இன்னும் எவ்வளவு காலத்துக்கு ஒரே மாதிரி விமானப் பயணத்தை அனுபவிப்பது என்று சலித்துக் கொள்பவரா நீங்கள்?
எனில் புதிய அனுபவத்துக்காக தயாராகுங்கள். உண்மையில் வானத்தில் பறக்கும் அனுபவத்தை பயணிகள் பெற புதிய விமானம் ஒன்றை வடிவமைத்து வருகின்றனர்.
இந்த விமானம் முழுக்க முழுக்க கண்ணாடி போன்ற பொருளால் தயாரிக்கப்படுகிறது. உள்ளே இருந்தபடி ஆகாயத்தை அப்படியே தெளிவாகப் பார்க்கலாம். மேகக் கூட்டங்கள் உங்களைத் தாண்டிச் செல்வதைப் பார்த்து ரசிக்கலாம்.
இரவில் வானத்து நட்சத்திரங்களூடே பறக்கும் இனிய அனுபவத்தைப் பெறலாம். அதுமட்டுமல்லாமல், கோல்ப் உள்ளிட்ட கேம்களை கம்ப்யூட்டரில் விளையாட வசதி, மது அருந்த பார் வசதி என அனைத்தும் இந்த விமானத்தில் கிடைக்கும்.
இந்த விமானத்தின் உள்புற நிறம், சூழலுக்கேற்றவாறு மாறிக் கொள்ளும். அதேபோல பயணிகளின் உடல் பருமனுக்கேற்ப மாறும் வசதி கொண்டவை இதில் பொருத்தப்படும் இருக்கைகள்.
இதில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்றெல்லாம் தனி வகுப்புகள் கிடையாது. ஒரே வகுப்புதான். ஆனால் பொழுதுபோக்கு வசதி மிக்கவை, அந்த வசதி இல்லாதவை என பயணிகளே தேர்வு செய்து கொள்ளலாம். கட்டணம் ஒன்றுதான்.
இந்த விமானம் எப்போது பறக்கும் என்கிறீர்களா... 2050-ம் ஆண்டு முதல் இந்த வகை விமானங்கள் நடைமுறைக்கு வரும் என்கிறார்கள்!
http://thatstamil.oneindia.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக