
இது 1960 முதல் 1970 வரையிலான காலப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலவிய சாதியச் சமூக ஒழுங்கு முறையும், அதை தகர்த்தெறிவதற்கு மேற்கொள்ளப்பட்ட போராட்டமும் அந்தக் காலகட்டத்தில் அதனால் எனக்கு ஏற்பட்ட பாதிப்புக்களும் பற்றிய அனுபவப் பதிவுகளாகும்.
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் கூர்மையடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் இந்தப் பதிவு அவசியமா? என்ற கேள்வியை தாயக விடுதலையின் பால் அதீத அக்கறையுள்ள ஒரு போராளி என்ற தளத்தில் இருந்து எனக்கு நானே பலதடவை கேட்டுப் பார்த்திருக்கிறேன்.
ஆனால் புலம்பெயர்ந்த தளத்தில் தமிழ் அடையாளம் என்றால் சாதியம் என்று நினைக்கும் ஒரு கூட்டம் இங்கே பிறந்து வளரும் ஒரு பிள்ளையைப் பார்த்து ' நீ பிறப்பினால் தாழ்ந்தவன்' என்று கூறும் போது தமிழ் சமூகத்தின் மீது அந்தப் பிள்ளைக்கு ஏற்படும் வெறுப்பை தேசத்துக்கு எதிரான செயல் என்று முத்திரை குத்தி ஒட்டு மொத்தமாக அவர்களை தமிழ் தளத்திலிருந்து அந்நியப்படவைக்கும் செயற்பாடுகளை திட்டமிட்டுச் செய்யும் நிலையில், சாதியத்தின் கொடூரத்தைனத்தை தமிழ் தேசிய உருவாக்கத்துக்கு அது செய்யும் துரோகத்தனத்தை அம்பலப்படுத்துவதற்கு எனது அனுபவங்களை மறுபதிவுக்கு உள்ளாக்குவது அவசியம் என்று நான் நினைக்கிறேன்.
'நாங்கள் தமிழர்கள்' என்ற அடையாளம் மட்டும் தான் தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற எங்களது அரசியல் இலக்கை நாங்கள் விரைந்து அடைவதற்கு வழிவகுக்கும
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக