ஒரு மணித்தியாலத்தை அடக்கிய இப்போர்க்குற்ற ஆவணத்தொகுப்பு திரைப்படத்தினை எதிர்வரும் 3ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளது.
சனல் 4 ஊடகம் இத் திரைப்படத்தினை எதிர்வரும் 14ம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.
இதுவரையில் வெளியிடப்படாத போர்க்குற்ற ஆவணங்களும் இத்திரைப்படத்தில் அடங்குவதாகவும், போரினால் பாதிப்புற்றோரின் வாக்குமூலங்கள், நேரடிச்சாட்சியங்கள் ஆகியனவும் இத்திரைப்படத்தில் அடங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழ் இளைஞர்களை இலங்கை இராணுவ ரவுடிகள், நிர்வாணப்படுத்தி, கைகளை பின்னால் கட்டி உட்கார வைத்தும், நிற்க வைத்தும் பின்னாலிருந்து தலையில் சுட்டு கோரமாக கொல்லும் நெஞ்சைப் பதற வைக்கும் காட்சிகளையும் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் தான் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இதுபோன்ற மேலும் பல கொடூரமான, கோரமான காட்சிகள் அடங்கிய முழுமையான வீடியோத் தொகுப்பை வெளியிடப் போவதாக சனல் 4 அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை இராணுவ ரவுடிகளின் கோர, பிசாசு முகத்தை கிழிக்கும் வகையில் இந்தக் காட்சிகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காட்சித் தொகுப்பை ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது சனல் 4.
உலகம் இதுவரை கண்டிராத மிக மோசமான போர்க்குற்றக் காட்சிகள் இதில் இடம் பெற்றிருப்பதாகவும், போரினால் பாதிக்கப்பட்டோர் அளித்த வாக்குமூலங்கள், சாட்சியங்கள், போர்க்குற்ற ஆவணங்கள் உள்ளிட்டவை இதில் இணைக்கப்பட்டிருப்பதாகவும் சனல் 4 கூறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து சனல்-4 தொலைக்காட்சி இலங்கையின் போர்க்குற்ற ஆவணங்களை தொகுத்து சினிமாப் படமாக தயாரித்துள்ளது. இது வருகிற 3 ம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
போர்க்குற்ற ஆவணங்கள் அடங்கிய இந்த சினிமா படம் வருகிற 14 ம் திகதி வெளியிடப்படுகிறது. இந்த தகவலை சனல்-4 தொலைக்காட்சி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வீடியோ தொகுப்பு சுமார் ஒரு மணி நேரம் ஓடக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
இத்தனை செய்தாலும் இந்த உலகம் ஈழத் தமிழர்களுக்காக அசைந்து கொடுக்குமா என்பதுதான் இப்போது நம் முன் உள்ள மிகப் பெரிய கேள்வி.
இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றமைக்கான ஆதாரமாக அமைந்த சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிகள் அனைத்தும் உண்மையானவை என்று நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் நேற்றைய கூட்டத்தொடரில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
இந்த வீடியோ ஆதாரத்தை போலியானது என்று இலங்கை அரசு மறுப்பு வெளியிட்டு வருகின்ற போதிலும், அவை உண்மையானவை என்றும் இலங்கை அரசு பொய் கூறுகின்றது என்பதும் ஐ.நா முதல் யாவரும் அறிந்ததே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக