புதன், 6 ஏப்ரல், 2011

நினைவழியா வடுக்கள்- 3

நினைவழியா வடுக்கள்- 3

ஈழத் தமிழர்களுடைய வரலாற்றில் 1955 ம் ஆண்டிலிருந்து 1965 ம் ஆண்டுவரையிலான 10 வருடகாலப் பகுதி; மிக முக்கியமான ஒன்றாகும். 1957 ல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம். 1958 ல் நடந்த இனக் கலவரம் 1961 ல் நடைபெற்ற சிறீ எதிர்ப்புப் போராட்டம்.1962ல் நடத்த சத்தியாக்கிரகப்போராட்டம் 1961லிருந்து 1964 வரை தொடர்ச்சியாக நடந்த தீண்டாமை ஒழிப்பு போராட்டங்கள் என்பன தமிழ் மக்களுடைய குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களுடைய இருப்பிலும் கருத்தியல் தளத்திலும் காத்திரமான தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தன.

ஈழத் தமிழ் மக்கள் யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு என்ற மூன்று வாழ்வியல் தளங்களை கொண்டவர்கள். இதில் யாழ்ப்பான சமூகமும் அதன் வாழ்வியல் தளமும் மட்டுமே இறுக்கமான சாதியக் கட்டமைப்பை கொண்டதாக இருந்தது. சாதி என்பது தமிழர்களுடைய அடையாளம் என்று இந்த சமூகம் நம்பியது.

யாழ்ப்பாண சமூகத்தின் சாதி அமைப்பு கட்டுள்ள சாதிகள், கட்டற்ற சாதிகள், கட்டுள்ள கலப்புச் சாதிகள், கட்டற்ற கலப்புச் சாதிகள் என்ற நான்கு வரையறைகளைக் கொண்டவையாக இருந்தது.

வெள்ளாளர், பிராமணர், கோவியர். நளவர், பள்ளர், பறையர், வண்ணார், அம்பட்டர், ஆகிய சாதிகள் கட்டுள்ள சாதிகளாக இருந்தன. இதில் வெள்ளாளரும் பிராமணர்களும் அதிகார வர்க்க சாதியினராகவும் ஏனையோர் அடிமைச் சாதியினராகவும் இருந்தனர்.

இந்தியாவை பொறுத்தவரை பிராமணர்கள் முதன்மைச் சாதியினராக இருந்த போதிலும் யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர்களுக்கு அடுத்த இடத்திலேயே அவர்களது நிலை இருந்தது.

இந்துத்துவ வர்ணக் கோட்பாட்டின்படி வெள்ளாரர்கள் சூத்திரர்கள் என்ற அடிமட்ட சாதிப் படிநிலைக்குள் அடக்கப்பட்ட போதிலும் ஆறுமுக நாவலர் அதை மறுதலித்து வெள்ளாளர்களை சற்சூத்திரர்கள் அதாவது பிராமணர்களுக்கு நிகரானவர்கள் என்று நிறுவியதும் நிலமும் கோவில்களும் வெள்ளாளர்களுடைய ஆதிக்கத்திலேயே இருந்ததும் பிராமணர்கள் அவர்களது கோவில்களில் ஊழியம் செய்பவர்களாக இருந்ததுமே அவர்களது சாதிப் படி நிலையை பின் தள்ளிவிட்டது.

இந்த கட்டுள்ள சாதி அமைப்பில் கோவியரும் பஞ்சமர்கள் எனப்படும் நளவர், பள்ளர், பறையர், வண்ணார், அம்பட்டர் ஆகியோரும் வெள்ளாளர்களுடைய குடிமைகளாக கருதப்பட்டார்கள். 1970ம் ஆண்டு வரை குடிமை முறை எனப்படும் இந்த அடிமைச்சேவகம் கட்டாயப் படுத்தப்பட்டிருந்து. கோவியர்கள் வெள்ளாளர்களுடைய வீட்டு வேலைகளை செய்வதும் அவர்களது உடமைகளாக இருந்த கோவில்களுக்கு ஊழியம் செய்வதும் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது.

ஏனைய பஞ்சமர் சாதிகள் வெள்ளாளர்களின் விளை நிலங்களில் கூலியின்றி வேலை செய்து கொடுப்பது, அவர்களது வீட்டு திருமண ஊர்வலங்களில் “கா” காவிச் செல்வது. அதாவது ஒரு தடியில் ஒரு முனையில் வாழைக்குலை பலாப்பழம்; முதலான பழ வகைகளையும் மறு முனையில் அரிசி முதாலான உணவுப் பண்டங்கள் மற்றும் பாத்திங்கள் முதலான சீர் வரிசைகளையும் கட்டித் தொங்க விட்டு அந்தத் தடியை தோழில் வைத்து அந்த ஊர்வலம் முடியும் வரை காவிக் கொண்டு செல்வதே “கா” காவுதலாகும். மரணச்சடங்கில் பாடை கட்டுவது (பெண்கள்) குடக் குரவை வைப்பது மயானத்தில் பிணத்தை எரியூட்டுவது என்று இந்தக் குடிமை முறை நீண்டு கொண்டு செல்லும் .

இதில் கோவியர் நளவர் என்ற இரண்டு சாதிகளும் இந்தியாவில் இல்லாத யாழ்ப்பாணக் குடாநாட்டில் தோற்றம் பெற்ற சாதிகளாகும். இதிலே நளவர்களுடைய தோற்றம் பற்றி யாழ்ப்பாண வரலாற்றைக் கூறும் தொன்மையான நூலான யாழ்ப்பாண வைபவ மாலையில் குறிப்பிடப்பட்டள்ளது.

சங்கிலி மன்னுடைய ஆட்சிக்காலத்தில் தமிழகத்திலிருந்து நம்பிகள் என்ற சாதியைச் சேர்ந்த 64 கத்திக்கார்கள் அவர்களது குடும்பத்தினருடன் மன்னனுடைய மெய்ப்பாதுகாப்புக்காக அழைத்துவரப்பட்டதாகவும்.; அந்த கத்திக்காரர்களுக்கு தலைமை தாங்கிய நம்பியினுடைய மகளை சங்கிலி மன்னனுடைய மகன் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திவிட்டதால் ஆத்திர மடைந்த அந்த தலைமை நம்பி அவனைக் கொன்றுவிட்டதாகவும் யாழ்ப்பாண வைபவ மாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய மகனை கொன்ற குற்றத்துக்காக தலைமை நம்பியை தலை வெட்டிக் கொன்ற சங்கிலி மன்னன் ஏனைய நம்பிகளை அரண்மனையிலிருந்து துரத்திவிட்டதாகவும் பிழைப்புக்கு வழியில்லாத அவர்கள் அந்தக்காலகட்டத்தில் மரமேறும் தொழிலைச் செய்து வந்து சானாருடன் சேர்ந்து அந்தத் தொழிலைச் செய்யப் பழகிக் கொண்டதாகவும் இவ்வாறு குலத்தொழிலை விட்டு நழுவி வேறு தொழிலைச் செய்ததால் நழுவிகள் என்று அழைக்கப்பட்டதாகவும் பின்னர் அதுவே நளவர்கள் என்று ஆகிவிட்டதென்றும் யாழ்ப்பாண வைபவ மாலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் கட்டற்ற சாதிகளாக முக்குவர் திமிலர் தட்டார் செட்டிகள் முதலானவை இருந்தன. இந்தச்சாதிகள் தங்களுக்குள் இறுக்கமான கட்டுக் கோப்பையும் அகமணமுறையையும் கொண்டவையாக இருந்த போதிலும் கட்டுள்ள சாதிகளைப் போல அடிமை குடிமைகளை கொண்டவையாக இருக்கவில்லை.

கட்டுள்ள கலப்புச்சாதிகள் என்ற வரையறைக்குள் நட்டுவர்கள் பண்டாரிகள்; முதலானோர் அடக்கப்பட்டனர். தங்களுக்குள் தங்களுக்கு இணையான சாதியனருடன் உறவுகளை பேணிவந்த இவர்கள் அடிமை குடிமைகளை ஒடுக்கும் விடயத்தில் வெள்ளார்களுக்கு இணையானவர்களாகவே இருந்தார்கள்.

கட்டற்ற கலப்புச்சாதிகளாக கரையார் தச்சர் கொல்லர் குயவர் ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர்.அதிகளவுக்கு நெகிழ்வுத் தன்மையைக் கொண்ட இந்தச் சாதியினரிடையே தீண்டாமையும் மற்றவர்களை அடக்கி ஒடுக்கும் மனோபாவமும் ஏனைய மேல்தட்டு மற்றும் இடைநிலை சாதியினரைவிடக் குறைவாகவே இருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் எனையபகுதிகளை விட கரையார சாதியினரை அதிகமாகக் கொண்ட வடமராட்சி கிழக்கு பகுதிகள் சாதிய ஒடுக்குமுறை மிகக் குறைந்த பகுதிகளாக இருந்ததும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

1697ம் ஆண்டு ஒல்லாந்தருடைய ஆட்சிக்காலத்தில் 40 சாதிகள் இருந்ததாக குறிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது 15 முதல் 20 சாதிகளே வழக்கில் இருப்பதாகவும் அதிலும் சில சாதிகள் மறைந்துவிடும் நிலையில் இருப்பதாகவும் 2000ம் ஆண்டளவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

1900 த்தின் ஆரம்பத்திலிருந்து 1980களின் நடுப்பகுதி வரையிருந்த யாழ்ப்;பான சமூகத்தின் அதிகார வர்க்கத்தை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். இதில் ஒரு பகுதியினர் கல்வியையும் இன்னொரு பகுதியினர் வர்த்தகத்தையும் மற்றொரு பகுதியினர் சிறு விவசாயத்தையும் தங்களுடைய வாழ்வாதாரங்களாகக் கொண்டிருந்தனர். இவர்களில் சிறு விவசாயிகள் தவிர்ந்த ஏனையோரில் கணிசமான பகுதியினர் தங்களது தொழில் நிமித்தம் கொழும்பிலும் ஏனைய சிங்களப் பகுதிகளிலும் தங்கிருந்தனர்.

பொதுவாக மனிதர்கள் தாங்கள் கற்ற கல்வியின் மூலம் பெற்றுக் கொண்ட அறிவைக் கொண்டும் ,பல இடங்களுக்கும் சென்று பல தரப்பட்ட மக்களுடன் பழகுவதனால் கிடைக்கும் அனுபவத்தை கொண்டும் தங்களிடமுள்ள பிற்போக்குத் தனங்களை களைந்து தங்களை வளர்த்துக் கொள்வது வழக்கமாகும்.

ஆனால் யாழ்ப்பாண சமூகம் உயர்ந்த கல்வியறிவு பெற்ற சமூகம் என்று தன்னை சொல்லிக்கொண்டாலும், தொழில் நிமித்தம் பல்வேறு இடங்களுக்குச் சென்று பல்வேறுபட்ட மாற்றின மாற்றுக்கலாச்சார மக்களுடன் பழகிய போதிலும், பிறப்பைக் கொண்டு மனிதனை இழிவு செய்யும் சாதியத்தை அது கைவிடத் தயாராக இல்லை. தன்னை ஒரு சாதிய சமூகம் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வதில் யாழ்ப்பாண சமூகம் இந்திய சாதியச் சமூகத்தக்கு எந்தவிதத்திலும் குறைந்தாக இருக்கவில்லை.

1958ல் சிங்கள பௌத்த பேரினவாதம் வெறி கொண்டு எழுத்து தாக்கிய போது அந்தக்காலகட்டத்தில் அதனால் அதிகம் பாதிக்கப்பட்ட அந்த சமூகம் அடக்குமுறையின் தாக்கத்தையும் வேதனையையும் வலியையும் உணர்ந்து தங்களை மாற்றியிருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ எதிர்மாறாக இருந்தது.

1958 ற்கு முன்னர் தங்களது தொழில் நிமித்தம் தென்னிலங்கைக்கு இடம்பெயர்ந்து சென்ற அதிகார வர்க்கப்பிரிவினரது விளை நிலங்களும் ஏனைய குடியிருப்பு மற்றும் தரிசு நிலங்களில் இருந்த பயன் தரு மரங்களும் (பனை, தென்னை,பலா,புளி) அவர்களது குடிமைகளான பஞ்சமர்களால் குத்தகைக் குடிமை முறை என்ற அடிப்படையில் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்த முறையின் படி ஆண்டைகளின் விளைநிலத்திலிருந்து பெறப்பட்ட உற்பத்தியின் 50 வீதத்தை அவர்களின் குடிமைகள் பொருளாகவோ பணமாகவோ வழங்க வேண்டும். இது குடிமை முறைப் பொருள் அல்லது பணம் என்று அழைக்கப்பட்டது.

1958 இனக்கலவரம் வரும் வரை இந்த ஆண்டைகள் கண்ணுக்கு எட்டாத தொலை தூரத்தில் இருந்தாதால் அவர்களது குடிமைகள் ஓரளவுக்கு தங்களது தொழிலை சுதந்திரமாகச் செய்யக் கூடியதாக இருந்தது. அது வரை உள்ளுரில் கோவில்களையும் நிலத்தையும் வைத்து அதிகாரம் செலுத்திவந்த அதிகார வர்க்கத்துக்கும் அவர்களது குடிமைகளுக்கும் இடையிலான முரண்பாடாகவே சாதிய முரண்பாடு இருந்தது.

1958 இனக்கலவரத்தில் சிங்கள இனவெறியர்களால் தங்களது இருப்பும் தேட்டமும் அழிக்கப்பட்ட நிலையில் அகதிகளாக கப்பல் மூலம் பருத்தித்துறை துறை முகத்தில் வந்திறங்கிய மக்களுக்கு தங்களை விட தங்களது குடிமைகள் பொருளாதார ரீதியில் பலமுள்ளவர்களாக இருந்தது ஒரு கௌரவப் பிரச்சனையாக இருந்தது. அதை விட செல்வச் செழிப்போடும் சமூக அந்தஸ்த்தோடும் வாழ்ந்த தாங்கள், தங்களது உறவுகளாலேயே ஏளனமாகப் பார்க்கப்படும் பரிதாப நிலையும் அவர்களுக்கு எற்பட்டிருந்தது.

எனவே யாழ்பாண சமூகத்தில் மறுபடியும் தங்களது அதிகாரத்தையும் இருப்பையும் தக்க வைத்துக் கொள்வதற்கு நில உடமை மூலம் தங்களுக்கு இருந்த உரிமையை கையில் எடுத்து சாதிய பாரம்பரியத்தையும் சாதியக் கலாச்சாரத்தையும் இறுக்கமாகக் கடைப்பிடிப்பதில் தாங்களே முன்ணியில் இருப்பவர்கள் என்று அவர்கள் காட்ட முற்பட்டார்கள்.

தன்னை ஒருவன் ஒடுக்கும் போது எதிர்த்து நின்று போராடி அவனை அடக்குவதற்குப் பதிலாக, அவன் மேலுள்ள ஆத்திரத்தை தனக்குக் கீழுள்ள ஒருவனை அடித்து உதைத்து துன்புறுத்துவதன் மூலம் தணித்துக் கொள்ளும் அற்பத் தனமான சாதிய சிந்தனைக்குள் யாழ்ப்பாண சமுகம் மூழ்கிப்போயிருந்தது.

1958 லிருந்து 1968 வரை யாழ்ப்பாணக் குடாநாட்டில் சாதிய முரண்பாடு என்றுமில்லாதவாறு உச்சமடைந்ததற்கும் வெட்கக்கேடான பல சாதியக் கலவரங்கள் நடைபெற்றதற்கும் இதுவே அடிப்படையாகும்.

பௌத்த சிங்கள பேரினவாதிகள் தமிழர்களுக்கு எதிரான இனவெறிப் போரை ஆரம்பித்த போது அதற்கு எதிராக தமிழர்கள் அனைவரும் ஒன்று பட்டுப் போராடுவதற்குப் பதிலாக தமிழர்களே தமிழர்களை சாதியின் பேரால் அடக்கி ஒடுக்கியது தமிழ் தளத்தில் இருந்த கருத்தியல் வறுமையும் தமிழினத்தின் சாபக்கேடுமாகும்.

அன்றைய காலகட்டத்தில் தமிழர்களுடைய அரசியல் தளத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி,தமிழ் காங்கிரஸ் கட்சி, இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி (சண்முகதாசன் தலைமையிலானது) என்பன செல்வாக்கு செலுத்தும்; கட்சிகளாக இருந்தன.

இதில் தமிழரசுக்கட்சியும் தமிழ் கொங்கிரஸ் கட்சியும் மட்டுமே தமிழ் மக்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளாகவும் நாடாளுமன்ற அரசியல் பாதையை ஏற்றுக் கொண்ட கட்சிகளாகவும் இருந்தன.

இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி(சீனச் சார்பு) ஒட்டு மொத்த இலங்கையிலுள்ள மக்களுக்கான கட்சியாகவும் முதலாளித்துவ அடிப்படையிலான நாடாளுமன்ற அரசியலை நிராகரித்த கட்சியாகவும் இருந்தது.
தமிழ் மக்களுக்கு ஐம்பதுக்கு ஐம்பது சம உரிமை கேட்டுப் போராடிய தமிழ் கொங்கிரஸ் கட்சியும், சமஷ்டி ஆட்சியுரிமை கோரி உண்ணா நோன்பு, சாலை மறியல்,நிர்வாக முடக்கல், சிங்கள சிறீ எதிர்ப்பு என்று பல் வேறு போராட்டங்களை நடத்திய தமிழரசுக்கட்சியும், தமிழினத்தை கூறுபோடும்-உடனிருந்தே கொல்லும் சாதியத்தை ஒழிப்பதற்கு ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்தக் கட்சிகள் இன உரிமைப் போராட்டம் மொழிப் போராட்டம் என்பவற்றை நடத்திய 1958-68 காலப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்த 90 வீதமான ஆலயங்கள் 80 வீதமான தேனீர்கடைகள் மற்றும் உணவு விடுதிகள் 40 வீதமான பாடசாலைகள் என்பவற்றில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட எமக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. 1957ல் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சமூகக் குறைபாடுகள் சட்டத்தின் கீழ் அரசாங்க மற்றும் அரசாங்க நிதி உதவிபெறும் பாடசாலைகளில் கல்வி கற்க எமக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அவ்வாறான 80 வீதமான பாடசாலைகளில் எமக்கான சமத்துவம் மறுக்கப்பட்டிருந்தது. தீண்டாமை என்பது வெளிப்படையாகவே கடைப்பிடிக்கப்பட்டது.

1957 ம் ஆண்டு பருத்தித்துறைத் தொகுதியின் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொன்.கந்தையாவின் முயற்சியினால் அப்போதைய எஸ்.டபிள்யூ.ஆர் டி.பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த டபிள்யூ. தஹாநாயக்காவினால் பருத்தித்துறை கரவெட்டி, சாவகச்சேரி, கோப்பாய் காங்கேசன்துறை மானிப்பாய் ஆகிய இடங்களில் அனைத்து பிள்ளைகளும் சமத்துவமாக படிப்பதற்கென்று 16 அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகள் உருவாக்கப்பட்டன.

ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இந்தப் பாடசாலைகளில் தங்களது பிள்ளைகளை சேர்ப்பதற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டு அதிகார வர்க்கம் மறுத்துவிட்டது. இந்தப் 16 பாடசாலைகளில் 5 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் அதிகார வர்க்கத்தின் குண்டர்களால் தீவைத்து எரிக்கப்பட்டன. தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ்காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பாடசாலைகள் குடாநாட்டில் அவசியம் இல்லை என்று அரசாங்கத்திற்கு மனுச் செய்தனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலவிய இந்த அடிப்படை முரண்பாட்டை அவதானித்த சிங்கள பௌத்த பேரினவாதிகள் திட்டமிட்டு காய் நகர்த்தினார்கள்.

சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை பௌத்த மதத்திற்கு மாற்றும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். ஐரோப்பியர்கள் கிறிஸ்தவ மதத்தை பரப்பவதற்கு கையாண்ட பாணியில் புத்தூர் அச்சுவேலி கரவெட்டி அல்வாய் ஆகிய பகுதிகளில் பௌத்த பாடசாலைகளையும் அதையொட்டி பௌத்த விஹாரைகளையும் அவர்கள் நிறுவினார்கள்.

புத்தூர் பஞ்ஞாசீக வித்தியாலயம்,அச்சுவேலி ஸ்ரீ விபஸ்த்தி வித்தியாலயம், கரவெட்டி மேற்கு ஸ்ரீ நாரதா வித்தியாலயம், அல்வாய் சேய் மகே வித்தியாலயம் என்பனவே சிங்கள பௌத்த நலன்களுக்காக குடாநாட்டில் அமைக்கப்பட்ட பாடசாலைகளாகும்.

சிங்கள பௌத்த பேரினவாத எதிர்ப்பு என்பதை வாக்கு சீட்டு அரசிலுக்காகவும்; தங்களுடைய வர்க்க நலனுக்காகவும் மட்டுமே பயன்படுத்திய அன்றைய தமிழ் தலைமைகள் தமிழ்மக்களிடையுள்ள முரண்பாடுகளை கழைந்து உண்மையான தமிழ் தேசியத்தை கட்டியெழுப்ப முன்வரவில்லை.

அன்று தமிழ் தலைவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தியவர்களில் ஒர சிலரைத் தவிர மற்ற அனைவரும் இறுக்கமான சாதிய வட்டத்துக்குள்ளேயே இருந்தனர்.பலருடைய வீடுகளின் முன் புறத்தில் நாங்கள் சென்றால் காத்திருப்பதற்கென்று தனிக் கொட்டில்கள் போடப்பட்டிருந்தன. நாங்கள் தண்ணிர் குடிப்பதற்கென்ற தனியான பானைகளும் தனியான மூக்குப் பேணிகளும் கூட வைக்கப்பட்டிருந்தன. எங்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுத்த பல கோவில்களின் தர்மகர்த்தாக்களாகவும் நிர்வாகிகளாகவும்- உரிமையாளர்களாகவும் தமிழ் காங்கிரஸ் தமிழரசுக் கட்சி என்ற இரண்டு கட்சிகளினதும் பிரமுகர்களும் தலைவர்களும் தான் இருந்திருக்கிறார்கள்.

இவ்வாறு போலித்தனமும் சுயநலமும் மிக்க தமிழ் அரசில் தலைவர்கள் மத்தியில் ஹன்டி பேரின்பநாயகம், நெவின்ஸ்.செல்லத்துரை இந்துபோட் இராஜரட்ணம் சி.தர்மகுலசிங்கம், பொன்.கந்தையா, எம் காத்திகேசு, ஏ.ஈ.தம்பர் எம்.சண்முகதாசன் முதலான பலர் உண்மையிலேயே சாதி அரக்கனை ஒழித்து சமத்துவமான தமிழ் சமூகம் ஒன்றை உருவாக்கவதற்கு பாடுபட்டார்கள்.

இவர்களை விட இன்னொருவர் அரசியலைச் சாராது உண்மையான தமிழ் அடையாளத்தையும் தமிழ் கருத்தியலையும் கண்டறிந்து அதன்படி நடப்பதன் மூலமே தமிழர்கள் ஒன்றுபட முடியும் என்றும் தமிழனமும் தமிழ் மொழியும் தழைக்க முடியம் என்றும் வலியுறுத்தினார்.

அவர் நடத்திய திண்ணைப் பள்ளிக் கூடத்திற்கே எனது பெற்றோர்கள் அன்று என்னை அழைத்துச் செல்லவிருந்தனர்.

நினைவழியா வடுக்கள்- 2

நினைவழியா வடுக்கள்- 2

ஒரு நிமிட இடைவெளிக்குள் அந்த நெருப்புக் கோளங்கள் மறைந்துவிட்டன. அம்மாவும் ஆச்சியும் மூன்று முறை துப்பிவிட்டு என்னை தங்களுக்கு நடுவில் வரச் சொல்லிவிட்டு பயணத்தை தொடர்ந்தார்கள்.

பயம் விலகாத நிலையில் 'கொள்ளிவால் பேய் என்றால் என்ன?' என்று நான் அம்மாவிடம் கேட்டபோது 'அகால மரணமடைந்த அல்லது தற்கொலை செய்துகொண்டவர்களுடைய ஆன்மாக்கள் சாந்தி அடையாது இவ்வாறு கொள்ளிவால் பேய்களாக அலைந்துகொண்டிருப்பதாகவும் மார்கழி மாதம் கடவுளை நோக்கி தவம் செய்து முடித்துவிட்டு பொழுது புலர்வதற்கு முன்னர்; அவை தங்களது இருப்பிடங்களுக்கு செல்கின்றன என்றும் அவ எனக்கு விளக்கமளித்திருந்தா.

சிறுபிள்ளைகளை அந்த கொள்ளிவால் பேய்கள் அடித்துக் கொன்றுவிடும் என்றும் அப்படி எங்கள் ஊரில் இரண்டுபேர் உயிரிழந்ததாகவும் அம்மா என்னை பயமுறுத்தியிருந்தா.

நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது விஞ்ஞானப்பாடம் படிப்பித்த சண்முநாதன் ஆசிரியர் இந்தக் கொள்ளிவால் பேய்களுக்கு விளக்கம் சொல்லும் வரை, இருட்டிலும் இரவிலும்; வெளியில் செல்வதற்கு பயப்படும் மனோநிலையே எனக்கு இருந்தது.

பொதுவாக சதுப்பு நிலங்கள் அல்லது ஈரப்பதனுள்ள நிலங்களுக்கு அடியில் அசாதாரணமான நிலையில் தேங்கி இருக்கும் அடர்த்தி குறைந்த வாயுக்கள் அதிக அமுக்கம் காரணமாக பூமியைவிட்டு வெளிவரும் போது தீப்பற்றிக் கொள்கிறன. அந்தரத்தில் மிதக்கும் இந்தத் தீயைப் பார்த்து பயந்து ஒருவர் ஓட முற்படும் போது அவருக்கு பின்னால் ஏற்படும் வெற்றிடத்தை நோக்கி அந்த தீ பிளம்புகளும் நகர முற்படும். ஒரு ஐந்து அல்லது பத்து வினாடிகளுக்குள் நடக்கும் இந்தச் செயலையே கொள்ளிவால் பேய் துரத்துகிறது என்று பாமர மக்கள் கருதிவிடுகின்றார்கள். இப்படியான காட்சியைப் பார்த்து அதீமாகப் பயப்படும் ஒருவருக்கு திடிரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன. இதையே கொள்ளிவால் பேய் அடித்து இறந்துவிட்டதாக மக்கள் நினைக்கிறார்கள்.

இது தான் கொள்ளிவால் பேய் சம்பந்தமாக எனது விஞ்ஞான ஆசிரியர் சண்முகநாதன் தந்த விளக்கமாகும்.

அன்று அந்த கொள்ளிவால் பேயின் தரிசனத்தால் நாங்கள் கோவிலுக்கு செல்வதற்கு நேரமாகிவிட்டது. நாங்கள் கோவிலின் மேற்குப்புற வாசலை நெருங்கும் போதே உதயகாலப் பூசைக்கான ஆயத்த மணி அடிக்க ஆரம்பித்துவிட்டது.

வல்லிபுரக்கோவிலின் விசாலமான நான்கு வெளிவீதிகளின் ஓரங்களிலும் பல யாத்திரிகர் மடங்களும் கிணறுகளும் இருந்தாலும் அந்தக்காலத்தில் அவற்றுக்குள் நாங்கள் செல்வதற்கும் தண்ணிர் அள்ளுவதற்கும் எங்களுக்கு உரிமை இருக்கவில்லை.

எங்களுக்கென்று கோவிலின் தென்கிழக்கு மூலையில் ஓதுக்குப்புறமாக ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கே எங்களுக்கென்று ஒரு மடம் இருந்தது. அந்த மடம் ஆண்டிச்சாமி என்பவரால் கட்டப்பட்டதால் அவரது பெயராலேயே அழைக்கப்பட்டது. அந்த மடத்தில் அருகில் இரண்டு கிணறுகள் இருந்தன.அந்தக் கிணறுகளில் தான் நாங்கள் குளிக்கவும் குடிப்பதற்கு தண்ணி அள்ள முடியும்.

அந்த மடத்தின் கிழக்குப் பக்கமாக உள்ள காணிக்குள் இருக்கும் அடர்ந்த பனைமரக் கூடல்களும், அந்தப் பனைமரங்களுக்கு போட்டியாக வானுயர வளர்ந்து நிற்கும் சவுக்கு மரக்காடும், சூரியன் சுட்டெரிக்கும் நண்பகல் வேளையில் கூட ஒளி ஊடுருவமுடியாத இருண்ட தோற்றத்தை கொடுப்பதுண்டு.

வங்கக் கடலில் இருந்து வரும் வாடைக்காற்று பனைமரங்களின் ஓலைகளைகளையும் சவுக்கு மர இலைகளையும் உரசுவதால் ஏற்படும் சோ-ஊ என்ற ஒரு வித்தியாசமான பேரோசை பகல் வேளையில் கூட எனக்கு அந்தப் பகுதியில் நிற்பதற்கு அச்சத்தை ஏற்படுத்துவதுண்டு.

அதிலும் இருள் விலகாத அதிகாலை வேளையில் அந்த இடத்தில் நின்று குளிப்பது ஏதோ மயானத்துக்கு அருகில் நின்று குளிப்பதைப் போன்ற உணர்வையே எனக்கு ஏற்படுத்தும்.

அதிலும் அன்று கொள்ளிவால் பேய் என்று அம்மா அச்சுறுத்திவிட்டதால் அந்த இடத்தில் நிற்கவே எனக்கு பயமாக இருந்தது. ஏற்கனவே மார்கழிமாத பனிக் குளிரில் சிலிர்த்துப் போயிருந்த தண்ணிர்; உடலில் பட்டதால் எற்பட்ட நடுக்கத்தோடு கொள்ளிவால் பேயின் பயமும் சேர்ந்து கைகால்கள் வெடவெடத்து ஆடவைத்தது.

ஏற்கனவே பூசைக்கு நேரமாகிவிட்டதால் ஒரு பத்து வாளி தண்ணீரோடு அன்றைய எனது மார்கழி தோச்சல் முடிந்தவிட்டது. அம்மாவும் பாட்டியும் கூட அவசர அவசரமாக குளித்து முடிந்ததும் நாங்கள் உடை மாற்றிக் கொண்டு கோவில் வாசலுக்கு சென்ற போது திருப்பள்ளி எழுச்சிப் பூசை ஆரம்பமாகிவிட்டது.

யாரோ ஒரு விஷ்ணு பக்தை தனது கணீரென்ற குரலில்….
“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்” என்ற ஆண்டாள் திருப்பாவையை பாடிக்கொண்டிருந்தார்.

அந்தக் காலத்தில் வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு இப்போது இருப்பதைப் போன்ற இராஜகோபுரம் கிடையாது.அதற்கான அடித்தளம் மட்டும் மொட்டைக் கோபுரமாக இருந்தது.அந்த மொட்டைக் கோபுரத்தோடு சேர்த்து ஓடுபோட்ட உயரமான மண்டபம் ஒன்று இருந்தது. அந்த மண்டபம் சுற்சூத்திரர்கள் அல்லாத இடைநிலை சாதியினருக்காக அமைக்கப்பட்டிருந்தது.

அந்த மண்டபத்துக்குள் செல்வதற்குக் கூட அப்போது எங்களுக்கு அனுமதி கிடையாது. எங்களுக்கென்று அந்த மண்டபத்தின் முகப்பிலே ஒரு சாய்ப்பு இறக்கப்பட்டிருந்தது.அந்த சாய்ப்பை இறக்குவதற்கு கூட 1940க்கும் 45 க்கும் இடைப்பட்ட காலத்தில் பெரிய போராட்டமே நடத்தப்பட்டதாக எனது தாத்தா சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஆனால் எனது காலத்தில் அந்த சாய்ப்பை மூடி வேயப்பட தகரம் இத்துப் போய் அங்காங்கே பொத்தல் பொத்தலாக காட்சியளித்தது. அந்த தகரச் சாய்ப்புக்குள் நின்று பார்த்தால் கோவிலின் மூலஸ்த்தானம் சரியாகத் தெரியாது. கோவிலுக்கு உள்ளேயும் வெளிமண்டபத்திலும் நின்று கும்பிடுபவர்களின் முதுகு தான் எங்களுக்குத் தெரியும்.

பூசை முடிந்தததும் திருநீறு (அந்த ஆலயத்தில் சைவக் குருக்கள்மாரே பூசை செய்வதால் திருநீறு வழங்கப்படுவது வழக்கம்) துளசி இலை தீர்த்தம் என்பவற்றை ஏனைய பக்த கோடிகளுக்கு வழங்கும் குருக்கள்மார் எங்களுக்கு அவற்றை நேரடியாக வழங்க மாட்டார்கள். கோவில் வாசலில் அவற்றுக்கென இருக்கும் இடத்தில் அவற்றை வைத்து விட்டுப் போய்விடுவார்கள். அவற்றை நாங்களே எடுத்துக் கொள்ளவேண்டும். அவர்களுடைய கைகளால் எங்களுக்கு அவற்றை வழங்கினால் தீட்டுப்பட்டுவிடும் என்று அதற்கு அவர்கள் விளக்கம் கொடுத்திருந்தனர்.

அன்;றும் நாங்கள் அந்த தகரச் சாய்ப்புக்குள் நின்று சுவாமியை தரிசித்துவிட்டு நெற்றியில் பெரிய நாமப் பொட்டும் வைத்துக் கொண்டு வீட்டுக்கு புறப்படத் தயாரான போது சூரியன் உதித்துவிட்டது.

“நீ விரும்பினதை வாங்கிச் சாப்பிடு” என்று சொல்லி பாட்டி எனக்கு 10 சதம் தந்துவிட்டு தனது மூடல் பெட்டி வியாபாரத்தை ஆரம்பிக்கச் சென்றுவிட்டா.

அந்தக் காலத்தில் 10 சதம் என்பது பெரிய காசு. நிறையப் பொருட்கள் வாங்கலாம். எனக்கு ஐஸ் பழம் என்றால் ரொம்ப பிடிக்கும். 10 சதத்துக்கு அந்தக் காலத்தில் 3 ஐஸ் பழம் அல்லது 2 ஜஸ் கிறீம் ஹோன் வாங்கலாம். அன்று அந்த அதிகாலை நேரத்தில் ஜஸ் பழ வான்கள் ஒன்றும் வரவில்லை. அதனால் 5 சதத்துக்கு ஒரு பெரிய பை நிறைய கச்சான் வாங்கிக் கொண்டு அம்மாவுடன் வீட்டு;க்கு புறப்பட்டேன்.

போகும் போது நாங்கள் தாமரைக் குளத்துக்கு பக்கத்திலுள்ள வீதியால் சென்றதால் ஒரு 15 நிமிடத்தில் வீட்டுக்குச் சென்றுவிட்டோம். அநேகமாக நாங்கள் வீடு திரும்பிய போது காலை 7 மணி இருக்கும். எனது அப்பாவும் அன்று வழக்கத்துக்கு மாறாக அதிகாலையிலேயே தனது தொழிலை முடித்துவிட்டு வந்து குளித்துவிட்டு எங்களுக்காக காத்திருந்தார்.

என்னுடைய தந்தை எப்போதும் காலையில் எழுந்தவுடன் எங்கள் வீட்டிலிருந்து ஒன்றரை மைல் (அப்போது கிலோமீட்டர் கணக்கு வரவில்லை) தூரத்திள்ள மந்திகை சந்திக்கு சைக்கிலில் சென்று ஈழநாடு வீரகேசரி ஆகிய பத்திரிகைகளை வாங்கிக் கொண்டு வந்து மேலோட்டமாக தலைப்புச் செய்திகளை படித்துவிட்டுத்தான் தனது தொழிலுக்குச் செல்வார். அடை மழை பெய்தால் கூட அவர் அந்த வழக்கத்தை தவற விட்டதில்லை. ஆனால் அன்று என்னை அந்த புதிய பள்ளிக்கூடத்தக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்பதால் அவர் பத்திரிகை வாங்கப் போகவில்லை.

அம்மா அவசர அவசரமாக தேங்காய் துருவி சம்பல் இடித்து தோசை சுட்டுத் தர நானும் அப்பாவும் சாப்பிட்ட பின்னர் தானும் சாப்பிட்டுவிட்டு வந்து எனக்கு கரு நீல நிறத்திலான கால்சட்டையையும் வெள்ளை சேட்டையும் அணிவித்தா.இரண்டுமே புதிதாகத் தைக்கப்பட்டிருந்தன.

அந்தக்காலத்தில் எனக்கு பளிச்சிடும் வெண்மை நிறத்திலான சேட்டும்; அதே போல கருநீல நிறத்திலான கால்சட்டையும் அணிந்து கொண்டு பள்ளிக் கூடம் போவதற்கு சரியான விருப்பம். அத்துடன் காலில் செருப்பும் போட்டுக் கொண்டு பள்ளிக் கூடத்துக்கு போகின்ற போது பள்ளிக் கூடத்தில் வாங்கில்லையும் கதிரை மேசையிலையும் இருந்து படிக்கிற திமிரில் நிலத்தில் இருந்த படிக்கிற எங்களை கேவலமாக பார்க்கின்ற பொடியங்களுக்கும் பெட்டையளுக்கும் ‘நானும் உங்;களுக்கு குறைஞ்சவனில்லை’ என்று சொல்லிக் காட்டுகின்ற மாதிரியான ஒருவித மிடுக்கும் மகிழ்ச்சியும் எனது மனத்தில் இருக்கும்.

ஆனால் வீட்டிலிருந்து பள்ளிக் கூடத்துக்கு போய்; வகுப்பறைக்குள் கால் வைத்தவுடன் அந்த மிடுக்கும் மகிழ்ச்சியும் காணாமல் போய் அவமானம் அழுகை ஆத்திரம் எல்லாம் கலந்த இயலாமையுடன் கூடிய ஒருவிதமான துயர உணர்வே மனதில் இருக்கும்.

இங்கே ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட 1962 ம் ஆண்டு வந்த தீபாவளிக்கு இவ்வாறு கரு நீல நிறத்திலான கால்சட்டையையும் வெள்ளை சேட்டும் புதுச் செருப்பும் அணிந்துகொண்டு பாடசாலைக்கு சென்ற போது எனது வகுப்பில் இருந்த கதிரை வாங்கில் கூட்டத்தினர் “ இஞ்சை பார் புதுச் சேட்டு- புது கழிசான் - புதுச் செருப்பு - முதலாளி ஐயா வாறார்” என்று கேலி செய்து மனதை காயப்படுத்தினர். ஏதோ நான் பெரிய ஒரு குற்றம் செய்துவிட்டதாக அவர்கள் பார்த்த பார்வையும், கூறிய ஏளனச் சொற்களும் எனது பிஞ்சு மனதை காயப்படுத்தின.

வகுப்பில் செம்பாட்டு மண்ணுக்குள் சம்மாணி கட்டிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதால் அப்பா வாங்கும் வீரகேசரி பேப்பரில் ஒரு பக்கத்தை அன்று பாடசாலைக்கு கொண்டுபோயிருந்தேன்.

நிலத்தில் அந்த பேப்பர் துண்டை விரித்துவிட்டு அமர்ந்த போது எங்களது ஆசிரியரான கதிர்காமர் வாத்தியார் வெள்ளை வேட்டி வெள்ளை ஜிப்பா நெற்றியில் திருநீற்றுக்குறி சகிதம் வகுப்பறைக்குள் நுழைந்தார். நாங்கள் எல்லோரும் எழுந்து அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்த போது “வாத்தியார் இண்டைக்கு எங்கட வகுப்புக்கு ஒரு பெரிய மனுசன் வந்திருக்கிறார்” என்று முன் வாங்கிலில் இருந்தவர்கள் கூறினார்கள்.

“பெரிய மனிசனா ஆரடா அது?” என்று கதிர்காமர் வாத்தியார் ஆச்சரியத்துடன் கேட்க, அவர்கள் வகுப்பறையின் ஓரத்தில் நிலத்தில் இருந்த என்னைக் காட்டினார்கள்.

தனது கண்ணை அகல விரித்து தான் நின்ற இடத்திலிருந்தே என்னை ஒரு பார்வை பார்த்த அவர் “என்ன பள்ளிக் கூடத்துக்கு படிக்கிறதுக்காக வெளிக்கிட்டு வந்தனியா-இல்லை கோயில் திருவிழாவுக்கு போறதுக்கு வெளிக்கிட்;டு வந்தனியா?” என்று ஏளனமாகக் கேட்டார்.

நான் நிலத்திலிருந்து எழும்பி பதில் சொல்லாமல் நின்ற போது கீழே விரித்திருந்த பேப்பர் அவர் கண்ணில் பட்டது.

“என்னடா அது?” என்று அவர் அதட்டிக் கேட்டார்.
“பேப்பர்….” ஏன்று நான் கிழ்க்குரலில் சொன்னேன்.
“அது பேப்பர் எண்டு எனக்குத் தெரியும். அதை ஏன் கீழே போட்டிருக்கிறாய்.அதைச் சொல்லு” என்று கர்ச்சித்தார்.
“வெறும் நிலத்திலை இருந்தால் கால்சட்டை ஊத்தையா போயிடுமெண்டு தான்….” என்ற நான் தயங்கித் தயங்கிச் சொல்ல…
“நீங்களே ஊத்தையங்கள்.நிலத்தில இருந்தா உங்கடை கால் சட்டை ஊத்தையா பேயிடுமோ? நீங்கள் இருக்கிறதால நிலம்தான்ரா ஊத்தையா போகுது” என்றவர் விறு விறென்று வெளியே போய் பாடசாலை கிணற்றடியில் நின்ற வாழை மரத்திலிருந்து மொத்தமான பச்சைத் தடல் ஒன்றை வெட்டிக்கொண்டு வந்தார்.

வகுப்பறையில் ஒரு நிசப்பதம். எல்லோரும் பச்சை வாழைத்தடலுடன் வரும் காதிர்காமர் வாத்தியாரை பார்த்துக்கொண்டே இருந்தார்கள். எனக்கும் அவர் அதை ஏன் கொண்டு வருகிறார் என்று முதலில் புரியவில்லை. அந்த வாழைத் தடலால் எனது உடம்பில் பத்து பதினைந்து சாத்தல்கள் விழுந்தற்கு பின்பு தான் எனக்கு எல்லாமே புரிந்தது.

என்னுடைய புத்தம் புதிய வெள்ளைச் சேட்டு கயர் பட்டுப் போனதும் கால்சட்டை செம்பாட்டு மண் பட்டு அழுக்காகிப் போனதும் கதிர்காமர் வாத்தியார் என்ற பெயரிலிருந்த அந்த மனித மிருகம் அடித்த அடியை விட அதிகம் வலித்தது. அன்று நான் அழுத அழுகை இன்றும் என்னுடைய வாழ்க்கையில் மறக்கமுடியாத அழுகையாக இருக்கிறது.

இந்தச் சம்பவத்துக்குப் பின்பு பள்ளிக் கூடத்தக்கு புது உடுப்பு அணிந்து செல்வதென்பது என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு கனவாகவே இருந்தது.

எனவே இந்த புதுப் பாடசாலையிலும் இப்படி நடக்குமோ? கதிர்காமர் வாத்தியாரைப் போல் ஒருவர் அங்கேயும் இருப்பாரோ என்ற பயம் எனக்கு எற்பட்டது.

நினைவழியா வடுக்கள்-1

நினைவழியா வடுக்கள்-1


அது 1962 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ம் திகதி.

தமிழ் நாட்காட்டியின் படி மார்கழி மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை முதலாம் திகதி.

எனக்கு அப்போது ஏழு வயது முடிந்து எட்டாவது வயது ஆரம்பித்த தருணம்.

என்னுடைய வாழ்க்கையில் எனது நினைவுக்கெட்டிய ஆக முந்திய நினைவுப் பதிவு என்று பார்த்தால் அந்த நாள் தான் இப்போதும் நன்றாக ஞாபகம் இருக்கிறது.

நான் பிறந்த வடமராட்சி பகுதியிலே பொதுவாக மார்கழி மாதத்தை பீடை பிடித்த மாதம் என்று சொல்வார்கள்.வடக்கே பாக்கு நீரிணையும் கிழக்கே வங்கக் கடலும் அந்த மாதத்திலே வழமைக்கு மாறாக குமுறிக் கொந்தளிப்பதால் மீன் பிடித் தொழில் மிகக் குறைந்தளவிலேயே நடக்கும். அந்த மாதத்தில் மாரி மழை அநேகமாக அடைமழையாகத் தொடர்ந்து பெய்வதால் உள்@ர் சிறு பயிர் செய்கையும் அநேகமாகப் பாதிக்கப்பட்டே இருக்கும். இதனால் அந்த மாதத்தில் பணப் புழக்கம் என்பது குறைவாகவே இருக்கும்.வானம் தொடர்ச்சியாக பல நாட்களுக்கு கருமுகில் சூழ்ந்து இருட்டுக் கட்டியிருப்பதால் செந்தளிப்பில்லாத ஒரு மந்தமான சூழ்நிலை நிலவும்.

ஆனால் வல்லிபுரம் அல்லது வல்லிபுரக்குறிச்சி அல்லது சிங்கைநகர் (தற்போது) என்று அழைக்கப்படும் எங்கள் ஊரைப் பொறுத்தவரை அந்த மார்கழி மாதம் மகிழ்ச்சியான செந்தளிப்பான ஒரு மாதமாகும். அதற்குக் காரணம் எங்கள் ஊரில் அமைந்திருக்கின்ற வரலாற்றுப் பெருமையுடைய வல்லிபுர ஆழ்வார் ஆலயமாகும்.

ஆறுமுகநாவலர் வழிவந்த சைவ சற்சூத்திர பாரம்பரியமும் அதையொட்டிய இறுக்கமான சாதியக்கட்டமைப்பும் மிக்க வடமராட்சிப் பிரதேசத்தில் வைஷ்ணவப் பாரம்பரியத்தில் வந்த இந்த ஆழ்வார் கோவில் அமைந்திருப்பது விசித்திரமான ஒன்று.

வைஷ்ணவர்களால் பெருமாள் என்ற அழைக்கப்படும் மகா விஷ்ணுவின் கையில் அமைந்திருக்கும் சக்கரம் தான் இந்த ஆலயத்தின் மூல விக்கிரகமாகும்.இதன் காரணமாக சிறீ சக்கரத்தாழ்வார் என்று வழங்கப்பட்ட பெயரே பின்பு ஊரின் பெயரோடு சேர்த்து சிறீ வல்லிபுர ஆழ்வார் என்றாகிவிட்டது.

எடுத்த எடுப்பிலேயே நான் இந்தக் கோவிலைப்பற்றிச் சொல்வதற்கு சில முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. இந்தக் கோவிலும் , பருத்தித்துறை செம்பியன் பற்று நெடுஞ்சாலை ஓரத்தில் வங்கக் கடற்கரை வரை பரந்து விரிந்த வெண்மனற்பரப்பில் ஏகாந்தமாய் இந்தக்கோவில் அமைந்திருக்கிற சூழலும் சிறுவயதில் என்னை அதிகளவுக்கு பாதித்திருக்கின்றன.அதாவது என்னை நான் அடையாளம் கண்டு கொள்வதற்கும் ஆறுமுகநாவலர் பரம்பரையின் சற்சூத்திர பாரம்பரியம் மற்றும் இந்துத்துவ மாய்மாலங்களை நான் அனுபவ ரீதியாக புரிந்து கொள்வதற்கும் இவை எனக்குப் பெரிதும் உதவியிருக்கின்றன.

“கடவுள் தூணிலும் துரும்பிலும் விண்ணிலும் மண்ணலும் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருப்பது உண்மை என்றால் எங்கள் வீட்டிலும் எங்களுக்குள்ளும் அவர் இருக்கும் போது, அவர் இருக்கும் கோவிலுக்குள் நாங்கள் ஏன் போகக் கூடாது?”

“பஞ்சபூதங்களை கடவுள் படைத்தது உண்மை என்றால் அந்தக் கடவுளால் படைக்கப்பட்ட அந்தப் பஞ்ச பூதங்களில் முக்கியமான நிலத்திலும் நீரிலும் ஏன் எங்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது.? கோவில் நிலத்திலுள்ள கினற்றுப் படியில் அல்லது கேணிப் படியில் அல்லது குளக்கரையில் நாங்கள் ஏன் கால்வைக்கக் கூடாது? அவற்றிலுள்ள நீரை நாங்கள் ஏன் தொட்டு அழையக் கூடாது? ஏன் அள்ளிக் குடிக்கக் கூடாது?” என்கின்ற பல கேள்விகள் அந்தக்காலத்தில் என் மனதிலே எழுவதற்கும் அதற்கான விடைகளை நடைமுறைச் செயற்பாடுகளின் ஊடாக நான் தெரிந்துகொள்வதற்கும் இந்தக் கோவிலும் இந்தக் கோவில் வளாகமும் தான் அடித்தளமாக இருந்திருக்கின்றன.

இதைவிட முக்கியமாக தமிழர் தாயகப்பகுதிகளை பௌத்த சிங்களப் பேரின வாதிகள் தங்களது நிலப்பரப்பு என்று உரிமை கொண்டாடுவதற்கும், தமிழர்கள் இலங்கைக்கு வந்தேறு குடிகளாக வந்தவர்கள் என்று வரலாற்றைத் திரிப்பதற்கும் இந்த ஆலயத்தின் வரலாறும் அதை தங்களது சைவ மேலாண்மைக்காக மூடிமறைக்க நினைத்த ஆறுமுகநாவலர் வழிவந்த சற்சூத்திர பரம்பரையினரின் துரோகத்தனமும் துணைபோயிருக்கிறது.

பௌத்தமதம் என்றால் அது சிங்களவர்களுக்கு மட்டுமே உரிமையானது, சிங்களவர்களே பௌத்த மதத்தின் காவலர்கள் என்ற கருத்தியலை மகாவம்ச காலத்து பிக்குகளில் இருந்து இன்றைய சிறிலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ வரை திட்டமிட்டு கட்டமைத்து பரப்பிவரும் நிலையில் அவற்றைக் கட்டுடைத்து தமிழர்களும் பௌத்தர்களாக இருந்திருக்கிறர்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் தமிழர்கள் கடைப்பிடித்த மகாயான பௌத்தம் கி.பி.7ம் நூற்றாண்டுவரை பரவியிருந்தது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தர்மபாலர் முதலான பல தமிழ் துறவிகள் பௌத்தமதத்துக்கான முக்கியமான தத்துவ நூல்களை எழுதியிருக்கிறார்;கள், தமிழிலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஐம்பெரும் காப்பியங்களில் முக்கியமானவையான மணிமேகலை மற்றும் குண்டகேசி என்பன பௌத்த மதத்தின் மேன்மையை எடுத்து விளக்கிய நூல்கள் என்கின்ற வரலாற்று உண்மைகளை எடுத்துச் சொல்வதற்கு இன்றுவரை சற்சூத்திரப் பரம்பரையினர் தயாரக இல்லை.

தமிழர்களுடைய வரலாற்றை ஆரிய பார்ப்பணிய மதக் கோட்பாடுகளுக்குள் சிக்கவைத்து பார்ப்பணிய மதத்தின் வரலாறு தான் தமிழர்களின் வரலாறு என்று ஆறுமுகநாவலரின் சற்சூத்திரப் பரம்பரை பெருமை பேசிக்கொண்டிருக்க, விகாரைகள் இருந்த இடங்கள் எல்லாம் சிங்களவர்களின் பூர்வீக பூமி என்று தேரவாத பௌத்தத்தை கடைப்பிடிக்கும் மாகவம்ச பரம்பரையினர் உரிமை கொண்டாடியதுடன் அந்த நிலப்பரப்புக்களை ஆக்கிரமிக்கும் வேலைகளையும் திட்டமிட்டுச் செய்தனா.;- செய்து வருகின்றனர்.

நான் இங்கே குறிப்பிடும் இந்த வல்லிபுர ஆழ்வார் ஆலயப்பகுதியில் 1940 களில் வரலாற்று பொற்சாசனம் ஒன்று கிடைத்தது. கோவில் தேவைக்காக கிணறு தோண்டிய போது மண்ணுக்குள் இருந்து கிடைத்த இந்த பொற்சாசனம் வல்லிபுரப் பொற்சானம் குறிப்பிடப்படுகிறது.

இந்தப் பொற்சாசனம் கிபி 2 ம் நுற்றாண்டிலே ‘படகர அதன’ என்ற இடத்திலே ஒரு பௌத்த விகாரை கட்டப்பட்ட செய்தி பிராமி எழுத்து வடிவத்திலே குறிப்ப்pடப்பட்டிருந்தது.

இந்த வரலாற்றப் பொற்சாசனத்தை ஆய்வுசெய்த பரணவிதான உட்பட்ட சிங்கள வரலாற்றாசிரியர்கள் தற்போது வல்லிபுர ஆழ்வார் ஆலயம் இருக்கும் இடத்தில் பௌத்த விகாரையே இருந்த தென்றும் அங்கு சிங்கள மக்களே குடியிருந்தார்கள் என்றும் 14 ம் நூற்றாண்டுக்குப் பின்பு இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய தமிழர்கள் அந்தப்பிரதேசத்தின் பூர்வீக குடிமக்களான சிங்கள மக்களை அடித்து விரட்டிவிட்டு அங்கிருந்த விகாரையையும் அழித்து அது இருந்த இடத்தில் விஷ்ணு கோவிலை கட்டிவிட்டார்கள் என்று நிறுவ முற்பட்டிருக்கிறார்கள்.

புத்தரை மட்டுமல்ல விஷ்ணுவை முழுமுதல் கடவுளாகக் கொண்ட வைஷ்ணவப் பாரம்பரியத்தையும் 'அன்பே சிவம்' என்றுரைத்த இராமலிங்க வள்ளலாரின் சமத்துவ வழிபாட்டு முறையையும் கூட ஏற்றுக்கொள்ளாத ஆறுமுகநாவலரின் சற்சூத்திரப் பரம்பரையினர் தங்களுடைய மேன்மைக்கு பங்கம் வந்துவிடும் என்பதால் சிங்கள பௌத்த பேரின வாதிகளின் இந்த அப்பட்டமான வரலாற்றுத் திரிப்பை கட்டுடைத்து உண்மையை வெளிக் கொண்டுவருவதற்கு விரும்பவில்லை.

உண்மையில் இந்த ஆலயத்தின் வரலாறு என்பது தமிழகத்தில் உத்தவேகத்துடன் எழுந்த பக்தி இயக்க காலகட்டத்தில் (கி.பி.6ம் 7ம் நூற்றாண்டுகள்) தமிழகத்திலும் இலங்கையிலும் தமிழ்மக்கள் மத்தியல் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சமண பௌத்த மதங்கள் அழிக்கப்பட்ட வரலாற்றுடன் ஆரம்பிக்கிறது. நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கருத்தியல் போராட்டத்தில் கௌதம புத்தர் விஷ்ணுவின் அவதாரமாக அர்த்தப்படுத்தப்பட, புத்தருடைய தர்மச்சக்ரம் விஸ்ணுவினுடைய சக்கரமாக மாற்றப்பட தமிழகத்திலும் இலங்கையிலும் இருந்த மகாயான பௌத்த மதம் இந்துமதத்தின் வைஷ்ணவப் பிரிவுடன் ஐக்கியமாக அந்த மதத்திடைய விகாரைகள் விஷ்ணு கோவில்களாக மாற்றம்பெற்றன. பல விஹாரைகள் கைவிடப்பட்டு அழிந்துபோயின.


யாழ்ப்பாணக் குடாநாட்டின் முதல் தலைநகராக விளங்கிய கதிரமலை (தற்போதைய கந்தரோடை) மகாயான பௌத்தத்தை கடைபிடித்த தமிழ் பௌத்த தலைநகராக இருந்தது என்பதற்கு இன்றும் அங்குள்ள ஏராளமான தமிழ் பௌத்த விஹாரைகளின் தடயங்கள் சான்றாக இருக்கின்றன.ஆனால் ஆறுமுக நாவலரின் சற்சூத்திர பரம்பரையினர் கதிரமலையின் வரலாற்றை மூடி மறைத்து மழுப்பகின்ற கைங்கரியத்தில் ஈடுபட, தேரவாத பௌத்ததை கடைப்பிடிக்கும் சிங்கள பௌத்த பேரினவாதிகள் அது தங்களுடைய வரலாற்று நகரம் என்றும் தங்களது முன்னோர்களே அந்தப் பிரதேசத்தின் பூர்வீக குடிமக்கள் என்றும் உரிமை கொண்டாடுகின்றனர்.


கதிரமலையை ஆண்ட கடைசி மன்னனாகிய உக்கிரசேனன், பாண்டிய நாட்டு இளவரசியும் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலை கட்டியவளுமாகிய மாருதப்புரவல்லியை காதல் மணம்புரிந்து அவளுக்காக இந்து மதத்துக்கு மாறி அவளின் பெயரால் உருவாக்கிய நகரமே வல்லிபுரம் ஆகும். கிபி. 6ம் நூற்றாண்டுக்கும்,7 ம் நூற்றாண்டுக்;கும் இடையில் நிகழ்ந்த இந்த வரலாற்று சம்பவத்தின் போதே மகாயான பௌத்தம் அதாவது தமிழ் பௌத்த மரபு வைஷ்ணவத்துக்குள் ஐக்கியமான வரலாற்று மாற்றமும் நிகழ்ந்தது. இந்தப் பின்னணியிலேயே நான் இங்கே குறிப்பிடும் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தோற்றமும் இடம்பெற்றது.


ஞாயிற்றுக்கிழமை விஷ்ணு வழிபாட்டுக்கு உகந்த நாள் என்ற ஒரு ஐதீகம் வழக்கில் இருப்பதால் ஒவ்வெரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த ஆலயம் பக்தர்கள் கூட்டத்தால் நிறைந்திருக்கும்.அதுவும் ஆவணி மார்கழி மாதங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமைகள் அதிவிசேடமான நாட்கள் என்ற கருதப்படுவதால் இன்னும் அதிகமான பக்தர்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து இங்கே வந்து குவிவார்கள். இந்தக்கோவிலுள்ள இன்னொரு முக்கியமான அம்சம் இங்குவரும் பக்தர்கள் ஆலயச் சுற்றாடலில் அந்தந்த சமூகப்பிரிவினருக்கென அமைக்கப்பட்டிருக்கும் கொட்டகைகளில் தாங்களே பொங்கல் பொங்கி கடவுளுக்கு படைத்து வழிபடும் முறையாகும்.


ஆலயங்களில் இறைவனுக்கு அமுது படைக்கும் உரிமை பார்ப்பணிர்களுக்கு மட்டுமே உரிய என்ற ஆரிய பார்ப்பணிய மற்றும் யாழ்ப்பாண குடாநாட்டு சற்சூத்திர பாரம்பரியங்களுக்கு விதி விலக்காக இந்த வல்லிபுர ஆழ்வார் ஆலயம் உட்டபட்ட குறிப்பிட்ட சில கோவில்களில் இந்த நடைமுறை வழக்கத்தில் இருந்தது.


மார்கழிமாதம் முழுவதும் இந்தக் கோவிலில் மார்கழித் தோச்சல் அல்லது மார்கழி நோன்பு என்று அழைக்கப்படும் திருப்பாவை நோன்பு கொண்டாடப்படுவதால் அதிகாலை நான்கு மணியில் இருந்தே இந்தக் கோவில் களை கட்ட ஆரம்பித்துவிடும்.


எங்கள் ஊரவர்களைப் பொறுத்தவரை இந்தக் கோவில் ஒரு வழிபாட்டுத் தலம் என்பதை விட எங்களுடைய சிறு உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தவதற்கான பிரதான சந்தையாக இருந்தது.


எங்கள் ஊர் பெண்கள் தங்களது தயாரிப்பக்களான மூடல், பெட்டி, அடுக்குப்பெட்டி, நீத்துப்பெட்டி, பாய் (இவையெல்லாம் பனையோலையை கொண்டு செய்யப்பட்ட பொருட்கள்) சுளகு, பனங்கட்டி என்பவற்றை இந்தக் கோவிலின் தென்கிழக்கு மூலையில் எங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்து விற்பது வழக்கமாகும். எனது பாட்டி இந்தச் சந்தையின் முகக்pய வியாபாரிகளில் ஒருவர். வள்ளி ஆச்சி எனப்படும் அவரின் மூடல் மற்றும் அடுக்குப் பெட்டிகளை வாங்குவதற்கென்று நிரந்தர வாடிக்கையாளர்கள் பலர் இருந்தார்கள்.


எனது அப்பாவுக்கு கோவில் மற்றும் அதையொட்டிய மதச்சடங்ககள் என்பவற்றில் நம்பிக்கையோ பற்றோ கிடையாது. ஆனால் அதற்காக அவர் கடவுளே இல்லை என்று சொல்லும் நாஸ்த்திகராக இருந்ததில்லை. கடவுளின் பேரால் கடவுளின் பேரைச் சொல்லி உருவாக்கப்பட்ட மதத்தால் வகுக்கப்பட்ட சாதி அமைப்பின் மீதும் அந்த அமைப்பால் கடைப்பிடிக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமைகள் குறித்தும் அவருக்கு அடக்கமுடியாத கோபம் இருந்தது.அந்தக் காலகட்டத்தில் இந்தத் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து போராட்டம் நடத்திய பொதுவுடமை சித்தாந்தத்தின் மீது அவருக்கு ஈடுபாடும் நம்பிக்கையும் இருந்தது. ஆனால் அதை முழுமையாக புரிந்து கொள்ளும் அளவுக்கு அவரிடம் போதிய கல்வியறிவு இருக்கவில்லை. ஆனால் அடக்குபவர்களை அடக்கப்படுபவர்கள் எதிர்த்து அடக்கி ஒடுக்கும் வரை அடக்குமுறை தொடரும் என்று அவர் உறுதியாக நம்பினார். பலமே அதிகாரத்தின் அடிப்படை என்பதையும் அவர் புரிந்து கொண்டிருந்தார். மனிதனை மனிதன் பிறப்பைக் கொண்டு இழிவுபடுத்தும் அடிமைப்படுத்தும் கோட்பாட்டு ரீதியான இந்து மதத்தை ஒழிக்கவேண்டும் என்பது அவரது இலட்சியமாக இருந்தது.


ஆனால் எனது தாயார் இதற்கு நேரெதிரான போக்குடையவராக இருந்தார். தீவிரமான விஷ்ணு பக்தையான அவருக்கு பாகவதம் மகாபாரதம் இராமாயணக் கதைகள் எல்லாம் அத்துப்படியானவை. வல்லிபுரக்கோவில் சம்பந்தப்பட்ட எந்த விரதமானாலும் எந்த விஷேட நாட்களானாலும் அவர் தானும் விரதமிருந்து என்னையும் விரதமிருக்க வைப்பிப்பது வழக்கமாகும்.


அதிலும் மார்கழிமாதக் காலை நேரத்தில் அந்தக் கொடுங்குளிரில் அதிகாலை நாலுமணிக்கு என்னை எழுப்பி, எங்கள் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அழைத்துச் சென்று மார்கழித் தோச்சல் என்ற பேரில் சில்லென்ற குளிர் தண்ணீரை தலையில் ஊற்றுவது அந்தக் காலத்தில் எனக்கு மிகப்பெரிய சித்திர வதையாக இருக்கும்.


நான் மேலே குறிப்பிட்ட அந்த ஞாயிற்றுக்கிழமையும் வழக்கம் போல அதிகாலை நாலு மணிக்கு அம்மா என்னை எழுப்பிபோது வழக்கம் போல நானும் சிணுங்கிக் கொண்டு திரும்பிப்படுத்தேன். அப்படி நான் படுக்கும் போது ‘கடவுள் படியளக்கிற நேரத்தில் என்னடா நித்திரை சனியனே எழும்படா!’ என்று அர்ச்சனை நடப்பது வழக்கம். அதுக்கும் எழும்பவில்லை என்றால் கையால் இரண்டு மூன்;று சாத்து விழுவதும் வழக்கம். ஆனால் அன்று அது எதுவுமே நடக்கவில்லை.


“அப்பு ராசா எழும்படி. இண்டைக்கு நீ ஒரு புது பள்ளிக் கூடத்துக்கு போகப் போறாய். சாமியை கும்பிட்டு நல்ல படிப்புத் தரவேணும் கேக்கோணும் எழும்பு ராசா” என்று சொல்லி அம்மா வாஞ்சையோடு என் தலையை தடவியது ஆச்சரியமாக இருந்தது. அதை விட புது பள்ளிக் கூடத்தக்கு போகோணும் எண்டது இன்னும் ஆச்சரிமாக இருந்தது.


அப்போது நான் படித்த மந்திகை பள்ளிக் கூடம் எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என்னுடைய சொந்தக்கார பொடியளான சின்னத்தம்பி சந்திரன் நடராசன் ஆகியயோரையும் சாரையடி கூவில் பக்கங்களில் இருந்து வந்த வேறு சில பொடியங்களையும் எங்களுக்கு படிப்பித்த கதிர்காமர் வாத்தியார் வாங்கிலில் இருக்க விடாமல் அழுக்கான நிலத்தில இருத்திறதும், ‘சனியன் மூதேசியளே மரமேறப் போறதுக்கும் மாடு மேய்க்கப் போறதுக்கும் என்ரா உங்களுக்கு படிப்பு’ என்று அடிக்கடி பேசி அடிக்கிறதும் எனக்கு பிடிக்கவில்லை. ‘பள்ளிக் கூடம் எண்டால் வாங்கிலிலை அல்லது கதிரையிலை இருந்து கொண்டு மேசையில சிலேட்டையும் புத்தகத்தையும் வைச்சுப் படிக்கோணும்’ என்றது தான் என்னுடைய அப்போதைய ஆசை.


“அம்மா அம்மா புது பள்ளிக் கூடத்தில நான் வாங்கில் மேசையில் இருந்து படிக்கலாமே?” என்று நான் கேட்க “ஓ இந்தப் பள்ளிக் கூடத்தில படிக்கலாம்” என்று அம்மா பதில் சொல்ல, நான் அடைந்த சந்தேசத்துக்கு அளவில்லை.படுக்கையை விட்டு துள்ளி எழுந்தேன். இப்போது நினைத்தாலும் அந்த மகிழ்ச்சியான நேரம் என் ஞாபகத்தில் அழியாமல் அப்படியே இருக்கிறது.


எங்கள் வீட்டிலிருந்து வல்லிபுரக் கோவிலுக்கு போவதற்கு மூன்று வழிகள் இருக்கின்றன. ஒன்று துன்னாலையில் இருந்து வரும் கிறவல் ரோட்டால் தாமரைக்குளத்தின் அருகாகச் செல்வது. இரண்டாவது முனியப்பர் கோவில் அமைந்திக்கும் பனங் காணி வழியாகச் செல்வது. மூன்றாவது எழுவாக்கை எனப்படும் வயல் பரப்பினுடாக செல்வது.


தாமரைக் குளத்தில் யாரோ ஒருவர் தற்கொலை செய்து விட்டதால் அவரது ஆவி அந்தப்பகுதியில் நடமாடும் என்று சொல்லி அதிகாலையில் அந்த வீதியால் அம்மா என்னை கோவிலுக்கு அழைத்துச் செல்வதில்லை. அது போல் முனியப்பரும் பிடித்துவிடுவார் என்ற பயத்தில் அந்தப் பாதையையும் பாவிப்பதில்லை.அதனால் எப்போதும் எழுவாக்கை வயல் வெளியினூடகத்தான் நாங்கள் கோவிலுக்குச் செல்வது வழக்கம்.


அன்றும் வழக்கம் போல அந்த வழியால் அம்மா வயல் வரப்பில் முன்னாலும் பாட்டி பின்னாலும் நடந்து வர நான் நடுவில் சென்று கொண்டிருந்தேன். திடிரென நாங்கள் சென்று கொண்டிருந்த வயல் வெளிக்கு எதிர்ப்புறமுள்ள ஆனை விழுந்தான் மணல் வெளியில் நெருப்புக் கோளங்கள் எரிந்து எரிந்து அனைந்து கொண்டிருந்தன.


“ஐயோ என்ரை பிள்ளை” என்று அம்மா என்னை கட்டி அணைத்து முந்தானைக்குள் மூடிக்கொண்டு ‘அரி ஓம் நமோ நாராயணா’ என்று திரும்பத் திரும்பச் செல்ல, பாட்டியும் ஓடிவந்து என்னை மறைத்து கொண்டு நின்றா.எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரே பயமாக இருந்தது. ‘என்னம்மா அது’ என்று அம்மாவை இரகசியமாக கேட்க ‘கொள்ளிவால் பேயள் போகுதுகள்’ என்று அவவும் இரசியமாக பதில் சொன்னா.


அம்மாவின் முந்தானைக்குள் ஒளிந்திருந்தபடி மெதுவாக எட்டிப் பார்த்தேன். வரிசையாக நெருப்பு கோளங்கள் சென்று கொண்டிருந்தன.முன்னுக்கு போன கோளங்கள் அணைந்து போக பின்னுக்கு புதிது புதிதாக கோளங்கள் தோன்றிக் கொண்டிருந்தன. எனக்கு இன்னும் பயம் வந்துவிட்டது. அம்மாவை இறுக்கி கட்டிப் பிடித்துக் கொண்டேன்.


புதன், 30 மார்ச், 2011

ஊடகம் என்றால் என்ன?

பொதுவாக ஊடகம் என்றால் கடத்துவது, காவுவது என்று தமிழில் அர்த்தம் கொள்ளப்படுகிறது.

ஒரு செப்புக்கம்பி ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு மின்சாரத்தை கடத்திச் செல்லும் போது அது அங்கே ஒரு ஊடகமாகச் செயற்படுகிறது.

அதே போல ஒருவர் பேசும்பேச்சை,மற்றவர் கேட்பதற்கு அதை ஒலி அலைகளாகச் சுமந்து செல்லும் காற்று ஊடகமாகச் செயற்படுகிறது.

ஊடகவியல் என்கிறபோது அது மனிதர்களுக்கிடையி;ல் கருத்துக்களை –தகவல்களை காவிச் செல்கின்ற -பரப்புகின்ற வேலையைச் செய்கின்ற தொடர்பாடல் சம்மந்தப்பட்ட துறையைக் குறிக்கிறது என்று சாதாரணமாகச் சொல்லலாம்.

குறிப்பாகச் சொல்வதானால் கருத்தியலை கட்டமைப்பது,மனிதர்களினதும் சமுகத்தினதும் இருப்பை தீர்மானிப்பது, சந்தைப் பொருளாதாரத்தின் இருப்பை தீர்மானிப்பது,அரசியல் தத்துவம் விஞ்ஞானம் சட்டம் மருத்துவம் பொறியியல் என்று பல்துறை சார்ந்த விடயங்களில் தீர்மானகரமான சக்தியாக விளங்குவது என்று ஊடகவியலில் சர்வ வியாபகத் தன்மையை விளக்கலாம்.

ஊடகவியலின் செயற்பாடு

முதல்கட்டமாக ஊடகவிலின்; செயற்பாடுகளை தகவல் தெரிவித்தல், அறிக்கையிடுதல், பிரதிபலிப்பை உருவாக்குதல் என்கின்ற மூன்று வரையறைகளுக்குள் அடக்கலாம்.

தகவல் தெரிவித்தல்

கருத்தை மக்களிடம் எடுத்துச் செல்கின்ற பணி தான் ஒரு ஊடகத்தின் முதல் பணியாகும்.கருத்து என்பது இதழியலில் செய்தி, கட்டுரை, விவாதம், விமர்சனம், சிறுகதை, தொடர்கதை, நாவல், கவிதை, பாடல் என்று பல்வேறு வடிவங்களில் மக்களிடம் எடுத்துச் செல்லப்படுகிறது.

ஓலி ஒளி ஊடகங்களில் இவற்றுடன் கலந்துரையாடல் பாடல் நாடகம் விவரணச் சித்திரம் குறும் படம் ஆவணப்படம் சினிமா என்று இந்த வடிவம் இன்னும் விரிவுபெறுகிறது.

ஒரு விளம்பரமாக அறிவித்தலாகக் கூட ஒரு கருத்து மக்களிடம் எடுத்துச் செல்லப்படலாம்.

கருத்து ஊடகங்களுடாக மக்களிடம் எடுத்துச் செல்லப் படுகின்ற போது முதலில் தகவல் தெரிவித்தல் என்ற பணி அங்கு நடைபெறுகிறது.

அறிக்கையிடுதல்

அறிக்கையிடுதல் என்பது ஊடகவியலில் மிக முக்கியமான ஒரு விடயமாகும்.

ஒரு கருத்தை கட்டமைத்து, அதை மக்கள் நம்புகின்ற விதத்தில்,

அவர்கள் விருப்பத்தக்கவகையில் அவர்களுடைய அறிவுத் தளத்தை நோக்கி நகர்த்துவதை ஊடகவியலில் அறிக்கையிடுதல் என்று சொல்லலாம்.

அதாவது ஒரு மனிதனின் சிந்தனைத் தளத்தில் ஊடுருவி அவன் எதைச் செய்ய வேண்டும், எதைச் சார்ந்திருக்க வேண்டும், எதைச் சாப்பிட வேண்டும் எதை உடுக்கவேண்டும், எதைக் குடிக்கவேண்டும், எதைப் படிக்க வேண்டும், எதைப் பார்க்க வேண்டும் என்ற அவனது அனைத்துச் செயற்பாடுகளையும் அவனையறியாமலோ அல்லது அவன் அறியும் படியாகவோ புறநிலையில் இருந்து இயக்குகின்ற தீர்மானகரமான சக்தியாக ஊடகவியல் விளங்குதற்கு இந்த அறிக்ககையிடுதல் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

உதாரணமாக நமது நாட்டிலே உள்ளுரில் தயாரிக்கப்படுகின்ற ஒரு குளிர் பானம், தரமும் சுவையும் ஊட்டச்சத்தும் நிறைந்ததாக இருந்தாலும், சர்வதேச பிரபல்யம் வாய்ந்த குளிர் பானங்களுடன் சந்தையில் அதனால் போட்டிபோட முடிவதில்லை.

இதற்கு பொருளாதார ரீதியாக பலகாரணங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அவை எல்லாவற்றiயும் விட , உள்ளுர் குளிர்பானத்தைவிட சர்வதேசப் புகழ்பெற்ற குளிர் பானந்தான் சிறந்தது, அவற்றை மற்றவர்களுக்கு முன்பாக குடிப்பதே கௌரவத்துக்குரியது என்று நுகர்வேருடைய மனங்களிலே கட்டமைக்கப்பட்டிருக்கின்ற பிரமை முக்கியமானதாகும்.

இந்தப் பிரமை ஊடகங்களால் தான் கட்டமைக்கப்படுகிறது. இதைக் கட்டமைப்பதற்காக ஊடகவியலில் கையாளப்படும் முறைதான் அறிக்கையிடுதல் எனப்படுகிறது.

பொதுவாக அறிக்கையிடுதலில் தகவல் தெரிவித்தல், ஓப்பீட்டுக் குள்ளாக்கல், அம்பலப்படுத்தல், நம்பிக்கையூட்டல் என்கின்ற வழிமுறைகள் கையாளப்படுகின்றன.

உதாரணமாக சர்வதேச சந்தையில் இடம் பிடித்திருக்கும் ஒரு பிரபலமான நிறுவனத்தின் தயாரிப்பான ஒரு செருப்பு, அல்லது சப்பாத்து முதன் முதலாக ஒரு நாட்டின் உள்@ர் சந்தைக்கு வருகின்றதென்று வைத்துக்கொண்டால் அந்தப் பொருள் சந்தைக்கு வருவதற்கு முன்னர் அதைப்பற்றிய விளம்பரம் செய்யப்படும்.

அதிலே முதலில் அந்தத் தயாரிப்பு மற்றும் அதை தயாரித்த நிறுவனம் பற்றிய தகவல் இருக்கும். அடுத்தபடியாக அந்த நிறுவனத்தின் சர்வதேசப் பிரபல்யம் மற்றும் அந்த நிறுவனத் தயாரிப்புக்களின் விற்பனைச் சாதனை (அதிக மக்கள் வாங்கிப் பாவிக்கின்றார்கள் என்கின்ற புள்ளி விபரம்) என்கின்ற ஒப்பீட்டுத் தன்மை இருக்கும்.

அடுத்து அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் பாதுகாப்பானவை, உறுதியானவை நீடித்து உழைக்கக் கூடியவை என்கின்ற அம்பலப்படுத்தும் (மற்றய தயாரிப்புக்கள் தரமற்றவை என்று மறைமுகமாக அம்பலப்படுத்தவது) தன்மை இருக்கும்.

இறுதியாக மக்களின் அபிமானத்தை பெற்ற ஒரு விளையாட்டு வீரர் அந்த செருப்பை அல்லது சப்பாத்தை பாவிப்பது போன்று காண்பிக்கப்படும். இதன் மூலம் இந்தத் தயாரிப்பு சிறந்ததாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கை அல்லது பிரமை நுகர்வோருடைய மனங்களிலே கட்டமைக்கப்படும்.

அறிக்கையிடுதல் என்பது ஒரு விளம்பரத்தில் மட்டுமல்லாமல் ஊடகத்துறை சார்ந்த அனைத்து கருத்தியல் வெளிப்பாட்டு வடிவங்களில் இந்த அடிப்படையிலே தான் மேற்கொள்ளப்படுகிறது.

பொதுவாக ஊடகத்துறையில் அறிக்கையிடுதல் என்பது இருவழித் தன்மை கொண்டதாகும்.

முதலாவது ஒரு அதிகார மையத்திலிருந்து மக்களை நோக்கி அறிக்கையிடப்படுவது. இது அதிகார மையத்தின் தேவைகளுக்காக மக்களை தயார் படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. பெரும்பாரும் அனைத்து ஊடகங்களினதும் 90 வீதமான செயற்பாடுகள் இந்த வகையயை அதாவது மேலிருந்து கீழ்நோக்கி கருத்தை கொண்டுசெல்லும் தன்மையைக் கொண்டவை.

அது செய்தியும் செய்திசார்ந்த வடிவங்களாக இருக்கலாம். அல்லது நாடகம் சினிமா சின்னத்திரை என்று அழகியல் சார்ந்த வடிவங்களாக இருக்கலாம். அனைத்துமே இந்த வரையறைக்கள் அடங்குகின்றன.

இரண்டாவது மக்களிடமிருந்து தகவல்களைத் திரட்டி, அதிகார மையத்தை நோக்கி அறிக்கையிடுவது. இது அதிகார மையத்தின் தேவைகளுக்காக மக்களை தயார்படுத்துவதற்கு மக்களிடமிருந்து தகவல்களை திரட்டி அதிகார மையத்துக்குக் கொடுப்பது. இது அநேகமாக ஒரு புலனாய்வு செயற்பாட்டுக்கு ஒப்பானது. இதற்கு சிறந்த உதாரணமாக தேர்தல் காலங்களில் ஊடகங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புக்களை குறிப்பிடலாம். அதேபோல இந்திய ஊடகங்கள் நடத்தும் திரை வரிசை ரொப் ரென் போன்ற நிகழ்ச்சிகளை குறிப்பிடலாம்.

பிரதிபலிப்பை உருவாக்குதல்

ஒரு கருத்து ஒரு ஊடகத்தினூடாக ஏதாவதுதொரு வடிவத்தில் மக்களுக்கு தெரிவிக்கப்படும் போது அல்லது மக்கள் மத்தியிலே பரப்பப்படும் போது மக்களுடைய மனங்களிலே அறிதல் தெளிதல் வினையாற்றுதல் என்ற மூன்று செயற்பாடுகள் நடக்கின்றன.

உதாரணமாக காச்சல் தலைவலி என்பது உலகிலுள்ள அனைவருக்கும் வரக்கூடிய ஒரு நோயாகும். இந்த நோய்க்கு பல்வேறு பெயர்களில் மருந்துகளும் இருக்கின்றன. இந்த நோயை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கக் கூடிய மருந்தின் அடிப்படை மூலக்கூறுகள் மருத்துவ ரீதியாக ஒன்றாக இருந்தாலும்; நாட்டுக்கு நாடு இந்த மருந்துகள் அவற்றை தயாரிக்கின்ற நிறுவனங்களின் கொடுக்கப்படும் வௌ;வேறு பெயர்களில் தான் மக்களால் அறியப்படுகின்றன.

இலங்கையில் காச்சலுக்கென்று ‘அ’ என்ற மருந்து பாவனையில் இருக்கிறதென்று வைத்துக் கொண்டால் இப்போது ‘ஆ’ என்ற சிறந்த மருந்து வெளிநாடுகளில் பாவிக்கப்படுவதாகவும்; அது இலங்கையில் விற்பனைக்கு வந்துள்ள தென்றும் ஒரு செய்தி ஊடகங்களில் வரும் போது அதை கிரகிக்கும் ஒரு மனிதன் முதலில் இந்தப் புதிய மருந்து வந்திருக்கும் தகவலை அறிந்து கொள்கிறான். அதற்கு அடுத்தபடியாக அந்த தகவலூடான இந்த புதிய மருந்து வெளிநாடுகளில் பாவிக்கப்படுவதால் சிறந்த மருந்தாக இருக்கும் என்ற கருத்து (அவனுடைய அறிதலுக்கு ஊடாக) அவனுக்கு ஏற்படுகிறது. அதன் பின்னர் அந்த மருந்தை வாங்கவேண்டும் என்ற வினையாற்றும் எண்ணம் அவனுக்கு உருவாகிறது. மருத்துவர் பழைய மருந்தை கொடுத்தால் புதிய மருந்தை எழுதித் தாருங்கள் என்று கேட்கும் நிலைக்கு அவன் வருகிறான்.

இதற்கு இன்னொரு உதாரணமாக கடந்த 2005ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் படுகொலை செய்யப்பட்ட செய்;தியை எடுத்துக் கொள்ளலாம்.

இந்தச் செய்தி ஊடகங்கள் வாயிலாக ஐரோப்பாவில் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்களை எட்டிய போது அதன் மூலம் ஜோசப் பரராசசிங்கம் துப்பாக்கிச்; சூடுபட்டு இறந்துவிட்டார் என்ற தகவல் முதலில் அவர்களுக்கு தெரிகிறது.

அடுத்து அவர் எங்கே வைத்து சுடப்பட்டார்? எப்போது சுடப்பட்டார்? யார் அவரைச் சுட்டார்கள்? யார் அவரின் எதிரிகள் என்கின்ற தகவல்கள் மூலம் அவரைச் சுட்டுக் கொன்றவர்கள் தமிழின துரோகிகள் என்ற தெழிவு அல்லது புரிதல் அவர்களுக்கு ஏற்படுகிறது.

அதற்கு அடுத்த கட்டமாக இந்தப் புரிதல் தெழிதல்களுக்கூடாக இந்தப் படுகொலையைக் கண்டிக்க வேண்டும் என்ற செயலாற்றும் என்ணம் இந்தச்செய்தியைப் படிப்பவர்களுடைய மனதிலே உருவாகிறது.

இந்த செய்தி சொல்லப்பட்ட விதத்தையும் அதை உள்வாக்கிக் கொண்டவருடைய கருத்தியல் தளம் மற்றும் இருப்பையும் பொறுத்து இந்தப் படுகொலைக்கு எதிராக வினையாற்றும் செயற்பாடு அமைகின்றது.

ஓரு தீவிரமான கிறிஸ்தவருக்கு ஜேசு பாலன் பிறந்த நேரத்தில் அவரது பிறப்புக்கான ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துவிட்டதே என்ற கொதிப்பு அவரை ஆட்கொண்டிருக்கும்.

தமிழ் தேசிய உணர்வாளர் ஒருவருக்கு துயரத்துடன் கூடிய ஆத்திர உணர்வை இது தூண்டியிருக்கும.;

இதேவேளை இனவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடும் நபருக்கு இந்தச் செய்தி மகிழ்ச்சிதரும் ஒன்றாக இருந்திருக்கும்.

பொதுவாக ஊடகங்கள் தங்களது நோக்கம் இருப்பு மற்றும் செயற்பாடுகள் பற்றி பல்வேறு காரணங்களையும் வியாக்கியானங்களையும் கொள்கை விளக்கங்களையும் கூறினாலும் உண்மையில் மக்களின் மனங்களில் பிரதிபலிப்பை உருவாக்குவது என்பது தான் அனைத்து ஊடகங்களினதும் அடிப்படைக் குறிக்கோளாகும்.

அதாவது மக்களின் சிந்தனைத் தளத்துக்குள் ஊடுருவி அதில் செல்வாக்குச் செலுத்தி சார்புத் தன்மை ஒன்றை உருவாக்கி அவர்களை இயக்குகின்ற சக்தியாக இன்றைய நவீன ஊடகம் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது.

பொதுவாக ஊடகவியல் என்று இன்று அழைக்கப்படும் இந்தத்துறையிலுள்ள அனைத்து ஊடகங்களும் இந்த மூன்று அடிப்படை நோக்கங்களை ஆதாரமாகக் கொண்டுதான் செயற்படுகின்றன.

செய்தி சார்ந்த விடயங்களாக இருந்தாலும்,அறிவியல் சார்ந்த விடயங்களாக இருந்தாலும் அல்லது கலைத்துவம் சார்ந்த மகிழ்வூட்டும் விடயங்களாக இருந்தாலும் ஊடகங்களால் கட்டமைக்கப்படுகின்ற அனைத்து வடிவங்களுமே மனிதனுடைய சிந்தனைத் தளத்தை ஆக்கிரமிப்பதை நோக்கமாகக் கொண்டவையாகும்.

‘தேவைக்கான உற்பத்தி’ என்பது பொருளியலிலே ஒரு முக்கியமான விடயம். அதாவது மக்களுடைய தேவையை பூர்த்தி செய்வதற்காக பொருட்களை உற்பத்தி செய்வது ஒரு வகை. உற்பத்தி செய்யப்பட்ட அல்லது செய்யப்படவுள்ள பொருட்களுக்கான தேவையை மக்கள் மத்தியில் வலிந்து உருவாக்குவது இன்னொரு வகை. இன்றைய உலகமயமாதல் சூழலில் பொருட்களுக்கான தேவையை மக்கள் மத்தியில் வலிந்து உருவாக்கும் வேலையை அதாவது மக்களை சந்தைப் பொருளாக்கும் வேலையை அனைத்து மேலாதிக்க ஊடகங்களும் செய்து வருகின்றன.

மேற்குலகின் ஜனநாயக அக்கறை, தனிமனித சுதந்திரத்தின் மீதான கரினம், மனித உரிமை செயற்பாட்டை வலியுறுத்துவதிலுள்ள அதீத ஈடுபாடு,

கருத்தியல் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதிலுள்ள ஆர்வம்’ இவை அனைத்தையும் கட்டுடைத்தால், பொருளாதார நலன் தான் இவற்றின் அடிப்படை என்பது தெரியவரும்.

ஊடகவியல் என்பது சந்தைப் பொருளாதார வாழ்வியலுக்காவும், அந்த சந்தைப் பொருளாதாரத்தில் ஆளுமை செலுத்துகின்ற மேலாதிக்க சக்திகளின் அரசியல் நலன்களுக்காகவும் மக்களை தயார் படுத்துகின்ற அவர்களை கருத்தியல் சிறைக்குள் தள்ளுகின்ற வேலையை செய்கின்ற முக்கியமான துறையாக மாறிவிட்டடது.

தங்களது விடுதலைக்கும், உரிமைக்கும், சமத்துவத்திற்கும் போராடுகின்ற மக்களுடைய குரலை திட்டமிட்டு நசுக்குவதிலும் கொச்சைப்படுத்துவதிலும் முன்னணியில் நிற்கும் மேலாதிக்க ஊடகங்களின் நோக்கத்தை இந்தப் பின்னணியில் வைத்துத் தான் பார்க்க வேண்டும்.

தங்களது விடுதலைக்கும், உரிமைக்கும், சமத்துவத்திற்கும் போராடுகின்ற மக்களுடைய குரலாக ஒலிக்கும் ஊடகங்கள் இந்த மேலாதிக்க ஊடகங்களின் கருத்தியல் ஆக்கிரமிப்பை தகர்த்தெறிய வேண்டும்.

தங்களுடைய தளம் எது என்பதையும் அதில் பயணிப்பதற்கான சரியான வழித்தடம் எது என்பதையும் இந்த ஊடகங்கள் சரியாக இனம் காணவேண்டும். அதாவது தங்களுக்கான ஊடகக் கருத்தியல் எது என்பதையும், தனித்துவமான வடிவம் எது என்பதையும் இந்த ஊடகங்கள் திர்மானிக்க வேண்டும்.

மாறாக இந்த மேலாதிக்க ஊடகங்களின் வழிமுறைகளும் கருத்தியல் தளமும் தான் சிறந்தது உச்சமானது என்று நினைத்தால் இவை அவற்றின் ஊது குழல்களாகவும், தரகர்களாகவும் தான் இருக்க முடியுமே அன்றி மக்களுக்கான உண்மையான ஊடகங்களாக இருக்க முடியாது.

தமிழ் தளத்தில் ஊடகவியல்

ஊடகவியல் என்றதும் அது தமிழில் இல்லாத ஒரு துறை. தமிழர்களுக்கு அது புதியது. ‘ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட-உருவாக்கப்பட்ட ஒரு நவீன துறை’ என்ற எண்ணம் நம்மவர்கள் பலரிடம் இருக்கிறது.

அது இதழியலாக இருந்தாலும் இலத்திரனியல் சார்ந்த ஒலி ஒளி வடிவங்களாக இருந்தாலும் அதற்கு மேற்குலகத்தினரே சொந்தக்காரர்கள் என்றும் அவர்கள் உருவாக்கிய வழி முறைகளே சிறந்தது என்றும் அதை நாம் அப்படியே பின்பற்றுவது தான் நம்முடைய ஊடகத்துறையை வளர்பதற்கு சிறந்த வழி என்றும் கருதுகின்ற நிலைப்பாடுதான் இன்னும் நம்மிடையே இருக்கிறது.

இன்றும் கூட தமிழ் சமூகத்திலுள்ள அறிவு சார்ந்த பிரிவினரிடையே ஐரோப்பிய ஆங்கில வானொலிகளும் தெலைக்காட்சிகளும் சொல்வது தான் செய்தி என்றும் அவற்றில் ஒரு செய்தி சொல்லப்பட்டால் அது உண்மை என்றும் கண்மூடித்தனமாக நம்புகிற போக்கு எம்மிடையே காணப்படுகிறது.

இந்த வானொலிகளும் தொலைக்காட்சிகளும் செய்தியை சொல்லுகின்ற முறைதான் ஊடகத்துறையின் உச்சம் என்றும் தாங்களும் நம்பி மற்றவர்களையும் நம்பச் சொல்கின்ற போக்குத் தான் இன்னமும் நம்மவர்களிடத்திலே இருக்கிறது.

இதழியல், சினிமா, சின்னத்திரையில் கூட மேற்குலக முன்மாதிரியை அச்சொட்டாக பின்பற்றுவதன் மூலம் தரமான சிறந்த படைப்புக்களை தர முடியும் என்று தான் இன்றுவரை பலர் நம்புகிறார்கள்.

இந்த காலணித்துவ அடிமை மனோபாவமும் அடிமைச் சிந்தனையும் தான் தமிழ் தேசிய ஊடகக் கருத்தியல் ஒன்று இதுவரை உருவாகமல் போனதற்கும் தமிழ் ஊடகத்துறை தனக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தை கட்டமைக்கத் தவறியதற்கும் காரணம் என்பதை நாம் உணரவேண்டு.ம்.

நாம் நாமாக எமது சுயத்தை இழந்துவிடாமல் இருந்துகொண்டு எமது அனுபவங்களின் அடிப்படையில் எங்களுக்கென்று ஒரு தளத்தை உருவாக்கிக் கொண்டு அதன் பின்னர் மற்றவர்களுடைய அனுபவங்களை அதனுடன் இணைப்பதன் மூலமே எங்களுடைய அடையாளத்தை நாங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு எங்களுடைய அனுபங்களை குறைத்து மதிப்பீடு செய்து கொண்டு அடுத்தவர்களுடைய அனுபங்களையும் அடையாளங்களையும் நாம் பின்பற்ற முற்பட்டால் நாம் எமது சுயத்தையும் சொந்த அடையாளத்தையும் தொலைத்து விடுவோம்; என்பதையும் உணர வேண்டும்.

ஊடகவியல் என்பது ஒரு இனத்தின் சமூகத்தின் கருத்தியல் தளத்தில் காத்திரமான- தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கின்ற ஒன்றாகும். இந்தத் தளத்தை ஒரு தேசிய இனம் தனது சுய அடையாளங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பத் தவறுமாக இருந்தால் இந்தத் தளத்துக்குள் ஊடுருவல்களையும், ஆக்கிரமிப்புக்களையும் அனுமதிக்குமாக இருந்தால்

அந்த இனம் படிப்படியாக தனது சுயத்தையும் அடையாளத்தையும் இழக்கும்.

சிறுகச் சிறுகச் கொல்லும் விசத்தைப் போல ஒரு தேசிய இனத்தின் கருத்தியல் தளத்துக்குள் புகுந்துகொள்ளும் ஆக்கிரமிப்புக் கருத்தியலும் படிப்படியாக அந்த இனத்தின் பண்பாட்டுத் தளத்தை சிதைத்து கடைசியில் அந்த இனத்தின் இருப்பையும் அடையாளத்தையும் அழித்துவிடும்.

உலகமயமாதல் சூழலில் மனிதர்களையே சந்தைப் பொருட்களாக மாற்றுவதற்காக தேசங்களினதும் தேசிய இனங்களினதும் வரலாற்றiயும் பண்பாட்டையும் கலை கலாச்சார விழுமியங்களையும்; அழிக்கின்ற, மழுங்கடிக்கின்ற கைங்கரியத்தை செய்வதில் ஊடகவியல் மிக முக்கியமான பங்களிப்பை செய்கின்றது.

ஊடகத்துறை என்பது மக்களுக்கான தகவல்களைச் சொல்கின்ற, அறிவூட்டுகின்ற, மகிழ்வுட்டுகின்ற பணியைச் செய்வதாகச் சொல்லிக் கொண்டாலும் அடிப்படையில் மக்கள் மீது கருத்தை திணிக்கின்ற- சந்தைப் பொருளாதார வலைப்பின்னல்களுக்குள் அவர்களைச் சிக்க வைக்கின்ற பணியைத் தான் பல ஊடகங்கள் குறிப்பாக உலக மேலதிக்க ஊடகங்கள்திட்டமிட்டுச் செய்துவருகின்றன.

உலகில் நிமிடத்துக்கு நிமிடம் , விநாடிக்கு விநாடி எத்தனையோ ஆயிரக்கணக்கான சம்பவங்களும் செயல்களும் நிகழ்ந்தாலும் எவை செய்தியாக்கப்பட வேண்டும், எப்படிப்பட்ட செய்திகளாக அவை ஆக்கப்படவேண்டும், என்ன கருத்துக்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதை விரல்விட்டு எண்ணக் கூடிய இந்த மேலாதிக்க ஊடகங்கள் தான் தீர்மானிக்கின்றன.

அரசபயங்கரவாதச் செயற்பாடுகளை ஜனநாயகச் செயற்பாடுகளாகவும், தேசிய விடுதலைப்போராட்டங்களை பயங்கரவாதச் செயற்பாடுகளாகவும் இந்த மேலாதிக்க ஊடகங்கள் கட்டமைத்துக் கதை சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஊடகங்களையும் இவற்றின் ஊடகக் கோட்பாடுகளையும் தமிழ் தேசிய இனம் தன்னுடைய ஊடகக் கருத்தியலை திர்மானிப்பதற்கான வழிகாட்டியாகவும் முன் மாதிரியாகவும் கொள்ள வேண்டுமா? என்ற கேள்வி முக்கியமாக கேட்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

திங்கள், 2 பிப்ரவரி, 2009

இந்திய ஆளும் வர்கத்தின் முகத்திரையை கிழிப்பது உலகத் தமிழர்களின் வரலாற்றுக் கடமை.

சிங்களப் பேரினவாதம் முன்பு இருந்ததை விட அதி உச்சவெறியுடன் ஆர்பாரித்து எழுந்து ஈழத்தமிழினத்தை அழிப்பதற்கு இந்திய ஆளும் வாக்கமே முழக் காரணம் என்பதில் அநேகமாக யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
சிறீலங்கா மற்றும் இந்தியப் படைகளின் கூட்டணிப் படையெடுப்பில் இருந்து ஈழத் தமிழ் மக்களை காப்பாற்றுவற்கு இன்று உலகத் தமிழ் மக்கள் ஒரே நேர் கோட்டில் ஆர்பரித்து எழுந்திருப்பது ஆறதல் தரும் மாற்றமேயாகும்.
இன்றைய உலகமயமாதல் சூழலில் சந்தைப் பொருளாதார நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயற்படும் மேற்குலகமும் அதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஐநா சபை முதலான இன்னோரன்ன பிற அமைப்புக்களும் உடனடியாக தலையிட்டு தமிழனப் படுகொலையை தடுத்து நிறுத்தி நமது உறவுகளை காப்பாற்றும் என்று நாம் எதிர்பார்க்கமுடியாது.
ஆனால் உலகத் தமிழர்களுடைய இந்தப்பேரெழுச்சியையும் ஒன்றுமையும் நாம் துறை சார் ரீதியாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவதன் மூலமே மேற்குலகை எம்மை நோக்கி திருப்ப முடியும்.
இந்தியாவின் சந்தைப் பொருளாதர நலனை தாண்டி இந்திய ஆளும் வர்க்கத்தின் நலனுக்கு விரேதமாக மேற்குலகம் மனிதாபிமான அடிப்படையில் எமக்கு உதவுதற்கு உடனடியாக ஓடோடிவரும் என்று நாம் கனவுலகில் மிதக்கக் கூடாது.எங்களுடைய பலமும் அந்தப்பலத்ததை தக்க வைப்பக்காக நாங்கள் செய்யக் கூடிய உயாந்த பட்ச அர்ப்பணிப்பும் தான் தாயகத்திலே அல்லலுறும் உறவுகளை காபபாற்றும் நாம் மறந்துவிடக் கூடாது.
இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் உலகத் தமிழர்களுடைய முக்கியமான பணி இந்திய ஆளும் வர்க்கத்தை வர்க்கத்தை உலகமக்கள் மத்தியல் அம்பலப் படுத்துவதும் அதனுடைய அகிம்சா முகமூடியை கிழித் தெறிவதுமாக இருக்க வேண்டும்.
இன்று உலகத் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் பேரெழுச்சியையும் ஒன்றுமையையும் இந்தியாவுக்கு எதிரானதாக காட்டுவதற்கு சிலர் முயல்கின்றனர்.இது கூட இந்திய ஆளும் வர்க்கத்தின் சதிப் பரப்புரையின் ஓரங்கமாகும்.
உலகத்தமிழர்களோ ஈழத் தமிழர்களோ இந்தியா என்ற நாட்டுக்கோ இந்திய மக்களுக்கோ எதிரானவர்களல்ல. இந்திய ஆளும் வர்க்கமே உலகத் தமிழர்களின் எதிரிகள் என்பதை நாம் தெழிவாக வரையறுத்துக்கொள்ள வேண்டும்.இன்றைக்கு உலக மக்கள் மத்தியில் இந்தியா பற்றிய புனித பிம்பமாக மகாத்மா காந்தியும் அவருடைய அறவழிப்போராட்டமும் தான் கற்பிதம் செய்யப்பட்டிருக்கிறது.இன்றைக்கு இந்திய ஆளும் வர்க்கமாக இருக்கும் காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தியால் உருவாக்கப்பட்ட கட்சி என்றும் இந்தியாவுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த கட்சி என்றும் அகிம்மை மக்கள் நலன் மற்றும் விடுதலை உணர்வுகளை மதிக்கும் பண்பு அந்தக் கட்சிக்கு இருக்கிறது என்றும் உலக மக்கள் மத்தியில் ஒரு மாயை கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த மாயையை கலைத்து இந்திய ஆளும் வர்க்த்தின் அதிகார வெறியையும் மக்கள் விரோதப் போக்கையும் உலக மக்களுக்கு அம்பலப்படுத்துவது தான் நமது உடனடிப் பணியாகும்.
அதற்கு தியாகி திலீபன் அன்னை பூபதி ஆகியோருடைய வரலாற்றையும் இந்திய அமைதிப்படை ஈழத்தில் நிகழ்த்திய படுகொலைகளையும் உலக மக்கள் அறியும் படி அவர்களுக்கு புரியும் மொழியில் எடுத்துச் சொல்லவேண்டும்.
இன்று உலக மக்களுக்கு சுலபமாக புரியும் மொழி என்கிற போது அது சினிமா மொழிதான்.எனது உலகத் தமிழர்கள் குறிப்பாக திரைப்படைத்துறை சார்ந்த தமிழர்கள் இனைந்து சர்வதேச தரத்துக்கு எந்தவித புனைவும் இல்லாமல் இந்த மூன்று விடயங்களையும் தனித்தனி பதிவுகளாக்கி படங்களாக்கி உலகப் பெரு மொழிகளில் வெளியிடவேண்டும்
இந்தியா தழுவிய அளவில் செயற்படும் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி போன்ற அமைப்புகள் இந்திய ஆளும் வர்க்கம் ஈழத் தமிழர்களுக்கு செய்த செய்து கொண்டிருக்கிற துரோகத்தை ஏனைய மாநில மக்களுக்கு தெளிவு படுத்தி அவர்களையும் ஈழத் தமிழப் படுகொலைக்கு எதிரான கூட்டணியில் ஒருங்கிணைக்க வேண்டும்.
அடுத்து ராஜிவ் காந்தி கொலை விடயத்தில் இந்திய ஆளும் வாக்கம் தனது பிராந்திய நலன்களுக்காக உண்மைகளை திட்டமிட்டு மறைத்த விடயத்தையும் இந்தக் கொலை தொடர்பான நியாயமான சந்தேகங்களுக்கு விட தேட முற்படாமல் விடுதலைப்புலிகளை குற்றவாளிகள் ஆக்க வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே செயற்பட்டதையும் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த போது சக்திவாய்ந்த நபராக இருந்த கருணாவை சிறிலங்கா அரசால் விலைக்கு வாங்க முடியும் என்றால் தமிழீழ விடுதலை போராட்டத்தை ஒழித்துக் கட்டுவதற்காக அதற்கு எதிரான சக்திகள் ஏன் ராஜிவ் கொலையாளிகளை பயன்படுத்தியிருக்க முடியாது என்ற சந்தேகம் இந்திய மற்றும் உலக மக்கள் மத்தியில் எழும்பும் படி செய்ய வேண்டும்.உலகத் தமிழர்கள் மேற்குலக பெருந் தெருக்களில் ஆர்பாட்டங்கள் பேரணிகளை செய்துவரும் அதே நேரத்தில் மேற்குலக மக்களை எம்பக்கம் ஈhப்;பதற்கான வேலைகளையும் நாங்கள் துறைசார் ரீதியில்; மேற்கொள்ள வேண்டும்.