வியாழன், 15 செப்டம்பர், 2011

குரலற்றவர்களின் குரலாக இருப்போம்


அன்புள்ள நண்பர்களுக்கு அல்லது தோழர்களுக்கு,
 பரமக்குடி சம்பவத்தை முன்வைத்து ஊடக ஜனநாயகம் பற்றி ஒரு விவாதத்தை நீங்கள் ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது.
'பரமக்குடி சம்பவத்தை தமிழ் ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்துவிட்டன.அல்லது திசை திருப்பி செய்தி வெளியிட்டுவிட்டன.ஆளும் வர்க்கத்தின் குரலையே இந்த ஊடகங்கள் எப்போதும் பிரதிபலிக்கின்றன.பார்ப்பணிய ஆதிக்கம் என்று காலகாலமாக குற்றம் சாட்டப்பட்டு வந்த தமிழ் ஊடகப்பரப்பில் இன்று அவர்கள் ஓரங்கட்டப் பட்டு தமிழ் தேசிய முதலாளிகள் அல்லது தரகு முதலாளிகள் அவர்களின் இடத்தை பிடித்துவிட்ட நிலையில் அடித்தட்டு மக்களுக்கு எதிரான ஊடகக் கருத்தியல் வன்முறை தொடர்கிறது. தமிழ் ஊடகப் பரப்பில் ஜனநாயகம் இல்லை.என்பது போன்ற எண்ணம் அல்லது குற்றச்சாட்டு பலரிடம் இருக்கிறது.'
இன்றைய உலகமயமாதல் சூழலில் ஊடகம் என்பதே ஐனநாயக விரோத வடிவமாக இருக்கும் போது அதற்குள் எப்படி ஜனநாயகத் தன்மையை எதிர்பார்க்க முடியும்? என்பது முக்கியமான தொரு கேள்வி.
சந்தைக்கான உற்பத்தி என்பது பின்தள்ளப்பட்டு உற்பத்திக்கான சந்தையை திட்டமிட்டு உருவாக்குவது என்பது முதன்மைப்படுத்தப்பட்டுள்ள இன்றைய சூழலில் தனிமனிதனுடைய கருத்தில் தளத்தில் அத்துமீறி நுழைந்து அவனை புதிய தயாரிப்புக்களுக்கான நுகர்வோனாக மாற்றுகின்ற வேலையைத் தான் ஊடகங்கள் செய்கின்றன.ஊடகம் என்பது மக்களுக்கானது மக்களுடைய குரலைப் பிரதி பலிப்பது என்பதெல்லாம் இன்று காலாவதியாகிப் போன வார்த்தைகளாகும்.
பல்தேசிய கம்பனிகளின் அல்லது உலகப் பெருமுதலாளித்துவத்துவத்தின் தேவைகளுக்கு அல்லது நலன்களுக்கு மக்களை தயார்படுத்துகின்ற பொறிமுறை அமைப்புக்களாகத்தான் இன்றைய ஊடகங்கள் இருக்கின்றன.
இங்கே மேற்குலகிலே ஊடகங்களின் கருத்தியல் வெளிப்பாட்டு முறையென்பது
• நேர் கோட்டுமுறை
• சமாந்தரமுறை
• ஊடறுக்கும் முறை
• சமூகப் பிரதிபலிப்பு முறை
என்கின்ற நான்கு அடிப்படைகளை கொண்டிருக்கின்றன.
உள்ளதை உள்ளபடி சொல்வதாக சொல்லிக் கொள்ளும்  நேர்கோட்டு முறையும் (தினத்தந்தி மாலை முரசு என்பன) எதிரெதிர் முரண்பாடுகளை கட்டமைத்து இருதரப்பு கருத்துக்களையும் நடுநிலைமையாக சொல்லிக் கொள்ளும் பிபிசி பாணியாலான (ஹிண்டு இந்தியா ருடே தினமணி இந்தியன் எக்ஸ்பிரஸ்) சமாந்தர முறையும்,எதிரெதிர் முரண்பாடுகளை கட்டமைத்துச் சென்று ஒரு முக்கிய திருப்பத்தில் ஒரு தரப்பை நிராகரித்து மறுதரப்பை நேரடியாகவே மறைமுகமாவோ நியாயப்படுத்தம் சிஎன்என் என்பிசி முதலான அமெரிக்க ஊடகங்கள் பின்பற்றும் ஊடறுக்கும் முறையும்(சண்குழுமம் மற்றும் அதிமுக சார்பு ஊடகங்கள் உட்பட அனைத்து அரசியில் கட்சி சார்பு ஊடகங்கள்  தினமலர் முதலானவை பின்பற்றும் முறை) தமிழகத்திலே இருக்கிறது.
ஆனால் உரிமை மறுக்கப்பட்ட மக்களின் மனச்சாட்சியாக குரலற்றவர்களின் குரலாக இருக்கக் கூடிய சமூகப் பிரதிபலிப்பு முறையிலான ஊடகங்கள் அதாவது ஒரு செய்தியின் செய்திப் பெறுமதியை தான் சார்ந்த மக்கள் தளத்தில் அல்லது சமூகத்தளத்தில் வைத்துப் பார்க்கும் அல்ஜசீரா போன்ற ஊடகக் கட்டமைப்பு  தமிழகத்தில் இல்லை.
பரமக்குடி கலவரமும் துப்பாக்கசி சூடும் சமூகப் பிரதிபலிப்பு முறையை கையாழும் ஒரு ஊடகத்துக்குத்தான் முக்கியமான ஒன்றாக இருக்கும்.
ஏனைய முறைகளை கையாளும் ஊடகங்களுக்கு பரமக்குடி சம்பவத்தைவிட அஜித்தினுடைய மங்காத்தா படம் எவ்வளவு வசூலைக் குவித்தது இன்றைய நிலவரப்படி அது இன்னும் எவ்வளவு வசூலைக் குவிக்கும் என்பதே முக்கியமானதாகவும் அவர்களது வங்கியிருப்பை நிரப்புவதற்கு தேவையானதாகவும் இருக்கும்
இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு எங்களுக்கென்று சமூகப் பிரதிபலிப்பு முறையிலான ஊடகங்களை நாங்கள் உருவாக்காதவரை அவ்வாறு உருவாகும் ஊடகங்களை ஊக்குவிக்காதவரை எதுவுமே மாறப் போவதில்லை.
அடுத்து இந்தியாவிலுள்ள ஆதிக்க ஊடகங்களில் தலித்துகளுக்கு இடம் இருப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் அதன் மறுபக்கம் பார்த்தால் தலித்துக்கள் அதிக்க சக்திகளுக்கு துணைபோகும் ஆதிக்க ஊடகவியலாளர்களாக உருவாகாமல் இருப்பது அல்லது உருவாக்கப்படாமல் இருப்பது சிறந்தது.
அன்புடன்
சிவா சின்னப்பொடி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை மடக்கும் மகிந்தவின் இரகசிய முயற்சி - வெளிச்சத்துக்கு வந்தது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஈழத்தமிழர் ஆதரவுப் போக்கை உடைப்பதற்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, மூத்த அமைச்சரான டியு. குணசேகரவை இந்தியாவுக்கு அனுப்பி வைத்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுகுறித்து கொழும்பு ஊடகம் ஒன்றில் வெளியான தகவல்களின் தொகுப்பு.

“வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் எப்போதும் புலிகளுக்குப் பின்னால் தான் நிற்பார்கள். ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சிறிலங்காவைப் பற்றி தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்களை சரிப்படுத்த வேண்டும்.“ என்று அண்மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியுள்ளார் சிறிலங்கா அதிபர்.

அத்துடன் டியு குணசேகரவைப் பார்த்து “நீங்கள் சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருக்கிறீர்கள், இந்தியாவிலுள்ள இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் உங்களால் ஏன் இது பற்றி விளக்கமளிக்க முடியாது?“ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு டியு குணசேகர ‘பழுதுநீக்கும்‘ பயணத்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக கூற, அடுத்தவாரமே இந்தியாவுக்கு செல்லுமாறு மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பிந்திய நிலவரங்கள் குறித்து எடுத்துக் கூறுமாறும் டியு குணசேகரவிடம் கூறியுள்ளார் மகிந்த ராஜபக்ச.

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும், பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேராவும் வெளிநாடுகளுக்கு சென்றிருந்த நிலையில், டி.யு குணசேகரவை பதில் வெளிவிவகார அமைச்சராக நியமித்த மகிந்த ராஜபக்ச, அந்தப் பதவியுடன் அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சிறிலங்கா அதிபரின் பணிப்பை அடுத்து, நேரத்தை வீணடிக்காமல், இந்தியத் தலைவர்களுக்கு விளக்கமளிப்பதற்குத் தேவையான தகவல்களை டியு.குணசேகர திரட்டியுள்ளார்.

இடம்பெயர்ந்தோர் மீள்குடியமர்வு, முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு மற்றும் அவசரகாலச்சட்ட நீக்கம், வடக்கில் மீள் ஏற்படுத்தப்பட்ட குடியியல் நிர்வாகம் குறித்த தகவல்களைத் திரட்டிக் கொண்ட அவர், சில மேற்கு நாடுகள் சிறிலங்காவில் குழப்பத்தை ஏற்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றிய தகவல்களையும் சேகரித்துக் கொண்டே தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

பதில் வெளிவிவகார அமைச்சர் பதவியுடன் கடந்த 7ம் நாள் புதுடெல்லிக்குப் பயணமான டியு.குணசேகர, மறுநாள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் டி.ராஜாவை கட்சியின் தலைமையகத்தில் சந்தித்துப் பேசியிருந்தார்.

இதன்போது, பேரினவாத சிறிலங்கா அரசுக்குப் பின்னால் கம்யூனிஸ்ட் கட்சிகள் எவ்வாறு இருக்கின்றன என்று டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு டியு.குணசேகர சிறிலங்கா அரசு இனவாத அரசு அல்ல என்றும், அங்குள்ள களநிலைமையை இந்தியா சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் பிரகாஸ் கரட்டையும் சந்தித்த டியு.குணசேகர சிறிலங்கா நிலவரங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

வியாழக்கிழமை இரவு இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளினதும் மத்திய குழு உறுப்பினர்களையும் ஒன்றாக டியு.குணசேகர சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்புகளின் போது அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராகச் செயற்படுவது குறித்து டியு.குணசேகர எடுத்துக் கூறியுள்ளார்.

தமது போர்நிறுத்த அழைப்பைப் புறக்கணித்ததால் தான் சிறிலங்காவுக்கு எதிராக இந்த நாடுகள் திரும்பியுள்ளதாகவும், சிறிலங்கா அரசை குழப்ப மேற்குலக நாடுகள் முனைவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையடுத்து கடந்த 9ம் நாள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து விட்டு அன்று பிற்பகலே கொழும்பு திரும்பியுள்ளார் டியு.குணசேகர.

அவரது இந்தியப் பயணம் வெற்றிகரமாக அமைந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.



puthinappalakai

விடுதலைப் புலிகள் மீதான 'பயங்கரவாத' முத்திரை நீக்கப்படுமா? - நெதர்லாந்தில் விசாரணை ஆரம்பம்

ஹேக்கில் மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையானது புலிகள் மீதான தடை நீக்கம் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நெதர்லாந்துத் தமிழர்களின் விவகாரத்தில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

இவ்வாறு உலகளாவிய ஒலிபரப்பு சேவையைக் கொண்ட நெதர்லாந்து வானொலியின்  [Radio Netherlands Worldwide - RNW] இணையத்தளத்தில் Richard Walker எழுதியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது பிரிவினைவாத தமிழ்ப் புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து சிறிலங்காத் தமிழர்கள் விசாரணைக்காக ஹேக்கில் முன்னிறுத்தப்படவுள்ளனர்.

சிறிலங்காவில் 30 ஆண்டுகளாக இடம்கெற்ற உள்நாட்டுப் போரில் பங்குபற்றிய தரப்புக்களில் சரியானவர் யார் பிழையானவர் யார் என்பது தொடர்பாகத் தீர்வை எட்டுவதற்கு இவ்வழக்கு விசாரணையின் சாத்தியமான தீர்ப்புக்கள் பதிலாக அமையும்.

சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தொடரப்பட்ட குருதி தோய்ந்த யுத்தத்தின் விளைவாக, புலம்பெயர்ந்து உலகெங்கும் பரவி வாழும் தமிழ் மக்கள் தமது தலைமைக்கு ஆதரவாகப் பலவிதமான பங்களிப்புக்களை ஆற்றிவந்துள்ளனர்.

குறிப்பாக இப்புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் தமிழ்த் தலைமைக்கு ஆதரவாக நிதி சேகரிப்புப் பணிகளில் அதிகம் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறு புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகளால் சேகரிக்கப்பட்ட மில்லியன் கணக்கான டொலர்களின் உதவியுடன் சிறிலங்கா அரசின் இராணுவத்தை எதிர்த்து நிற்பதற்கான ஆயுதங்களைப் புலிகள் கொள்வனவு செய்தனர்.

நெதர்லாந்தில் இடம்பெற்ற தமிழர்களின் கலந்துரையாடல்களை அந்நாட்டின் காவற்துறைப் புலனாய்வாளர்களை உள்ளடக்கிய குழுவொன்று கண்காணித்தது.

இவ்வாறு இப்புலனாய்வுக் குழுவால் நெதர்லாந்துத் தமிழர்களின் புலி ஆதரவுச் செயற்பாட்டை எதிர்த்து Operation Koninck என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், சிறிலங்காவில் தமிழீழம் என்ற பெயரில் தமிழ் மக்களுக்கான தனிநாடு கோரிப் போராடிய விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 'இறுதி யுத்தத்திற்கு' புலம்பெயர் தமிழ் மக்கள் எவ்வாறு நிதியைத் திரட்டிக் கொடுத்தார்கள் என்பது தொடர்பாக விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையானது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்திற்குப் பின்னரும், 2009ல் முடிவிற்கு வந்த யுத்தத்தை அடுத்தும் வெறும் கனவாகிப் போனது.

நெதர்லாந்துக் காவற்துறையால் Operation Koninck என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை மூலம் சில நெதர்லாந்துத் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து தமிழர்கள் மீது சிறப்பு போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு ஹேக்கில் விசாரணைக்கு முன்நிறுத்தப்படவுள்ளனர்.

தற்போது ஹேக்கில் முன்னிறுத்தப்படவுள்ள நெதர்லாந்துத் தமிழர்கள், பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றவியல் அமைப்பொன்றின் உறுப்பினர்கள் என்றும் இந்நோக்கத்திற்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர் எனவும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர்கள் முதலில் விசாரணைக்காக முன்நிறுத்தப்பட்ட நீதிமன்றானது இவர்களைப் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் எனக் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நீதிமன்றானது அனைத்துலக குற்றவியல் நீதிமன்று போன்று அனைத்துலக அமைப்பாக இல்லாவிடினும் கூட,நெதர்லாந்து நாட்டின் குற்றவியல் நீதிமன்றாகச் செயற்படுவதுடன், இங்கு பணிபுரியும் நீதிபதிகள் நெதர்லாந்தின் 'பொதுவான' நீதிமுறைமைகளின் கீழேயே செயற்பட்டுவருகின்றனர்.

இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான 46 வயதுடைய ஆர்.சிறிறங்கம் என்பவர் ஹேக்கைச் சேர்ந்தவராவார். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நெதர்லாந்திற்கு தப்பியோடி வந்த இவர் தமிழ்ப் புலிகளின் நெதர்லாந்துப் பிரிவின் தலைவராகாச் செயற்பட்டவர் என நம்பப்படுகின்றது.

இவரின் வழக்குரைஞரும் சட்ட ஆலோசகருமான விக்ரர் கோப்பே [Victor Koppe] என்பவர், ஐரோப்பிய ஒன்றியத்தால் தடைசெய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்புக்களின் பெயர்ப் பட்டியலிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவொன்றை அண்மையில் ஐரோப்பிய நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தார்.

ஹேக்கில் மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையானது புலிகள் மீதான தடை நீக்கம் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நெதர்லாந்துத் தமிழர்களின் விவகாரத்தில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிப்பது மிகவும் கடினமானதாகும். இந்த வழக்கு விசாரணையில் விக்ரர் கோப்பேக்கு உதவியாகச் செயற்படும் சட்ட ஆலோசகரான ரமரா புறூமா [Tamara Buruma]  என்பவர் "நெதர்லாந்துத் தமிழர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதற் கட்ட விசாரணையில் நிதி சேகரித்தது தொடர்பாக அதிகம் பேசப்படவில்லை. ஆனால் சிறிலங்காவில் புலிகள் உண்மையில் என்ன செய்தார்கள் என்பது தொடர்பாகவே அதிகம் விசாரிக்கப்பட்டது.

இதிலிருந்து கைதுசெய்யப்பட்ட நெதர்லாந்துத் தமிழர்கள் புலிகளுக்கு நிதி வழங்கினார்களா அல்லது இல்லையா என்பது பிரதான விசாரணையாக இருக்கவில்லை. மாறாக தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களா அல்லது இவர்கள் சுதந்திரப் போராளிகளா என்பதே விசாரணையின் பிரதான கேள்வியாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

நீதிமன்றானது புலிகள் என்ன செய்தார்கள், நெதர்லாந்து குற்றவியல் சட்டத்தின் கீழ் புலிகள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டார்களா, இவற்றைச் சாட்சிப்படுத்துவதற்கு அரசியல் ரீதியாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியல் போதுமானதா என்பது தொடர்பாக சரியான வரையறைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

நெதர்லாந்து காவற்துறையினரின் அறிக்கையின் பிரகாரம், நெதர்லாந்தில் வாழும் ஒவ்வொரு தமிழ்க் குடும்பங்களும் ஆண்டிற்கு €2000 நிதியை சிறிலங்காவின் தமிழ்ப் பகுதிகளுக்கு மானியமாக வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டனர்.

இவர்கள் நிதி வழங்க மறுத்தால் சிறிலங்காவில் வாழும் இவர்களது உறவுகள் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என அச்சுறுத்தப்பட்டதாகவும், நெதர்லாந்துக் காவற்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தம்மால் சேகரிக்கப்பட்ட நிதியானது மனிதாபிமான நோக்கத்திற்காக வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாதிடுகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்காவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் நிழல் அரசாங்கத்தை உருவாக்கி பல ஆண்டுகளாக நிர்வாகத்தை நடைமுறைப்படுத்தியதிலிருந்து, இவ்வமைப்பானது சுகாதார வசதிகள் தொடக்கம் இராணுவப் பயிற்சி மற்றும் குண்டுத் தயாரிப்புப் போன்ற பல்வேறு விடயங்களுக்கும் நிதியை செலவிட்டிருந்தது. இதில் எந்த நிதி எதற்காகச் செலவிடப்பட்டது என்பதை பிரித்துப் பார்க்கவேண்டும்.

புலம்பெயர் நாடுகளில் சேர்க்கப்படும் நிதியானது புலிகள் அமைப்பிடம் நேரடியாக வழங்கப்பட்டிருந்தாலும் கூட, அவர்கள் பயங்கரவாதிகள் அல்லர், புலிகள் அமைப்பானது ஒரு விடுதலை அமைப்பாகும் என பிரதிவாதிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்ப்புலிகள் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதையும் அவர்கள் எவ்வாறு சிறிலங்காவில் இடம்பெற்ற இரத்தம் தோய்ந்த போருக்கு மையப்பொருளாக இருந்தார்கள் என்பதை விவரிக்கமுடியாது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் பார்வையில், விடுதலைப் புலிகள் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடக்கம் சிறுவர் ஆட்சேர்ப்பு வரை பல்வேறு சட்டரீதியற்ற செயற்பாடுகளின் மூலம் பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கு எதிராக இரக்கமற்ற பயங்கரவாதச் செயற்பாடுகளைக் கட்டவிழ்த்துவிட்டவர்கள் எனக் கருதப்படுகின்றனர்.

பெரும்பாலான தமிழ் மக்களைப் பொறுத்தளவில் தமிழ்த் தாய்நாட்டை சட்டரீதியாக உருவாக்குகின்ற நோக்கத்திற்கு மிக அருகில் சென்றவர்கள் எனக் கருதுகின்றனர்.

இதுதொடர்பான முதலாவது வழக்கு விசாரணையானது நாளை ஹேக்கில் இடம்பெறவுள்ளது. அதன்பிறகு, தமிழ்ப் புலிகள் பயங்கரவாதிகளா அல்லது விடுதலை அமைப்பா என்பதைத் தீர்மானிப்பதற்கு நீதிமன்றிற்கு மூன்று வாரங்கள் எடுக்கும்.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

சிறீலங்கா அரசின் வெள்ளை பொய்கள்- NDTV தொலைக்காட்சி --காணொளி இணைப்பு



தமிழர்களே விரைவாக செயல்படுங்கள்

தமிழர்களே விரைவாக செயல்படுங்கள்: சமூக வலைதளங்களில் ஐ.நா. பொதுசெயலாளருடன் கலந்துரையாடல்


Time



Tuesday, September 13 · 11:00am - 12:00pm
Location

Facebook, Twitter, Weibo, Livestream and UN Webcast

Created By

UN Webcast

http://www.facebook.com/UNwebcast
More Info

As world leaders prepare to gather in New York for the annual United Nations General Assembly, please join us in a global conversation with the UN Secretary-General, streamed live on Facebook, Twitter, Weibo, Livestream and UN Webcast.

Our moderator Ms Juju Chang, television anchor and journalist, will put your questions to Mr. Ban.

Join in to ask the UN Secretary-General anything you like about the United Nations and its w...ork: What more can we do to stop wars from breaking out?

What can one individual do in the fight against climate change ? What’s it like to be Secretary-General of the UN? It’s your chance to get answers straight from the top, on the international issues you care about.

WHERE: 

Facebook: http://www.facebook.com/UNwebcast

Twitter: http://www.twitter.com/ using #asktheSG

Weibo: http://www.weibo.com/UN (Chinese)

Livestream: http://www.livestream.com/unitednations

UN Webcast: http://www.un.org/webcast

HOW: 

Post your questions on Twitter using #asktheSG in English, French, Arabic, Chinese, Russian, Spanish, Portuguese or Swahili, before or during the live event. Questions in Chinese can also be posted on Weibo: http://www.weibo.com/UN

Watch the event live on Facebook, Weibo, Livestream or UN Webcast.

WHEN:

13 September 2011 at 11:00 a.m. New York Time (EST)

Webpage of the Event in the 6 UN Official languages: http://www.un.org/askthesg/

The archived video of the event will be available on the UN Webcast website with subtitles in the 6 UN Official languages.

மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள்

வியாழன், 8 செப்டம்பர், 2011

இன்றைய செய்திகள் (ஜிரிவி)08.09.2011

உண்ணாவிரத மேடையில் திலீபன் ஆற்றி உரை

தியாக தீபம் திலீபன் 08

தியாக தீபம் திலீபன் 07

தியாக தீபம் திலீபன் 06

தியாக தீபம் திலீபன் 05

தியாக தீபம் திலீபன் 04

தியாக தீபம் திலீபன் 03

தியாக தீபம் திலீபன் 02

தியாக தீபம் திலீபன் 01