகப்படித்து சாதித்து காட்டுவது தான் சிறுவர்களான எங்களுக்குரிய கடமை’ என்று அவர் சொன்னார்.கந்தமுருசேனாரும் இதைத் தான் எனக்கு சொல்லியிருந்தார்;.
நாங்கள் படித்து முன்னேற வேண்டுமானால் அதற்கு இருக்கும் தடைகளை அகற்ற வேண்டும்.
ஆதிலும் பாடசாலைக்கு செல்வதற்கு விருப்பமும் ஈடுபாடும் இருக்கவேண்டும்.
ஆனால் பாடசாலை என்பது எங்களை அவமதிக்கும்-புறக்கணிக்கும் இடமாக இருந்ததால் நாங்கள் ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் அங்கு செல்வதில்லை.
உண்மையை சொல்வதானால் கந்த முருகேசனார் நடத்திய திண்ணைப் பள்ளிக் கூடத்துக்கு செல்வதில் இருந்த ஆர்வம் எனக்கு அரசாங்க பாடசாலையான மந்திகை பள்ளிக் கூடத்துக்கு செல்வதில் இருக்கவில்லை.
அதற்கு காரணம் சாதி வெறியரான கதிர்காமர் வாத்தியாருடைய செய்பாடுகளாகும்;
அன்று ஒரு வெள்ளிக்கிழமை.
வழமைபோல பாடசாலைக்குச் சென்று எங்களது வகுப்பில் பசுபதி வாத்தியார் புதிதாக எமக்கு ஏற்பாடு செய்து தந்தபடி காட்போட் மட்டைகளை எடுத்துவந்து தரையில் போட்டுவிட்டு அமரமுற்பட்ட போது நாங்கள் அமரும் இடத்துக்கு பக்கத்தில் உள்ள கதிரையில் அமரும் மாணவன் வராதது தெரிந்தது.
ஏற்கவே சந்திரன் சாதிவெறியர்களால் கொலைசெய்யப்பட்டதை நினைத்து கோபத்துடன் இருந்த எனக்கு ‘இந்த கதிரையில் ஏறியிருந்தால் என்ன?’ என்ற எண்ணம் சட்டென்று தோன்றிது.’போராடினால் தான் எதுவும் கிடைக்கும்’ என்று கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் சொன்னதும் ஞாபகத்துக்கு வந்தது.
‘எல்லாம் வல்ல சாமி இருக்கிற கோயிலுக்குள் போகிறதுக்கு துணிஞ்ச பிறகு வகுப்பில் இருக்கும் கதிரையில் ஏறி இருந்தால் என்ன?’ என்ற நினைப்புடன் பின்விளைவுகள் பற்றிய எந்தப்பயமும் இன்றி அந்த கதிரையில் ஏறி இருந்துவிட்டேன்.
நான் ஏறி இருந்த கதிரைக்கு பக்கத்து கதிரையில் இருந்த மேட்டுக்குடி மாணவன் ஏதோ அசிங்கமான விரும்பத் தகாத மிருகம் ஒன்று தனக்கு பக்கத்தில் வந்து இருந்துவிட்டதாக நினைத்து கத்திக்கொண்டு எழுந்து அப்பால் சென்றுவிட்டான்;.
அங்கிருந்த மேட்டுக்குடி மாணவ சிகாமணிகள் ஏதோ பெரிய அக்கிரமம் நடந்துவிட்டதைப் போல ‘ஏய் நளவா நீ கதிரையில் இருக்கக் கூடாது எழும்படா’ என்று கத்திக் கூச்சல் போட்டார்கள்.நான் அசைய மறுக்க சிலர் என்னை இழுத்து விழுத்தப்பார்த்தார்கள்.
நான் மேசையை இறுக்கிப்பிடித்தபடி அசையாதிருக்க சிலர் எனக்கு அடித்தார்கள்.அவர்களை தடுக்க சின்னத்தம்பி நடராசன் உட்பட எமது சமூகப் பொடியள் முயல அங்கு ஒரு சிறு கலவரமே மூண்டுவிட்டது.
அதற்குள் சில மேட்டுக்குடி பொடியள் ஓடோடிச் சென்று எங்களது வகுப்பாசிரியாரான கதிர்காமர் வாத்தியாரை அழைத்து வந்தார்கள்.
சாதி வெறியரான அவர் குழுமாடு ஒன்று வெறி கொண்டு வருவதைப் போல கோபாவசத்தோடு வந்து ‘எல்லாம் இருங்கோடா’ என்று கத்தினார்.
அப்போதும் கதிரையை விட்டு எழுந்திராது அமர்ந்திருந்த என்னை வெறிபிடித்த மிருகம் ஒன்று பார்ப்பதைப்போல வெறித்தனமாக பர்த்து
‘நள நாயே உனக்கு கதிரை கேக்குதா’ என்று கத்திய வாறு என்னுடை தலைமயிரில் பிடித்து என்னைத்தூக்கி எனது தலையை அருகில் இருந்த சுவரில் மோதி அடித்தார்.
அந்த வெறிகொண்ட மனித மிருகம் தூக்கி அடித்ததில் எனது இடது பக்க நெற்றி உடைந்து இரத்தம் கொட்டியது.
அவமானம் அழுமை ஆத்திரம் எல்லாம் ஒன்று சேர நான் எழுந்து கண் இமைக்கும் நேரத்தில் என்னுடைய சிலேட்டை எடுத்து வாத்தியார் என்ற பெயரில் இருந்த அந்த மனித மிருகத்துக்கு எறிந்துவிட்டேன்.
அந்த சிலேட் அவர் மீது பட்டு கீழே விழுந்து உடைந்து நெருங்கியது.
‘ஓரு நளப் பொடியன் கதிரையில் ஏறி இருந்ததுமல்லாமல் ஒரு வெள்ளாள வாத்தியாரான தன்னையே அடித்துவிட்டான்’ எவ்வளவு பெரிய குற்றம்.?விடுவாரா கதிர்காமர் வாத்தியார்?அப்புறம் அவரது சைவ வெள்ளாளியப் பெருமை என்னாவது ?
என்னை அடித்து உதைத்து துவைத்து எடுத்துவிட்டார்.
அதற்குள் பசுபதி வாத்தியார் தலைமை ஆசிரியர் உட்பட எல்லோரும் அங்கே வந்துவிட்டனர்.
‘கூப்பிடுங்கள் பொலீசை.உவனை கொண்டுபோய் பொலிஸ் ஸ்டேசனிலை வைத்து நல்ல சாத்து சாத்த வேணும்’ என்று கதிர்காமர் வாத்தியார் கத்திக் கொண்டிருந்தார்.
‘போலீசுக்கெல்லாம் வேண்டாம் நாங்களே பாத்துக்கொள்ளுவம்,பொலிசுக்கு போனால் இவன்ரை படிப்பு கெட்டுபோய்விடும்’ என்று பசுபதி வாத்தியார் அவரை சமாதானம் செய்ய முற்பட்டார்.
‘என்ன பொலீஸ் வேண்டாம்?நீர் இந்த கீழ் சாதி நாயளுக்கு சப்போட்டோ? உவங்களுக்கு எல்லாம் என்னத்துக்கு படிப்பு.போய் மக்கோனாவில் (மக்கோனா என்பது ஒரு இடம் அங்குதான் சிறுவர் சீர் திருத்தப் பள்ளி இருந்தது) இருந்து கழி தின்னட்டும்’ என்று வார்த்தைகளை அனலாகக் கொட்டினார்.
POINT PEDRO HOSஇவர்கள் இப்படி பேசிக் கொண்டிருந்த போது எனது தலைக் காயத்திலிருந்து இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது.
அதை அவதானித்த பசுபதி வாத்தியார் அங்கிருந்த தலைமை ஆசிரியரைப் பார்த்து ‘இதில் என்ன செய்யலாம் என்பதை நீங்கள் தான் முடிவெடுக்க வேணும், நான் போய் இவனுக்கு மருந்து கட்டிக்கொண்டு வாறன்’ என்று கூறிவிட்டு என்னை அருகிலிருந்த மந்திகை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று மருந்து கட்டுவித்தார்.
நாங்கள் மருத்துவமனையில் இருந்து பாடசாலைக்கு திரும்பிய போது அங்கே காவல்துறை ஜீப் நின்று கொண்டிருந்தது.
வாத்தியாரை அடித்துவிட்டு நான் ஓடியபோது கால் தடக்கி கல்லில் விழுந்து மண்டை உடைந்து விட்டது. இது தான் காவல்துறைக்கு அவர்கள் கொடுத்த வாக்கு மூலம்.
POLICE
நான் பயத்தில் கதறி அழ பருத்தித்துறை காவல்துறையினர் என்னை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு போய் காவலில் வைத்துவிட்டார்கள்.
விசயமறிந்து எனது அப்பாவும் அம்மாவும் ஓடிவந்து அவர்களிடம் என்னை விட்டுவிடும்படி கெஞ்;சிப்பார்த்தார்கள்.
வாத்தியாருக்கு அடித்த பொடியளை விட முடியாது என்று அவர்கள் கூறிவிட்டார்கள்.
எனது தந்தை சட்டத்தரணி ஒருவரை ஏற்பாடு செய்து அவர் மூலமாக காவல்துறையினரை அணுகினார்
அப்போதும் ‘வாத்தியாருக்கு அடித்தது பெரிய குற்றம் என்றும் என்னை நீதி மன்றத்தில் நிறத்தி மக்கோனேவில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப் போவதாகவும்’ அவர்கள் சட்டத்தரணியிடம் தெரிவித்துவிட்டனர்.அந்த சட்டத்தரணி அங்கிருந்த காவல்துறை பொறுப்பதிகாரிக்கு நடந்த உண்மை சம்பவத்தை விளக்கி கூற, அவர் முறைப்பாடு செய்தவர்கள் தாங்கள் கொடுத்த முறைப்பாட்டை திரும்பப் பெற்றால் மட்டுமே என்னை விடுதலை செய்ய வழி இருக்கிறதென்றும் அதற்கு மாலை 5 மணி வரை அவகாசம் தருவதாகவும் தெரிவித்தார்.
அப்போது நேரம் பகல் 11 மணியாகியிருந்தது.
அந்த சட்டத்தரணி தனது காரிலே எனது பெற்றோரை பாடசாலைக்கு அழைத்துவந்து பாடசாலை அதிபருடனும் கதிகர்காமர் வாத்தியாருடனும் பேசிய போதும் அவர்கள் தாங்கள் கொடுத்த முறைப்பாட்டை திரும்பப் பெறமறுத்துவிட்டனர்.
அதற்கு மேல் தன்னால் ஒன்றும் செய்ய முடியாதென சட்டத்தரணி கைவிரித்துவிட, பயந்து போன எனது தந்தை மந்திகை சந்தியில் வாடகை கார் வைத்திருந்த இரத்தினம் என்பவரின் காரை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு அந்த நேரம் எமது பிரதேச தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டிருந்த ஜெயக்கொடி, துரைரத்தினம், நடராசா என்று எல்லோரையும் சென்று பார்த்து நடந்ததை சொல்லி உதவிசெய்யும் படி கெஞ்சினார்.ஆனால் வாத்தியருக்கு அடித்த பொடியனுக்கு ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் கையை விரித்துவிட்டனர்.
எனது சிறிய தந்தை செல்லத்தம்பி சிறுபான்மை தமிழர் மகாசபையின் பிரிதிநிதிகள் மூலம் எதாவது செய்விக்கலாம் என்று அவர்களுடன் பேசுவதற்காக யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார். அவர்களுக்கும் பருத்தித்துறைக்கு வந்து எங்களுக்கு உதவி செய்ய நேரம் இருக்கவில்லை.
மாலை 5 மணி வரை நான் காவல்துறையின் காவலில் அழுது கொண்டிருக்க எனது பெற்றோர் கண்ணீரும் கம்பலையுமாக வீதியாக அலைந்து கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் இந்த விடயத்தை அறிந்த கரவெட்டி பகுதி கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் தோழர் சண்முகதாசனுக்கு ரங்கோல் போட்டு நடந்ததைச் சொல்ல அவர் உடனடியாக தோழர் எஸ்.டி.பண்டாரநாயக்காவை(சந்திரிகாவின் தந்தை அல்ல) தொடர்;பு கொண்டு நடந்ததை சொல்லி அவர் மூலமாக கொழும்பிலுள்ள காவல்துறை தலைமையகத்தின் ஊடக பருத்தித்துறை காவல் நிலையத்துக்கும் பருத்தித்துறை நீதிபதிக்கும் தகவல் அனுப்பியிருந்தார்.
மாலை 5 மணிக்கு பருத்தித்துறை காவல்துறையினர் என்னை பருத்தித்துறை நீதிபதியின் முன் அவரது வீட்டில் நிறுத்திய போது என்னை ஒரு குற்றவாளியாக அல்லாமல் அன்புடன் அணுகிய நீதிபதி நடந்த சம்பத்தை மறைக்காமல் சொல்லும்படி கேட்டார்.
நான் அழுதுகொண்டே நடந்ததை சொல்ல அதை பதிவு செய்த அவர் காவல்துறையினரை பார்த்து ‘என்மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்றும், பாடசாலைக்குச் சென்று நடந்த சம்பவத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் படியும்’ உத்தரவிட்டு என்னை விடுதலை செய்தார்.
பின்னர் நடந்த விசாரணையில் கல்வித்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.கதிர்காமர் வாத்தியார் என்னை தூக்கி சுவரில் மோதி அடித்தது உண்மை என்பது உறுதியாகியது.சாதிரீதியாக அந்தப்பாடசாலையில் நடந்த புறக்கணிப்புகளும் வெளிச்சத்துக்கு வந்தது.இதை அடுத்து கதிர்காமர் வாத்தியார் மீது துறைசார் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாகவும் பின்னர் மீண்டும் பணிக்கு சேர்ந்த போது மலையகத்துக்கு இடமாற்றம் பெற்று சென்று விட்டதாகவும் அறிந்தேன்.
இந்தச் சம்பவத்தின் பின்னர் அந்தப்பாடசாலையில் எமது சமூகப் பிள்ளைகளை தரையில் இருத்துவது கிணற்றில் தண்ணீர் அள்ள அனுமதிமறுப்பது, பிளாவில் பால் கொடுப்பது எல்லாம் நிறுத்தப்பட்டாலும் நான் தொடர்ந்து அங்கு கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்டது.
ஆசிரியருக்கு அடித்த ஒழுக்கமற்ற மாணவன் என்று எனது பாடசாலை சான்றிதழில் எழுதி என்னை பாடசாலையில் இருந்து நீக்கிவிட்டார்கள்.
இது என்னை அவர்கள் மக்கோனாவுக்கு அனுப்ப முயற்சித்ததைவிட எனக்கு பெரிய பாதிப்பை தந்தது.
எந்தவொரு பாடசாலையிலும் என்னை சேர்த்துக்கொள்ள மறுத்தார்கள்.ஆசிரியருக்கு அடித்த மாணவன் என்ற குற்றச்சாட்டுத்தான் முன்னுக்கு நின்றதே தவிர எனது தரப்பு நியாயம் சாதிய சமூகத்தில் எடுபடவில்லை.
எனது தந்தை எமது பிரதேசத்திலுள்ள எல்லா பாடசாலைகளுக்கும் சென்றுபேசிப் பார்த்தும் எந்தப்பலனும் கிட்டவில்லை.கல்வித் திணைக்களம் வரை சென்று முயன்றும் முடியவில்லை.அவர்கள் தட்டிக்களிப்பதற்காக ஏதாவது ஒரு பாடசாலைக்கு போகச் சொல்வார்கள்.அந்த பாடசாலை அதிபர் எனது பாடசாலை சான்றிதழை பார்த்துவிட்டு இடம் இல்லை என்பார்.எமது சமூக பிள்ளைகளின் முன்னேற்றத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட வதிரி தேவரையாளி இந்துக்கல்லூரியில் கூட எனக்கு இடம் இடம் கிடைக்கவில்லை என்பதும் அவர்களுக்கு கூட அசிரியரை அடித்த மாணவன் என்பது தான் முக்கியமாக கண்ணில் பட்டது என்பது தான் வருத்தத்துக்குரிய விடயம்
ஏறக்குறைய இரண்டு மாதகாலம் இப்படியே அலைந்து திரிந்து ஒரு கட்டத்தில் எனது தந்தை மிகவும் சோர்ந்து மனமுடைந்துவிட்டார்.
இந்த நேரத்தில் தோழர் சிவராசா இறுதி முயற்சியாக ஒருவரை சந்திப்போம் என்று கரவெட்டியிலுள்ள ஒரு ஆசிரியையின் வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்றார்.
அந்த ஆசிரியை பருத்தித்துறையிலுள்ள மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் கல்வி கற்பித்துக் கொண்டிருந்தார்.அத்துடன் அந்த கல்லூரி அதிபர் அந்த ஆசிரியையின் கற்பித்தல் முறை மற்றும் சமூக அக்கறை என்பவற்றால் அவர் மீது நன்மதிப்பு வைத்திருந்தார்.
அந்தக் காலகட்டத்தில் அந்தப்பாடசாலையில் 5 ம் வகுப்புவரை சிறுவர்கள் படிக்கலாம்.6 ம் வகுப்புக்கு நுளைவுத்தேர்வு எழுதி ஹாட்லிக் கல்லூரிக்கு செல்லலாம். மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களுக்கு ஹாட்லிக் கல்லூரியில் சேர்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பது விதியாக இருந்தது.
அந்த ஆசிரிiயிடம் தோழர் சிவராசாவும் எனது தந்தையும் நடந்ததை கூற அவர் கொதித்துப் போய்விட்டார்.
ஒரு சிறு பிள்ளையின் எதிர்காலத்தை பழாக்குவதில் இந்த சமூகம் எவ்வளவு அயோக்கியத்தனமாக நடந்து கொள்கிறது என்று வருத்தப்பட்டார்.
உடனடியாகவே அவர் மெதடிஸ்த பெண்கள் பாடசாலை அதிபரின் வீட்டுக்கு தோழர் சிவராசாவையும் எனது தந்தைiயும் அழைத்துக்சென்றார்.
தீவிர கிறீஸ்தவரான அந்த பெண் அதிபரிடம் எனது தந்தையும் தோழர் சிவராசாவும் கூறிய அனைத்தையும் அந்த ஆசிரியை எடுத்துச் சொன்னார்.
அவற்றையெல்லாம் பொறுமையாக கேட்ட அவர் ‘கர்த்தரே இந்தப் பாவிகள் அறியாமல் செய்யும் பிழைகளை மன்னித்தருளும்’ என்ற ஒரே ஒரு வசனத்ததை மட்டும் கூறிவிட்டு மறுபேச்சின்றி என்னை அந்தப் பாடசாலையில் உடனடியாக சேர்த்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தார்.
எனது தந்தை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.
மறு நாள் காலையிலேயே நாங்கள் பாடசாலைக்குச் சென்றுவிட்டோம்.
methdistஎந்தவித கேள்விகள் விசாரிப்புகள் காத்திருப்புக்கள் ஏதுமின்றி நான் அந்தப் பாடசாலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டுவிட்டேன்.
என்னுடைய அதிஷ;டம் நான் அந்த பாடசாலையில் சேர்வதற்கு உதவிய ஆசிரியையே எனது வகுப்பாசிரியராக இருந்தார்.
அவர் முதல் வரிசையில் என்னை அழைத்துச் சென்று அமரவைத்தார்.
என்னுடைய வாழக்கையில் நான் மறக்க முடியாத அளவுக்கு பேருதவி புரிந்து எனது கல்விச் செயற்பாட்டை ஊக்குவித்த அந்த ஆசியையின் பெயர் மேரி(டீச்சர்) ஆகும்.
1980 களில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தளபதிகளில் ஒருவராக இருந்த சுக்ளா அவருடைய மகன் என்பது சிறப்பு தகவலாகும்.
மெதடிஸ்த பெண்கள் பாடசாலை பருத்தித்துறை கடற்கரை ஓரம் மிகவும் ரம்யமான இயற்கை சூழலில் அமைந்திருந்தது.எங்களது வகுப்பில் இருந்து கடலை பார்த்துக்கொண்டே பாடம் படிப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்து.மேரி டீச்சர் உட்பட எமக்கு பாடம் நடத்திய ஆசிரியைகள் அனைவரும் என்னை அன்பாகவும் கண்ணியத்துடனுமே நடத்தினர்.என்னுடைய பின்னணி தெரிந்து எனக்கு கற்பிப்பதற்கு கூடிய அக்கறை எடுத்துக்கொண்டனர்.
எற்கனவே அந்தப் பாடசாலையில் எனக்கு சித்தி முறையான மகாலட்சுமி அத்தை முறையான இரத்தினமணி ஆகியோர் படித்துக்கொண்டிருந்தனர்;.அவர்களுடன் சேர்ந்து அந்தப்பாடசாலைக்கு போவதும் திரும்பி வருவதும் எனக்கு பிடித்திருந்து.
என்ன மந்திகை பாடசாலை எனது வீட்டில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் இருந்தது. இது எங்கள் வீட்டில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பருத்தித்துறை நகரத்தில் இருந்ததால் மந்திகை சந்திக்கு நடந்து சென்று அங்கிருந்து பருத்தித்துறைக்கு பேருந்தில் செல்ல வேண்டி இருந்தது.
000

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

நினைவழியா வடுக்கள் 20

சந்திரனின் மரணம் எனது வாழ்க்கையில் நான் சந்தித்த பார்த்த முதல் இழப்பாகும்.அது என்னை பெரிதும் பாதித்துவிட்டது.
சந்திரன் எனது பெரியப்பா சாமிக் கிட்டிணருக்கும் பெரியம்மா அருந்தவத்துக்கும் பிறந்த ஒரே மகன்.அதுவும் அவர்களுக்கு 15 வருடங்கள் பிள்ளையில்லாமல் இருந்து பிறந்த ஒரே மகன்.அவனது இழப்பை தாங்க முடியாமல் அவர்கள் கதறிய கதறல் இன்றும் என்மனதில் ஆளமாக பதிந்திருக்கிறது.
சந்திரன் விளையாடும் போது கால்தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டான் என்று தான் ஊரில் எல்லோரும் நம்பிக்கொண்டிருந்தார்கள்.
ஓரு சிலர் நடராசன் தான் அவனை கிணற்றுக்குள் தள்ளி விழுத்திவிட்டான் என்றும் அவன் மீது குற்றம் சாட்டினார்கள்.
அவன் எங்கே உண்மையை சொல்லிவிடுவானோ என்ற பயம் எனக்கும் சின்னத்தம்பிக்கும் ஏற்பட்டிருந்தது.ஆனால் அவன் வாயே திறக்கவில்லை.சந்திரனின் சாவு அவனையும் அதிகம் பாதித்திருந்தது. இரண்டு பேரும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். என்னையும் சின்னத்தம்பியையும் விட அவனுடன் தான் சந்திரன் அதிகநேரம் இருப்பான்.
நடராசன் எங்களை காட்டிக்கொடுக்காததையிட்டு நாங்கள் நிம்மதியடைந்தாலும் எங்களால் தானே சந்திரன் இறந்தான் என்ற ஒரு குற்ற உணர்வு எனது மனதை வருத்தியது.
நாங்கள் ஐயரின் வண்டிலை கொழுத்த போகாமல் இருந்திருந்தால் அவன் செத்துப் போயிருக்க மாட்டான் என்ற எண்ணமும் அதேநேரம் அவனை கொலை செய்தவர்கள் ஈவிரக்கமற்ற அரக்கர்கள் கொடூரமான பூதங்கள் என்ற எண்ணமும் என்மனதில் ஏற்பட்டிருந்து.
64229_514967288559843_1278545773_nகொடுமைக்காரர்களாக சித்தரிக்கப்படும் அரக்கர்களையும் கொடிய பூதங்களையும் அழிப்பதற்கு கடவுள் அவதாரம் எடுத்துவருவார் என்று அம்மா எனக்கு சொல்லியிருந்தா.ஒரு சிறுவன் என்றும் பார்க்காமல் கொலை செய்த இந்த அரக்கர்களை அழிக்க கடவுள் வரமாட்டாரா என்ற ஏக்கமும் எனக்கு ஏற்பட்டது.
நேற்றுவரை எங்களோடு ஒன்றாய் ஓடி விளையாடியவன் இன்று இல்லை என்ற துக்கம் தொண்டைய அடைக்க நான் மூன்று நாட்கள் காச்சலில் எழும்ப முடியாமல் படுத்திருந்தேன்.
சந்திரனின் சாவால் மறுநாள் நடக்கவிருந்த வல்லிபுரஆழ்வார் கோவில் ஆலயப் பிரவேச போராட்டம் பிறிதொரு திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
சந்திரனின் பெற்றோரையும் நெருங்கிய இரத்த உறவினர்களையும் தவிர எங்கள் ஊரிலிருந்த மற்றவர்கள் அவனது மரணத்தை மறந்துவிட்டு தங்களது நாளாந்த வாழ்க்கை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
நானும் சின்னத்தம்பியும் நடராசனும் கூட பாடசாலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தோம்.
அடுத்த ஞாயி;ற்றுக்கிழமை கரவெட்டி பகுதி தோழர்கள் எனது தந்தையை சந்திக்க வந்திருந்தனர்.
சந்திரனின் இழப்புக்கான துயர் பகிர்தலுடன் ஆரம்பித்த அன்றைய சந்திப்பில் சாதியத்துக்கு எதிரான போராட்டம் அடைந்துவரும் வெற்றி பற்றி அவர்கள் அதிகம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
வழக்கம் போலவே ஒரு ஓரத்தில் அமர்ந்து அவர்கள் பேசுவதை நான் கேட்டுக்கொண்டிருந்தேன்.
அன்றைய பேச்சின் முக்கிய அம்சம் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட ‘பஞ்சமர்களுடைய குழந்தைகளை எவ்வாறு உயர் சாதியினர் ஆளுமைக் குறைப்பு செய்கிறார்கள்’ என்பது பற்றியதாகும்.
அப்போது இந்த ‘ஆளுமை’ என்ற சொல் எனக்கு புதிய சொல்லாக இருந்தது.அவர்கள் பேசியதும் எனக்கு புரியவில்லை. ஆனாலும் ‘யார் நல்ல விடயங்களை பேசினாலும் எனக்கு அது புரியாவிட்டாலும் அதை கூர்ந்து கவனித்து கிரகித்துக்கொண்டு பின்னர் அதிலுள்ள தெரியாத விடயங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது’ என்று சிறுவயதில் இருந்தே என்னிடம் ஒரு பழக்கம் இருந்தது. எனக்கு தமிழ் தாத்தா கந்த முருகேசனார் கற்றுத் தந்த பல நல்ல பழக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.
அப்படித்தான் இந்த ஆளுமை பற்றிய விடயத்தையும் நான் கிரகித்துக்கொண்டேன்.
அந்த வகையிலே ஒரு தனி மனிதனின் ஆளுமை பற்றியும்,அந்த ஆளுமையை திட்டமிட்டு மழுங்கடிப்பதன் மூலம் ஒரு சமூகத்தின் வளர்ச்சியை தடுக்க முடியும் என்பதையும் நான் முதன் முதலாக தெரிந்து கொண்ட அந்த நாளும் அன்று அவர்கள் கலந்துரையாடிய விடயத்தின் சாராம்சமும் இன்றும் பசுமரத்து ஆணிபோல என் நினைவில் இருக்கிறது.
குழந்தைகள் பொதுவாக தமது 5 வயதிலிருந்து 16 வயதுவரையிலான காலகட்டத்திலேயே இந்த உலகத்தை புரிந்து கொள்வதுடன் தங்களுடைய ஆளுமையை- திறமையை-தலைமைப்பண்பை வளர்த்துக்கொள்கின்றன.
இந்தக் காலகட்டத்தில் அந்தக் குழந்தைகளின் மனதில் பதியும் விடயங்களே அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி இறக்கும் வரை தாக்கம் செலுத்துகிறது.
இந்தக் காலகட்டத்தில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு கருத்தியல் காயடிப்பு செய்வதன் மூலம் அவர்களது ஆளுமையை மழுங்கடித்து அவர்களது வளர்ச்சியை மட்டுப்படுத்தி சந்ததி சந்ததியாக சாதியத்தை கடத்தும் கைங்கரியத்தை சாதிமான்கள் செய்து வந்தனர்.
குறிப்பாக
‘நீங்கள் எல்லாம் படிச்சு என்னடா கிழிக்கப்போறிங்கள்’
‘படிச்சு டொக்டர் எஞ்சினியர் ஆகலாம் என்று கனவுகாணுறியளோ?’
‘மாடு மேய்க்கப் போறதையும் மரம் ஏறப்போறதையும் விட்டுட்டு ஏன்ரா
பள்ளிக் கூடத்துக்கு வந்து கழுத்தறுக்கிறியள்?’
‘கொப்பரும்(அப்பா)கோத்தையும் (அம்மா) படிச்சிருந்தால் தானே
உங்களுக்கு படிப்பு வரும்’
என்று பஞ்சமர்களின் பிள்ளைகளைப் பார்த்து தினமும் பாடசாலைகளிலும் வெளியிலும் கூறப்படும் வசவுகள் கோபத்தின் வெளிப்பாட்டால் சொல்லப்படும் சாதாரண வசவுகளல்ல.
இவை அந்த பிள்ளைகளின் மனோபலத்தை சிறுகச் சிறுகச் சிதைத்து அவர்களை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் செயற்திறன் மிக்கவர்களாக வளரவிடாமல் தடுக்கும் திட்டமிட்ட சாதிவெறி செயற்பாட்டின் ஓரங்கமாகும்.
Inside Dutch Fort - Jaffna
சிங்கள இனவெறியர்கள் தமிழர்களை ‘பற தெமிழ’ (பறைத்தமிழன்) என்று இழிசொற்குறியீட்டால் அழைப்பதை இனவெறி செயற்;பாடாக சித்தரித்து அதற்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடிய யாழ்ப்பாண உயர்குடி சமூகம் தான் பஞ்சமர்களான எங்களை ‘நள நாய், பறை வேசை’ முதலான இழிசொற்களால் அழைத்து இம்சைப்படுத்தியது.
இந்த மேட்டுக் குடியினரின் பிள்ளைகள் எங்களை பாடசாலைகளிலும் ரியூட்டரிகளிலும்,பல்கலைக் கழகங்களிலும் தினம் தினம் சோடியம் யெ (நளவர்) பொஸ்பரஸ் P (பள்ளர்) முதலான இரசாயன குறியீட்டுப் பெயர்களால் அழைத்து தனிமைப்படுத்தி அவமானப்படுத்தும் போது எங்கள் மனதில் ஏற்பட்ட வேதனையும் அது எற்படுத்திய வலியையும் எழுத்தில் வர்ணிக்க முடியாது. அதை சாகும்வரை மறக்கவும் முடியாது.(பௌத்த சிங்கள பேரனவாதம் ஒவ்வொரு தமிழனையும் தனிப்பட்ட முறையில் இலக்கு வைத்து தினசரி உளவியல் சித்திரவதை செய்ததில்லை)
பொதுவாக ஈழத்தமிழ் சமூகம் என்பது ஏனைய இந்திய சமூகங்களைப் போல ஆணாதிக்க சமூகமாக இருந்தாலும் யாழ்ப்பாண சமூகத்தில்; தாய்வழி சமூகத்தின் தொடர்ச்சி என்பது அதிகளவுக்கு இருந்து வந்தது.அதிலும் பஞ்சமர் சமூக குடும்பங்களில் தந்தையரை விட தாய்மாரின் ஆதிக்கமே அதிகம் இருந்தது.
ஆனால் யாழ்ப்பாண மேட்டுக்குடி சமூக அமைப்பு கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் மேம்;பட்ட அரைப் பார்ப்பணிய ஒழுங்கு விதிகளைக் கொண்ட ஒரு சமூக அமைப்பாக இருந்தது.அந்த அமைப்பில் சமூக ஒழுங்கு என்ற பெயரில் குடும்ப உறுப்பினர்களுடைய அதிகாரம் வரையறுக்கப்பட்டிருந்து.
சராசரி இந்திய தமிழக மேட்டுக்குடி குடும்பங்களிள் தாய்மாருக்கு இருந்த அதிகாரங்களை விட யாழ்ப்பாண மேட்டுக்குடி தாய்மார்கள் அதிக அதிகாரங்களை கொண்டவர்களாக இருந்தார்கள்.
அதே போல இந்திய மேட்டுக்குடி தந்தைமாருக்கு குடும்பத்தலைவர் என்ற அடிப்படையில் இருந்த எல்லையற்ற அதிகாரம் யாழ்ப்பாண மேட்டுக்குடி தந்தைமாருக்கு இருக்கவில்லை.அவர்களுடைய அதிகாரம் மனைவிமாருக்கு இருந்த அதிகாரத்தைவிட சற்று அதிகமாக இருந்தாலும் அது வரையறைக்குட்பட்டதாகவே இருந்தது.
இது குடும்ப வன்முறையை ஓரளவுக்கு மட்டுப்படுத்தி அவர்களது பிள்ளைகள் ஆளுமையுள்ளவர்களாக வளர்வதற்கான அகச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது.
ஆனால் பஞ்சமர் சாதி குடும்பங்களில் இத்தகைய ஒரு சமூகம் சார்ந்த அதிகார ஒழுங்கு இல்லாதால் குடும்ப வன்முறை என்பது சர்வசாதாரணமாக இருந்தது.
நான் முதலிலே குறிப்பிட்டபடி இந்தக் குடும்பங்களில் மனைவிமாருடைய ஆதிகம் அதிகம் இருந்ததால் கணவன்மார் தங்களுடைய இருப்பை தக்க வைப்பதற்காக குடித்துவிட்டு வந்து அடித்து உதைத்து கலாட்டா பண்ணுவதும் போதை தெளிந்ததும் மனைவிமாரிடம் சரணாகதியடைவதும் தொடர்கதையாக இருந்து வந்தது.
கணவர்மார் மீது உள்ள கோபத்தை தாய்மார்கள் பிள்ளைகள் மீது காட்டி அவர்களை அடித்து உதைக்கும் போக்கும் பஞ்சமர் சமூகத்தில் மேட்டுக்குடி சமூகத்தைவிட ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தது.
lwbbdd_இது பஞ்சமர் சமூகத்தில் பிள்ளைகள் அமைதியான சூழலில் இருந்து படிப்பதற்கும் ஆளுமையுள்ளவர்களாக வளர்வதற்கும் பெரும் தடையாக இருந்தது.மேலும் தாய் தந்தை இருவருமே கல்வியறிவு இல்லதவர்களாகவோ அல்லது ஒரளவுக்கே கல்வி அறிவுள்ளவர்களாகவோ இருந்ததும் பிள்ளைகள் தங்களது பாடங்கள் பற்றிய சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறுவதற்கும் தங்களது எதிர்கால கல்வி பற்றிய வழிகாட்டலை பெறுவதற்கும் முடியாத ஒரு நிலையை ஏற்படுத்தியிருந்து.
இது பஞ்சமர் சமூக பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட தரத்துக்கு மேல் கல்வி கற்க முடியாத சூழ்;நிலையும் அவர்கள் தங்களுக்குள்ளேயே ‘இதெல்லாம் எங்களுக்கு ஒத்துவராத விடயங்கள்.நாங்கள் தொண்டூழியம் செய்யப்பிறந்தவர்கள்’ என்ற தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தியது.
குறிப்பாக சொல்வதானால் பஞ்சமர்களுடைய சமூகச் சூழல் என்பது அறியாமையும் அமைதியின்மையும் அடிப்படை வசதிகள் இல்லாததுமான ஒரு நிலையில் இருக்கும் வகையில் கட்டிக்காக்கப்பட்டு வந்தது.இந்தக் கட்டிக்காத்தல் என்பது தற்செயலானதோ அல்லது அர்த்தமற்ற அதிகாரச் செயற்பாடோ அல்ல.
பொதுவாக குழந்தைகளுக்கு அவர்கள் வாழுகின்ற சமூகச் சூழல் சரியில்லாதுவிட்டால் அவர்களால் ஆளுமையுள்ளவர்களாக வளரமுடியாது.
ஓரு சமூகத்தின் வளர்ச்சியை தடுக்க வேண்டுமானால் அந்த சமூகம் வாழக்கூடிய வாழ்வியல் சூழலை மூடுண்ட சூழலாக அல்லது சமச்சிரற்ற வளர்ச்சியுடைய சூழுலாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆண்டான் அடிமை சிந்தைனைக்கான செயற்பாட்டு வடிவமாகவே இந்தக் கட்டிக்காத்தல் இருந்து வந்தது.
இந்த வகையில் நான் அதிஷ;டசாலி என்று சொல்லவேண்டும் எனது பெற்றோர் அதிகம் படிக்காவிட்டாலும் அனுபவக் கல்வியை நிறையப் பெற்றிருந்தனர்.குறிப்பாக இந்த ஒடுக்குமுறையிலிருந்த வெளியே வருவதற்கு எந்தக் கொள்கை சிறந்த கொள்கை என்பதை எனது தந்தை இனங்கண்டுகொண்டிருந்தார்.சமூக அக்கறையுள்ள பல நல்ல தோழர்களின் நட்பை அவர் பெற்றிருந்தார்.
1960 கள் வரை நான் வாழ்ந்த சமூகச் சூழலும் அடி தடி வெட்டு குத்து துப்பாக்கி சூடு என்று குழுச் சண்டை தெருச்சண்டைகள் நிறைந்த வன்முறைக்களமாகவே இருந்து வந்தது.
வாரத்தில் குறைந்து இரண்டு தடவையாவது வசைமாரிகளும் கூச்சல்களும் காட்டுக்கத்தல்களும் தெருநாய்களில் குரைப்புகளும் இணைந்து பேரொலியாக இரவின் நிசப்தத்தை குலைக்கும்.
மறுநாள் காலையில் அவருக்கு மண்டை உடைந்தது,இவருக்கு கை முறிந்தது,மற்றொவருக்கு காலில் வெட்டு விழுந்தது என்று தகவல்வரும்.
எனது பெற்றோர் இந்த குழுமோதல்களுக்குள்- கதியால் வெட்டிய- ஓலைவெட்டிய- பனங்காய் பொறுக்கிய அர்த்தமற்ற சண்டைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தனர்.
எனது தந்தை எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்பதை தெளிவாக உணர்ந்திருந்தார்.எங்களுக்குள் நாங்கள் மோதிக்கொள்வதும் நாங்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு காவல் நிலையத்துக்கும் நீதிமன்றத்துக்கும் நடையாய் நடப்பதும் எங்களை புதைப்பதற்கு நாங்களே வெட்டிக்கொள்ளும் புதை குழி என்பதை அவர் அறிந்திருந்தார்.
சாதியின் பெயரால் எங்களை அடக்கி ஒடுக்கும் எங்களை மனிதர்களாக மதிக்க மறுக்கும் சாதி வெறியர்களுக்கு எதிராகவே எங்களது கோபம் திருப்ப வேண்டும் எங்களது போராட்டம் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.அதற்காகப் போராடினார்.
அதற்கான தெளிவை அவருக்கு கொடுத்தது யாழ்ப்பாண அதிகர வர்க்கத்துக்கு எட்டிக்காயைவிட கசப்பாக இருந்த பொதுவுடமை சித்தாந்தமாகும்.
இது இந்த சாதிய தளைகளை அறுப்பதற்கு எனக்கு உந்து சந்தியாக அமைந்தது.
(தொடரும்)