வியாழன், 16 ஜூன், 2011

ஸ்ரீபெரும்புதூர் பெர்லாஸ் கம்பெனியில் தீ., 10 கி.மீட்டர் தொலைவிற்கு கரும்புகை சூழ்ந்தது

ஸ்ரீபெரும்புதூர்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மென்பொருள் பூங்காவில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லாமல் தொழிலாளர்கள் தப்பினர். தீ பிடித்தது பெயிண்ட் குடோன் என்பதால் தீ பல மீட்டர் உயரத்திற்கு எழுந்து கொழுந்து விட்டு எரிந்தது. இதன் காரணமாக ஏற்பட்ட கரும்புகை ஸ்ரீபெரும்புதூர் ஒட்டியுள்ள 10 கி.மீட்டர் தொலைவு வரை சூழ்ந்து இருந்தது.

ஸ்ரீபெரும்புதூர்- காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மென்பொருள் பூங்கா உள்ளது. இங்கு நோக்கியாவின் கிளை நிறுவனமான பெர்லாஸ் என்ற ஆலை செயல்பட்டு வருகிறது. செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் இங்கு 3 ஷிப்டுகளிலும் 5 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

இன்று காலை 11 மணி அளவில் இங்குள்ள பெயிண்ட் குடோனில் இருந்து தீ பற்றியது. இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த குடோனுக்கு ஏதாவது தேவைப்பட்டால் மட்டுமே ஊழியர்கள் செல்வர். எனவே உயிர்ச்சேதம் ஏதும் இல்லாமல் தப்பினர். காஞ்சிபுரம், தாம்பரம், எம்.எம்., நகர் பகுதியில் இருந்து 5 க்கும் மேற்பட்ட தீயணைக்கும் வாகனங்கள் வந்து தீயை அணைத்து வருகின்றனர்.

இந்த விபத்து காரணாமாக இந்த வழியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன. தீ பற்றி எரிவதுடன் பலத்த சப்தத்துடன் அவ்வப்போது வெடிப்புகளும் இருந்தன. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அச்சத்தில் ஆழந்தனர். தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தில் காயமுற்றவர்கள் விவரம் இது வரை அதிகாரப்பூர்வமாக இல்லை.

http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: