தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், தியாகி ஒருவர் பென்ஷன் கேட்டு, 12 ஆண்டுகளாக மனு கொடுத்து காத்திருக்கிறார்.
பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா தாதனூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் செட்டி (90). கடந்த 1942ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில், பங்கேற்ற அவரை, பிரிட்டிஷ் அரசு கைது செய்து அலிப்பூர் சிறையில் அடைத்தது. சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மத்திய, மாநில 66அரசு பென்ஷன் வழங்கி வருகிறது. ராமன்செட்டி கடந்த, 12 ஆண்டாக பென்ஷன் கேட்டு, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்துள்ளார். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சுதந்திர போராட்ட தியாகிகள் கொண்ட குழு பரிந்துரை கடிதங்கள் கொடுத்தும், இதுவரையில் ராமன் செட்டிக்கு பென்ஷன் கிடைத்தபாடில்லை.
ஒவ்வொரு முறை கலெக்டர்கள் மாறி, புதிய கலெக்டர்கள் பொறுப்புக்கு வரும் போதும், ராமன்செட்டி மனு கொடுக்க தவற மாட்டார். நேற்று மக்கள் குறைதீர் கூட்டத்திற்கும், ராமன் செட்டி மனு கொடுக்க வந்திருந்தார்.
கலெக்டர் அறை முன் நீண்ட நேரம் ராமன்செட்டி காத்திருந்தார். கலெக்டர் அலுவலக பூங்காவில் நடந்த குறைதீர் முகாமில் பங்கேற்க, கலெக்டர் லில்லி அறையை விட்டு வெளியில் வந்த போது, காத்திருந்த ராமன் செட்டியிடம் மனுவை பெற்றார். "உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதாக' கலெக்டர் லில்லி அவரிடம் தெரிவித்தார்.
இது குறித்து ராமன்செட்டி கூறுகையில்,""எனது இரு மனைவிகளில் ஒருவர் இறந்துவிட்டார். வயதான காலத்தில், விவசாயம் செய்து பிழைத்து வருகின்றேன். கடந்த 12 ஆண்டாக பென்ஷன் பெற, கலெக்டர் அலுவலகத்துக்கு நடந்து வருகிறேன். கடைசி காலத்தில் அரசு கொடுக்கும் பணத்தை வாங்கி சாப்பிட விரும்பவில்லை. சுதந்திர போராட்ட தியாகி என்பதை பதிவு செய்வே, இத்தனை ஆண்டாக நடையாய் நடக்கிறேன். என்னுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட எட்டு பேர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பென்ஷன் பெறுகின்றனர். என்னால் முடியவில்லை,'' என்றார்.
http://www.dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக