வெள்ளி, 3 ஜூன், 2011

கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து- மேலவை இல்லை சூரியஒளிமின்சாரத்தில் கவனம்;கவர்னர் உரை விவரம்

தமிழக சட்டசபை முதல் கூட்டம் இன்று கவர்னர் உரையுடன் துவங்கியது. இன்றைய உரையில் தமிழகத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடந்த இந்த கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வகையில் பல்வேறு அம்சங்கள் அடங்கி இருந்தது. அதே நேரத்தில் தி.மு.க., கொண்டுவந்த திட்டங்கள் மாற்றம் கொண்டு வருவதும் சிலவற்றை ரத்து செய்வதும் , தொழில்துறை ஊக்கம் அளிப்பதும் என பல்வேறு திட்டங்கள் இருந்தன.


கூட்டம் துவங்கியதும் புதிய எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் ஜெ., தமிழக மக்கள் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தனது உரையை துவக்கினார்.


இலவச அரிசி வழங்கும் திட்டம், கேபிள் டி.வி., அரசுடைமையாக்குவது தொடர்பாக உடனடி நடவடிக்கை, கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து , மாணவர்களுக்கு இலவச லேப்டாப், மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, வரும் செப் 15 ம் தேதி முதல் அமல்படுத்தப்படும், சூரியஒளி மூலம் மின்சாரத்திற்கு முக்கியத்துவம், மேலவை ‌கொண்டுவரப்படாது, ஓமந்தூரார் தோட்டத்தில் தி.மு.க., அரசின் காலத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமை செயலக பணிகள் நிறுத்தி வைப்பது, இது தொடர்பான கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி உள்ளிட்டவை கவர்னர் உரையில் முக்கியஅம்சங்கள் ஆகும்.



* சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் மோனா ரயில் திட்டமாக மாற்றப்படும்.


* ஏனைய பகுதிகளில் உள்ள சென்னை அண்ணா பல்கலை., கலைக்கப்பட்டு, சென்னையில் மட்டும், அண்ணா பல்கலை., இணைந்து ஒரே மையமாக செயல்பபடும்.


* மக்கள் நலத்திட்டம் அங்க அடையாளத்துடன் கூடிய புதிய திட்டம்


* முதியோர் உதவித்தொகை வங்கி மூலம் வழங்க ஏற்பாடு.


* பொது விநியோக திட்டத்தை வலுப்படுத்த கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை


*ரூ.50 கோடி செலவில் விலைக்கட்டுப்பாடு நிதியம்


*உற்பத்தி குறைவாக உள்ள அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி அதிகரிக்க திட்டம்


* மீனவர்கள் நலன் பேணிக்காக்கப்படும்


* வேலைவாய்ப்பை பெருக்கிட ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டம்


*வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல திட்டம்


*முதன்மை துறையான வேளாண்மை ஒட்டுமொத்த வளர்ச்சி குறைந்துள்ளது. இதனை சீர்செய்ய சிறப்பு கவனம்


*கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து செய்யப்படும்.இது மக்களின் தேவையை நிறைவேற்றும்படியா முழுமையா இல்லை எனவே அனைவருக்கும் தரமான மருத்துவம் பெற புதிய மருத்துவ திட்டம் கொண்டுவரப்படும்.


*சமச்சீர் கல்வி தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர்குழு.சமச்சீர் கல்வி என்ற பெயரில் மாணவர்கள் எதிர்காலம் பாழாவதை இந்த அரசு விரும்பவில்லை. தற்போதுள்ள புது பாடத்திட்டத்தில் தரமானதாக இல்லை.


*விவசாயிகள் நலன் கருத்தில் கொண்டு பண்ணைசார் சிறப்பு திட்டம்


*துல்லிய பண்ணை முறை பெரிய அளவில் கொண்டு வரப்படும் அதிகவருவாய் தரும் பயிர்கள் பயிரிட தேவையான உதவிகள் செய்யப்படும்


* வேளாண்மையில் நீடித்த வளர்ச்சிக்கு பாசன நதி முக்கியம், நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.


* மேட்டூரில் முன்கூட்டிய தண்ணீர் திறக்க உத்தரவு


* வறுமையை ஒழிக்க பல்வேறு திட்டம் ஒருங்கிணைத்து ஏழை குடும்ப நல திட்டம் கண்காணிக்கப்படும்


*வரீ சீர்திருத்தம், விற்பனை வரி, சரக்கு, சேவைவரியை பின்பற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்.


*முல்லை பெரியாறு உள்ளிட்ட நதி நீர் பிரச்னையில் சட்டப்படியான நடவடிக்கை எதிர்கொள்வது


*தொழில் துறையில் மோட்டார்வாகனதுறை தகவல் தொழில் நுட்பம், கணனி துறையில் பெரும் தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.


* நானோ தொழில் நுட்பம் ஊக்குவிக்கப்படும்


*தகவல் தொழில்நுட்பம் தொழில்பூங்கா மூலம் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்


*மின்சாரம், சாலை வசதி குறைவு போக்கிட திட்டம் , மாநில அரசின் நிதியுடன் தனியார் தொழில் நிறுவனங்களுடன்


* மின் பற்றாக்குறை காரணமாக கடந்த ஆட்சியில் தொழில் துறையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.பாதிப்பு உபரி மின்சாரம் உள்ள மாநிலமாக உருவாக்கப்படும், தொழில்துறைக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படும். மின் வழங்கிகள் மூலம் மின்சாரம், காற்றாலை மின் உற்பத்தி முழுமையாக செயல்படுத்துதல், மரபுசாரா எரிசக்தி மூலம் மின் உற்பத்திக்கு முழுக்கவனம்.


* தொடர்பு துறைகள் பழைய செயல்பட்டு வருகிறது. அமைச்சர் ஒருபுறமும், செயலகம் ஒரு புறமும் இருப்பது நல்லதல்ல, கூடுதலான செலவு, தரமற்ற கட்டுமானம் இவைகள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிட்டி.


*சட்ட ஒழுங்கு பேணிகாத்திட முழு நடவடிக்கை எடுக்கப்படும், ஜெ., ஆட்சி பொறுப்பேற்ற கடந்த காலத்தில் அமைதிப்பூங்காவாக நடத்தியுள்ளார். போலீஸ் துறை நவீனப்படுத்தப்படும், குற்றவாளிகள், கண்காணிக்கும் மின் திட்டம் விரைவில் செயலாற்றப்படும்.


*சென்னை நகரில் ஆற்றோரம் வாழும் நபர்களுக்கு பாதுகாப்பான வீடு வழங்கப்படும்.


* கடற்கரையோரங்களில் சிறு துறைமுகங்கள் தனியார் பங்கேற்புடன் உருவாக்கப்படும்


*பெண்கள் நலன் நிறைவேற்றுவது இந்த அரசின் முக்கிய தலையாய பணி ஆகும். சுய உதவிக்குழு மூலம் தொடர்ந்து வங்கிகக்கடன் வழங்கப்படும்


* மகளிருக்கு மின்விசிறி, கிரைண்டர் ,மிக்ஸி, செப் 15 ம் தேதி முதல் வழங்கப்படும்


* சூரிய எரிசக்தி ஆரம்பகட்ட செலவு அதிகமாக இருந்தாலும் , தெருவிளக்கு, மற்றும் சமுதாய மாற்றங்களுக்கு தேவையான ஒன்றாக இந்த அரசு கருதுகிறது. எனவே இது ஊக்குவிக்கப்படும்.


*சுற்றுச்சூழல் பாதுகாத்திட சிறப்பு முயற்சிகள் , மக்கிப்போகாத பிளாஸ்டிக் தொடர்பான சிறப்பு கவனம் எழுப்பிட புதிய திட்டம், பாலித்தின் பைகளுக்கு தடை


*தரமான கல்வி இலவசமாக வழங்கப்படும், பள்ளிச்சேர்ப்பு அதிகரிக்க நடவடிக்கை.


*மேலவை தேவையில்லை என முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., முடிவு எடுத்திருந்ததால் அதன் அடிப்படையில் மீண்டும் மேலவை ஏற்படுத்த மாட்டாது.


* வீட்டு வசதி திட்டத்தினால் பயனாளிகளுக்கு உரிய பயன் கிடைக்காததாலும், அரசு வழங்கிய நிதிஉதவி மிக குறைவு என்பதாலும், அந்த திட்டம் கைவிடப்ட்டு, அரசே வீடுகள் கட்டத்திர ஏற்பாடுகள் செய்யப்படும்.


மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி இணைக்கும் தனி இயக்குனரகம் உருவாக்கப்படும்.


அரசு ஊழியர் பெண்களுக்கான பேறுகால விடுப்பு 6 மாதமாக உயர்த்தப்படும்.



முறையில்லா விருந்தாக இருக்கிறது; கவர்னர் உரை குறித்து ஸ்டாலின் விமர்சனம்: இன்றைய கவர்னர் தாக்கல் செய்த உரை காய்கறி மட்டும் உள்ளதாகவும், முழு விருந்தாக இல்லை என்றும் விமர்சித்தார். தி.மு.க., சட்டசபை கட்சி தலைவர் மு.க., ஸ்டாலின் சபைக்கு வெளியே நிருபர்களிடம் பேசுகையில்; ஒரு விருந்து என்றால் சாதம் முதல் காய்கறிவகைகள் என இருக்கும். ஆனால் கவர்னர் உரையில் சாம்பார், ரசம் இல்லை, வெறும் காய்கறிவகைகள் மட்டும் உள்ளது. தி.மு.க., கொண்டு வந்த திட்டங்கள் ரத்து செய்ப்பட்டுள்ளது குறித்து கேட்கையில் , அதே திட்டத்தை பெயரை மாற்றி செயல்படுத்துகின்றனர். ரத்து செய்யப்படுவது வளர்ச்சிப்பாதையில் நேர்கோட்டில் செல்வதற்கு எதிராக உள்ளது என்றார். புதிய சட்டசபை வளாக பணிகள் குறித்து ஆராய நீதிபதி கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு இது போன்று எத்தனையே கமிட்டிகளை பார்த்திருக்கிறோம் எதையும் சந்திப்போம் என்றார்.


மீண்டும் சட்டசபை 6ம் தேதி கூடுகிறது: கவர்னர் உரை முடிந்ததும் சபாநாயகர் தலைமையில் கூடி சட்டசபை அலுவல் குழு ஆய்வ செய்தது. பின்னர் நிருபர்களிடம் தெரிவித்த சபாநாயகர் வரும் 6ம் தேதி சட்டசபை கூடுகிறது. அந்நாளில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒத்தி வைக்கப்படும், 7, 8, 9 தேதிகளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிப்பது, மற்றும் விவாதம் நடக்கும், 10 ம் தேதி பதிலுரையுடன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும்.


http://www.dinamalar.com

சென்னையில் லேசான நிலநடுக்கம்-சில விநாடிகள் உணர்ந்த மக்கள்

சென்னை நகரின் சில பகுதிகளில் இன்று மக்கள் லேசான நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர்.

சென்னையில் இன்று சில பகுதிகளில் பிற்பகல்வாக்கில் லேசான நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்துள்ளனர்.

தி.நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சில விநாடிகளே அதிர்வு இருந்ததாக நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர். மிக மிகச் சிறிய அளவில் இருந்ததால் மக்கள் பீதி அடையவில்லை. அதேபோல பொருட் சேதம் ஏற்பட்டதாகவும் தகவல் இல்லை.

இளைஞர்களின் செக்ஸ் உணர்வை பாதிக்கும் தூக்கமின்மை!

இளைஞர் ஒருவர், நாளொன்றுக்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் அவரது பாலியல் உணர்வை தூண்டும் பிரதான ஹார்மோனின் அளவு குறைந்துவிடும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அதுவும் நாளொன்றுக்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும்போது, ஒரு வார காலத்திற்குள்ளாகவே இந்த பாதிப்பை உணரலாம் என்கிறது அந்த ஆய்வு.

ஆண்களின் பாலியல் உணர்வுக்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது ஹார்மோன்கள்தான். இந்த ஹார்மோன் குறிப்பிட்ட அளவு இருந்தால்தான் பாலியல் உணர்வு தூண்டப்படும்.

அவ்வாறு பாலியல் உணர்வை தூண்டுவதற்கு ஆதாரமாக விளங்கும் ஹார்மோன் அளவை 'டெஸ்ட்டாஸ்ட்டுரோன்' என்று அழைக்கிறார்கள்.

இந்த டெஸ்டோஸ்டெரோன் அளவுக்கும்,சக்தி குறைவு, விறைப்பு தன்மை குறைதல், கவனக்குறைவு மற்றும் சோர்வடைதல் ஆகியவற்றுக்குமிடையே தொடர்பு இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

மேலும் உடல் பலம், தசைகள் மற்றும் எலும்பு வலுவடைதல் ஆகியவற்றிலும் இந்த 'டெஸ்ட்டாஸ்ட்டுரோன்' முக்கிய பங்காற்றுவதாக இந்த ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற ஈவ் வான் என்ற மருத்துவ துறை பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

இரகசியமாக புதுடெல்லி அனுப்பப்பட்ட பசில் – போன வேகத்திலேயே கொழும்பு திரும்பினார்

சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச புதுடெல்லிக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் ஆதரவைப் பெறும் நோக்கில் சிறிலங்கா அதிபரால் அமைச்சர் பசில் ராஜபக்ச, கடந்த 26ம் நாள் காலை புதுடெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் இந்தியா அவரை கண்டுகொள்ளாமல் அன்றையதினமே திருப்பி அனுப்பி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளால் சிறிலங்கா அரசு அனைத்துலக அரங்கில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இந்தநிலையைச் சமாளிக்க இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் புதுடெல்லிக்கு மேற்கொண்ட பயணமும் தோல்வியிலேயே முடிந்தது.

இதையடுத்து இந்தியா கொடுத்துள்ள அழுத்தங்களை குறைத்து , நெகிழ்வுப்போக்கை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளும் நோக்கில், தனது சகோதரரான அமைச்சர் பசில் ராஜபக்சவை, சிறிலங்கா அதிபர் இரகசியமாக புதுடெல்லிக்கு அனுப்பி வைத்திருந்தார்.

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக பசில் ராஜபக்ச புதுடெல்லி சென்றிருந்தார்.

அங்கு அவருக்கு அங்கு பெரிய வரவேற்பு ஏதும் அளிக்கப்படாததுடன், இந்திய உயர் தலைவர்கள் எவரையும் சந்திப்பதற்கு வாய்ப்பும் வழங்கப்படவில்லை.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மட்டுமே பசில் ராஜபக்சவைச் சந்தித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதன்போது, சிறிலங்கா வெளிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடனான பேச்சுக்களில் இணக்கம் காணப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் காணப்படும் முன்னேற்றங்களை அடிப்படையாகக் கொண்டே, இந்தியாவின் எதிர்கால நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என்று பசில் ராஜபக்சவிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை. இந்தியாவின் உயர்மட்ட அரசியல் தலைவர்களைச் சந்திக்க அமைச்சர் பசில் ராஜபக்ச கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட போதும் அவை வெற்றியளிக்கவில்லை.

இதனால், அவர் கடந்த 26ம் நாள் மாலையே கொழும்பு திரும்பியுள்ளார்.

கடந்த 26ம் நாள் காலையில் இந்தியா சென்ற பசில் ராஜபக்ச, தேசிய சிவ்சங்கர் மேனனைச் சந்தித்து விட்டு அன்று மாலையே கொழும்பு திரும்பியதை, சிறிலங்காவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியதாகவும் உதயன் நாளிதழ் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கோத்தாபயவுக்கு ஜேர்மனி தூதுவர் கடுந்தொனியில் எச்சரிக்கை – வெடிக்கிறது மற்றொரு இராஜதந்திர மோதல்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக, சிறிலங்காவுக்கான ஜேர்மனி தூதுவர் ஜீன்ஸ் புளொட்னர் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு, எச்சரிக்கை விடுக்கும் வகையில்- கடும் தொனியிலான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இதன் பிரதி ஒன்றை சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில், மிகையான பலத்தை தொழிலாளர்கள் மீது பிரயோகிக்கக் கூடாது என்று பாதுகாப்புச் செயலரை எச்சரித்துள்ள ஜேர்மனி தூதுவர் ஜீன்ஸ் புளொட்னர், சிறிலங்கா காவல்துறையினர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் எல்லைமீறி நடந்து கொண்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இது சிறிலங்காவில் ஜேர்மனியின் தற்போதைய மற்றும் எதிர்கால முதலீடுகளில் எதிர்மறையான பாரிய தாக்கத்தை ஏற்படக் கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள பல ஜேர்மனி நிறுவனங்கள் சிறிலங்கா காவல்துறையினரின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு அதிரடிப் படையினர் கூட ஜேர்மனி நாட்டு நிறுவனங்களின் கட்டங்களுக்குள் புகுந்து தொழிலாளர்களைத் தாக்கியதாகவும், அவர் தனது கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் உடனடியாக விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

ஆனால் இதுபற்றிக் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அரசின் மூத்த அதிகாரி ஒருவர், ஜேர்மனி தூதுவர் புளொட்னர், இந்த விவகாரம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கே கடிதம் எழுதியிருக்க வேண்டும் என்றும், பாதுகாப்புச் செயலருக்கு அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஜேர்மனித் தூதுவர் விடுத்துள்ள இந்த எச்சரிக்கை கோத்தாபய ராஜபக்சவை பெரிதும் எரிச்சலடைய வைத்துள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, வழக்கத்துக்கு மாறாக- ஜேர்மனித் தூதுவர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடிதம், கட்டுநாயக்க தாக்குதல்களால் சிறிலங்காவில் முதலீடு செய்துள்ள நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்துவதாக கொழும்பு இராஜதந்திரி ஒருவர் கூறியுள்ளார்.

சீமான் மீது கற்பழிப்பு உள்பட 6 பிரிவுகளில் வழக்கு-கைதாவாரா?

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது கற்பழிப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் கைதாவாரா என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை விஜயலட்சுமி இயக்குநர் சீமான் மீது திடீரென பரபரப்புப் புகாரைக் கொடுத்துள்ளார். அதில் தன்னைக் காதலித்ததாகவும், ஆனால் திருமணம் செய்யாமல் ஏமாற்ற முயல்வதாகவும் சீமான் மீது புகார் கூறியுள்ளார் விஜயலட்சுமி.

இதையடுத்து வளசரவாக்கம் போலீஸார் நேற்று விஜயலட்சுமி வீட்டுக்குச் சென்று அவரிடமும், அவரது குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தினர். கிட்டத்தட்ட 2 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது.

அப்போது, வாழ்த்துகள் படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் தனக்கும் சீமானுக்கும் இடையே நட்பு ஏற்பட்டதாகவும், இது பின்னர் காதலாக மாறியதாகவும் கூறினார் விஜயலட்சுமி.

மேலும், தொலைபேசி மூலமும், ஷூட்டிங் ஸ்பாட்டுகளிலும் தாங்கள் பேசி காதல் வளர்த்ததாகவும் கூறினார் விஜயலட்சுமி. தாங்கள் பழகியதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளதாக கூறிய விஜயலட்சுமி அதை போலீஸாரிடம் கொடுக்கவில்லை. மாறாக, உரிய நேரத்தில் தருவேன் என்று கூறினார்.

இதைப் பதிவு செய்து கொண்ட போலீஸார் தற்போது விஜயலட்சுமியின் புகாரின் அடிப்படையில் சீமான் மீது கற்பழிப்பு, பெண்கள் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் சீமானைக் கைது செய்யவும் போலீஸார் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கனிமொழி வழக்கில் இன்று தீர்ப்பு இல்லை?: 1 மாத கோர்ட் விடுமுறையும் துவங்குகிறது!

2ஜி வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், எம்பியுமான கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகாது என்று தெரிகிறது.

திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை முடிந்துவிட்டது. தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகலாம் என்று கூறப்பட்டது. ஆனால், டெல்லி உயர் நீதிமன்றத்தின் வெள்ளிக்கிழமைக்கான விசாரணைப் பட்டியலில் கனிமொழியின் வழக்கு இடம் பெறவில்லை.

மேலும் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறைக் காலம் தொடங்கவுள்ளதால் தீர்ப்பு இன்னும் ஒரு மாதம் வரை தீர்ப்பு தள்ளிப் போகலாம் என்றும் தெரிகிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தீர்ப்பை எதி்ர் நோக்கியவாறு மேலும் ஒரு மாதம் கனிமொழி சிறையில் இருக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

கைதிகளுக்கு உதவும் கனிமொழி!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி,டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், எம்.பி.யுமான கனிமொழி, சிறையில் மற்றவர்களுக்கு உதவுவதில் அதிக அளவு முனைப்பு காட்டி சிறை வாழ்க்கை மனதை பாதிக்காத வகையில் நடந்துகொள்வதாக செய்தி வெளியாகி உள்ளது.

திகார் சிறையில் 6 ஆம் எண்ணில், 475 பெண் கைதிகளுடன் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள கனிமொழி,தொடர்ந்து மன உறுதியுடன் காணப்படுவதாகவும், சிறையில் சக கைதிகளுக்கு உதவுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம், குறுகிய காலத்திலேயே அவர் அங்கு புகழ்பெற்றுவிட்டதாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறையில் மற்றவர்களுக்கு உதவுவது மற்றும் சிறைக்கைதிகளின் பிரச்னைகளை கேட்டறிந்து அவற்றை சிறை நிர்வாகத்திடம் கொண்டு செல்வது போன்ற நடவடிக்கைகள் மூலம், சிறைவாழ்க்கை மனதளவில் பாதிக்காத வகையில் இருக்க கனிமொழி முயற்சிக்கிறார்.

சமீபத்தில் சிறை எண் 6-ல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.சக கைதிகள் இது குறித்து கனிமொழியிடம் தெரியப்படுத்தினர்.அவர் அப்பிரச்சனையை சிறை நிர்வாகத்திடம் கொண்டுசென்றார்.

இதனையடுத்து உடனடியாக அந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறையில் கனிமொழியைக் காண கைதிகள் காலையிலேயே கூடி விடுகின்றனர். அங்கிருந்து அவர் தினமும் நீதிமன்றத்துக்குச் செல்லும்போது வணக்கம் தெரிவித்து அவரை வழி அனுப்பி வைக்கின்றனர்.

மாலையில் சிறையில் இருந்து அவர் திரும்பும்போது அறை வாசலில் நின்று அவரை வரவேற்கின்றனர்.

கனிமொழி அவரது அறையில் படிப்பதிலும், டிவி பார்ப்பதிலும் நேரத்தை செலவிடுகிறார்.

வீட்டில் கொண்டுவரப்பட்ட உணவை சாப்பிட கனிமொழிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும்,அவ்வப்போது சிறை உணவையும் உண்டு ருசிபார்க்கிறார்.

கொசுவர்த்தி வைத்துக்கொள்ள அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

வியாழன், 2 ஜூன், 2011

காதலித்து ஏமாற்றியதாக சீமான் மீது பரபரப்பு புகார்!

திருமணம் செய்வதாக கூறி நெருங்கி பழகி விட்டு, இப்போது திருமணத்துக்கு மறுப்பதாக டைரக்டரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் செய்துள்ளார். பிரண்ட்ஸ், கலகலப்பு, ராமச்சந்திரா, சூரி, எஸ்.மேடம், வாழ்த்துக்கள், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை விஜயலட்சுமி. ஏராளமான கன்னட படங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார். டைரக்டர் சீமான் இயக்கத்தில் உருவான வாழ்த்துக்கள் படத்தில் நடித்தபோது டைரக்டர் - நடிகை என்ற முறையில் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். 4 பக்க புகார் மனுவில் சீமானுக்கும், தனக்கும் இருந்த உறவு பற்றி விரிவாக எழுதியிருக்கும் விஜயலட்சுமி, அதில் நானும், டைரக்டர் சீமானும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். இதுபற்றி விசாரணை நடத்த சென்னை வளசரவாக்கம் போலீசுக்கு உத்திருமணம் செய்வதாக கூறி நெருங்கி பழகி விட்டு, இப்போது திருமணத்துக்கு மறுப்பதாக டைரக்டரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் செய்துள்ளார். பிரண்ட்ஸ், கலகலப்பு, ராமச்சந்திரா, சூரி, எஸ்.மேடம், வாழ்த்துக்கள், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை விஜயலட்சுமி. ஏராளமான கன்னட படங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார். டைரக்டர் சீமான் இயக்கத்தில் உருவான வாழ்த்துக்கள் படத்தில் நடித்தபோது டைரக்டர் - நடிகை என்ற முறையில் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். 4 பக்க புகார் மனுவில் சீமானுக்கும், தனக்கும் இருந்த உறவு பற்றி விரிவாக எழுதியிருக்கும் விஜயலட்சுமி, அதில் நானும், டைரக்டர் சீமானும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். இதுபற்றி விசாரணை நடத்த சென்னை வளசரவாக்கம் போலீசுக்கு திருமணம் செய்வதாக கூறி நெருங்கி பழகி விட்டு, இப்போது திருமணத்துக்கு மறுப்பதாக டைரக்டரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் செய்துள்ளார். பிரண்ட்ஸ், கலகலப்பு, ராமச்சந்திரா, சூரி, எஸ்.மேடம், வாழ்த்துக்கள், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை விஜயலட்சுமி. ஏராளமான கன்னட படங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார். டைரக்டர் சீமான் இயக்கத்தில் உருவான வாழ்த்துக்கள் படத்தில் நடித்தபோது டைரக்டர் - நடிகை என்ற முறையில் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். 4 பக்க புகார் மனுவில் சீமானுக்கும், தனக்கும் இருந்த உறவு பற்றி விரிவாக எழுதியிருக்கும் விஜயலட்சுமி, அதில் நானும், டைரக்டர் சீமானும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை
எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். இதுபற்றி விசாரணை நடத்த சென்னை வளசரவாக்கம் போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் இந்த புகாரை டைரக்டர் சீமான் மறுத்துள்ளார். சீமான் சார்பில் அவரது வக்கீல் சந்திரசேகரன் கூறுகையில், நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்தது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. விஜயலட்சுமி, அவரது அக்காள் விவாகரத்து வழக்கு தொடர்பாக உதவி கேட்டு, சீமானை ஒருமுறை சந்தித்து பேசினார். அது தொடர்பாக உதவி செய்யும்படி, சீமான் என்னிடம் கூறினார். அந்த ஒருமுறை மட்டுமே விஜயலட்சுமி சீமானை சந்தித்து பேசினார். அதன்பிறகு, அவர் சீமானை பார்க்கவே இல்லை. சீமான் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். அவரது பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். இதை கெடுக்கவும், அரசியலில் சீமானுக்கு உள்ள புகழை அழிக்கவும், திட்டமிட்டு சதி செய்து, இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. யாரோ விஜயலட்சுமியை தூண்டி விட்டுள்ளனர். புகார் கொடுத்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை சட்டப்பூர்வமாக சந்திப்போம், என்றார்.உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் இந்த புகாரை டைரக்டர் சீமான் மறுத்துள்ளார். சீமான் சார்பில் அவரது வக்கீல் சந்திரசேகரன் கூறுகையில், நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்தது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. விஜயலட்சுமி, அவரது அக்காள் விவாகரத்து வழக்கு தொடர்பாக உதவி கேட்டு, சீமானை ஒருமுறை சந்தித்து பேசினார். அது தொடர்பாக உதவி செய்யும்படி, சீமான் என்னிடம் கூறினார். அந்த ஒருமுறை மட்டுமே விஜயலட்சுமி சீமானை சந்தித்து பேசினார். அதன்பிறகு, அவர் சீமானை பார்க்கவே இல்லை. சீமான் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். அவரது பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். இதை கெடுக்கவும், அரசியலில் சீமானுக்கு உள்ள புகழை அழிக்கவும், திட்டமிட்டு சதி செய்து, இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. யாரோ விஜயலட்சுமியை தூண்டி விட்டுள்ளனர். புகார் கொடுத்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை சட்டப்பூர்வமாக சந்திப்போம், என்றார்.தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் இந்த புகாரை டைரக்டர் சீமான் மறுத்துள்ளார். சீமான் சார்பில் அவரது வக்கீல் சந்திரசேகரன் கூறுகையில், நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்தது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. விஜயலட்சுமி, அவரது அக்காள் விவாகரத்து வழக்கு தொடர்பாக உதவி கேட்டு, சீமானை ஒருமுறை சந்தித்து பேசினார். அது தொடர்பாக உதவி செய்யும்படி, சீமான் என்னிடம் கூறினார். அந்த ஒருமுறை மட்டுமே விஜயலட்சுமி சீமானை சந்தித்து பேசினார். அதன்பிறகு, அவர் சீமானை பார்க்கவே இல்லை. சீமான் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். அவரது பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். இதை கெடுக்கவும், அரசியலில் சீமானுக்கு உள்ள புகழை அழிக்கவும், திட்டமிட்டு சதி செய்து, இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. யாரோ விஜயலட்சுமியை தூண்டி விட்டுள்ளனர். புகார் கொடுத்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை சட்டப்பூர்வமாக சந்திப்போம், என்றார்.

சீமான் மீதான புகார் குறித்து நடிகை விஜயலட்சுமி வீட்டில் போலீஸ் விசாரணை

இயக்குநர் மற்றும் நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் மீது கொடுத்துள்ள மோசடிப் புகார் தொடர்பாக நடிகை விஜயலட்சுமியின் வீட்டில் இன்று போலீஸார் விசாரணை நடத்தினர்.

இயக்குநர் சீமான் தன்னை 3 ஆண்டுகள் காதலித்ததாகவும், பின்னர் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாகவும் கூறி சீமான் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார் நடிகை விஜயலட்சுமி. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு வளசரவாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இன்றுகாலை சாலிகிராமத்தில் உள்ள விஜயலட்சுமியின் வீட்டுக்குச் சென்ற போலீஸ் குழுவினர், அங்குள்ள விஜயலட்சுமியின் குடும்பத்தாரிடம் நடந்தது என்ன என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

ரூ. 5 கோடி கேட்டு வழக்கு தொடரப்படும்-சீமான் வக்கீல்

இதற்கிடையே, சீமான் மீது அவதூறாகப் புகார் கொடுத்துள்ள நடிகை விஜயலட்சுமி மீது ரூ. 5 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்று சீமானின் வழக்கறிஞர் சந்திரசேகரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

கடந்த 2 ஆண்டுகளாக ஈழத் தமிழர்களின் துயரங்களை கண்டு மன வேதனை அடைந்த சீமான், அதனை தடுக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார். இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து சீமான் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளார்.இரண்டு முறை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறைக்கு சென்றார். சுமார் ஓராண்டிற்கு மேலாக சிறையிலேயே அவர் காலத்தை கடத்தி உள்ளார்.

இந்த நிலையில் சீமான் காதல் கத்திரிக்காய் செய்யும் மனநிலையில் இருந்ததில்லை. விஜயலட்சுமியை சீமான் உண்மையில் காதலித்து கல்யாணம் செய்து கொள்ள மறுத்திருந்தால் முதலில் விஜயலட்சுமி என்னிடமோ, சீமானின் நல விரும்பிகளிடமோ, நண்பர்களிடமோ அல்லது அவரது பெற்றோரிடமோ புகார் தெரிவித்திருக்க வேண்டும். அதை விடுத்து போலீசாரிடம் சென்று சீமான் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்து விட்டதாக புகார் தெரிவித்துள்ளார். இதிலிருந்தே சீமானுக்கு எதிராக திட்டமிட்டு யாருடைய தூண்டுதலின் பேரில் விஜயலட்சுமி பொய் புகார் கொடுத்துள்ளார்.

இலங்கையில் போர்க் குற்றம் புரிந்த ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த வலியுறுத்தி உலக நாடுகளின் ஆதரவை திரட்டும் பணியில் சீமான் ஈடுபட்டுள்ளார். இதனை தடுக்கும் வகையில் மத்திய உளவுத்துறையினரும், தேர்தலில் சீமானின் பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பேரில் இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதனை நாங்கள் விரைவில் முறியடிப்போம். சீமானின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய் புகார் கூறிய விஜயலட்சுமியிடம் ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட ஈடு வழக்கு தொடர உள்ளோம் என்றார் அவர்.

2ஜி வழக்கு:தயாளு அம்மாளுக்கு எதிரான மனு நிராகரிப்பு

2ஜி வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், தொழிலதிபர்கள் ரத்தன் டாடா, அனில் அம்பானி, அரசியல் தரகர் நீரா ராடியா ஆகியோர் பெயரை சேர்க்கக் கோரி தொடரப்பட்ட மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இதுதொடர்பாக, டெல்லியைச் சேர்ந்த எம். ஃபர்குவான், காஸியாபாத்தைச் சேர்ந்த தர்மேந்தர் பாண்டே ஆகியோர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஓ.பி. ஷைனி,இத்தகைய மூன்றாம் நபர்களின் மனுக்களால் நீதிமன்றத்தின் மதிப்புமிக்க காலநேரம் வீணாவதாகக் கூறி இம்மனுவை நிராகரித்ததோடு,மனுதாரர்கள் இருவருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

தயாநிதி மாறனை எப்படி பதவி விலகச் சொல்லலாம்?-ஜெயலலிதா மீது திமுக பாய்ச்சல்


சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் புதிதாக சிக்கியுள்ள தயாநிதி மாறனை பதவி விலகச் சொல்ல முதல்வர் ஜெயலலிதாவுக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று திமுக கூறியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர்களான பொன்முத்துராமலிங்கம் மற்றும் கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், தன் மீது உள்ள வழக்கை சந்திக்க தனது முதல்வர் பதவியை ஜெயலலிதா ராஜினாமா செய்ய மாட்டார். ஆனால் தயாநிதி மாறன் மட்டும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா. மக்கள் இதைப் புரிந்து கொள்வார்கள்.

பெங்களூர் கோர்ட்டில் தன் மீது சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவையில் இருப்பதை ஜெயலலிதா முதலில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த வழக்கை சந்திக்க அவர் முதலில் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன் பிறகு மற்றவர்களின் ராஜினாமாவை அவர் கோரலாம் என்று
அவர்கள். கூறியுள்ளனர்

ஜிமெயில் பாஸ்வேர்ட்களை சீன ஹேக்கர்கள் திருடி வருகின்றனர்-கூகுள்

சீனாவிலிருந்து செயல்படும் ஹேக்கர் கும்பல், ஜிமெயிலைப் பயன்படுத்தி வரும் நூற்றுக்கணக்கானோரின் பாஸ்வேர்ட்களை திருடி விட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அந்த ஜிமெயில்களின் பயன்பாடுகளை இந்த ஹேக்கர்கள் கண்காணித்து பல்வேறு குழப்ப வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூகுள் கூறியுள்ளதாவது:

அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகள் பலர், சீனாவில் ஜனநாயகம் கோரி குரல் கொடுத்து வரும் அரசியல் தலைவர்கள், அமைப்பினர், ஆசிய நாடுகள் பலவற்றின் முக்கிய அதிகாரிகள் ஆகியோரின் பாஸ்வேர்ட்கள் திருட்டுப் போயுள்ளதாக அறிகிறோம். ராணுவ அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் பலரின் பாஸ்வேர்ட்களும் கூட இதுபோல திருட்டுப் போயுள்ளதாக அறிகிறோம் என்று அது கூறியுள்ளது.

கூகுளின் இணையதள செயல்பாடுகளில் சீன ஹேக்கர்கள் ஊடுறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு ஹேக்கர்கள் அட்டகாசத்துடன், சீன அரசின் அடக்குமுறைகளும் அதிகரித்ததால்,சீனாவில் உள்ள தனது அலுவலகத்தை மூடுவதாக அறிவித்தது கூகுள் என்பது நினைவிருக்கலாம்.

அதன் பின்னர் சீனாவில் உள்ள தனது செயல்பாடுகளை ஹாங்காங்குக்கு மாற்றி விட்டது கூகுள்.

இந்த நிலையில், ஜிமெயில் பாஸ்வேர்ட்களை திருடும் கும்பல்களின் அட்டகாசம் சீனாவில் அதிகரித்துள்ளதாக கூகுள் கூறியிருப்பதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய மந்திரி தயாநிதி மீது விரைவில் சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை: சுப்ரீம் கோர்ட்டிலும் மனு தாக்கல்

"ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில் புதிதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது சி.பி.ஐ., விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தயாநிதி மாறன் மீது, சி.பி.ஐ., விசாரணை கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை, பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்துள்ளார்

காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசில், கடந்த 2004-07ம் ஆண்டு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அந்த காலத்தில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.


குற்றச்சாட்டு என்ன : தயாநிதி மாறன், தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அப்போது, ஏர்செல் கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரம் வழங்குவதில் தயாநிதி மாறன், காலதாமதம் ஏற்படுத்தினார். ஆனால், ஏர்செல் கம்பெனி, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனிக்கு கைமாறியபோது, ஸ்பெக்ட்ரம் உடனடியாக வழங்கப்பட்டது. இதற்கு சன்மானமாக மேக்சிஸ், தனது சக கம்பெனிகள் மூலம், சன் டைரக்ட் கம்பெனியில், 599.01 கோடி ரூபாய் முதலீடு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, டெகல்கா ஆங்கில வார இதழ் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த புகார் வெளிவந்ததும், தயாநிதி மாறன் இதை மறுத்தார். இது தொடர்பாக, "மானநஷ்ட வழக்கு தொடர, வக்கீல் நோட்டீஸ் அனுப்பப் போவதாகவும்' தெரிவித்தார்


தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தை நடத்திவந்த, சிவா குழும சேர்மன் சி.சிவசங்கரன், கடந்த மாதம் மத்தியில், சி.பி.ஐ., வசம் அளித்த புகாரில், "தான் நடத்தி வந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகளை, விற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதற்கு தயாநிதி மாறன் தான் காரணம்' என, குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. தனது நிறுவனத்திற்கு ஒதுக்கீடு வழங்க தாமதம் செய்து வந்த தயாநிதி மாறன், வெளிநாட்டு கம்பெனிக்கு விற்றதும், அந்த நிறுவனத்திற்கு ஒதுக்கீடு அளித்தார் என குற்றம்சாட்டியுள்ளார். சிவசங்கரனின் புகார் குறித்து முழுமையான வாக்குமூலத்தை பெற, அடுத்த வாரம் அவரிடம் சி.பி.ஐ., நேரடியாக விசாரிக்க இருக்கிறது. அதன் அடிப்படையில், தயாநிதி மாறன் மீது வழக்கு பதிவு செய்து விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என தெரிகிறது.


பொது நல மனு: இந்நிலையில், தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ., விசாரிக்கக் கோரி, பொது நல மனு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை பிரபல வக்கீலும், லோக்பால் வரைவு மசோதா கமிட்டியில் இடம்பெற்றுள்ளவருமான பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்துள்ளார்.இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனிக்கு சாதகமாக தயாநிதி மாறன் செயல்பட்டுள்ளார் என்பதற்கு போதுமான ஆதார, ஆவணங்கள் உள்ளன. சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் சிவசங்கரன் நடத்தி வந்த ஏர்செல் கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மறுக்கப்பட்டது. தயாநிதி மாறன், ஏர்செல் கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்தினார். லைசென்ஸ் கோரி தாக்கல் செய்யப்பட்ட மொத்தம் 14 மனுக்கள், 2006ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி நிலவரப்படி நிலுவையில் இருந்தன. அதே ஆண்டு, மே மாதம், மலேசியாவின் மேக்சிஸ் கம்பெனி, ஏர்செல்லின் 74 சதவீத பங்குகளை வாங்குவதற்கு, மத்திய அரசு அனுமதியளித்தது. ஆனால், ஏர்செல் கம்பெனி, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனிக்கு கைமாறியபோது, ஸ்பெக்ட்ரம் உடனடியாக வழங்கப்பட்டது. இதற்கு சன்மானமாக மேக்சிஸ், தனது சக கம்பெனிகள் மூலம், "சன் டைரக்ட்' கம்பெனியில், ரூ.599.01 கோடி முதலீடு செய்தது.இந்த, "சன் டைரக்ட்' நிறுவனம், வீடுகளுக்கு நேரடி, "டிவி' ஒளிபரப்பு செய்யும், "டி டி எச்' நிறுவனம், தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் நடத்தும், "சன் டிவி' குழுமத்தின் ஒரு அங்கம்.இது குறித்து வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


மறுப்பு: இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. உண்மையல்ல' என்று குறிப்பிட்டுள்ளார்.


தயாநிதி ராஜினாமா ஜெயலலிதா வலியுறுத்தல் : ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் தயாநிதி மாறன், உடனே மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகி, தன் மீதான ஊழல் புகாரை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டும்' என்று, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா, நிருபர்களை சந்தித்தார். அப்போது நிருபர்கள், "மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீதான ஊழல் புகார் விவகாரம் குறித்தும், இதில், பிரதமர் எத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்' என்று கேள்வி கேட்டனர்.


இதற்கு பதிலளித்த ஜெயலலிதா கூறியதாவது:என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, பிரதமருக்கு நன்றாகத் தெரியும். அவர், கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். அமைச்சரவையில் இருந்து, உடனடியாக தயாநிதி மாறனை ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். இதை செய்வார் என நம்புகிறேன். தயாநிதிமாறன், அமைச்சரவையில் இருந்து விலகி, தன் மீதான ஊழல் புகாரை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

புதன், 1 ஜூன், 2011

இலங்கை இராணுவ ரவுடிகளின் கோர, பிசாசு முகத்தை கிழிக்கும் வகையில் அமைந்துள்ள போர்க்குற்ற திரைப்படம்! ஜூன் 14 ல் வெளியிடுவோம் - சனல் 4 அறிவிப்பு

இலங்கைப் போர்க்குற்ற ஆவணங்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் சனல் 4 தொலைக்காட்சி ஊடகம் அவ் ஆவணத் தொகுப்பினை திரைப்படமாக்கி எதிர்வரும் 14ம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளது.

ஒரு மணித்தியாலத்தை அடக்கிய இப்போர்க்குற்ற ஆவணத்தொகுப்பு திரைப்படத்தினை எதிர்வரும் 3ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளது.

சனல் 4 ஊடகம் இத் திரைப்படத்தினை எதிர்வரும் 14ம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

இதுவரையில் வெளியிடப்படாத போர்க்குற்ற ஆவணங்களும் இத்திரைப்படத்தில் அடங்குவதாகவும், போரினால் பாதிப்புற்றோரின் வாக்குமூலங்கள், நேரடிச்சாட்சியங்கள் ஆகியனவும் இத்திரைப்படத்தில் அடங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழ் இளைஞர்களை இலங்கை இராணுவ ரவுடிகள், நிர்வாணப்படுத்தி, கைகளை பின்னால் கட்டி உட்கார வைத்தும், நிற்க வைத்தும் பின்னாலிருந்து தலையில் சுட்டு கோரமாக கொல்லும் நெஞ்சைப் பதற வைக்கும் காட்சிகளையும் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் தான் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதுபோன்ற மேலும் பல கொடூரமான, கோரமான காட்சிகள் அடங்கிய முழுமையான வீடியோத் தொகுப்பை வெளியிடப் போவதாக சனல் 4 அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை இராணுவ ரவுடிகளின் கோர, பிசாசு முகத்தை கிழிக்கும் வகையில் இந்தக் காட்சிகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காட்சித் தொகுப்பை ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது சனல் 4.

உலகம் இதுவரை கண்டிராத மிக மோசமான போர்க்குற்றக் காட்சிகள் இதில் இடம் பெற்றிருப்பதாகவும், போரினால் பாதிக்கப்பட்டோர் அளித்த வாக்குமூலங்கள், சாட்சியங்கள், போர்க்குற்ற ஆவணங்கள் உள்ளிட்டவை இதில் இணைக்கப்பட்டிருப்பதாகவும் சனல் 4 கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சனல்-4 தொலைக்காட்சி இலங்கையின் போர்க்குற்ற ஆவணங்களை தொகுத்து சினிமாப் படமாக தயாரித்துள்ளது. இது வருகிற 3 ம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

போர்க்குற்ற ஆவணங்கள் அடங்கிய இந்த சினிமா படம் வருகிற 14 ம் திகதி வெளியிடப்படுகிறது. இந்த தகவலை சனல்-4 தொலைக்காட்சி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த வீடியோ தொகுப்பு சுமார் ஒரு மணி நேரம் ஓடக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இத்தனை செய்தாலும் இந்த உலகம் ஈழத் தமிழர்களுக்காக அசைந்து கொடுக்குமா என்பதுதான் இப்போது நம் முன் உள்ள மிகப் பெரிய கேள்வி.

மேலதிக விபரத்திற்கு

இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றமைக்கான ஆதாரமாக அமைந்த சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிகள் அனைத்தும் உண்மையானவை என்று நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் நேற்றைய கூட்டத்தொடரில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

இந்த வீடியோ ஆதாரத்தை போலியானது என்று இலங்கை அரசு மறுப்பு வெளியிட்டு வருகின்ற போதிலும், அவை உண்மையானவை என்றும் இலங்கை அரசு பொய் கூறுகின்றது என்பதும் ஐ.நா முதல் யாவரும் அறிந்ததே.



http://www.tamilwin.com


சுயாதீன விசாரணைகளை நடத்த வேண்டியது இறைமையான நாடொன்றின் பொறுப்பாகும் - மார்டின் நெசர்கீ

சுயாதீன விசாரணைகளை நடத்த வேண்டியது இறைமையான நாடொன்றின் பொறுப்பாகும் - மார்டின் நெசர்கீ

யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், நம்பகரமானதும் சுயாதீனமானதுமான விசாரணைகளை நடத்த வேண்டியது இறைமையான நாடொன்றின் தார்மீகப் பொறுப்பாகும் என ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்hளர்.
இலங்கை விவகாரம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை பரிந்துரைகளை எவரும் பார்வையிடக் கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறைமையுடைய நாடொன்று சுயாதீனமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் நிலைப்பாடகும் என அவர் தெரிவித்துள்ளார்.
உறுப்பு நாடுகள் அல்லது இலங்கை அரசாங்கத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டால் மட்டுமே சர்வதேச ரீதியான விசாரணைப் பொறிமுறையொன்றை அமுல்படுத்த முடியும் என பான் கீ மூன் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நம்பகரமான தேசிய ரீதியான விசாரணைகள் அவசியமானது என ஐக்கிய நாடுகளின் பேச்ச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.

உலகின் முன்னணி தீவிரவாத முறியடிப்பு நிபுணரின் உரையை சிறிலங்கா ஊடகங்கள் இருட்டடிப்பு

கொழும்பில் நடைபெறும் போர்க்கருத்தரங்கில் அமெரிக்க படைத்துறை நிபுணர் டேவிட் கில்குலேன் வெளியிட்ட கருத்துக்களை சிறிலங்கா ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்துள்ளன.

நேற்று கொழும்பில் ஆரம்பமான சிறிலங்கா இராணுவத்தின் போர் அனுபவக் கருத்தரங்கில் உலகின் முன்னணி தீவிரவாத முறியடிப்பு நிபுணரும், ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைகளின் தளபதி ஜெனரல் டேவிட் பெட்ராயசின் சிறப்பு ஆலோசகருமான- அவுஸ்ரேலிய இராணுவத்தின் முன்னாள் லெப்.கேணலான டேவிட் கில்குலேன் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

அவர் நேற்று தனது உரையில் போர்க்குற்றங்களை ஒருபோதும் மூடி மறைத்து விட முடியாது என்று கூறியுள்ளதாக ஏஎவ்பி செய்தியாளர் அமால் ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவில் உள்ள தமிழர்களின் வாழ்க்கை நிலையை சிறிலங்கா அரசாங்கம் உயர்த்த வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார்.

மீண்டும் ஒரு மோதல் நிலை உருவாவதை தவிர்க்க வேண்டுமானால், முடிவான மாற்றங்களைச் செய்வது அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

எனினும், சிறிலங்கா ஊடகங்கள் இவரது இந்தக் கருத்துகளை வெளிப்படுத்தாமல் இருட்டடிப்புச் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com


ஜிமெயில் தரும் சூடான தகவல்கள்

ஏதேனும் பயனுள்ள புதுமையைப் புகுத்துவது, கூகுள் நிறுவனத்தின் வாடிக்கை என நாம் அனைவரும் அறிவோம். அண்மையில் தன் ஜிமெயில் பக்கத்தில், ஒரு புதுமையை, ஆரவாரம் இன்றி, கூகுள் தந்துள்ளது. இதனை வெப் கிளிப்கள் (Web Clips) என கூகுள் அழைக்கிறது.
ஜிமெயில் பக்கத்தில் வலது மேல்புறம் பார்க்கவும். அங்கு வலது, இடதாக இரு அம்புக் குறிகளைப் பார்க்கலாம். முதலில் இதனைப் பார்க்கையில் ஏதோ வழக்கமான கூகுள் விளம்பரத்திற்கான வழி காட்டி எனத்தான் நாம் எண்ணுவோம். இப்படி எண்ணியபடியே, நான் அதன் மீது கிளிக் செய்தபோது, ஆச்சரியப்படத் தக்க வகையில், பன்னாட்டளவிலான செய்திகள் ஸ்குரோலிங் முறையில் ஓடின. இவை ESPN.com, Wired.com, Dictionary.com போன்ற தளங்களிலிருந்து எடுக்கப்பட்ட வையாக உள்ளன. உணவு தயாரிக்கும் குறிப்புகளும் (recipes) இதில் கிடைக்கின்றன. செய்திகள், தினம் ஒரு சொல் மற்றும் விளையாட்டு செய்திகள் இதில் தரப்படுகின்றன. மிகவும் பயனுள்ளவையாக இவை உள்ளன.

http://www.dinamalar.com

20 கிலோ இலவச அரிசி திட்டம்-ஜெ தலைமையில் மிக மிக எளிமையாய் நடந்த அரசு விழா

தமிழக அரசின் புதிய இலவச அரிசித் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். எந்தவித அமளியும் இல்லாமல் மிகவும் எளிமையாக இந்த அரசு விழா நடந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இனி அனைத்து அரசு விழாக்களும் இதுபோல எளிமையாகத்தான் நடக்கும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஸ்ரீராம் நகர் ரேஷன் கடையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக அந்தக் கடைக்கு பசுமை நிறத்தில் வண்ணம் பூசி ஜொலி ஜொலிக்க வைத்திருந்தனர். மாவட்டங்கள்தோறும் அமைச்சர்கள் இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். தமிழகம் முழுவதும் இன்று முதல் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

புதிய திட்டத்தின்படி தற்போது ரேஷன் கடைகளில் மாதம் 20 கிலோ அரிசியை கிலோ ஒன்றுக்கு ரூ. 1 என வாங்கி வரும் ரேஷன் அட்டைதாரர்கள் இனிமேல் அதை இலவசமாக பெறுவார்கள்.

மேலும் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக தகுதி படைத்தோருக்கு வழங்கப்படும்.

இன்று காலை 10 மணிக்கு இந்த இலவச அரிசித் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அரிசியை வழங்கினார்.

வழக்கமான அமளி துமளி இல்லாமல் படு எளிமையாக விழா நடந்தது. அமைச்சர்கள், அதிகாரிகள், அதிமுகவினர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

முன்னதாக முதல்வர் பதவியை ஏற்ற பின்னர் ஜெயலலிதா பங்கேற்கும் முதல் அரசு நிகழ்ச்சி இது என்பதால் ஜெயலலிதாவுக்கு உற்சாகமான வரவேற்பை அதிமுகவினர் அளித்தனர்.

தமிழகத்தில் அரிசி பெறத் தகுதியுடைய 1 கோடியே 83 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ளன. இந்த அட்டைகளுக்கு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 12 முதல் 20 கிலோ வரை அரிசி வழங்கப்படுகிறது.

இதேபோன்று, அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் 18 லட்சத்து 62 ஆயிரம் அட்டைதாரர்களுக்கு 35 கிலோ இலவச அரிசி அளிக்கப்படுகிறது.

இலவச அரிசி திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் மாநில நுகர்வோர் உதவி மையத்தின் தொலைபேசி எண்ணில் (044-28592828) தெரிவிக்கலாம் என உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இலவச அரிசியை எப்போது வேண்டுமானாலும் எந்த நாளிலும் பெற்றுக் கொள்ளலாம். எனவே அரிசி கிடைக்காதோ என்று பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் நிருபர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அளித்த பேட்டி:

கேள்வி: இலவச அரிசி வழங்கும் திட்ட தொடக்க விழா இன்று எளிமையாக நடந்தது. மற்ற அரசு விழாக்களும் இதுபோல் நடக்குமா?

பதில்: அனைத்து அரசு விழாக்களும் இதுபோல எளிமையாகத்தான் நடக்கும். வீண்- ஆடம்பரமாக செலவு செய்து அரசு விழாக்களை நடத்தக்கூடாது என்பது இந்த அரசின் கொள்கை. அடுத்து தொடரும் திட்டங்களுக்கான விழாவும் இதுபோல் எளிமையாக நடைபெறும்.

கேள்வி: புதுச்சேரியில் உள்ள ரேசன் கடைகளில் 11ம் தேதி முதல் 31ம் தேதி வரை எந்த ரேசன் பொருட்களையும் வாங்கலாம் என்ற நிலை உள்ளது. தமிழ்நாட்டிலும் அந்த நிலை வருமா?

பதில்: தமிழ்நாட்டிலும் இனி எல்லா பொருட்களையும், ரேசன் கடைகளில் எப்போதும் வாங்கலாம். பொருட்களை பதுக்கி வைக்கும் நிலை இனி இருக்காது.

கேள்வி: கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இலவச டி.வி, இலவச வீடு திட்டம் தொடருமா?

பதில்: கவர்னர் உரையில் தெரிந்து கொள்ளலாம்.

கேள்வி: அரசு கஜானா திருப்தியாக இருக்கிறதா?

பதில்: அதை இப்போது சொல்ல இயலாது. அது பற்றிய விவரத்தை கவர்னர் உரையிலும், மீதியை பட்ஜெட்டிலும் சொல்வோம்.

கேள்வி: அண்ணா பல்கலைக் கழகங்கள் ஒன்றாக இணைக்கப்படுமா?

பதில்: கவர்னர் உரையில் அதற்கான பதில் தெரியும்.

சாய்பாபா அறையில் என்ன தான் இருக்கிறது? நீடிக்கும் ரகசியம்

சாய்பாபாவின் ஆசிரமமான பிரசாந்தி நிலையத்தில் உள்ள அவரது தனி அறையான யஜூர் மந்திரில் என்ன இருக்கிறது என்பது மர்மமாக உள்ளது.

சத்ய சாய்பாபா கடந்த மார்ச் 28-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரது தனி அறையான யஜூர் மந்திர் பூட்டப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி சாய்பாபா இறந்தார். இந்நாள் வரை சாய்பாபாவின் அறை திறக்கப்படவில்லை. அதன் சாவி தற்போது சாய் அறக்கட்டளை செயலர் சக்ரவர்த்தியிடம் உள்ளது.

இதற்கிடையே யஜூர் மந்திரில் சாய்பாபாவுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த விலை மதிக்கமுடியாத பொருட்கள், கணக்கிலடங்கா பணம் மற்றும் நகைகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

சாய்பாபாவுக்கு நினைவிடம் கட்டுவதற்காக பிரசாந்தி நிலையத்தை 6 வார காலம் மூடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் எப்பொழுது மந்திரைத் திறப்பது, பொதுமக்கள் மற்றும் ஊடகங்களை அனுமதிப்பது தொடர்பாக நேற்று அறக்கட்டளை உறுப்பினர் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் வராததால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

யஜூர் மந்திரில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள அனைவரும் ஆவலாய் உள்ளனர். அதனால் யஜூர் மந்திரைத் திறக்குமாறு உள்ளூர் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சாய்பாபாவின் தனி அறையை முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஊடகங்களின் முன்னிலையில் திறக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் நாகி ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

தொண்டர்களுக்காக நகை அணிகிறேன் : முதல்வர் விளக்கம்

தொண்டர்களுக்காக நகை அணிவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சென்னையில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது முதல்வர் ஜெயலலிதாவிடம் இதுரை காதில் தோடு அணியாத தாங்கள் தேர்தல் வெற்றிக்குப் பிறகு எப்படி நகை அணிய ஆரம்பித்தீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா : தான் 1997ம் ஆண்டுக்குப் பின்னர் தான் நகைகள் அணிவதில்லை என்றும் ஆனால் தொடர்ந்து தொண்டர்கள் தான் நகை அணிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாலும், இல்லையேல் தீக்குளிப்போம் என மிரட்டியதாலும் தான் நகைகள் அணிவதாக கூறினார். தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றதை அடுத்து 14ம் தேதி முதல் காதில் தோடு அணிந்து கொள்வதாக கூறினார்.

தயாநிதி-ஏர்செல் விவகாரம்: சிபிஐ விசாரணை ஆரம்பம்?

ஏர்செல் நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் வழங்கப்பட்டது குறித்தும், அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய மலேசிய நிறுவனம் சன் டிவி குழுமத்தில் முதலீடு செய்தது குறித்தும் சிபிஐ விசாரணையைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்த விவகாரத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனிடம் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்தவுள்ளதாகவும் தெரிகிறது.

முன்னதாக இது குறித்து தெகல்கா இதழில் வெளியான செய்திகளை மையமாக வைத்து தயாநிதி மாறனுக்கு பாஜக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. இது குறித்து அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறுகையில்,

2004ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்து வந்தார். அப்போது இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் வெளிநாட்டினர் முதலீடு செய்யும் விதிமுறைகள் மாற்றப்பட்டன. இந்திய நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை 24 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயரித்திக் கொள்ள அனுமதி தரப்பட்டது.

தமிழகத்தில் ஏர்செல் நிறுவனம் முதலில் ஒரு மண்டலத்தில் செயல்பட்டு வந்தது. பின்னர் இந்த நிறுவனத்துக்கு 14 மண்டலங்களில் சேவை வழங்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்த ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவை சேர்ந்த மாக்சிஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 74 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. ஏர்செல் நிறுவனத்திடம் இருந்து பங்குகள் வாங்கியதால் ஆதாயமடைந்த இந்த மாக்சிஸ் நிறுவனம் தனது மற்றொரு நிறுவனமான அஸ்ட்ரோ நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் முதலீடு முதலீடு செய்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது குறித்து தயாநிதி விளக்க வேண்டும்.

2ஜி ஊழல் விவகாரத்தில் கடந்த காலத்தில் பிரதமர் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்தது போல் இந்த விவகாரத்தில் நடந்து கொள்ளக்கூடாது. மீண்டும் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சனை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

இந்த விவகாரம் குறித்து தெகல்கா இதழ் வெளியிட்டுள்ள செய்தி அபாண்டமானது என்று அமைச்சர் தயாநிதி மாறன் ஏற்கனவே கூறி்யுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இது தொடர்பாக தெகல்காவுக்கு அவர் நோட்டீசும் அனுப்பியுள்ளார்.

இந் நிலையில் இந்த விவகாரத்தில் தயாநிதி மாறன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். அதே போல மாறனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜகவும் கோரியுள்ளது.

கருத்து கூற காங்கிரஸ் மறுப்பு:

இந் நிலையில் தயாநிதி மாறன் தொடர்பாக எழுப்பபடும் பிரச்சனைகளுக்கு பதிலளிக்க காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.

அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி நிருபர்களிடம் கூறுகையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்க மிகவும் பொருத்தமானவர் தயாநிதி மாறன்தான்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் விசாரித்து வருகிறது. பாஜக ஆட்சி உள்ளிட்ட கடந்த காலங்களில் தொலைத்தொடர்புக் கொள்கை பின்பற்றப்பட்ட விதம் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் அந்தக் குழு ஆய்வு செய்து வருகிறது.

எனவே தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது, ஏதேனும் முறைகேடுகள் நடந்திருந்தால் அவை குறித்தும் அக் குழு விசாரிக்கும். பாஜக ஆட்சியிலிருந்த 1999ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை தொலைத்தொடர்புத் துறையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க கூட்டுக் குழுவுக்கு நாடாளுமன்றம் அதிகாரம் அளித்துள்ளது என்றார்.

இந் நிலையில் இது குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு தயாநிதி மாறனை அழைத்து விசாரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து சிபிஐயும் விசாரிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் பாஜக உள்ளிட்ட எதி்ர்க் கட்சிகள் போர்க் கொடி உயர்த்தலாம் என்றும் தெரிகிறது.

இதற்கிடையே தயாநிதி-ஏர்செல் விவகாரம் குறித்து சிபிஐ அமைதியாக தனது விசாரணையை ஆரம்பித்துவிட்டதாகவும், தயாநிதி மாறனிடம் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் விசாரணை நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

வாஜ்பாய்க்கும் ஜேபிசி சம்மன்?:

இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பாஜகவையும் இழுக்க காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. அதன் ஒரு பகுதியாக பாஜக ஆட்சியில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் குறித்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரையும் சாட்சிகள் பட்டியலில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு சேர்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கும் சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரிக்கவும் காங்கிரஸ் எம்பி சாக்கோ தலைமையிலான இந்தக் குழு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

வாஜ்பாய் கடந்த சில வருடங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர அரசியலில் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்கும் அவருக்கு சம்மன் அனுப்ப திட்டமிட்டிருப்பது பாஜக தலைவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன்களால் கேன்சர் அபாயம் : உலக சுகாதார மையம் எச்சரிக்கை

செல்போன் பயன்படுத்ததாதவர்கள் யாராவது இருக்கிறார்‌ளா என்றால் கிட்டதட்ட இல்லை என்று சொல்ல அளவிற்கு இன்று சர்வதேச சமுதாயத்தில் செல்போன் பயன்பாடு ஊடுருவி இருக்கிறது. இன்றி‌யமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் செல்போன்களை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப் படுத்துவதால் உடலில் புற்றுநோழ் புரையோடி ஆபத்தை ஏற்படுத்தும் என அவ்வப்போது எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
இருப்பினும் செல்போன் பயன்பாடடால் கேன்சர் நோய் ஏற்படும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்ற வாதமும் நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தான் செல்போன்கள் பயன்பாட்டால் கேன்சர் ( புற்றுநோய்) நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக உலக சுகாதார மையம் அண்மையில் விடுத்துள்ள எச்சரிக்கை குறிப்பில் தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையத்தின் ஒரு அங்கமான சர்வதேச கேன்சர் நோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. செல்போன் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அந்தக் குழுவில் 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் இடம் பெற்றிருந்தனர். குழுவுக்கு தலைவராக அமெரிக்க அ‌திபர் ஒபாமாவின் தேசிய புற்றுநோய் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான டாக்டர் ஜொனாதான் சாமெட் இருந்தார்.

பூச்சிக்‌கொல்லி மருந்துக்கு நிகர் : செல்போன்கள் கேன்சர் நோயை ஏற்படுத்தக்கூடும் என்றும் எனவே அதனை அபாயகரமான பூச்சிக்கொல்லி, சலவை காரங்கள் ஆகிய ரசாயனப் பொருட்களுக்கு நிகராக பட்டியலிட வேண்டும் என்றும் அந்த ஆராய்ச்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.

கதிர்வீச்சு அபாயம் : செல்போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தான் கேன்சர் நோயை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. வெளிநாட்டில் மொபைல் போன் வாங்குபவர்கள், அந்த போனில் இருந்து வெளியேறக்கூடிய கதிர்வீச்சு அளவு ஆகியனவற்ற‌ை அறிந்து கொண்டு பின்னர் தான் செல்போனை வாங்குகின்றனர். ஆனால் இந்தியா போன்ற மற்ற ஆசிய நாடுகளில் நுகர்வோர் மத்தியில் இந்த விழிப்புணர்வு இல்லை என்று பரவலாக கூறப்படுகிறது. இத்தகைய விழிப்புணர்வோடு செல்போன்களை வாங்கினால், கேன்சர் அபாயத்தில் இருந்து ஓரளவுக்கு நாம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.


தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும்: ஜெயலலிதா

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் வகையில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை பிரதமர் மன்மோகன் சி்ங் பதவி விலகச் சொல்ல வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவை சேர்ந்த மாக்சிஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 74 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. ஏர்செல் நிறுவனத்திடம் இருந்து பங்குகள் வாங்கியதால் ஆதாயமடைந்த இந்த மாக்சிஸ் நிறுவனம் தனது மற்றொரு நிறுவனமான அஸ்ட்ரோ நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் முதலீடு முதலீடு செய்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா, தயாநிதி மாறன் பிரதமரைச் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தயாநிதி மாறன் தன் மீதுள்ள குற்றச்சாடுகளை எதிர்கொள்ளும் வகையில் அவர் பதவி விலக வேண்டும். பிரதமர் மன்மோகன் சிங் அவரிடமிருந்து பதவி விலகல் கடிதத்தைக் கேட்டுப் பெற வேண்டும்.

தனியார் பள்ளிகள் கட்டண விவகாரத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் தரப்பில் இருந்து புகார் வந்தால், உடனடியாக தொடர்புடைய பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

டிஜிபி நட்ராஜ் விஷயத்தில் ஆணை பெறப்பட்டவுடன் தகுந்த முடிவு மேற்கொள்ளப்படும் என்றார்.


18 கடிதங்களுடன் வாதாடப் போகும் ராசா-2ஜி சிக்கலில் மாட்டும் மன்மோகன்?

ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பிரமதருக்கும் தனக்கும் நிகழ்ந்த 18 கடித பரிமாற்றங்களை முன் வைத்து வாதாட உள்ளதால், ஸ்பெக்ட்ரம் ஊழலின் விசாரணை வளையத்தில் மன்மோகன் சிங்கும் இழுக்கப்படலாம் என்று தெரிகிறது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வரும்போது, தான் அமைச்சராக இருந்தபோது பிரதமருக்கு எழுதிய 18 கடிதங்களுடன் தானே வாதாட ராசா திட்டமிட்டிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த 18 கடிதங்களும் 2007ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2010 ஜூலை வரையிலான காலகட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், ராசாவுக்கும் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்களாகும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமைச்சரவையின் ஒப்புதலின் பேரில்தான் மேற்கொண்டேன் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் இந்த 18 கடிதங்களையும் ராசா முக்கிய ஆதாரமாகக் காட்டக்கூடும் என்று தெரிகிறது.

இந்த விவகாரத்தில் நான் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை, அதற்கு உரிய அனுமதியைப் பெற்றிருந்தேன், எனவே நான் நிராபராதி என்று வாதாட ராசா தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கடிதங்களை ஆதாரமாக வைத்து ராசா வாதாடும்போது மத்திய அரசுக்கு, குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடும் நெருக்கடி ஏற்படலாம்.

ராசாவின் வாதத்தை வைத்து பிரதமர் மன்மோகன் சிங்கையும் சிபிஐ தனது விசாரணைக்குள் கொண்டு வரவும் வாய்ப்புள்ளது.

ராசா அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனிமொழிக்கு ஜாமீனா, இல்லையா-ஜூன் 3ம் தேதி தீர்ப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா, கிடைக்காதா என்பது ஜூன் 3ம் தேதி தேரியும். அன்றைய தினம் கனிமொழியின் ஜாமீன் மனு மீதான உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனிமொழி தவிர கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத் குமார் ரெட்டியும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இவரது மனு மீதும் அன்றே தீர்ப்பளிக்கப்படுகிறது.

ஜூன் 4ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. எனவே 3ம் தேதியே கனிமொழி, சரத்குமார் மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள தொலைத் தொடர்பு நிறுவன அதிகாரிகள் யாருக்குமே ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த ஜாமீன் மனுக்களையும் டெல்லி உயர்நீதிமன்றம்தான் தள்ளுபடி செய்திருந்தது. எனவே கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.