தமிழீழதேசியத்தலைவர் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவியையும் பிள்ளைகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனித்து பேணிவருகிறார் என அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் இன்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதமொன்றின்போதுஇ உரையாற்றிய ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி.இ அல் கயீடா தலைவர் ஒசாமா பின் லாடனுடன் சேர்த்து அவரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதைப் போலல்லாமல்இ பிரபாகரனின் மனைவியும் பிள்ளைகளும் கவனித்து பேணப்படுகின்றனர் என்றார்.
இதுதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனிதாபிமானத் தன்மை என அஸ்வர் எம்.பி கூறினார்.
இஸ்ரேலில் மனித உரிமைகள் மீறப்படுவதகாக ஐ.நா. அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டதையடுத்து அந்நிலைமையை சீராக்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்ட இஸ்ரேலை இலங்கை பின்பற்ற வேண்டுமென ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.
அவரின் கூற்றுக்கு பதிலளிக்கும்போதே ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் மேற்கண்டவாறு கூறினார்.
http://www.tamilmirr...1-17-51-05.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக