தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மீது அரசியல் தரகர் நீரா ராடியா சிபிஐயிடம் புகார் அளித்துள்ளார்.
2ஜி வழக்கில், இரண்டாவது துணை குற்றப்பத்திரிகையை ஜூலை முதல் வாரத்தில் சிபிஐ தாக்கல் செய்யவுள்ளது.இதில் இதில் ஒரு நிறுவனம் பற்றியும், மேலும் சிலரது பெயர்களும் இடம் பெறக்கூடும் என்று சிபிஐ வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகி இருந்தது.
இந்நிலையில்,2ஜி ஊழல் வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக மாறியுள்ள நீரா ராடியா, சிபிஐ இயக்குனரை நேற்று திடீரென சந்தித்துப் பேசினார்.இந்த திடீர் சந்திப்பு எதற்காக என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், தமக்கு கொலை மிரட்டல் டெல்லி வழக்கறிஞர் ஒருவருக்கு எதிராக புகார் அளிக்கவே சிபிஐ இயக்குனரை சந்தித்ததாக தெரியவந்துள்ளது.
இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத் தொடக்கத்தில் சிபிஐ தாக்கல் செய்ய உள்ள இரண்டாவது துணை குற்றப் பத்திரிகையில் ஒரு தனியார் நிறுவனம் பற்றியும், மேலும் சிலரது பெயர்களும் இடம் பெறும் என்று தெரிய வந்துள்ளது.
இவர்கள் மீதான குற்றத்தை நிரூபிப்பதில் நீராராடியா முக்கிய பங்கு வகிப்பார் என்று கூறப்படுவதால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தை சேர்ந்த டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், கடந்த சில தினங்களாக நீரா ராடியாவை தொலைபேசியிலும், கடிதம் மூலமாகவும் நீரா ராடியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாகவே ராடியா, சிபிஐ இயக்குனரிடம் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது. இதனை சிபிஐ உயர் அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார்.
http://tamil.webdunia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக