வெள்ளி, 19 செப்டம்பர், 2008

காந்தி தேசத்தின் மறுபக்கம் -10

10
கராச்சிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நாடு திரும்பிய உமாமகேஸ்வரனுக்கு பெரும் நெருக்கடி காத்திருந்தது. முள்ளிகுள கொலையும் மாணிக்கதாசன் விவகாரமும் இயக்கத்தை விட்டு நீக்கி அவனைக் கைது செய்து விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் பெரும் பிரச்சினைகயாக இருந்தன.
சங்கிலி மாணிக்கதாசன் ENFLF பக்கம் சாய்ந்து விட்டான்; என்றும் அவர்களின் திட்டப்படி இயக்கத்தை உடைப்பதற்கென்றே அவர் திட்டமிட்டுச் செயல்படுகின்றான் என்றும் நீண்ட விரிவான ஒரு கடிதத்தை எழுதி தனது நம்பிக்கைக்குரிய ஒருவர் மூலம் உமாமகேஸ்வரனிடம் சேர்க்கும்படி கொழும்புக்கு அனுப்பியிருந்தான்;.
அந்தக் கடிதத்தை படித்த உமாமகேஸ்வரனுக்கு இதெல்லாம் வசந்தனின் வேலை என்று உடனேயே புரிந்தது. வசந்தன் மாணிக்கதாசனையும் தன் பக்கம் மாற்றிவிட்டான் என்று அவர் நம்பினார். உடனேயே சங்கிலியை கொழும்பு வரும்படி தொலைத்தொடர்பு சாதனத்தின் வழியாக செய்தி அனுப்பியிருந்தார்.
முள்ளிக் குளத்திலிருந்து கற்பிட்டியூடாக சங்கிலி கொழும்பு வந்து சேர்ந்ததும் வசந்தனுடைய திட்டம் பற்றி எடுத்துச் சொல்லி அவரை உடனே தட்டிவிடும்படி உத்தரவிட்டார்.
சங்கிலிக்கு முதலில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. வசந்தன் இப்படிச் செய்வான் என்று அவனால் நம்பமுடியவில்லை. அவரைப் பற்றி உமா சொன்ன விடயங்களுக்கும் அவன் எழுதிய கடிதமும் முள்ளிக்குளத்தில் தனக்கு விசுவாசமானவன் போல நடந்து மாணிக்கதாசன் பற்றி சொன்ன தகவல்களையும் ஒப்பிட்டுப் பார்த்த போது அவன்தான் குழப்பத்தின் சூத்திரதாரி என்று சங்கிலிக்குப் புரிந்தது.
ஆனால் அப்போதிருந்த சூழ்நிலையில் வசந்தனைத் தட்டினால் அது இயக்கத்திற்குள இன்னும் பெரிய குழப்பத்தை உண்டு பண்ணிவிடும் என்றும் அவனை தனது கண்காணிப்பிலேயே விடும்படியும் சமயம் வரும் போதுதான் அவனைத் தட்டிவிடுவதாகவும் சங்கிலி உமாமகேஸ்வரனைக் கேட்டுக்கொண்டான்;.
உமாமகேஸ்வரனுக்கும் அவன் சொல்வது சரி என்று பட்டது. வசந்தனைத் தட்டுவதற்கு முன் மாணிக்கதாசனின் அதிகாரங்களைக் குறைத்து அவனுக்குச் சார்பான பொறுப்பாளர்களை அவர்களது பொறுப்புக்களிலிருந்து அகற்றிவிட்டு தனக்கு எப்போதும் விசுவாசமாக நடக்கக்கூடிய சங்கிலியின் ஆட்களைப் பொறுப்பாகப் போட அவர் தீர்மானித்தார்.
முகாம்களின் நிர்வாக அமைப்பு முறையையும் முற்றாக மாற்றி ஒவ்வொரு முகாமையும் கண்காணிப்பதற்கென்று ஒவ்வொரு கண்காணிப்புக்குழுக்களை அமைக்கவும் அவர் முடிவு செய்தார். முகாம்களிலேயே தங்கியிருக்கும் இந்தக் கண்காணிப்புக்குழுக்கள் தான் அனைத்து ஆயுதங்களுக்கும் பொறுப்பாக இருக்கும் முகாம் பொறுப்பாளர்கள் இந்தக் கண்காணிப்புக் குழுவுக்கு கட்டுப்பட்டவர்கள். எல்லாக் கண்காணிப்புக் குழுக்களும் தனது நேரடிக்கட்டுப்பாட்டுக்குள் இயங்க வேண்டும் என்று அதிகாரங்களை வரையறை செய்தார்.
முள்ளிக்குளம் பொறுப்பாளர் சங்கிலிக்கு நம்பிக்கையானவர் அதுபோல் குஞ்சுக்குளம் பொறுப்பாளரும் மாணிக்கதாசனுக்கு எதிரான பாருக் ஆதரவாளர். செட்டிக்குளம் பொறுப்பாளர், வவுனியா நகரப் பொறுப்பாளர் ஆகியோரே மாணிக்கதாசனின்; ஆட்கள். தன்னால் உடனடியாக அந்த இரு பொறுப்பாளர்களுக்கும் வேறு பொறுப்பு கொடுப்பதாகவும் அவர்களது இடத்திற்கு வேறு இருவரை (சங்கிலியன் ஆட்கள் ) நியமிப்பதாகவும் கடிதம் எழுதி சங்கிலியிடம் கொடுத்து அவனை முள்ளிக்குளத்திற்கு திரும்பிப்போய் நிலைமையை சீர் செய்யும்படியும் மாணிக்கதாசன்; தொடர்பான பிரச்சினைகளுக்கும், முள்ளிக்குளம் கொலைக்கும் விசாரணைக்குழு ஒன்று அமைத்து விசாரிக்கப்படும் என்று சொல்லும்படியும் சொல்லி அனுப்பினார்.
இதற்கிடையில் நுவரெலியாவிலிருந்து ஜே.வி.பி. தலைவர்கள் தங்களை உடன் வந்து சந்திக்கும்படி உமாமகேஸ்வரனுக்கு தகவல் அனுப்பியிருந்தனர். அப்போது நடக்கவிருந்த ஜனாதிபதித் தேர்தலில் பிரேமதாசாவை ஆதரிப்பதா, அல்லது தேர்தலை முற்றாக நிராகரிப்பதா என்பதில் அவர்களுக்குள்ளேயே (ஜேவி.பி) பிரச்சினை இருந்தது. இதில் உமாமகேஸ்வரன் யாரை ஆதரிக்கின்றார் என்பதை அறிய அவர்கள் விரும்பினார்கள்.
உமாமகேஸ்வரனுக்கு அவரது முகாம் பிரச்சினைகள் பெரும் தலையிடியாக இருந்தாலும் ஜே.வி.பி.யினரது அழைப்பு அவற்றைவிட முக்கியமானதாகப் பட்டது. அவர் அன்றே ராபினை அழைத்துக் கொண்டு நுவரெலியாவிற்குச் சென்றார்.
மறுநாள் காலை பத்து மணிக்கு நுவரெலியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர் ஒருவர் வீட்டில் ஜே.வி.பி.யினருடனான அந்தச் சந்திப்பு நடந்தது. ஜே.வி.பி.யின் தரப்பில் ரோஹண விஜயவீராவும், உபதிஸ்ஸ கமநாயக்காவும், சரத் ரூபசிங்க என்பவரும் கலந்து கொண்டனர். புளட்டின் சார்பில் ஜே.வி.பி தொடர்பாளரும் மலையகப் பொறுப்பாளருமாகிய கதிரவனும் உமாமகேஸ்வரனும் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்புத்தான் விஜய வீர கமநாயக்கா, உமாமகேஸ்வரன் மூவரும் கொலை செய்யப்பட முன் சந்தித்த இறுதிச் சந்தர்ப்பமாகும். ஜே..வி.பி.க்கு ஜனாதிபதித் தேர்தலை முற்றாகப் பகிஸ்கரிக்கும் நோக்கம் இருக்கவில்லை. தேர்தலில் குழப்பத்தை உண்டுபண்ணி , அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தி , ஆட்சியைக் கைப்பற்றுவது அவர்களது நோக்கமாக இருந்தது. விஜய வீர, சிறிமாவோவை விட பிரேமதாசாவை ஆட்சிக்குக் கொண்டு வருவதுதான் நல்லது என்று கருதினார்.
சிறிமாவோ ஓரளவுக்கு படித்தவர் அரசியல் பாரம்பரியம் உள்ளவர் . ஏற்கனவே பிரதமராக இருந்த அனுபவம் உண்டு. இந்தியாவுடன் நெருக்கமான தொடர்பு உள்ளவர். ஆனால் பிரேமதாசா படிக்காதவர் 5ம் வகுப்பு அரசியல்வாதி, அவருடைய பலம் அவரைச்சுற்றியிருக்கும் குண்டர் படைதான். அந்தக் குண்டர் படையின் முக்கிய தலைவர்களைத் தட்டிவிட்டால், பிரேமதாசாவைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியை சுலபமாக கைப்பற்றிவிடலாம் என்று தனது கருத்துக்கு அவர் விளக்கம் சொன்னார்.
ஆனால் உபதிஸ்ஸ கதநாயக்கா, சிறிமாவோவை ஆட்சிக்குக் கொண்டு வருவதுதான் நல்லது. அவரது கட்சிக்குள் தங்களுடைய ஆட்கள் இருக்கின்றார்கள். கட்சிக்காரரை வைத்தே, சிறிமாவோவை விழுத்திவிடலாம் என்று மாறுபட்ட கருத்தைச் சொன்னார். கமநாயக்காவின் கருத்தையே உமாமகேஸ்வரனும் ஆதரித்தார்.
ஐ.தே.கட்சி தொடர்ந்து ஆட்சியிலிருந்து வரும். கட்சி. அவர்களிடம் பணப்பலம் மட்டுமல்ல, பாதுகாப்புப்படைகளிலும் அவர்களுடைய ஆட்கள்தான் இருக்கின்றார்கள். சிறிமாவோ பதவிக்கு வரும் போது, அவருக்கு உடனடியாக பணபலம் கிடையாது. பாதுகாப்புப்படை உயர் அதிகாரிகளை மாற்ற முயற்சி எடுக்கும் போது பிரச்சினை வரும். அந்தச் சமயத்தில், சரியாக காய் நகர்த்தி ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தை நீங்கள் கைப்பற்றிக்கொள்ளலாம். இந்திய இராணுவத்தின் வருகைக்கு எதிராக இந்தத் தேர்தலை நீங்கள் பயன்படுத்தினால் ஆட்சிக்கு வருகின்ற எவரும் உங்களை அழிக்க இந்திய உதவியை நாட முடியாமல் செய்யலாம் என்று அவர் தனது கருத்தை விளக்கிச் சொன்னார்.
சுமார் 4 மணிநேரம் நடைபெற்ற அந்தச் சந்திப்பில் அரசியல் குண்டர்களை ஒழிப்பது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை குழப்புவதன் மூலம் மட்டுப்படுத்துவது முதலான பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்ட போதும் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுபற்றிதங்களது மத்திய குழுவில் கலந்து ஆலோசித்து தங்களது முடிவை உமாமகேஸ்வரனுக்குத் தெரிவ்ப்பதாகச் சொல்லிவிட்டு ஜே.வி.பி தலைவர்கள் சென்றுவிட்டனர்.

உமாமகேஸவரன் இவ்வாறு ஜே.வி.பி தலைவர்களுடன் பேச்சு நடந்து கொண்டிருந்த நேரத்தில், சங்கிலி கற்பிட்டி முள்ளிக்குளம் வழியாக செட்டிகுளம் சென்று உமாவின் கடிதத்தின் பிரகாரம் பொறுப்பாளர்களை மாற்றும் நடவடிக்கையை மேற்கொண்டான். மாணிக்கதாசன் எங்கே என்று அவன் கேட்ட போது ஐயாவையும் மற்றவரையும் விசாரிக்க அவன் குஞ்சுக்குளம் சென்றிருப்பதாக அங்குள்ளவர்கள் சொன்னார்கள்.
முள்ளிக்குளம் முருகதாசின் கொலை விவகாரத்தின் பின் உமாமகேஸ்வரன் எடுத்த இன்னொரு முடிவு பொதுமக்கள் யாரையும் மறு அறிவித்தல் வரை கைது செய்யக்கூடாது. அவ்வாறு கைது செய்யப்பட்டு யாராவது சிறைவைக்கப்பட்டிருந்தால் அவர்களை உடன் விடுவிக்க வேண்டும் என்பதாகும். இதை அவர் சங்கிலியிடம் கொடுத்து அனுப்பிய கடிதத்தில் எழுதியிருந்தார்.
சங்கிலி, உடனே குஞ்சுக்குளம் பொறுப்பபளருடன் வோக்கிடோக்கியில் தொடர்பு கொண்டு ஐயாவையும் மற்றயவரையும் விடுவிக்கும்படியும் இது உமாமகேஸ்வரனின் உத்தரவு என்றும் தெரிவித்தான். சங்கிலி சொன்னதால் குஞ்சுக்குளம் பொறுப்பாளர் உடனேயே அவர்கள் இருவரையும் அழைத்து அவர்களது உடமைகளை அவர்களிடம் கொடுத்து பிரச்சினை இல்லை நீங்கள் போகலாம், உங்களை விடுவிக்கும்படி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது என்று சொன்னார்;.

அவர்கள் மிகுந்த சந்தோசத்துடன் அங்கிருந்தவர்களுக்குச் சொல்லிவிட்டு குஞ்சுக்குளம் சந்திக்கு பஸ் ஏறுவதற்கு புறப்பட்டனர். அவர்கள் சென்ற ஒரு 5 நிமிடத்தில் அங்கு வந்த மாணிக்கதாசன் முகாம் பொறுப்பாளரிடம் எங்கே அவர்கள் என்று வினவினான்.
இப்பத்தான் அவர்களைவிட்டனாங்கள். பெரியவர் (உமா) விடச்சொல்லியிட்டார் என்றான் அவன். மாணிக்கதாசனுக்கு அடக்கமுடியாத கோபம் வந்தது. ஆரட்டைச் சொல்லி அனுப்பினவர் என்று திரும்பக் கேட்டான். சங்கிலியிடம் என்று பொறுப்பாளர் சொல்ல , அவன் அங்கு நிற்கவில்லை. தான் வந்த ஜீப்பை எடுத்துக் கொண்டு குஞ்சுக்குளச் சந்தியை நோக்கி விரைந்தான்.
குஞ்சுக்குளம் சந்தியில் ஒரு 200 மீற்றர் தூரத்தில் ஐயாவும் அவரது சகாவும் மகிழ்ச்சியோடு சிரித்துக்கதைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். மாணிக்கதாசன் தனது ஜீப் சாரதிக்கு வேகத்தை குறைக்கும்படி சொல்லிவிட்டு தனது ரி 56 ரக துப்பாக்கியை ஓட்டோவில் விட்டு அவர்களைக் குறி வைத்து விசையை இழுத்தான்.
ஜீப் சத்தத்தோடு வெடிச்சத்தமும் கேட்டு அவர்கள் திடுக்கிட்டு திரும்பமுன் சரமாரியாகச் சன்னங்கள் அவர்களது உடலை த்துளைத்தன. இருவரும் சுருண்டு விழுந்தனா

காந்திதேசத்தின் மறுபக்கம்-09


09வில்பத்துக் காட்டுக்குள்ளிருந்து கடும் பசியோட திரும்பி வந்த ஒரு குழு செல்வரத்தினத்தையும், முருகதாசையும் இழுத்துவர இன்னொரு குழு
அங்கிருந்த சங்கக்கடையை பதம் பார்த்தது. பிஸ்கட் பெட்டிகள், சோடா கேஸ்கள், அரிசிமூட்டைகள் என்று எல்லாவற்றையும் அந்தக் குழுமுகாமுக்கு தூக்கிச் சென்றது.
இவற்றைவிட இன்னொரு குழு காட்டுக்குள் சென்று மான் ஒன்றை வேட்டையாடி வந்தது. மதியம் 1.00மணிக்கு மான் கறியுடன் சாப்பாடு முடிந்ததும் செல்வரத்தினத்தின் மீதும், முருகதாஸ் மீதும் விசாரணை ஆரம்பமாகியது.
முள்ளிக்குள முகாமின் வடகிழக்கு மூலையில் இருந்த பெரிய வாகை மரத்தின் கீழேயே விசாரணை நடந்தது. செல்வரத்தினமும், முருகதாசும் தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்றும், புளொட்டினது எதிரிகள் அல்ல என்றும் 20 பேருக்கு சாப்பாடு சமைத்து எடுத்துவர முடியாத காரியம் என்றும் அப்படி பெருமளவுக்கு சாப்பாடு சமைப்பதைக் கண்டாலே இந்திய இராணுவம் தங்களை கைது செய்துவிடும் என்ற பயத்திலேயே தாம் சாப்பாடு கொண்டு வர மறுத்ததாக தங்கள் நிலைமையை எடுத்துச் சொன்னார்கள்.
விசாரித்தவர்களுக்கு அவர்கள் சொன்னது சரி என்றுபட்டது. ஆனால் தங்களுடைய ஆட்களுக்கு முருகதாஸ் அடித்ததை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அதற்காக அவனுக்கு தண்டனை கொடுக்காவிட்டால் பின்பு மற்றவர்களுக்கு இது ஒரு முன்மாதிரியாய் போய்விடும் என்று அவர்கள் நினைத்தார்கள். செல்வரத்தினத்தை போகலாம் என்று அனுப்பிவிட்டு முருகதாசை நிறுத்தி வைத்து "எதற்காக நீ எங்கட ஆட்களுக்கு அடிச்சனி" என்று அவர்கள் கேட்டார்கள்.
"ஐயோ, அண்ணாமாரே நான் சத்தியமாய் அவைக்கு அடிக்கல்ல அவை தான் எனக்கு அடிச்சவை. அடி தாங்க ஏலாமல் நான் அதை தட்டிவிட்டனான்" என்று மன்றாடும் பாணியில் அவர் அவர்களுக்கு பதில் சொன்னான்.
“டே, பொய் சொல்லாத உண்மையில் நீ அடிச்சனிதானே" என்று அவர்கள் மீண்டும் மிரட்டிக் கேட்க முருகதாசுக்கு அழுகை வந்துவிட்டது. ஐயோ, சத்தியமாய் நான் அடிக்கல்ல என்று அழுது கொண்டு சொன்னான். விசாரித்தவர்களுக்கு கோபம் வந்துவிட்டது.
3 பேர் அந்த விசாரணைக்குழுவில் இருந்தார்கள். அதில் சங்கிலியினது முன்னால் பாதுகாப்புப் படையிலிருந்த சுட்டி தன்னுடைய ரி 56 ரக ரைபிளை லோட் பண்ணி சேப்ரி லொக்கில் (வெடிப்பதற்கான விசையைத் தடுக்கும் சாதனம்) விட்டுவிட்டு செம்மறி நாயே என்னடா எங்களுக்கு காது குத்தவா பார்க்கிறாய் உண்மையைச் சொல்லு நீ எல்.ரி.ரி.யினுடைய ஆள் தானே. சொல்லேல்லேயோ சுட்டுவிடுவன் என்று பல்லை நறுமி கண்களை உருட்டிக் கொண்டு டிகரில் (விசையில்) கையை வைத்துவிட்டான். அடுத்த கணம் டுமில் என்ற சத்தத்துடன் நெருப்பைக் கக்கிக் கொண்டு குண்டு சீறிப்பாய்ந்தது.
"ஐயோ, அம்மா" என்று அலறியவாறு முருகதாஸ் நிலத்தில் விழுந்தான் உயிர் போய்விட்டது. நெஞ்சுப்பகுதியில் இருதயப் பகுதியை பிய்த்துக்கொண்டு குண்டு வெளியேறி சென்றுவிட்டது.
ஒரு 100 மீற்றர் தூரம் சென்றிருக்காத செல்வரத்தினம் "ஐயோ, என்ர தம்பி ராசா" என்று அலறிக்கொண்டு திரும்பி ஓடி வந்தார். சுட்டி திகைத்துப் போய்விட்டான். 'சேவ்ரி லொக் போட்டுத்தானே இருந்தேன், எப்படி வெடித்தது' என்று அவன் தனது துப்பாக்கியைத் தூக்கிப் பார்த்தான். விசாரணைக்குழுவில் இருந்த மற்ற இருவரும் பேய் அறைந்த மாதிரி ஒன்றும் செய்ய முடியாமல் திகைத்துப் போய்விட்டார்கள்.
முகாமில் மற்றப் பகுதியில் தங்கியிருந்த சங்கிலி உட்பட மற்றவர்கள் தங்களுடைய துப்பாக்கிகளைத் தூக்கிக் கொண்டு பதற்றத்துடன் அங்கே ஓடிவந்தார்கள். அதற்குள விசயம் அறிந்த மற்றவர்களும் அங்கு வந்து கூடிவிட்டார்கள். முருகதாசின் இளம் மனைவி கணவனின் உயிரற்ற உடல் மீது விழுந்து கதறிய கதறல் பார்க்க பரிதாபமாக இருந்தது. புளொட் குழுவில் வாய் திறந்து யாரும் எதுவும் பேசவில்லை. அவர்களது மௌனம் ஊரவர்களுக்கு மேலும் பயத்தைத் தந்தது.

முகாம் பொறுப்பாளரும் சங்கிலியும் சுட்டியை விசாரித்தனர். அவன் தான் மிரட்டுவதற்காகத்தான் துப்பாக்கியை காட்டியதாகவும், அது வெடிக்கும் என்று நினைக்கவில்லை என்றும் தனது துப்பாக்கியின் சேப்டி லொக் வேலை செய்யவில்லை என்றும் சொன்னான்.
சங்கிலி அவனது துப்பாக்கியை வாங்கிப் பரிசோதித்து பார்த்த போது அதன் சேப்டி லொக் உடைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. உன்ர துவக்கின்ரை சேப்டிலொக் உனக்குத் தெரியாமல் எப்படி உடையும் என்று சங்கிலி சுட்டியைக் கேட்க, அவன் அதுதான் எனக்கும் தெரியவில்லை என்றும் , தான் சாப்பிடப் போகும்போது தனது துப்பாக்கியை ஆயுத தளபாடப் பகுதியில் வைத்துவிட்டுச் நென்றதாகவும் , அங்கு யாரோ வேண்டுமென்று இதை உடைத்திரக்க வேண்டும் என்றும் , இதில் ஏதோ சதி இருக்கின்றது என்றும் சொன்னான். சாப்பாட்டு நேரத்தில் ஆயுதத்தளபாடக் பகுதிக்கு போனது யார் என்று இரகசியமாக விசாரித்துப் பார்த்தும் யாரையும் கண்டு பிடிக்க முடியவில்லை. சங்கிலி இது மாணிக்கதாசனின் காரியமாகத்தான் இருக்க வேண்டும் என்றும் , அவன்தான் தனது ஆட்களைக் கொண்டு இரகசியமாக இதை செய்திருக்கலாம் என்றும் சந்தேகப்பட்டான்.
இந்த சந்தேகத்தை உறுதி செய்ய மாணிக்கதாசனின் ஆட்கள் யார் யார் முள்ளிக்குள முகாமில இருக்கிறார்கள் என்று சங்கிலியும் அந்த முகாம் பொறுப்பாளரும் சேர்ந்து கண்டுபிடிக்க முயன்றனர். வசந்தன் குழு தாங்கள் எதுவும் தெரியாத நல்ல பிள்ளைகள் போல நடந்து கொண்டு மாணிக்கதாசனின் ஆட்களை தேடும் சங்கிலியின் முயற்சிக்கு ஒத்துழைத்தனர்.
முள்ளிக்குளம் இப்படி அமளிதுமளிப்பட்டுக் கொண்டிருக்கும் போது முள்ளிக்குளத்துக்குக் கிழக்கே இருந்த புளொட்டின் மற்றொரு முகாமான குஞ்சுக்குளத்தில் இன்னொரு சம்பவம் நடந்தது.
மன்னாரிலிருந்து மதவாச்சி செல்லும் சாலையிலுள்ள குஞ்சுக்குளம் சந்தியில் புளொட்டினது சோதனைச்சாவடி இருந்தது. அந்த சாவடி தான் குஞ்சுக்குளம் முள்ளிக்குளம் முகாம்களுக்கான உணவு விநியோகச் சாவடி என்றும் சொல்லலாம். மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் வாகனங்களும் (லொறி முதல் கார் வரை) கொழும்பிலிருந்து மன்னாரை நோக்கி வரும் வாகனங்களும் இந்தச் சோதனைச்சாவடியில் சோதனை செய்யப்படும். இந்தச் சோதனையின் போது சோதனைக் குழு கேட்கும் பணத்தை மட்டுமல்ல அவர்கள் விரும்பிய சாமான்களையும் கொடுத்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்.
கருவாட்டு சிற்பங்கள், அரிசி மூட்டைகள், கொக்கோ கோலா, பன்ட்ரா கேசுகள், ரின்பால் மற்றும் உலர் பால்மா பெட்டிகள், உடுப்புகள், அவர்கள் எதையெல்லாம் விரும்புகின்றார்களோ அதை எல்லாம் பயணக்காரர்கள் கொடுத்துவிட்டுத்தான் செல்ல வேண்டும். இவையெல்லாம் பயணத்திற்காக அவர்கள் அறவிடும் வரிப்பணத்தில் அடக்கமில்லை. என்ன தம்பியவ இப்படி அநியாயம் செய்யிறியள் என்று கேட்கக்கூட வேண்டாம் தங்களுக்குள் முணுமுணுத்தாலே போதும் அடுத்த கணம் முணுமுணுத்தவர்கள் புலிகளின் ஆள் என்று முத்திரை குத்தப்பட்டு அடித்து உதைத்து இழுத்துச் செல்லப்படுவதோடு அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு விடும்.

அதுபோல் அவ்வழியால் வரும் பஸ்கள், மினி பஸ்கள், கார்கள், வான்கள் எல்லாம். நிறுத்தி வைக்கப்பட்டு அவற்றில் புலிகளின் ஆதரவாளர்கள் (அதாவது புளொட்டிற்கு எதிரானவர்கள்) வருகின்றார்களா என்று தீவிரமாக கண்காணிக்கப்படும். இந்தக் கண்காணிப்பாளர்கள் வரும் போது யாராவது பயத்தில் முளிசிவிட்டால் போதும் உடனே அவர்கள் புலிகள் என்று முத்திரை குத்தப்பட்டு விடுவார்கள். அவர்களது பயணம் கொழும்பை நோக்கியோ மதவாச்சியை நோக்கியோ இருக்காது. புளொட்டின் பிரதான முகாமாக செட்டிகுளத்தை நோக்கித் தான் இருக்கும்.
வவுனியாவிலும் சரி குஞ்சுக்குளத்திலும் சரி வரிவசூல் மற்றும் சோதனைச் சாவடிகளை நிர்ணயிக்கும் பொறுப்புக்களை வன்னிமாவட்ட இராணுவ பொறுப்பாளரான மாணிக்கதாசன் தான் நேரடியாக கையாண்டு வந்தான். சோதனைச் சாவடிகளில் கைது செய்யப்படுபவர்கள் குஞ்சுக்குள முகாமிலோ, முள்ளிக்குள முகாமிலோ வைக்கப்படுவதில்லை.
மாணிக்கதாசனின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள செட்டிகுள முகாமிற்கே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். அந்த முகாமில விசாரணைக் கைதிகளை விசாரிப்பதற்கென்றே ஒரு தனியான வதைகூடம் இருந்தது. மாணிக்கதாசனுக்கு புலிகள் அல்லது புலிகளின் ஆதரவாளர்கள் என்று கருதப்படுகின்றவர்களைச் சீண்டி வதைத்து விளையாடுவதில் ஒரு தனி சந்தோசம். இது அவனுக்குள்ள ஒரு மனநோய் என்று கூடச் சொல்லலாம்.
புலி எதிர்ப்பு சாகசம் என்ற பெயரில் அவன்; செய்த இந்த மனிதவதைகளை நேரடியாகவும், பகிரங்கமாகவும் எதிர்த்தவர்களில் குஞ்சுக்குளம் முகாம் பொறுப்பாளராக இருந்த பாருக் என்ற கணேசலிங்கமும் ஒருவர். இவர் இயக்கத்தில் மாணிக்கதாசனுக்கு சமகாலத்தவர், போராளிகளில் நீண்டகாலம் சிறையில் இருந்தவரும் கூட. ஆனாலும் ஆனைக்கோட்டை காலத்திற்கு முன் இவர் ஈரோஸ் உறுப்பினராக இருந்தவர். அதையே இவருக்கான குறைவாக மாணிக்கதாசன் சொல்லிவந்தான்.
இந்தப் பின்னணியில் ஈரோஸ் இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினரான ஐயா என்பவரையும் இன்னொருவரையும் குஞ்சுக்குள சோதனை சாவடிக்குழு புலிகள் என்று சொல்லி பிடித்து வந்தது. அவர்களை முன்பே அறிந்திருந்த பாருக் அவர்கள் புலிகளல்ல ஈரோhஸ்காரர்கள் அவர்களை செட்டிகுளம் கொண்டு போக வேண்டாம். குஞ்சுக்குளத்தில் வைத்தே நான் விசாரிக்கின்றேன் என்று அழைத்துச் சென்றுவிட்டார்.
இது மாணிக்கதாசனை கோபமடையச் செய்துவிட்டது. அவன்; தனது அதிகாரத்தை பயன்படுத்திக் கேட்டும் பாருக் அவர்களை அவரிடம் ஒப்படைக்கவில்லை. உமாமகேஸ்வரன் சொன்னால் மட்டுமே அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என்று பாருக் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.
மாலைதீவு தாக்குதலுக்கான தயாரிப்பு நேரத்தில் இது நடந்ததால் உமாமகேஸ்வரன் இதை கவனத்தில் எடுக்கவில்லை. பாருக் மாலைதீவில் சென்று மாபட்டிக் கொண்டதும் மாணிக்கதாசனுக்கு வசதியாகப் போய்விட்டது. ஆனால் உடனடியாக அவன் காரியத்தில் இறங்கவில்லை.
தற்போது தனக்கெதிராக குற்றம் சுமத்துபவர்களுக்கு தன்னுடைய சக்தி என்ன என்பதை நிருபிக்க வேண்டிய தேவை அவனுக்கு ஏற்பட்டது. அதனால் குஞ்சுக்குளத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஐயாவையும் மற்றவரையும் கொலை செய்ய அவன்; அங்கு புறப்பட்டுச் சென்றான்

காந்திதேசத்தின் மறுபக்கம்-08

08
மாலைதீவு விவகாரம் தோல்வியில் முடிவடைந்த உடனேயே றோ உமாமகேங்வரனை கொல்லுமாறு ENDLF க்கு சமிக்ஞை காட்டியது. ENDLF இன் நம்பிக்கை நட்சத்திரமான வசந்தன் முள்ளிக்குளத்தில் முடக்கப்பட்டிருந்ததும், சங்கிலி அங்கு உடன் இருந்ததும் அதற்குப் பாதகமான விடயங்களாக இருந்தன.
சங்கிலி பொறுப்பு எதுவும் இல்லால் சாதாரனமான உறுப்பினராக இருந்தாலும் ஒரு பொறுப்பாளனுக்கு இருக்ககூடிய அதிகாரங்களைவிட அதிகளவு அதிகாரங்களை கொண்டவராகவே இருப்பதாக மற்றவர்கள் நம்பினார்கள்.
ஒரு பொறுப்பாளருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைவிட அதிகளவு மரியாதையை அவர்கள் அவருக்கு கொடுத்தனர். நீண்ட நாட்கள் வேலை எதுவும் இன்றி அவர் அங்கு தங்கியிருந்தது அங்கிருந்தவர்களக்கு பயத்தையும் சந்தேகங்களையும் உருவாக்கியது.

ஏற்கனவே வசந்தன், சங்கிலி மலையத்தில் கொலைப்படை ஒன்றை உருவாக்கி வைத்திருக்கின்றான்; என்று பிரச்சாரம் செய்தது வேறு அவர்களுக்கு கிலியை உண்டாக்கியது. அதிலும் சங்கிலி தனது முன்னைய பாணியிலல்லாதது கீழ் மட்ட உறுப்பினர்களுடனும் சகஜமாக நெருங்கிப் பழகியது பலருக்கு வியப்பாக இருந்தாலும் அதுவே இனம்புரியாத ஒரு அச்சத்தையும் கொடுத்தது.
வசந்தனைப் பொறுத்தவரை தான் எதற்காக முள்ளிக்குளத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றேன் என்பதை அறியவில்லை. தான் நடாத்தி முடிக்க திட்டமிட்டிருக்கின்ற விடயமும் உமாமகேஸ்வரனுக்குத் தெரியும் என்பதும் அவருக்குத் தெரியாது. ஏதோ அவன் பொறுப்பாக இருந்து பிரச்சாரப் பிரிவு கணக்குகளில் பிரச்சினை என்பதாலேயே அங்கு அனுப்பப்படுவதாக உமாமகேஸ்வரன் அவனுக்குச் சொல்லியிருந்தார்.
எனவே வசந்தன் சங்கிலிக்கு சந்தேகம் வராத விதத்தில் நடந்து கொண்டு அவனது நம்பிக்கையைப் பெறும் அதே நேரத்தில் தனக்கு விசுவாசமானவர்களை வைத்து மிக இரகசியமாக சங்கிலிக்கெதிரான குழு ஒன்றையும் தூண்டிவிட முயற்சி செய்தான்;.
சங்கிலியை அங்கிருந்து எடுப்பிக்கும் நிர்ப்பந்தத்தை உமாமகேஸ்வரனுக்கு கொடுக்கும் அதே நேரத்தில் முகாம்களில் குழப்பத்தை உண்டுபண்ணி அவர் முள்ளிக்குளத்திற்கு வரவேண்டிய தேவையை உருவாக்கி அங்கு வைத்து அவரை கொலை செய்வது என்பது வசந்தனின் திட்டம். தனது இந்தத் திட்டத்தை செயற்படுத்த அவர் தன்னுடன் ஆறு பேரை கூட்டுச் சேர்த்துக் கொண்டதாக நம்பப்படுகின்றது.
இந்த ஆறு பேரும் பின்பு நடந்த உமாமகேஸ்வரன் கொலையில் சம்மந்தப்பட்டவர்களல்ல. பின்பு உமாமகேஸ்வரனைக் கொலை செய்தவர்கள் அன்று வசந்தனின் நடவடிக்கைக்கு இடைஞ்சலாக இருந்து உமாமகேஸ்வரனைப் பாதுகாத்தவர்கள்.
ஆனால் அன்று வசந்தனோடு சேர்ந்து உமாவைக் கொலை செய்ய முயன்றவர்கள் இன்று உமாமகேஸ்வரனை கொலை செய்தவர்களை துரோகிகளாக்கி தங்களை உமாமகேஸ்வரனது விசுவாசிகள் என்றும் அவரது கொள்கை வழி நடப்பவர்கள் என்றும் சொல்லி கதையையே தலைகீழாக மாற்றிவிட்டார்கள்..

வசந்தன் குழுவினர் தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு சாதகமான சூழ்நிலை உருவாக்குவதற்கான காய் நகர்த்தலின் முதல் கட்டமாக இயக்கத்தின் முக்கிய இராணுவ பொறுப்பாளர்களில் ஒருவரான மாணிக்கதாசனை குறிவைத்தார்கள்.
இந்த மாணிக்கதாசன் ஒரு காலத்தில் யாழ் ஆஸ்பத்திரி சுவர்களில் வீர வசனங்கள் எழுதி புகழ் பெற்றவன்;. ஆனைக்கோட்டை கிளிநொச்சித் தாக்குதல் காலத்திலிருந்தே இயக்கத்தின் முன்னணி உறுப்பினராக இருந்தவன்;. எப்போதும் சாகசங்கள் நிகழ்த்தி காட்ட வேண்டும் என்பதில் ஆர்வமுள்ளவன்;. லெபனான் பயிற்சிக் காலத்திலேயே இஸ்ரேலிய இராணுவத்தை அடித்து சாதனை நிகழ்த்திய தன்னை மாலைதீவு தாக்குதலுக்கு பொறுப்புத்தந்து அனுப்பாததையிட்டு அவன்; மிகவும்ம னஸ்தாபம் கொண்டிருந்தான்;.
அனுபவம் இல்லாதவர்களை அனுப்பியதால் தான் மாலைதீவுத் தாக்குதல் தோல்வியில் முடிந்தது என்று அவர் வெளிப்படையாகவே உமாமகேஸ்வரன் மீது விமர்சனம் வைக்கத் தொடங்கியிருந்தான்;.
ஏற்கனவே சங்கிலிக்கு அவனுக்கும் ஒத்துவருவதில்லை. தன்னுடைய நிர்வாகப் பகுதிக்குள் (மாணிக்கதாசனே PLOT வன்னி மாவட்டப போறுப்பாளர்) சங்கிலியை தங்கவைத்தது அவனுக்குப் பிடிக்கவில்லை. இது தன்னை அவமானப்படுத்த மேற்கொண்ட முயற்சி என்று அவர் மனம் புழுங்கிக் கொண்டிருந்தான்;.
ஆனால் உமாமகேஸ்வரன் மாணிக்கதாசனை மாலைதீவுக்கு அனுப்பாததும் , வன்னி மாவட்டத்திற்கு அப்பால் நடக்கும் இயக்க நடவடிக்கைகளில் பங்குபற்ற அழைக்காததற்கும் வேறு காரணம் இருந்தது.
மாணிக்கதாசன் சிறீலங்கா இராணுவத்துடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவன்;. அராலித்துறையில் கொலையுண்டு போன ஜெனரல் கொப்பேகடுவ உட்பட சிறிலங்கா இராணுவத்தில் உள்ள பல்வேறு முக்கிய அதிகாரிகள் அவனுக்கு நண்பர்களாக இருந்தார்கள். *
உமாமகேஸ்வரன் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய போது ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை சந்திப்பதற்கும் ஏற்பாடு செய்தவன்; அவன்தான்.
அவ்வாறே 1984இல் உமாமகேஸ்வரன் அத்துலத்முதலியுடன் நட்புக் கொள்வதற்கும் பாலம் அமைத்து கொடுத்தவனும்; அவன் தான். அவனது தாய் ஒரு சிங்களவராக இருந்ததும்; அவனது தாய்வழி உறவினர்கள் பலர் சிறிலங்கா இராணுவத்தில் அதிகாரிகள் தரத்தில் இருந்ததுமே அவனுக்கு இதெல்லாம் சாத்தியமானதாக ஒரு முறை உமாமகேஸ்வரனை தெரிவித்திருந்தார்.
எங்கே அவன மூலம் சிறிலங்கா இராணுவத்திற்கும் அரசுக்கும் தகவல் தகவல் போய்விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே மாலைதீவு மற்றும் JVP நடவடிக்கைகளை உமா அவனுக்குத் தெரிவிக்கவில்லை.
மாணிக்கதாசன் மாலைதீவு விரக்தியால் பேசித்திரிந்த பேச்சுக்களை அவதானித்த வசந்தன் குழுவினர் இந்த முரண்பாட்டைப் பயன்படுத்தத் தீர்மானித்தனர். வன்னி மாவட்டத்தில் வரி வசூல் மூலம் சேகரித்த 60 லட்சம் ரூபாவை சுருட்டிக் கொண்டு மாணிக்கதாசன் கனடாவுக்குச் செல்லப் போவதாக முதலில் அவர்கள் ஒரு புரளியைக் கிளப்பிவிட்டார்கள்.

அடுத்து அவன் இயக்க உறுப்பினர்களுடன் தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுவதாகவும் வெள்ளைநிற பொடியளை அவன் இரவு தன் படுக்கைக்கு அழைத்துச் செல்கின்றார் எனவும் கதை பரப்பப்பட்டது. கேட்பவர்கள் நம்பும்படியாக சுவாரசியமாகப் பரவிய இந்தக் கதைகளைக் கேட்ட கீழ் மட்ட உறுப்பினர்கள் பலரும் அவனைக் கைது செய்ய வேண்டும், தண்டிக்க வேண்டும் என்று பலமாகக் குரலெழுப்பினார்கள் .
மாணிக்கதாசனது சாகசங்களால் கவரப்பட்டு எப்போதும் அவருடனேயே சுற்றிக் கொண்டிருக்கும் அவனது அபிமானிகள் கூட இதனால் அவனுடன் நெருங்கப் பழகப் பயந்தார்கள். அவனுடன் நெருங்கிப்பழகினால் தங்களையும் மற்றவர்கள் வேறு விதமாக எண்ணிவிடுவார்கள் என்று அவர்கள் அஞ்சினார்கள்.
இந்தச் சூழ்நிலையில் றோவின் ஆலோசனையின் பேரில் சங்கிலியைக் கைது செய்து வசந்தன் குழுவின் நடவடிக்கையை இலகுவாக்குவதற்காக இந்திய அமைதிப்படை மீண்டும் ஒரு தடைவ முள்ளிக்குளம் பகுதியை முற்றுகையிட்டது.
மாலைதீவு தாக்குதல் நடப்பதற்கு முன்பு புலிகள் அப்பகுதிக்கு வராமல் தடுப்பதற்காகவும் PLOT யையும் தாம் கண்காணிக்கின்றோம் என்று பாசாங்கு செய்யவும் இந்திய அமைதிப்படை அந்தப்பகுதிக்கு வந்தது. அப்போது தேடுதல் எதுவும் நடத்தாமலே பெயருக்கு அப்பகுதியை சுற்றி வந்துவிட்டு புலிகளின் வருகையை தடுப்பதற்காக முள்ளிக்குளத்திற்கு வரக்கூடிய பிரதான பாதைகளில் மட்டும் காவல் கண்காணிப்பு நிலைகளை அமைத்திருந்தது.
மாலைதீவுக்குழு புறப்பட்ட அன்றைய தினமே அக்காவல் நிலைகளும் அகற்றப்பட்டுவிட்டன. ஆனால் இந்தத்தடைவ அதிகாலை 6 மணிக்கே அப்பகுதிக்கு வந்த இந்திய இராணுவம் ஒவ்வொரு பகுதியாக சுற்றிவளைத்து வீடு வீடாக சல்லடை போட்டுத் தேடியது.
தகவல் அறிந்த புளொட் குழு தங்களது ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அருகிலிருந்த வில்பத்துக் காட்டுக்குப் பின்வாங்கி ஓடியது. அப்படி ஓடும் போது ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது.
முள்ளிக்குளத்திலிருந்து வில்பத்துக் காட்டுக்குள் நுழைய வேண்டுமானால் இடுப்பளவு தண்ணீருள்ள ஒரு ஆற்றைக்கடக்க வேண்டும். அந்த ஆற்றில் சகதி அதிகம். அதனால் கொஞ்சம் கஸ்டப்பட்டுத்தான் கடக்க வேண்டும். 92 பேர் அடங்கிய இவர்களது குழு வரிசையாக ஆற்றைக் கடந்து கொண்டிருந்த போது முன் வரிசையில் சென்றவர்கள் அக்கரையில் கால்வைத்து ஒரு பத்துப் பதினைந்து அடி எடுத்து வைக்க, ஒரு பெரிய காட்டு யானை ஒன்று தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றை நோக்கி வந்தது. இவர்கள் பயத்தில் ஆனையடா, ஆனையடா எனக் கத்திக் கொண்டு திரும்பி ஓடிவர பின்னால் பின்னால் வந்து கொண்டிருந்தவர்களுக்கு அது அது ஆமியடா ஆமியடா என்று கேட்டது. காட்டுப்பக்கமும் வந்து ஆமி சுற்றி வளைத்துவிட்டானாக்கும் என்று எண்ணிக் கொண்டு வந்த வழிக்கு திரும்பிச் சிதறி ஓட பலர் சேற்றுக்குள் விழுந்து எழும்பினார்கள். இறுதியில் உண்மை தெரிந்து ஒரு வழியாக ஆற்றைக் கடந்து வில்பத்து காட்டுக்குள் சென்று தங்கினார்கள்.
நேரம் மாலை 5 மணியைத் தாண்டியும் காலை வந்த இந்திய இராணுவம் திரும்பவே இல்லை. காட்டிற்குள் இருந்தவர்களை பசி வாட்டி எடுத்தது. இருவர்; காட்டு வழியாக கடற்கரையோரமாக இருந்த தென்னந்தோப்பில் இளநீர் பறித்து வரலாம் என்று சென்றனர். அப்போது செல்வரத்தினம் என்ற நடுத்தர வயதுக்காரரும் முருகதாஸ் என்ற அவரது மருமகனும் இந்திய இராணுவத்திடம் அனுமதி பெற்றுக் கொண்டு கடலுக்கு மீன்பிடிக்க வந்தனர் அவர்களிடம் இந்திய இராணுவம் பற்றி விசாரித்த புளொட்காரர்கள் தங்களுக்கு சாப்பாடு சமைத்து எடுத்த வரக் கேட்டனர்.

அதற்குத் தாங்கள் கிராமத்துக்குள் திரும்பிப் போனால் இந்திய ஆமி தங்களைப் பிடித்து விடுவார்கள் என்று சொல்லி அவர்கள் மறுத்து
விட்டார்கள்.
புளொட்காரர்களுக்கு வந்ததே கோபம் . அருகிலிருந்த பெரியதொரு பூவரசம்கட்டையை எடுத்து இருவரையும் அடிஅடியென்று அடித்துவிட்டார்கள்.

இளைஞரான முருகதாஸ் இவர்கள் துவக்கு வைத்துக் கொண்டு ஏன் தடியால் அடிக்க வேண்டும் என்று யோசித்துப் பார்த்தான். துவக்கு வெடிச்சத்தம் கேட்டால் இந்தியன் ஆமிக்கு இவர்கள் இங்கே இருப்பது தெரிந்தவிடும். அதனால் வெடிவைக்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் எதிர்த்துத் தாக்க ஆரம்பித்தான்.

அதற்குள் அங்கே வந்த வேறு மீனவர்கள் நிலைமையின் பாதகத் தன்மையை புரிந்து கொண்டு ஆமி ஆமி என்று கத்தினார்கள். புளொட்காரர்கள் உண்மையில் இந்தியன் ஆமி வருவதான நினைத்துக் கொண்டு திரும்பி ஓடிவிட்டார்கள்.

24 மணிநேரமும் முள்ளிக்குளத்தில் தங்கியிருந்து தேடுதல் நடத்திய இந்திய இராணுவத்தினர் சங்கிலியை மட்டுமல்ல எந்த ஒரு புளொட் உறுப்பினரைக்கூட பிடிக்கவில்லை. அங்கு தொடர்ந்திருந்தால் புளொட் எதிர்த்துத் தாக்கக் கூடும் என்ற அச்சம் அவர்களுக்கு இருந்தது. புலிகளும் அந்த இடத்திற்கு வந்து தாக்கக்கூடிய சாத்தியமும் இருந்தது. எனவே, புலிகள், புளொட் என்று இரண்டு பக்கத்தாலும் ஆபத்து வரக்கூடிய ஒரு பகுதியில் தாங்கள் தங்கியிருப்பது பாதுகாப்பற்றது எனக்கருதி மறுநாள் காலை புளொட்டிற்கு உதவி செய்த ஒரு சில அப்பாவிகளை பிடித்துக்கொண்டு அவர்கள் திரும்பி விட்டார்கள்.
கடும் பசியோடு காட்டிற்குள முடங்கிக்கிடந்த புளொட் குழு முள்ளிக்குளக்காரர்கள் யாரும் தங்களுக்கு உதவி செய்யவில்லையே, சாப்பாடு கொண்டுவரவில்லையே என்ற ஆத்திரத்தோடு உள்ளுக்குள் வந்தது. வந்து முதல் வேலையாக செல்வரத்தினத்தையும் அவரது மருமகன் முருகதாசையும் நீங்கள் புலிகளின் ஆட்கள் உங்களை விசாரிக்க வேண்டும் என்று சொல்லி முகாமுக்குள் இழுத்துச் சென்றனர்.
முருகதாசுக்கு திருமணமாகி 6 மாதம் தான் ஆகியிருந்தது. அவரது மனைவி புளொட்காரரின் காலில் விழுந்து “என்ர மனுசனை ஒன்றும் செய்துபோடாதேங்கோ, விட்டிடுங்கோ உங்களைக் கும்புடுறன்” என்றுக் கெஞ்சிக் கேட்க காலால் அவளை உதைத்து தள்ளிவிட்டுச் சென்றனர்.
விசாரணை என்றவுடன் வசந்தன் குழு சுறுசுறுப்படைந்தது. முகாமில் விசாரணை நடத்துவது யார் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்களில் ஒருவர் இந்தியாவின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்த சங்கிலியின் பாதுகாப்புப்டையில் இருந்தவர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விசாரிப்பவர்களைக் கொண்டே விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்களை கொலை செய்து, சங்கிலிதான் கொலையின் சூத்திரதாரி என்று மற்றவர்கள் நம்பும்படியாக செய்யத் திட்டமிட்டார்கள்

காந்தி தேசத்தின் மறுபக்கம்-07

07
20 நிமிடங்கள் அந்த விமானம் அரபுக்கடலின் மீது எரிபொருளை தீர்ப்பதற்காக பறந்து கொண்டிருந்த நேரத்தில் அதிலுள்ள கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் விமானம் பத்திரமாக கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
பாகிஸ்தானிய குடிவரவு பகுதியிலிருந்து எந்தவித பிரச்சினையும் இல்லாமல் ராபினுடன் வெளியேறிய உமாமகேஸ்வரன் கராச்சியின் புறநகர் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் அன்று இரவு தங்கினார். மறு நாள் காலை 9.00 மணிக்கு வாடகை கார் ஒன்றை பிடித்துக்கொண்டு கராச்சி நகரத்தின் மையப்பகுதியிலருந்த அஹ்ரம் நகருக்குச் சென்றார். அங்கிருந்த பங்களாவிலேயே உமாவினது பாலஸ்தீன நண்பர் தங்கியிருந்தார்.

அவருடன் தொலைபேசியிலும், கடிதம் மூலமும் அடிக்கடி தொடர்பு கொண்டாலும் நேரில் சந்தித்து 5 வருடங்களாகிவிட்டது. இவர்கள் சென்று அழைப்பு மணியை அழுத்தி வந்தவிடயத்தைச் சொல்ல வந்து பார்த்த கமால்டினுக்கு உமாமகேஸ்வரனை உடனே அடையாளம் தெரியவில்லை. யார் இது எனது பெயரை விசாரித்து வந்திருக்கும் புது மனிதன் என்று அவர் திகைத்துப் போய்விட்டார்.
அவரின் திகைப்பிற்கான காரணத்தை புரிந்து கொண்ட உமாமகேஸ்வரன் தன்னையும், ராபினையும் அறிமுகப்படுத்தி தான் இப்போது உமா மகேஸ்வரனல்ல முஹமட் இப்ராஹிம் என்றார். ஹமால்டினுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
மிஸ்டர் உமா வேசப் பொருத்தம் பிரமாதமாக இருக்கின்றது. அசல் முஸ்லிமைப் போலவே நீங்கள் இருக்கின்றீர்கள். என்று கூறி அவரையும் ராபினையும் உள் அழைத்துச் சென்றார்.

கொஞ்ச நேரம் பரஸ்பர நலன் விசாரிப்பின் பின் காலை உணவு மேசையில் பேச்சுவார்த்தை தொடங்கியது. முதலில் மாலைதீவு எதிர்காலத்தைப் பற்றி ஹமால்டின் விசாரித்தார். றோவின் சொற்படி உமாமகேஸ்வரன் நடந்து கொண்டதற்காக அவரை கண்டித்தார்.
உண்மையிலேயே நீங்கள் மிகப்பெரிய தவறு செய்து விட்டீர்கள், உமா மாலைதீவில் தாக்குதல் நடத்தியது அதுவும் இந்தியாவின் சொல்லைக்கேட்டு தாக்குதல் நடத்தியது படு முட்டாள்தனமானது என்று அவர் குறைபட்டுக் கொண்டார்.
உமாமகேஸ்வரன் பாடு சங்கடமாகிவிட்டது. தான் செய்ததை அவரால் நியாயப்படுத்த முடியவில்லை.
உண்மையிலேயே நான் தவறு செய்துவிட்டேன். இந்தியாவைப்பற்றி தெரிந்து வைத்திருந்தும் அவர்கள் விரித்த வலையில் விழுந்து விட்டேன் என்று அவர் ஹமால்டினுக்குச் சொன்னார்.

”மிஸ்டர் உமா இந்தியர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள், உலகத்திலேயே அதிகளவிற்கு அகிம்சையைப்பற்றி பேசுபவர்கள் அவர்கள்தான். ஆனால் இது அவர்கள் தாங்கள் நடத்துகின்ற அப்பட்டமான மனித உரிமை மீறல்களையும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் மூடி மறைப்பதற்கு போடுகின்ற வேசம் என்று உலகத்திற்குத் தெரியாது.” என்று கூறிவிட்டு சற்று மௌனமாக இருந்;த ஹமால்டின் பின்னர் “மாலைதீவு விவகாரம் நீங்கள் எதிர்பாhத்தபடி வெற்றியளித்திருந்தால் இந்தியா உங்களைவிட்டுவைத்திருக்கும் என்று நினைக்கின்றீர்களா? நிச்சயமாக உங்களை கொலை செய்திருப்பார்கள். அவர்களுக்குத் தேவை மாலைதீவை தங்களது நிழலுக்குக் கீழே கொண்டு வருவதுதான். உங்களை தாக்குதலுக்கு அனுப்பிய போதே எதிர்த்தாக்குதலுக்கும் அவர்கள் திட்டம் தீட்டிவிட்டார்கள்.” ஏன்றாh;
உமாமகேஸ்வரன் அவர் சொன்னதை மௌனமாக கேட்டுக் கொய்டிருந்தார்
“வெற்றியையும் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொள்ள வேண்டும், தோல்வியையும் தங்ககளுக்கு சாதகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது திட்டம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் நட்பு நாடான பாகிஸ்தான், அதுவும் முஸ்லிம் நாடான பாகிஸ்தான் உதவிக்கு
செல்லுமுன் ஏன் இந்தியா உதவிக்குச் செல்ல வேண்டும். ஏற்கனவே இதை எதிர்பார்த்து அவர்கள் தயாராகவே இருந்திருக்கிறார்கள். பாகிஸ்தானின் நண்பரான ஹயும் (மாலைதீவு ஜனாதிபதி) இப்போது இந்தியாவுக்கு கடமைப்பட்டவராகிவிட்டார். ஏமாந்து போனது நீங்கள்தான் என்று ரோவின் போட்ட திட்டத்தை ஹமால்டீன் அம்பலப்படுத்தினார்.

”உண்மை தான் இதைப்பற்றியெல்லாம் அப்போது யோசிக்கவில்லை.” என்று அவர் சொன்னதை ஒப்புக் கொண்ட உமாமகேஸ்வரன் “இப்போது எனக்குள்ள பிரச்சினை எங்களுடைய ஆட்களை மாலைதீவுச் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும். அதற்காகத்தான் இங்கே வந்து தங்கியிருந்து உங்களுடைய உதவியைக் கேட்டேன்” என்றார்.
இங்கிருந்து அதற்கு என்ன செய்யப் போகின்றீர்கள் என்று ஹமால்டின் திருப்பிக் கேட்க உமாமகேஸ்வரன் தனது திட்டத்தை (அதாவது ரஜீவ்காந்தியின் பிள்ளைகளைக் கடத்தி பணயம் வைத்து தனது சகாக்களை மேற்படி) அவருக்குச் சொன்னார். அதைக் கேட்டு ஒரு சில வினாடிகள் யோசித்த ஹமால் இது சாத்தியமா என்று நினைக்கின்றீர்களா என்று கேட்டார்.
சாத்தியமாகுமா என்றால் உங்களது கேள்வி எனக்கு விளங்கவில்லை. ரஜீவின் பிள்ளைகளை கடத்துவது சாத்தியமாகாது என்று நினைக்கின்றீர்களா என்று உமா கேட்க, இல்லை இல்லை நான் அதைச் சொல்ல வரவில்லை. இதைச் செய்தால் மாலைதீவு அரசாங்கம் பணிந்து வந்து உங்களது ஆட்களை விடுவிக்கும் சாத்தியக்கூறு இருக்குமா? என்று தான் கேட்டேன் என்றார் ஹமால்.
" நிச்சயமாக சாத்தியமாகும். மாலைதீவு என்னமும் இந்தியாவின் மேற்ப்பார்வையின் கீழ் தான் இருக்கின்றது. எங்களது ஆட்கள்கூட இந்திய மாலைதீவு கூட்டுக் கண்காணிப்பில்தான் இருக்கின்றார்கள். பிரச்சினையாக இருப்பது மாலைதீவு அரசாங்கமல்ல இந்தியா தான். இந்தியாவைப் பணிய வைக்க வேண்டும் என்றால் நேரு குடும்பத்தில் கைவைக்க வேண்டும். இந்தியாவில் நீங்கள் போய் ஒரு ஆயிரம் பேரை சுட்டுத் தள்ளிப் பாருங்கள். அங்கே எதிர்ப்பு பெரிதாக ஒன்றும் இருக்காது, தேசத் தந்தை என்று சொல்கின்ற காந்தியின் வாரிசை கடத்தினால் கூட அவர்கள் கவலைப்படமாட்டார்கள் ஆனால் நேரு குடும்பத்தில் கைவைத்துப் பாருங்கள் உடனேயே சீறி எழுந்துவிடுவார்கள் என்று அவருக்கு விளக்கமளித்தார் உமா. ஹமால் அவரது விளக்கத்தை ஏற்றுக் கொண்டார்.
அதன்பின் இருவரும் ரஜீவின் பிள்ளைகளுக்கு இருக்கக்கூடிய பாதுகாப்பு அதை உடைப்பதற்கான வழிமுறைகள் அவர்களை கடத்தினால் இந்திய பொலிஸ் மற்றும் பாதுகாப்புப்படையினரின் கண்ணில் படாமல் காரியம் முடியும் மட்டும் பாதுகாப்பாக வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டிய இடங்கள் இந்த விசயத்தை செய்து முடிக்க இந்தியாவுக்குள் அணுகக்கூடிய நம்பிக்கைக்குரிய நபர்கள். இந்த நடவடிக்கையினுடைய சாதகபாதகமான அம்சங்கள் இந்திய பாதுகாப்புத்துறையிலுள்ள பலவீனங்கள் என்பது பற்றியெல்லாம் விரிவாக ஆராய்ந்தார்கள்.
இந்த விடயத்தில் தங்களால் முழு உதவியையும் தங்களால் செய்ய முடியும் என உறுதியளித்த ஹமால் உங்களுக்குமட்டுமல்ல இஸ்லாமுக்கே அவர்கள் எதிரிகள். பொது எதிரிக்கு எதிராக நாங்கள் ஐக்கியப்பட வேண்டும். இதற்காக நீங்கள் நாங்கள் எல்லோரும் சேர்ந்து சர்வதேச நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்க வேண்டும். அதைவிட நீங்கள் இன்னொருதடவை றோவின் வலையில் விழாமல் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதன்பின் அவர்கள் பாரூக்தாதாவை சந்திக்கப் புறப்பட்டனர். கராச்சி நகரத்தின் பிரபல்யமிக்க பெரும் புள்ளியான அவர் பெயருக்கு ஏற்றபடி அடியாட்கள் சகிதம் பெரும் தாதாவாகத்தான் காட்சியளித்தார்.அவரைப் பார்த்த போது பம்பாய் வரதராஜ முதலியாரின் நினைப்புத்தான் உமாவுக்கு வந்தது.

ஹமால் உமாவை அவருக்கு அறிமுகம் செய்து வைத்து உமா கராச்சியில் தங்கியிருக்க ஏற்பாடுகள் செய்து தரவேண்டும் என்றும் ஏதாவது ஒரு தொழில்துறையில் முதலீடு செய்ய அவருக்கு தாதா உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தான் அவற்றை நிச்சயமாக செய்து தரலாம் என்று தாதா ஒத்துக்கொண்டார். தாதாவுக்கு கடத்தல் விடயத்தை உடனே சொல்லவில்லை. அவரிடம் தான் அதை பின்பு விபரமாகச் சொல்வதாகவும் விரைவிலேயே எல்லா ஏற்பாடுகளுடனும் கராச்சிக்கு வரும்படியும் தானும் தனது நாட்டுக்கு போய்விட்டு திரும்பி வருவதாகவும் ஹமால் உமாவுக்குச் சொன்னார்.

தான் எதிர்பார்த்தது போல் அல்லாது வந்தவிடயம் சுலபமாக முடிந்துவிட்டதாக உமா திருப்திப்பட்டுக்கொண்டார். அந்த சந்தோசத்தில் ஹமாலுடனும் தாதாவுடனும் விடைபெற்றுக் கொண்டு கராச்சி நகருக்கு சுற்றிபார்க்கச் சென்றார்.
அவர் இவ்வாறு கராச்சி நகரத்தை சுற்றிப்பார்த்துக்கொண்டிருக்கும் போது நாட்டில் முள்ளிக்குள முகாமில் ஒரு கொலை நடந்தது..

காந்தி தேசத்தின் மறுபக்கம்-06

06
கராச்சிக்குச் செல்லும் தனது திட்டத்தின் முதல் நடவடிக்கையாக உமாமகேஸ்வரன் தனது பெயரை முஹமட் இப்ராஹிம் என்று வைத்துக் கொண்டார்.
தான் கல்முனையைச் சேர்ந்த நகை வியாபாரி என்றும் தனது நகைக் கடையின் பெயர் பரீதா ஜுவலறி என்றும் சொல்லிக் கொண்டார். அதற்கு அத்தாட்சியாக, அரசு முத்திரை பதித்த வர்த்தக அனுமதி சான்று முதல் அடையாள அட்டையும் தயாரித்துக் கொண்டார்.
தன்னுடைய உருவ அமைப்பும் மற்றவர்களின் பார்வைக்கு அசல் முஸ்லிம் வர்த்தகர் போல் இருக்க வேண்டும் என்பதற்காக தனது சுருண்ட அடர்த்தியான தலைமயிரை கட்டையாக வெட்டி மீசையையுமழித்துவிட்டார். கிழக்கு மாகாண இஸ்லாமிய வட்டார வழக்கு தமிழ்ச் சொற்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டு அது போல் பேசவும் பழகிக் கொண்டார்.
திருகுர்ரானைப் பற்றியும் மற்றும் இஸ்லாமிய மதச் சடங்குகள், தொழுகை முறை பற்றியும்கூட வேண்டிய தகவல்களைச் சேகரித்துக் கொண்டார். அடுத்து தனது நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளராக இருந்த ராபினுடைய பெயரையும் அப்துல் ரஹீம்; என்று மாற்றி அவரை கல்முனை பரீதா ஜுவலறி உரிமையாளர் இப்ராஹிமினுடைய உதவியாளர் என்று சொல்லும்படியும் அவ்வாறே கொழும்பிலுள்ள முஸ்லீம் பகுதிக்குச் சென்று அங்குள்ள முஸ்லீம் இளைஞர்களை சிநேகிதம் பிடித்து அவர்களுடைய பேச்சுவழக்கு, மத விவகாரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளும்படி சென்னார்.
ராபின்சனுக்கு இது சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்தது போல் இருந்தது. உம்மா, வாப்பா, நிக்கா.. முதற் கொண்டு ஜாதி வேலையில்லையா நீங்க செஞ்சிருக்கிறது என்கின்ற தொனியிலான இஸ்லாமியத் தமிழ் வழக்கு அவனது வாய்க்குள் நுழைய மறுத்தது. இந்த மனுசன் சரியான லொள்ளுப் பிடிச்ச மனுசன். கிழக்கு மாகாணப் பெடியள் எத்தனை பேர் இருக்க, யாழ்ப்பாணக்காரனான (அச்சுவேலி) என்னைப் போய் முஸ்லீம் தமிழ் படிக்கச் சொல்கிறார். என்று புறுபுறுத்துக் கொண்டான்.
ராபின் இவ்வாறு முஸ்லீம் தமிழுடன் மாரடித்துக் கொண்டிருந்த நேரத்தில் உமா தனது நம்பிக்கைக்குரிய மற்றொரு மெய்க்காப்பாளரான சக்திவேல் மூலம் தனக்கும், ராபினுக்கும் முஹமட் இப்ராஹிம் அப்துல் ரஹீம் என்ற பெயர்களின் கடவுச்சீட்டு எடுப்பித்துக் கொண்டார். டிசம்பர் மாதம் 12ம் திகதி உமாவினுடைய பலஸ்தீன நண்பர் ஹமால்தீன் கராச்சிக்கு வருவதாகவும், உமாவை அங்கு வந்து தன்னைச் சந்திக்கும்படியும் தகவல் வந்திருந்தது. 1988 டிசம்பர் மாதம் 11ம் திகதி தான் நுவரெலியாவிற்கு JVP தலைவர்களை சந்திக்கச் செல்வதாக மற்றவர்களுக்குத் தகவல் வெளியிடும்படி சத்திவேலிடம் சொல்லிவிட்டு உமாமகேஸ்வரன் இல்லை முஹமட் இப்ராஹிம், அப்துல் ரஹீமுடன் கராச்சி புறப்பட்டார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இப்ராஹிமுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை கடவுச்சீட்டு, விசா, கடவுச்சீட்டிலுள்ள படம், நேரில் வந்திருக்கின்ற ஆள் எல்லாம் சரியென்று குடியகல்வு அதிகாரிகளிடம் உறுதிப்படுத்திக் கொண்டு அவர் உள்ளே போய்விட்டார்.
ஆனால் அப்துல் ரஹீம் விடயத்தில் குடியகல்வு பகுதியில் இருந்த ஒரு அதிகாரிக்கு சந்தேகம் வந்துவிட்டது. ரஹீம் என்ற பெயரில் வந்திருக்கும் இளைஞருடைய தோற்றமும் பேச்சும் உண்மையான முஸ்லீமுக்கு உரியது போல் இல்லை என்பதை அவர் கண்டுகொண்டார்.
இந்த ஆளை மிரட்டினால் ஒரு பெரும் தொகையை இலஞ்சமாகக் கறக்கலாம் என்று அவர் திட்டமிட்டார். எனவே, அவர் ராபினை தனிப்பகுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று உண்மையைச் சொல் நீ முஸ்லிம் இல்லை. கராச்சிக்கு எதுக்குப் போகிறாய்? உன்னுடைய உண்மையான பெயர் என்ன? என்று அதிகாரமாகக் கேட்டார்.
ராபினுக்குப் பயம் வந்துவிட்டாலும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. இல்லை நான் முஸ்லிம் தான்., இதுதான் என்னுடைய உண்மையான பெயர் என்று அவன் அடித்துச் சொன்னான். ஏய் பொய் சொல்லாதை நான் ஒரு முஸ்லிம். நீ சுன்னத்து செய்திருக்கிறாயா என்று பார்த்தால் உண்மையை என்னால் கண்டுபிடிக்கமுடியும். நான் விசயத்துக்கு வாறன். நான் உன்னைப் போக விடுறன், நீ எனக்கு எவ்வளவு தருவாய்? என்று நேரடியாகக் கேட்டார் அந்த அதிகாரி.

மறுத்தால் பிரச்சினையை அவர் பெரிதாக்கி விடுவார், அதனால்தான் மட்டுமல்ல உமாமகேஸ்வரன்கூட பிடிபட நேரும் என்று கருதிய ராபின் நான் 100 டொலர் தாறன் என்று ஒப்புக் கொண்டான்.
சீ.. உதென்ன பிச்சைக் காசு என்று அந்த அதிகாரி சொல்ல சரி எவ்வளவு கேக்கிறியள்? ராபின் திருப்பிக் கேட்டான்.
எனக்கு 500 டொலர் வேண்டும் என்று அந்த அதிகாரி மீண்டும் சொல்ல, ராபின் குறுக்கிட்டு என்னட்டை 1000 டொலர் ரவலர் செக் தான் இருக்குது. காசு அவ்வளவு இல்லை. என்றான்.
உடனே அந்த அதிகாரி அவனை உள்ளே அழைத்துச் சென்று அங்கிருந்த தீர்வையற்ற வர்த்தக நிலையத்தைக் காட்டி அங்கே ஏதாவது சாமான்களை வாங்கி, ரவலர் செக்கை மாற்றி பணத்தை டொலராக வாங்கி வரும்படி சொன்னார்.
ராபின் அங்கே 500 டொலர் செக்கை கொடுத்து, 80 டொலருக்கு கைக்கடிகாரம் ஒன்றை வாங்கிக் கொண்டு மிகுதி 420 டொலரையும் பணமாகப் பெற்று வந்து அந்த அதிகாரியிடம் கொடுத்தான்.

எங்கே மிச்சம்? என்று அந்த அதிகாரி கேட்க ராபின் தான் வாங்கிய கடிகாரத்தையும் மிகுதி 100 டொலர் பெறுமதியாக இருந்த 5 செக்குகளையும் காட்டி இதை மாற்ற முடியவில்லை என்றான்.
கிடைத்தது லாபம் என்று திருப்திப்பட்டுக் கொண்ட அந்த அதிகாரி ராபினுடைய அதாவது அப்துல் ரஹீமினுடைய கடவுச்சீட்டில் குடியகல்வு முத்திரையைப் பதித்து அவனை மேற்கொண்டு செல்ல அனுமதித்தார்.
அவனை குடியகல்வு பகுதியில் தடுத்து வைத்திருப்பதையும் பின்பு தனி அறைக்கு அழைத்துச் செல்லப்படுவதையும் பார்த்து, சிக்கல் ஏதாவது வந்துவிடுமோ என்று பயந்து போய் இருப்புக் கொள்ளாமல் அந்த தரிப்பிட மண்டபத்தில் தவித்துக் கொண்டிருந்த உமாமகேஸ்வரனுக்கு ராபின் உள்ளே வருவதைக் கண்ட பின்புதான் நிம்மதி வந்தது. தன்னை நோக்கி வந்த அவனை கண் ஜாடையால் என்னிடம் வரவேண்டாம் என்று காட்டினார்.

இரவு 8.40ற்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தைவிட்டு விமானம் புறப்படும் வரை அவர்கள் இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசவே இல்லை. விமானத்துக்குள் வைத்துத்தான் ராபின் நடந்த விடயத்தை உமாமகேஸ்வரனிடம் சொன்னான்.

அவருக்குக் கோபம் வந்துவிட்டது. உனக்கு நான் எத்தினைதரம் சொன்னனான் முஸ்லிம்பகுதிக்குப் போ, அங்கேயுள்ள பெடியளோட பழகு என்று. உன்னைப் பார்க்க முஸ்லிம் மாதிரியா இருக்குது என்று கடிந்து கொண்டார்.
அதற்கு நான் என்ன பெரியய்யா (அவ்வாறுதான் உமாவை இயக்கதிலுள்ளவர்கள் அழைப்பது வழக்கம்) செய்யிறது? மூண்டு கிழமைக்குள்ள எப்படி அது முடியும் என்றான்?
நான் எத்தினை கிழமைக்குள்ள பழகினனான் என்னை அவங்கள் கண்டு பிடிக்கேல்லை உங்கட முழியும், மூஞ்சையும் சரியில்லை எனக்கு பாதுகாப்புக்கென்று உங்களை கூட்டிக்கொண்டு வந்தால் உங்களால்தான் எனக்கு பிரச்சினை என்று உமா தொடர்ந்து சீறிவிழ ராபின் எதுவும் பேசவில்லை.

நள்ளிரவு விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது திடீரென்று அதன் முன்பக்கச் சில்லு கிழே இறங்க மறுத்துவிட்டது. விமானி மீண்டும் விமானத்தை மேலே எழுப்பிப் பறந்து அதிலுள்ள எரிபொருள் கணிசமான அளவில் தீர்க்க முயற்சிசெய்தார். விமானத்தில் உள்ளவர்கள் என்ன நடக்குமோ என்று பயந்து போயிருந்தனர்.

உமாமகேஸ்வரன் சகுணங்களை நம்புவதில்லை. ஆனாலும் இதென்ன, புறப்பட்ட நேரத்திலிருந்து எல்லாம் தடையாக இருக்கின்றது என்று யோசிக்க ஆரம்பித்தார்.
இவர் விமானத்திற்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தைவிட தான் ஈடுபடப்போகின்ற காரியம் தன்னைப் பெரிய சிக்கலில் மாட்டிவிடுமோ என்று பயப்பட்டார்

காந்தி தேசத்தின் மறுபக்கம்-05

05
மாலைதீவிலிருந்து தப்பிவரும் தனது இயக்க உறுப்பினர்களை அவர்கள் வரும் கப்பலிலிருந்து பாதுகாப்பாக கரைசேர்ப்பதற்கு உடனடியாக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உமாமகேஸ்வரனுக்கு ஏற்பட்டது. அதுவும் இந்திய இலங்கைக் கடல் எல்லைக்குள் அந்தக் கப்பல் வருவதற்கு முன் அதைச் செய்ய வேண்டிய அவசரமும் ஏற்பட்டது.
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் ஆபத்து மிகுந்ததாகவே இருந்தது. கப்பல் இந்திய இலங்கைக் கடல் எல்லைக்குள் பிரவேசித்துவிட்டால் நிச்சயமாக இந்தியக்கடற்படையும், சிறீலங்கா கடற்படையும் கூட்டுச் சேர்ந்துகப்பலையும் அதில் இருப்பவர்களையும் கைப்பற்றிவிடுவார்கள். றோ கதையை மாற்றி உமாமகேஸ்வரன் தான் குற்றவாளி என்று அடித்துச் சொல்லிவிடும் என்ற பயம் உமாவுக்கு ஏற்பட்டது.
முதலில் அவர் நினைத்தபடி ராஜீவ்காந்தியின் பிள்ளைகளை கடத்தி பணயம் வைப்பது என்பது உடனடியாகச் சாத்தியப்படக்கூடிய விடயமாகத் தென்படவில்லை. ஆதனால் கொழும்பிலிருந்து கண்டிக்கோ, கிக்கடுவைக்கோ, அனுராதபுரத்திற்கோ செல்லும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளை அவர்கள் செல்லும் பஸ்சுடன் சேர்த்துக் கடத்தி பணயம் வைத்து தனது சகாக்களை முள்ளிக்குளம் பகுதிக்குக் கொண்டு சேர்க்கலாம் என்று அவருக்குத் தோன்றியது.

அவ்வாறு அவர்கள் முள்ளிக்குளத்தில் கரை சேர்ந்தால் சிறிலங்கா அரசாங்கத்திற்கும், இந்திய அமைதிப்படைக்கும் போக்குக் காட்டிவிட்டு அவர்களை இரகசியமாக நுவரெலியாவுக்குக் கொண்டு சென்று ஜே.வி.பி.யினருடன் தங்கவைக்கலாம் என்று அவர் எண்ணினார்.. எனவே உடனடியாக அவசர அவசரமாக கொழும்பில் வைத்து உல்லாசப் பயணிகளை கடத்துவதற்கு கடத்தல் குழுவொன்று உருவாக்கப்பட்டு திட்டம், ஆயுதங்கள், வாகனங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. கடத்தல் குழுவின் தலைவர்களாக மூவர் தெரிவு செய்யப்பட்டனர். இந்த மூவரில் ஒருவர் ஆயுதம் தரித்த 4 சகாக்களுடன் பஸ்சைக்கடத்தி நீர்கொழும்பிற்கு கொண்டு செல்வது மற்றவர் வேறு இரண்டு சகாக்களுடன் கடத்தல் நாடகம் முடிந்ததும் நீர்கொழும்பிலிருந்து சிலாபத்திற்கு கடத்தலில் ஈடுபட்ட அனைவரும் தப்பிச் செல்வதற்கு 250 குதிரைச்சக்தி வேகம் கொண்ட இயந்திரப் படகுடன் காத்திருப்பது சிலாபத்தில் கரையேறும் குழுவை விரைந்து புத்தளத்திற்குக் கொண்டு சேர்க்க மூன்றாமவர் வாகனமொன்றுடன் அங்கு காத்திருப்பதென்றும் திட்டம் தீட்டப்பட்டது. கொழும்பிலிருந்து புளொட் வசிப்பிடங்கள் அவசர அவசரமாக மூடப்பட்டு அங்கிருந்தவர்கள் வேறு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். பணய நாடகம் தொடங்கியவுடன் சிறிலங்கா அரசாங்கத்துடனும், மாலைதீவு கப்பலுடனும் தொடர்பு கொள்வதற்குத் தொலைத் தொடர்பு சாதனமும், தொலைத் தொடர்பாளரும் கூட தயார் நிலையில் வைக்கப்பட்டனர். பணய நாடகத்தின் போது பேச வேண்டிய பேச்சுக்கள், வைக்க வேண்டிய கோரிக்கைகள், எதிர்த்தரப்புப் பேச்சுக்களுக்கும், கேள்விகளுக்கும் பிடிகொடுக்காமல் அளிக்க வேண்டிய பதில்கள் என்பனவும் தயாரிக்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டன.
உமாமகேஸ்வரன் இவ்வாறு பரபரப்பாகக் கொழும்பில் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது அவர் கொழும்பில் தங்கியிருக்க உதவி செய்தவரும் அவருடைய நெருங்கிய நண்பருமான அமைச்சர் லலித் அத்துலத்முதலி அவருடன் தொடர்பு கொண்டு மாலைதீவு தாக்குதலை புளொட்தான் செய்ததென்று தனக்குத் தெரியும் என்றும் சதிப்புரட்சியாளர்கள் வரும் கப்பலை இலங்கைக்கடல் எல்லைக்குள் கொண்டு வர வேண்டாம் என்றும் கொழும்பில் இருந்து கொண்டு அவர்களை மீட்க எந்தக் காரியமும் செய்யக்கூடாதென்றும் அப்படிச் செய்தால் அது தங்களைப் பெரிய இக்கட்டில் மடாட்டிவிடும் என்றும் அதனால் அவரை கைது செய்ய வேண்டிய நிலை தமக்கு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
உமாமகேஸ்வரனது நிலை ஆப்பிழுத்த குரங்கின் கதியாகிவிட்டது. அத்துலத்முதலி இப்படிச் செய்வார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் இந்த விடயத்தில் கண்டும் காணாமல் இருந்துவிடுவார். அதாவது பெயருக்கு மற்றவர்களின் பார்வைக்காக எதிர்ப்புத் தெரிவிப்பார் என்று தான் உமா நினைத்திருந்தார். ஏனென்றால் அடுத்த ஜனாதிபதியாக தான் வருவதற்காக லலித் உமாவைக் கொண்டு திரை மறைவில் சில காரியங்களைச் செய்ய திட்டமிட்டிருந்தார். அதற்காக உமாவுடன் கலந்து பேசியுமிருந்தார்.
தோல்விக்குமேல் தோல்வி ஏமாற்றத்துக்கு மேல் ஏமாற்றம். அடுத்து என்ன செய்வது திட்டமிட்டபடி பயண நாடகத்தை அரசாங்கம் எதிர்த்தாலும் துணிந்து நடத்தி மாலைதீவு சகாக்களை மீட்பதா? அல்லது அரசாங்கத்திற்கு சங்கடமோ பாதிப்போ ஏற்படாத வகையில் வேறு ஏதாவது செய்வதா என்று உமாமகேஸ்வரன் ஊசலாடிக்கொண்டிருந்த நேரத்தில் இந்தியா மாலைதீவு கடல் எல்லைக்குள் வைத்தே தமது விமானப்படையையும், கடற்படையையும் கொண்டு கப்பலைத் தாக்கி நீரில் மூழ்கும் நிலையை உருவாக்கி தான் அனுப்பி சதிபுரட்சியாளர்களை தானே கைது செய்து தன்னை ஜனநாயக காவலனாக காட்டிக்கொண்டது.
இது ஒரு வகையில் உமாமகேஸ்வரனுக்கு இருந்த பெரும் நெருக்கடியை தனித்தது. உடனடியாக அவசரப்பட்டு காரியம் எதையும் செய்து மூக்குடைபட்டுப் போகாமல் நன்கு ஆற அமரத்திட்டமிட்டு அதாவது ரஜீவ்காந்தியின் பிள்ளைகளை கடத்தி பணயம் வைத்து தனது சகாக்களை மீட்கலாம் என்று அவர் நினைத்தார். ஆனாலும் கைது செய்யப்பட்டவர்கள் நீதி மன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு விசாரணை என்று வரும் பொது தன்னை முதல் குற்றவாளியாக்கிவிட்டால் என்ன செய்வதென்றும் அவருக்குப் பயம் வந்தது. தன்னைக் குற்றவாளியாக்கினால் உண்மையான சூத்திரதாரிகள் தாங்கள்தான் என்பதும் வெளிவந்துவிடும் என்பதால் இந்தியா அப்படிச் செய்யாது என்றும் அவர் நம்பினார்.
எதற்கும் தன்னுடைய வதிவிடத்தை இலங்கைக்கு வெளியே வேறு ஒரு நாட்டிற்கு மாற்றி யாருக்கும் தெரியாமல் அங்கே தங்கியிருந்து கொண்டு செயல்படுவது என்று நல்லது என்று அவருக்குத் தோன்றியது சிங்கப்பூர், பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகளை அவர் தேர்ந்தெடுத்தார். இந்த இரண்டு நாடுகளில் ஒரு நாட்டில் இருந்து கொண்டு இன்னொரு நாட்டில் இருப்பதாக மற்றவர்கள் நம்பும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது அவரது திட்டம். இதன் முதல் கட்டமாக தனது பலஸ்தீன நண்பர்களடன் தொடர்பு கொண்டு பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் நான் தங்கியிருக்க ஏற்பாடு செய்து தருமாறும் அங்கு தான் இஸ்லாமிய வர்த்தகர் போல் ஏதாவது தொழில்துறையில் முதலீடு செய்து கொண்டு தங்கியிருந்து தனது அடுத்த நடவடிக்கையை தொடரப் போவதாகவும் இந்தியாவின் சில இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ரஜீவின் பிள்ளைகளை கடத்த திட்டமிட்டிருப்பதை அவர் அவருக்கு நேரடியாகச் சொல்லவில்லை. பாகிஸ்தானிலிருந்து உதவக்கூடிய நம்பிக்கையான நபர் ஒருவரையும் தனக்கு அறிமுகம் செய்யுமாறு கோரியிருந்தார்.
அவர்களும் மிக விரைவிலேயே செய்து தருவதாக அவருக்கு உறுதியளித்தனர். தான் கராச்சிக்கு தனது வதிவிடத்தை மாற்றப் போகும் விடயத்தை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைப்பதற்காகத் தான் சிங்கப்பூருக்குப் போய் தங்கியிருக்கப் போவதாக ஒரு வதந்தியை வெளியில் பரவவிட்டார்.
அவரது மிக நெருங்கிய நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளர்களாக இருந்த சக்திவேல், ராபின் (சுவிஸில் கொலை செய்யப்பட்டவர்.) ஆகிய இருவருக்கு மட்டும் தான் அவர் கராச்சி செல்லும் விடயம் தெரியும்.

மற்ற அனைவரும் உமா சிங்கப்பூருக்குப் போவதாக நம்பிக்கொண்டிருந்த சமயத்தில் பலஸ்தீன தொடர்பாளியிடமிருந்து இருந்து கராச்சியில் அவர் தங்கியிருக்க ஏற்பாடு செய்தாகிவிட்டதென்றும் அங்கே தங்களுடைய நண்பரான பாருக் தாதாவை தொடர்பு கொள்ளும்படியும் அவர் உமாவுக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருவார் என்றும் தகவல் வந்தது. உமாமகேஸ்வரன் காலம்கடத்தாது விரைந்து கராச்சிக்குச் செல்ல போலிப் பாஸ்போட் விசாவுக்கும், விமானடிக்கற்றுக்கும் ஒழுங்கு செய்தார். ரஜீவ்காந்திக்கும், றோவுக்கும் விரைவில் பாடம் படிப்பிக்கின்றேன் என்று அவர் கறுவிக் கொண்டார்.
ஆனால் பாவம் அவர் கராச்சியில் சென்று சந்திக்கப் போகின்ற பாருக் தாதா றோவினுடைய ஆளென்பது அவருக்குத் தெரியாது

புதன், 17 செப்டம்பர், 2008

காந்தி தேசத்தின் மறுபக்கம் 1

(இந்தத் தொடர் 1997ம் ஆண்டு பாரிசில் இருந்து வெளிவரும் ஈழமுரசு பத்திரிகையில் வெளிவந்தது. 1989 ம்ஆண்டு மே மாதம் 28 ம் 29 ம் திகதிகளில் உமா மகேஸ்வரன் நேரடியாக வழங்கிய தகவல்களின் அடிப்படையாக வைத்து இந்தத் தொடர் எழுதப்பட்டது)

01
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது ஜனநாயகக் கோட்பாடு. ஆனால் தன்னை ஜனநாயக நாடு என்று வேசம் கொள்கின்ற இந்தியாவில் நேரு குடும்பத்திற்கு ஒரு சட்டம்,அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம்.அதிகாரிகளுக்கு ஒரு சட்டம் பணக்காரர்களுக்கு ஒரு சட்டம், பொலிசுக்கு ஒரு சட்டம், அப்பாவி மக்களுக்கு ஒரு சட்டம் என்று பலவிதம் உண்டு.
ரஜீவ்காந்தி இந்திய தலைமை அமைச்சராக இருந்த காலத்தில் அவரால் இலங்கைக்கு அமைதிப்பணிக்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் பெண்கள,; குழந்தைகள், வயோதிபர்கள், இளைஞர்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல் எண்ணாயிரம் பேரை கொன்று குவித்தது. பல நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது. பெண்கள் கற்புடன் இருப்பதும், வயோதிபர்கள் குழந்தைகள் உயிருடன் இருப்பதும் இந்தியப் படையின் கண்ணோட்டத்தில் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருந்தது.
உண்மையில் இலங்கையில் இந்தியப்படை இருந்த காலத்தில் நடந்த சம்பவங்களை யுத்தகால அழிவுகளாக கொள்ள முடியாது. அது ஒரு பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தமல்ல அமைதிப் பணி என்ற பெயரில் நடந்தப்பட்டட கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு என்றுதான் அந்தச் சம்பவங்களைப் பார்க்க முடியும்.
ராஜீவ்காந்தி கொழும்புக்குச் சென்ற போது ஒரு சிங்களச் சிப்பாய் பகிரங்கமாக அவரைத் தாக்கினார். அப்போதைய சிறிலங்கா ஜனாதிபதி ஜெயவர்த்தனா அந்தச் சம்பவத்துக்கு மன்னிப்புக் கேட்பதற்குப் பதிலாக வெய்யிலின் கொடுமையினால் ஏற்பட்ட மூளைக்கோளாறினால் அந்தச் சிப்பாய் அவ்வாறு நடந்து கொண்டதாக பகிரங்கமாகச் சொன்னார்.
அதேவேளை இந்திய இராணுவத்தின் வருகைக்கு எதிராகவும் ரஜீவ்காந்தி கடைப்பிடித்த இலங்கை தொடர்பான அரசியல் போக்கிற்கு எதிராகவும் சிறிலங்காவில் ஜே.வி.பி இயக்கம் மிகத் தீவிரமான எதிர்ப்பைக் காட்டியது. தமிழீழப் பிரதேசத்தில் தமிழ் மக்களை நம்பவைத்து மோசம் செய்த ரஜீவ்காந்தியின் படைகளை எதிர்த்து விடுதலைப்புலிகள் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள்.
இந்தச் சூழ்நிலையில் இந்தியா ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டது. வடகிழக்கில் சீனாவின் எதிர்ப்பு மேறகில் பாகிஸ்தானின் எதிhப்பு தெற்கே புலிகள் ஜே.வி.பி எதிர்ப்பு உள்நாட்டில் பஞ்சாப், கஸ்மீர், மிஸோராம், நகலாந்து, கூர்க்கா மற்றும் அந்திர மக்கள்யுத்தக்குழு போராளிகளின் எதிர்ப்பு என்று தன்னைச் சுற்றியும் தனக்குள்ளேயும் எதிரிகளை அது தேடிக்கொண்டது. இது ரஜீவ்காந்தியினுடைய தலைமைத்துவத்தின் மீதான அவநம்பிக்கையை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தோற்றுவித்துவிடும் என்று இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் அஞ்சினார்கள்.

இந்தியாவின் பத்தில் ஒரு பங்குகூட இல்லாத சின்னஞ்சிறு நாட்டின் சிப்பாய் மரியாதை அணிவகுப்பின் போது தாக்கியதும், அதைப் பாரதூரமான சம்பவமாக நினைத்து அந்த நாட்டு ஜனாதிபதி ஜெயவர்த்தனா மன்னிப்புக் கோராமல் மனநிலை பாதிக்கப்பட்டவரின் செயலாக கூறியதை அவர்கள் மிகப்பெரிய விடயமாக எடுத்துக் கொண்டார்கள்.
மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை யாராவது இன்னொரு நாட்டு தலைமை அமைச்சரை வரவேற்கும் அணிவகுப்புக்கு அனுப்புவார்களா? ஜே.ஆர் திட்டமிட்டு இந்தியாவையும் ராஜீவையும் அவமானப்படுத்திவிட்டார் என அவர்கள் கறுவிக் கொண்டார்கள். புலிகளையும் ஜே.வி.பியையும் அடக்கு வதோடு ஜே.ஆர்க்கும் அவரைப் போன்ற சிங்கள அரசியல்வாதி களுக்கும் இந்தியாவின் பலம் என்ன என்பதைக் காட்டுவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள்.
இந்த விவகாரத்தை கையாள்வதற்கு இந்தியாவின் பார்ப்பணிய மூளையான றோவுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டது. றோ அதிகாரிகள் தெற்காசிய வரைபடத்தை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்த நேரத்தில் இலங்கைக்கு அண்மையில் இருந்த சின்னஞ்சிறு நாடான மாலைதீவு, அவர்கள் கண்களில் பட்டது.
காஸ்மீரையும், சிக்கிமையையும் தந்திரமாக தங்கள் நாட்டில் மாநிலங்களாக ஆக்கிக் கொண்ட தாங்கள் நேபாளத்தையும், பூட்டானையும் தங்கள் அதிகார பலத்தை பயன்படுத்தி இராணுவ மேலான்மைக்கு கீழ் கொண்டுவந்த தாங்கள் இந்தச் சின்னஞ்சிறு மாலைதீவை இதுவரை நாள் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

மாலைதீவிலே ஆட்சி நடத்திக் கொண்டிருந்த அப்தும் ஹயும் இந்தியாவுடன் அவ்வளவு தொடர்பில்லாதவர். ஆனால் பாகிஸ்தானுடன் நெருக்கமானவர். அதனால் அவரை இந்தியாவின் பக்கம் எடுப்பது பாகிஸ்தானை சீண்டுவதாக ஆகிவிடும். அதைவிட அவரின் எதிரிகள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்களை இந்திய சார்பாளர்களாக்கி பதவிக்குக் கொண்டு வருவதன் மூலம் மாலைதீவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம் என றோ நினைத்தது. அது அவர்களிற்கு பெரிய சிரமமாக இருக்கவில்லை. அப்தும் ஹயும் ஏற்கனவே ஆட்சிக்கவிழ்ப்பு ஒன்றின் மூலமே பதவிக்கு வந்தவர். அவரால் பதவி இறக்கப்பட்ட அவரின் எதிரிகளில் இருவர் சிங்கப்பூரிலும் ஒருவர் கொழும்பிலும் இருந்தனர். றோ அதிகாரிகள் சிங்கப்பூருக்கும் கொழும்புக்கும் சென்று அவர்களைச் சந்தித்துப் பேசினார்கள்.
நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் மாலைதீவில் ஜனநாயகத் தேர்தல் முறையின் கீழ் ஆட்சிக்கவிழ்ப்புக்கு சாத்தியமில்லை என்பதும் அப்தும் ஹயுமின் எதிரிகள், இந்தியசார்பாளர்கள் என்பதும் தெரிந்தாலே இஸ்லாத்தின் எதிரிகள் என்ற பிரச்சாரத்தின் மூலம் தேர்தலில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டுவிடும் அபாயம் உண்டு என்பதும் றோவுக்கு புரிந்தது.
எனவே இராணுவச் சதி புரட்சி ஒன்றின் மூலம் அப்துள் ஹயுமின் ஆட்சியைக் கவிழ்ப்பதே சிறந்ததும் சுலபமானதுமான வழி என்று அவர்கள் தீர்மானித்தனர். முன்னூறு பேர்வரை இல்லாத மாலைதீவு பாதுகாப்புப படையை முறியடிப்பது பெரிய கஷ்டமான விடயமல்ல என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் யாரை வைத்து இந்தச் காரியத்தை சாதிப்பது என்பது அவர்களுக்குப் பிரச்சினையாக இருந்தது.
மாலைதீவு இளைஞர்களை பயன்படுத்தினால் அவர்களுக்குப் புதிதாக பயிற்சி அளிக்க வேண்டும். வெறும் பயிற்சி மட்டும் போதாது யுத்த காலத்தில் நின்ற அனுபவமும், தாக்குதலில் ஈடுபட்ட அனுபவம் வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்தவிடயம் என்றைக்கும் வெளியே வராமல் பாதுகாக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். மாலைதீவு இளைஞர் களிடம் இவற்றை எதிர்பார்க்க முடியாது. எனவே ஈழப் போராளி களையே இதற்கு பயன்படுத்த வேண்டும் என்று றோ எண்ணியது யாரைப் பயன்படுத்துவது?
இதுவும் றோவுக்கு ஒரு சிக்கலான விடயமாக இருந்தது. ஈபிஆர்எல்எவ்; ஈஎன்டிஎல்எப் ரெலோ இந்த மூன்றும் தங்களுடன் ஒட்டிக் கொண்டு இருப்பவை. இந்திய இராணுவத் துணையோடு இயங்குபவை. இவர்களைப் பயன்படுத்தினால் நிச்சயமாக தாங்கள் தான் இந்தப்புரட்சிக்கு பின்னணியில் நின்றவர்கள் என்று பகிரங்கமாகிவிடும். அது இந்தியாவுக்கு மிகப்பெரிய சர்வதேச நெருக்கடியைக் கொண்டு வந்துவிடும் என்று அவர்களுக்குத் தோன்றியது. எனவே, இந்தியாவுடன் ஒட்டிக்கொண்டிராத ஒரு குழுவை அவர்கள் தேடினார்கள். அப்போது புளொட் குழு அவர்களுக்கு ஞாபகத்துக்கு வந்தது.
உமாமகேஸ்வரன் தலைமையிலான புளொட் இந்தியாவுடன் இரகசியத் தொடர்பும், பேச்சுவார்த்தையும் வைத்துக் கொண்டாலும் வெளியில் அது மற்றைய இயக்கங்களைப் போல் இந்திய இராணுவத்துடன் சேர்ந்திருக்காது தனித்து நின்றது. அதேவேளை புலிகளின் எதிரியாகவும் அது விளங்கியது. எனவே இந்தக்காரியத்திற்கு புளொட்டைத் தான் பயன்படுத்த வேண்டும் என றோ தீர்மானித்தது. புளொட்டினுடைய நிரந்தர இந்தியத் தொடர்பாளரான பாலபுத்தர் முலம் உமாமகேஸ்வரனுக்கு தங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தகவல் அனுப்பப்பட்டது.என்ன காரணத்துக்காக என்பது பாலபுத்தரிடம் சொல்லவில்லை புலிகளுக்கெதிராக யுத்தம் புரிவதற்கு ஆயுதம் வழங்கவே உமாமகேஸ்வரனை அழைப்பதாக அவர் நினைத்துக் கொண்டார்.
றோவிடம் இருந்த தகவல் வந்திருந்த சமயத்தில் உமாமகேஸ்வரனின் சகாக்கள் ஜோதீஸ்வரன் (கண்ணன்), வாசுதேவா ஆகியோர் புலிகளால் கொல்லப்பட்டிருந்தனர். இதனால் பல தடைவ தன்னை நம்பவைத்து மோசம் செய்த றோவின் மீது ஆத்திரம் கொண்டீருந்த உமாமகேஸ்வரன் அதை மறந்து றோவை சந்திக்க ஒப்புக்கொண்டார். 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி வவுனியா செட்டிகுளத்தில் தங்கியிருந்த உமாமகேஸ்வரன் இந்திய இராணுவத்தின் விசேட உலங்குவானூர்தி மூலம் சென்னைக்கு அழைத்துச் செல்லப்ப்பட்டார்.
அவரை அழைத்துச் சென்ற இந்திய இராணுவ விமானப்படை அதிகாரிக்கோ அல்லது விமானிக்கோ கூட தங்களால் அழைத்துச் செல்லப்படுபவர் உமாமகேஸ்வரன் என்று தெரியாது. சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள ஒரு வீட்டில் உமாமகேஸ்வரன்; றோ இரகசியச் சந்திப்பு நடந்தது. அந்தச்சந்திப்பில் மாலைதீவு விவகாரத்தை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லை. தாங்கள் சொல்கின்ற தாக்குதலைச் செய்ய வேண்டும் என்றும் அதற்குப் பணமும், ஆயுதமும் புளொட்டுக்குத் தருவதாக றோ சொன்னது. புலிகளுக்கெதிரான தாக்குதலாகவே அது இருக்கும் என உமாமகேஸ்வரன் நினைத்துக் கொண்டார். அன்றைய சந்திப்பின் போது றோ 50லட்சம் ரூபா இந்தியப் பணத்தை உமாமகேஸ்வரனுக்கு கொடுத்தது. அடுத்த சந்திப்பின் போது ஆயுதம் வழங்கப்படும் என்றும் அதற்கான இடத்தையும், திகதியையும் பின்பு அறிவிப்பதாகச் சொல்லி மீண்டும் இந்திய இராணுவ உலங்குவானுர்தியிலேயே உமாமகேஸ்வரனை இலங்கைக்கு அனுப்பிவைத்தனர். ஊருக்கு வந்த உமாமகேஸ்வரன் றோவின் பணத்தை கற்பிட்டியில் மாசிக் கருவாட்டுத் தொழிற்சாலை ஒன்றை நிறுவவும் கொழும்பின் புறநகர் பகுதியில் பாரிய கோழிப்பண்ணை ஒன்றை அமைக்கவும் முதலீடு செய்துவிட்டு றோவின் அடுத்த சந்திப்பிற்காக காத்திருந்தார்.
தொடரும்......................

காந்தி தேசத்தின் மறுபக்கம் 4

04
உமாமகேஸ்வரனை கொலை செய்வதற்கு பின்னணியில் நின்று தூன்டுகின்ற சக்தி றோ என்பது வசந்தனுக்குத் தெரியாது. ஆதனால் உமாமகேஸ்வரனும் அதை அறியவில்லை. ENDLF ராஜனின் சதி வேலை என்றுதான் அவர் அதை நினைத்துக் கொண்டார்.
எனவே மாலைதீவுக்கான வேலைகள் எந்தவித தடங்களுமின்றி மும்முரமாக நடந்தன. தாக்குதல் குழுவினர் செல்வதற்கும், ஆயுதங்கள், தளபாடங்கள் கொண்டு செல்வதற்கும் வேண்டிய கப்பல் ஒன்று சிங்கப்பூரிலிருந்து வந்து தூத்துக்குடி துறைமுகத்தில் தரித்து நின்றது. இன்னொரு கப்பல் இலங்கைக்கு மேற்கே சர்வதேச கடல் எல்லையில் நிற்கும் என்றும் அதிலேயே தாக்குதல் குழுவினர் தரை இறங்குவதற்கான படகுகள் இருக்குமென்றும் சொல்லப்பட்டது. தூத்துக்குடியிலிருந்து ஆயுதங்களுடன் புறப்படும் கப்பல் இந்தக் கப்பலுடன் இணையும் போது படகுகளில் ஆயுதங்களை பொருத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஏற்கனவே தாக்குதல் குழுவில் ஒரு பகுதியினர் மண்டபத்திற்கு அண்மையிலிருந்த தீவில் தங்கியிருந்தனர். மறுபகுதியினர் முள்ளிக்குளம் பகுதியிலிருந்த PLOT முகாமுக்கு அருகிலிருந்த சிறப்பு முகாமில் தங்கியிருந்தனர். விரைவில் அவர்களும் ஆயுதங்களுடன் மண்டபம் தீவுக்கு அனுப்பப்ட்டனர். 72 பேர் கொண்ட தாக்குதல் குழு புறப்படும் திகதியை எதிர்பார்த்து உமாமகேஸ்வரனின் தாக்குதலுக்காக காத்திருந்தது. உமாமகேஸ்வரன் றோவின் சமிக்ஞைக்காக காத்திருந்தார்.
நீண்டநாள் தாக்குதல் குழுவை மண்டபம் தீவில் தங்கவைப்பது இரகசியம் வெளியாக வழிவகுத்துவிடும் என்பது அவரது அச்சம். றோ தாக்குதல் முடிந்த கையோடு உமாமகேஸ்வரனை கொலை செய்ய ENDLF இன் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தது. இவ்வாறாக ஒரு வாரம் இழுத்தடிக்கப்பட்டதால் சலிப்படைந்த உமாமகேஸ்வரன் நுவரெலியாவிற்குச் சென்று ஜே.வி.பி தலைவர் றோகன விஜயவீராவையும் செயலாளர் உபதிஸ்ஸ சடநாயக்காவையும் சந்தித்துப் பேசினார்.
றோ தன்னை ஏமாற்றினால் ஜே.வி.பியின் உதவியோடு அவர்களுக்குப் பாடல் படிப்பிக்கலாம் என்று அவர் எண்ணினார். 6 மணிநேரம் ஜே.வி.பி தலைவர்களுக்கும் உமாமகேஸ்வரனுக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் முக்கியமான சிறிலங்கா அரசியல்வாதிகள் அவர்கள் பின்னால் நிற்கும் காடையர்கள் ஆகியோரை இருபகுதியினரும் இணைந்து கொலை செய்வது உட்பட பல்வேறு முக்கியமான விடயங்கள் பேசப்பட்டு உடன்பாட்டுக்கு வரப்பட்டன.
சங்கிலியை முள்ளிக்குளத்திற்கு அனுப்பியதால் தடைப்பட்டுப் போயிருந்த பயிற்சி விவகாரம் உமாமகேஸ்வரனுக்கு நம்பிக்கையான வேறு ஒருவர் மூலம் தொடர ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வாறு உமாமகேஸ்வரன் நுவரெலியாவில் ஜே.வி.பியினருடன் பேச்சுவார்த்தை நடாத்தி பயிற்சிமுகாம் அமைப்பதற்கான காட்டுப் பிரதேசங்களையும் (உமாமகேஸ்வரன் ஏற்கனவே அப்பிரதேசத்தில் நில அளவையாளராக கடமையாற்றியவர்) பார்வையிட்டுக் கொண்டிருந்த போது அவரின் கொழும்புத் தொலை தொடர்பாளர் - றோ அவசரமாக தங்களுடன் தொடர்பு கொள்ளச் சொன்னதாகத் தகவல் கொண்டு வந்திருந்தார்.
ஊடனடியாக கொழும்பு திரும்பிய அவர் றோவுடன் தொடர்பு கொண்ட போது மாலைதீவிற்குப் புறப்படுவதற்கான சமிக்ஞை கிடைத்தது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் இடைவெளியில் இரண்டு மூன்று தடவையாக மண்டபம் தீவிலிருந்து ஆயுதங்களும் ஆட்களும் கொஞ்சம் கொஞ்சமாக தூத்துக்குடி துறைமுகத்திலிருந்த கப்பலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். 1988ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் திகதி இரவு 11 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து அல் அகமத் என்று போலிப் பெயர் எழுதப்பட்ட அந்தக் கப்பல் 72 பேரையும் ஆயுதங்களையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.
அந்தக்கப்பல் இலங்கை இந்திய கடல் எல்லைகளைத் தாண்டி சர்வதேச கடல் எல்லைக்குள் செல்லும் வரை சிறிலங்கா கடற்படையினரின் இடையுறுக்கு அல்லது சோதனைக்கு உட்பட விடாமல் தடுப்பதற்கு றோவின் ஏற்பாட்டின் பெயரில் இந்தியக் கடற்படைக்கப்பல்கள் ரோந்து புரிந்தன.
சர்வதேச கடற்பரப்பில் வைத்து ஏற்கனவே அங்கு வந்து சேர்ந்த மற்றக்கப்பலுக்கு ஆளுயுதங்களும், போராளிகளும் மாற்றப்பட்டனர். அந்தக் கப்பலில் இருந்த அதிவேக விசைப்படகுகளில் ஆயுதங்கள் பொருத்தப்பட்டன. இது இவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தூத்துக்குடியிலிருந்து புறப்பட்ட கப்பல் தனது கடமையை முடித்துக் கொண்டு தனது பெயரை மாற்றுவதற்காக மீண்டும் தூத்துக்குடிக்கு திரும்பியது.

மற்றைய கப்பல் திட்டப்படி தனது பயணத்தைத் தொடர்ந்தது. மாலைதீவுக்கு 50 கடல் கிலோ மீற்றர் தூரத்தில் தாக்குதல்காரர்களையும், படகுகளையும் இறக்கிவிட்டு தானும் வழியை மாற்றிக் கொண்டு வேறிடம் சென்றுவிட்டது. ஆந்தக் கப்பல் தாக்குதல்காரர்களை இறக்கிவிடும் போது அதிகாலை 1 மணி. அவர்கள் முதல் நாள் இரவு 11 மணியிலிருந்து தொடர்ந்து கடல் பிரயாணம் செய்ததில் களைப்புற்றிருந்தார்கள். நல்ல மழையும் காற்றும் வேறு அடித்துக் கொண்டிருந்தது. ஆதிகாலை 2.30 மணி அல்லது 3 மணிக்குள் மாலைதீவிற்குள் பிரவேசித்தது. பெயருக்கிருந்த காவல்நிலைகளை வீழ்த்தி ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்து, அவரை கைது செய்வது என்பது திட்டம்.
250 குதிரைச்சக்தி வேகம் கொண்ட 5 படகுகளையும் அவர்கள் அதிகபட்ச வேகத்துடன் இயக்கினார்கள். மணி 4 ஆகியும் மாலைதீவு வரவில்லை. காற்றிலும், மழையிலும் திசiமாறி மாலைதீவிலிருந்து 10 மணிநேரம் கூட ஓடிவிட்டார்கள். பின்பு தவறை உணர்ந்து திரும்பி வரும் போது காலை 5 மணியாகிவிட்டது. நிலம் வேறு வெளுத்துவிட்டது.
50 கலிபர் துப்பாக்கி பொருத்திய காவலரணிலிருந்த மாலைதீவு காவல் வீரர் தற்செயலாக கடற்கரையைப் பார்த்த போது திடு திடுப்பென ஆயுதங்களுடன் குழுவொன்று ஓடிவருவதைப் பாhத்ததும் திடுக்கிட்டுப் போய்விட்டார். நிலைமையின் பயங்கரத்தை உணர்ந்த அவர் கண் இமைக்கும் நேரத்தில் தனது துப்பாக்கியை அவர்களை நோக்கி இயக்க தாக்குதல் குழுவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் தொலைத்தொடர்புக்கு பொறுப்பானவருமான வசந்தி என்பவர் ஸ்தலத்திலேயே மூளை சிதறி பலியாகிவிட்டார்.
தாக்குதல் குழுவினர் அதிர்ந்து போய் விட்டாலும் தொடர்ந்து துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துக் கொண்டு முன்னேறி காவல்நிலைகளை வீழ்த்தி ஜனாதிபதி மாளிகையையும் கைப்பற்றிக்கொண்டனர். ஆனால் ஜனாதிபதி அங்கில்லை. அவரின் நல்ல காலம் அன்று அவர் அங்கு தங்காமல் அருகிலுள்ள வேறு ஒரு தீவுக்குச் சென்றிருந்தார். அடுத்து என்ன செய்வதென்று தாக்குதல் குழுவினருக்குத் தெரியவில்லை. அவர்களை வந்து சந்தித்து தாக்குதலின் போது இணைந்து கொள்வதாகச் சொன்ன மாலைதீவுக்காரர்கள் அதிகாலை 4 மணிவரை பார்த்துவிட்டுத் திரும்பிச் சென்றுவிட்டார்கள்.

கொழும்பிலிருந்த உமாமகேஸ்வரனுடன் தொடர்பு கொண்டு அவரின் ஆலோசனையைக் கேட்பதற்குக் கூட அவர்கள் கொண்டு வந்த வானொலி தொடர்புச் சாதனம் வேறு மழை, காற்று காரணமாக ஒழுங்காக இயங்கவில்லை.

எதைச் செய்வது எதைச் செய்யக்கூடாது என்ற வாய்த் தர்க்கத்தில் தாக்குதல் குழுவுக்குள்ளேயே இரண்டு பிரிவு உருவாகிவிட்டது. தொலைத் தொடர்புக் கோபுரத்தைத் தகர்க்க வேண்டும் அல்லது அதனூடு செய்திகள் தெளிவாக வெளியேவராமல் தடுக்கும் இடையூறு அலைகளை ஒலிபரப்ப வேண்டும் என்றது ஒரு குழு. அதெல்லாம் தேவையில்லை மாலைதீவு முழுவதற்கும் மின்வழங்கும் பிரதான மின் வழங்கு நிலையத்தை தகர்த்தாலே போதும் என்றது மற்றைய குழு. இவர்கள் இவ்வாறு முரண்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் மாலைதீவு ஜனாதிபதி தான் தங்கியிருந்த தீவிலிருந்து சர்வதேச உதவி கோரி வானொலியில் செய்தி அனுப்பிவிட்டார். சர்வதேச செய்தி நிறுவன செய்மதிகளுக்கு எட்டிய இந்தச் செய்தியை அவர்கள் உலகெங்கும் பரப்பினர். நல்ல முடிவை எதிர்பார்த்துக் காத்திருந்த றோவிற்கு தலையில் இடி விழுந்தால் போல் ஆகிவிட்டது.
ராஜீவ்காந்தி பொறுக்க முடியாத ஆத்திரத்தில் றோ அதிகாரிகளை வாங்குவாங்கென்று வாங்கிவிட்டார். மாலைதீவின் நட்பு நாடான பாகிஸ்தானோ அல்லது சீனாவோ, அமெரிக்காவோ, வேறெந்த நாடோ படைகளை அனுப்பிவிட்டால் உண்மை வெளியாகி இந்திய பயங்கரவாதத்தைத்தூண்டும் நாடு என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாவதோடு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மிக மோசமான அவமானத்தைத் தான் சந்திக்க நேரும் என்றும் ராஜீவ்காந்தி மிகவும் பயந்தார். அதனால் மற்றவர்கள் முந்துவதற்கு முன் தான் முந்திக் கொண்டு இந்திய விமானப் படைப்பிரிவு ஒன்றையும், கடற்படைப் பிரிவு ஒன்றையும் அங்கே அனுப்பி வைத்தார்.
இதிலே வேடிக்கை என்னவென்றால் தாக்குதல் குழுவினரை பாதுகாப்பாக மாலைதீவிற்கு அனுப்பி வைக்க காவல்புரிந்த இந்தியக் கடற்படைக் கப்பல்களே அவர்களைக் கைது செய்ய அங்கே சென்றது. இந்திய இராணுவம் உதவிக்கு வரும் செய்தி அறிந்ததும் தாக்குதல் குழுவினர் மாலைதீவு மந்திரிகள், அதிகாரிகள் என்று சிலரையும் பணயமாகப் பிடித்துக் கொண்டு மாலைதீவு துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பலை எடுத்துக்கொண்டு அங்கிருந்து பின்வாங்கினார்கள். இந்திய விமானப்படை விமானங்கள் கப்பலுக்கு சேதமேற்படுத்தி கடலில் மூழ்கவைத்து தாக்குதல்காரர்களை கைது செய்து பயணக்காரர்களை மிட்டனர்.
சதிப்புரட்சிக்கு முன் உமாமகேஸ்வரனால் இரகசியமாக மாலைதீவிற்கு அனுப்பி அங்கு தங்கவைக்கப்பட்ட ரமேஸ் என்பவர் றோ அதிகாரிகள் மாலைதீவிற்கு நேரில் வந்து தங்களுடன் சம்மந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு இந்திய இராணுவத்தைக் கொண்டு கொலை செய்துவிட்டு விடயம் தெரியாதவர்களையே கைது செய்ததாகவும் முக்கிய ஆயுதங்களையும் அவர்கள் கடலில் மூழ்கடித்துவிட்டதாகவும் தகவல் அனுப்பினார்.

உமாமகேஸ்வரனுக்கு இதை வைத்து தன்னை அழித்துவிடுவார்களோ என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும் தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த றோவுக்கும், ராஜீவ் காந்திக்கும் தகுந்த பாடம் புகட்டி தனது இயக்க உறுப்பினர்களை மீட்க அவர் எண்ணினார். அதற்காக இரண்டு காரியங்களை செய்ய அவர் உத்தேசித்தார். முதலாவது ராஜீவ்காந்தியின் பிள்ளைகளைக் கடத்தி பயணம் வைப்பது. இரண்டாவது கொழும்பு வரும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளை ஒரு குழுவாக ஒரு பஸ்சுடன் சேர்த்து பணயம் வைப்பது

காந்தி தேசத்தின் மறுபக்கம் 3

03
கொச்சின் சந்திப்பு முடிந்து ஒரு சில நாட்களுக்குள் முள்ளிக்குளம், செட்டிகுளம், முருங்கன் பகுதியில் அதாவது புளொட் முகாம்கள் இருந்த பகுதிகள் இந்திய படையின் முற்றுகைக்கு உள்ளாகின. அப்பகுதிகளை இணைக்கும் பிரதான பகுதிகளில் இந்திய இராணுவத் தடை அரண்கள் உருவாக்கப்பட்டன.
இலங்கையில் இந்தச் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும் போது தமிழ் நாட்டின் கரையோர நகரமான மண்டபத்துக்கு அருகே உள்ள தீவில் வைத்து றோ புளொட்டுக்கு ஆயுதம் வழங்கியது.
ஏ.கே 47 ரக இந்தியத் தயாரிப்புத் தானியங்கித் துப்பாக்கிகள் 240, எல்.எம்.ஜி.ரக இயந்திரத் துப்பாக்கிகள் 24, எம்.எம்.ஜி. இயந்திரத் தப்பாக்கிகள் 04, 30 கலிபர் ரக துப்பாக்கிகள் 06, 50 கலிபர் ரக துப்பாக்கிகள் 04, ஐசுPபு7 என்கிற சிறுரக குறுகிய தூர ஏவுகணை 28, மோட்டார்கள் 04 உட்பட பெருந்தொகையான ரவைகள், குண்டுகள், செல்கள், கைக்குண்டுகள், வாக்கிரோக்கிகள் திசையறி கருவிகள் என்பனவும் சிங்கப்பூரிலிருந்து வரவழைக்கப்பட்ட அதிவேக விசைப்படகுகள் 03 என்பனவும் றோவால் புளொட்டிற்கு வழங்கப்பட்டது.
றோவின் ஆலோசனையின் பெயரில் இந்த ஆயுதங்களின் அரைவாசியை அந்தத் தீவில் பாதுகாப்பாக புதைத்து வைத்துவிட்டு மிகுதியை புளொட் இலங்கைக்கு எடுத்துச் சென்றது.
ஆயுதம் வந்த கையோடு உமாமகேஸ்வரன் செயலில் இறங்கினார். லெபனான் பயிற்சி பெற்ற நான்கு பேரின் தலைமையில் நான்கு தாக்குதல் குழுக்கள் உருவாக்கப்பட்டன.
இத்தாக்குதல் குழுக்களுக்கு பயிற்சி யளிப்பதற்காக வில்பத்து மற்றும் கற்பிட்டிப்பகுதிகளில் அமைந்திருந்த சிறு இராணுவ முகாம்களும், காவல் நிலைகளும் தாக்கப்பட்டன. சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்பு வைத்துக்கொண்டு புளொட் நடத்திய இந்தத் தாக்குதல்களை விடுதலைப்புலிகள் செய்ததாகவே சிறிலங்கா அரசு நினைத்துக் கொண்டது.
(புளொட் குழு ஒரு புறத்தில் இந்தியாவை எதிர்பார்ப்பதாக காட்டிக் கொண்டது. ஆனால் இந்தியாவுடன் இரகசியத் தொடர்பு வைத்துக் கொண்டு சிறிலங்கா அரசை எதிர்த்துப் போராடுவதாக சொல்லிக் கொண்டது. ஆனால் லலித் அத்துலத் முதலியுடன் அது இரகசியத் தொடர்பு வைத்துக் கொண்டது. ஜே.வி.பிக்கு எதிராகப் போராட விஜயகுமாரணதுங்காவின் மக்கள் கட்சி உறுப்பினர்களுக்கு செட்டிகுளத்தில் இராணுவ பயிற்சி கொடுத்தது. அதேநேரம் ஜே.வி.பிக்கும் நுவரெலியாவில் வைத்து இராணுவப் பயிற்சி கொடுத்தது. இவை வாசகர்களின் குழப்பத்தைத் தவிர்க்க இங்கே குறிப்பிடப்படுகின்றது).
சிறிலங்கா இராணுவத்தின் மீதான தாக்குதல் நடத்திய நான்கு குழுக்களில் மிகத் திறம்பட செயற்பட்ட 3 குழுக்கள் மாலைதீவு இராணுவ நடவடிக்கைக்கு தெரிவு செய்யப்பட்டன. முதலில் இந்தக்குழு தலைவர்களிடமோ அல்லது அந்தக்குழுக்களின் இணைத் தலைவர்களிடமோ இந்த விடயம் சொல்லப்படவில்லை. முக்கியமான தாக்குதல் ஒன்றை நடாத்த பயிற்சி எடுப்பது என்றே சொல்லப்பட்டது. றோவினால் ஆயுதம் வழங்கப்பட்ட இடமான மண்டபத்திற்கு அருகில் உள்ள தீவே பயிற்சிக்குரிய தளமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.. 3 குழுக்கள் அந்தத்தளத்தில் பாதுகாப்பாக நிலைகொண்டிருக்க மூன்றாவது குழு கடல்வழியாக வந்து தீவின் பிரதேசத்தில் தாக்குதல் நடாத்தி தீவைக் கைப்பற்றுவது போல் சுழற்சிமுறையில் பயிற்சியளிக்கப்பட்டது. உமாமகேஸ்வரனின் நேரடி மேற்பார்வையில் இரண்டு மாபதங்கள் தொடர்ந்து கொடுக்கப்பட்ட இந்தப் பயிற்சியை றோ அதிகாரிகளும் அடிக்கடி வந்து பார்வையிட்டனர்.
அந்தத்தளத்தில் பயிற்சி எடுத்தவர்கள் சிறிலங்கா அரசின் காரைநகர் கடற்படைத் தளத்தையோ, அல்லது அதையொத்த வேறு தளத்தையோ தான் தாக்கப் போவதாக நினைத்துக் கொண்டார்கள். ஒரு மாத பயிற்சியின் பின்பே தொலைத்தொடர்புக்குப் பொறுப்பான ஒருவருக்கும் தாக்குதலுக்கு தலைமை தாங்கும் ஒருவருக்கும் விசயம் சொல்லப்பட்டது. அவர்கள் இருவரும் மாலைதீவு சென்று நிலமைகளை அவதானித்து ரெக்கி எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கட்டுநாயக்கா விமான நிலையத்தினூடாக அவர்கள் அடிக்கடி மாலைதீவு செல்லும் போது சிறிலங்கா அதிகாரிகளுக்கு சந்தேகம் வரலாம் என்ற காரணத்தினால் திருவானந்தபுரம் விமான நிலையத்திலிருந்து இந்தியக்கடவுச்சீட்டிலேயே அவர்கள் சென்றுவர ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
இந்த ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்துகொண்டிருந்து நேரத்தில் ஏற்கனவே இந்திய இராணுவத்துடனும், றோவுடனும் ஒட்டிக்கொண்டிருந்த அவர்களின் செல்லப்பிள்ளையான ENDLF இன் தலைவர்களை அழைத்து றோ அதிகாரிகள் பேசினார்கள்.
எல்.ரி.ரி.யும், புளொட்டும் ஒன்று சேர்ந்துவிடும் போலிருக்கிறது. இந்தியாவையும், இந்திய இராணுவத்தையும் எதிர்த்து உமாமகேஸ்வரன் விடும் அறிக்கைகள் புலிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் இரகசியத் தொடர்பு இருப்பதைக் காட்டுகின்றது. ஆவர்கள் இருவரும் சேர்ந்தால் உங்களுக்கு ஆபத்து. அதற்கு முன் உமாமகேஸ்வரனை கொலை செய்துவிட்டால் அவரின் விசுவாசிகள் தவிர மிச்சப்பேரை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தவர்கள் தானே, எதற்காகப் பிரிந்திருக்க வேண்டும் என்று ENDLF தலைவர்களுக்கு உபதேசம் செய்யப்பட்டது.
றோவின் உபதேசத்தில் மயங்கிய அவர்கள் அதற்கு ஒத்துக்கொண்டனர். நீங்கள் இப்போதிலிருந்து அதற்கான முயற்சியில் இறங்குங்கள். ஆனால் நாங்கள் சொல்லும்வரை காரியத்தைச் செய்யக்கூடாது என்று அவர்களுக்கு கண்டிப்பான உத்தரவு போடப்பட்டது. உமாமகேஸ்வரனை ஒழிக்கும் முயற்சியில் ENDLF, புளொட்டில் இருந்த வசந்தன் என்பவரை அணுகியது.
நாங்கள் ஏன் பிரிந்திருக்க வேண்டும், நாங்கள் ஒன்று சேர்வதற்கும் புளொட்டில் உள்ளவர்கள் கஸ்டப்படுவதற்கும்; உமாமகேஸ்வரனே காரணம், அவரைத் தட்டிவிட்டால் நாங்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்;ந்து இயங்கலாம் என்று வசந்தனுக்குச் சொல்லப்பட்டது.
புலிகள், புளொட்டின் முள்ளிக்குளம் முகாமை தாக்கிய போது பலயாகிப்போன இந்த வசந்தன் என்ற நபர், வெளியில் உமாமகேஸ்வரனது விசுவாசியாகக் காட்டிக் கொண்டாலும், உண்மையில் அவர் தீவிரமான :உமா எதிர்ப்பாளர், புளொட் இரண்டாக உடைந்து சிதறிய போது ENDLF இலும் புளொட்டிலும் சேராமல் தமிழகத்தில் சிதறிப்போய் வாழ்ந்;த உமாமகேஸ்வரன் எதிர்ப்பாளர் பலருக்கு புளொட்டின் சார்பில் தான் தமிழகத்தில் செய்த வாகனக்கடத்தல் வழிபற்றி நடவடிக்கைகள் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு இரகசியமாக ஆதரவழித்து வந்தார்.
இவருக்கு வயதும் அனுபவமும் குறைவு என்பதால் நிறைய பொறுப்பற்ற தனங்களும் இருந்தன. இவர் ENDLF தன்னிடம் தெரிவித்த தகவலை வவுனியாவில் தங்கியிருந்த தனது சகாவான சந்திரன் என்பவருக்குத் தெரிவிக்க கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இப்படிப்பட்ட விடயத்தை கடிதம் மூலம் தெரிவிப்பது எவ்வளவு ஆபத்தானது என்பது அவரது அறிவுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதுவும் எழுதிய அந்தக் கடிதத்தை கோவை மாவட்டம் திருப்பூர் நகரத்தில் இருந்த உமாமகேஸ்வரன் ஆதரவாளர் ஒருவர் வீட்டில் தனது உடமைகளோடு தவறுதலாக வைத்துவிட்டுப் போய்விட்டார்.
தற்செயலாக ஒரு புத்தகமொன்றில் இருந்த அந்தக் கடிதத்தை கண்டெடுத்துப் படித்த அந்த திருப்பூர்காரர் அதிலிருந்த விடயத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அதை உடனடியாக உமாமகேஸ்வரனிடமும் சேர்ப்பித்தும் விட்டார்.
கடிதத்தைப் படித்த உமாமகேஸ்வரனுக்கு தலைகொள்ள முடியாத ஆத்திரம் வந்தது. உடனடியாக வசந்தனைப்பிடித்து தட்டிவிடலாம் என்று நினைத்தார். ஆனால் அப்படிச் செய்தால் இயக்கத்துக்குள் குழப்பம் வந்துவிடும். ஆதனால் மாலைதீவு விவகாரம் கெட்டுவிடும் என்று அவருக்குத் தோன்றுகிறது.
ஆனால் வசந்தன் செயலில் முந்துவதற்குமுன் அவரது வெளித் தொடர்புகளை கட்டுப்படுத்தி அவரை முடக்குவதற்கு வெளிவேலைகளில் ஈடுபட்டிருந்த அவரை உடனடியாக முள்ளிக்குளம் முகாமுக்கு போகும்படி பணித்தார் உமாமகேஸ்வரன்.

அடுத்த நடவடிக்கையாக நுவரெலியாவில் ஜே.வி.பி இயக்கத்திற்கு பயிற்சி கொடுப்பதற்கான ஆயத்த வேலைகில் ஈடுபட்டிருந்த சங்கிலி என்ற கந்தசாமியை உடனே கொழும்பிற்கு வரும்படி உத்தரவிட்டார். சங்கிலியிடம் விசயத்தைச் சொன்னால் அவர் தனது பழைய பாணியில் நடந்து தலைமை விசுவாசத்தைக் காட்ட முற்பட்டால் அது இன்னமும் பெரிய பிரச்சினையாகி மாலைதீவு விவகாரத்தை கெடுத்துவிடும் என்பதால் நுவரெலியாவில் இருப்பது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று மட்டுமே சொல்லப்பட்டது.
உமாமகேஸ்வரனின் நோக்கம் சங்கிலியிடம் விசயத்தைச் சொல்லாமலே அவரை மள்ளிக்குளம் முகாமுக்கு அனுப்பி வைத்தாலே அவன் இருக்கிற பயத்தில் வசந்தன் அடங்கிவிடுவான் என்பதாகும்.
ஏற்கனவே முள்ளிக்குளத்துக்குப் போன வசந்தன் சங்கிலி அங்கு வரப்போவதை அறியாது உமாமகேஸ்வரன் சங்கிலியை வைத்து கொலைகாரப் படை ஒன்றை நுவரெலியாவில் உருவாக்குவதாக அங்கிருந்தவர்களிடம் இரகசியமாக பிரசாரம் செய்து வந்தான்;.
இந்தச் சூழ்நிலையில் சங்கிலி அங்கே போனபோது அங்கிருந்தவர்களுக்கு கிலி பிடிக்காத குறைதான். ஏல்லோரும் சங்கிலியை தங்களைத் தட்ட வந்த கொலைகாரனாகப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

காந்தி தேசத்தின் மறுபக்கம் 2

02
உமாமகேஸ்வரன் றோவின் அடுத்த சந்திப்பிற்காக காத்திருந்த நேரத்தில் இலங்கையில் கோழி இறைச்சி ஏற்றுமதி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரி ஒருவர் அவரை வந்து சந்தித்தார். அவர் தன்னுடைய பெயர் அப்துல்லா (புனைபெயர்) என்றும் தான் மாலைதீவு பிரஜை என்று அறிமுகம் செய்து கொண்டார்.
உமாமகேஸ்வரன் முதலில் தன்னை யார் என்று காட்டிக்கொள்ளவில்லை. தான் ஒரு கோழிப்பண்ணை முதலாளி என்ற தொனியிலேதான் அவருடன் பேசினார். ஆனால் அவர் எனக்கு உங்களைத் தெரியும் நீங்கள் தான் உமாமகேஸ்வரன் என்ற போது உண்மையில் உமாமகேஸ்வரன் அதிர்ந்து விட்டார்.
தன்னைக் கொலை செய்ய அல்லது கடத்திச் செல்ல எதிரிகளால் அனுப்பப்பட்ட ஆளாக அவர் இருப்பார் என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டு அவரது முகம் கறுத்துப்போனது.
அதை அவதானித்த அப்துல்லா நண்பரே பயப்பட வேண்டாம் உங்களைச் சென்று சந்திக்கும்படி றோதான் என்னை அனுப்பியது என்று சொல்லி றோவுக்கும் அவருக்கும் நடந்த பேச்சுவார்த்தையைப் பற்றியும் சொன்னார்.
அதன்பின் உமாமகேஸ்வரனுக்கு நம்பிக்கை வந்தது. அப்துல்லா மாலைதீவு நிலைமைகளைப் பற்றியும் மாலைதீவில் ஆட்சி நடத்தும் கயும் ஒழுக்கமில்லாதவர் என்றும் மதுபானம் அருந்துவது உட்பட இஸ்லாத்துக்கு விரோதமான காரியங்களை செய்பவர் என்றும், அங்குள்ள மக்களுக்குச் சுதந்திரமில்லை. அங்கே ஜனநாயக ஆட்சி ஒன்றை அமைக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் உமாமகேஸ்வரனைக் கேட்டுக்கொண்டார்.
உமாமகேஸ்வரனுக்கு முதலில் ஆச்சரியமாகப் போய்விட்டது. உங்கள் நாட்டில் ஆட்சியமைக்க நான் எப்படி உதவி செய்ய முடியும் என்று அவர் கேட்க றோ உங்களுக்கு விசயத்தைச் சொல்லவ்pலலையா, உங்களிடம் பேசியிருப்பதாக என்னிடம் சொன்னார்களே. என்று அப்துல்லா திருப்பிச் சொன்னார். அப்போதுதான் உமாமகேஸ்வரனுக்கும் றோ சொன்ன தாக்குதல் திட்டம் அது தான் என்றும் புரிந்தது. கூடவே பயமும் வந்துவிட்டது.
ஆயுதப் பயிற்சி விவகாரத்தில் தன்னைப் புறக்கணித்தது பரந்தன் ராஜனை வைத்து தன்னுடைய அமைப்பை இரண்டாக உடைத்தது, தான் இறக்கிய ஆயுதங்களை முடக்கியது. என்று பலமுறை தன்னுடைய முதுகிலேயே குத்திய றோ எங்கு தன்னை பெரிய சிக்கலில் மாட்டிவிடுமோ என்று அவர் யோசிக்க ஆரம்பித்தார்.
உங்களிடம் றோ அதிகாரிகள் மேற்கொண்டு பேசுவார்கள். உங்கள் சந்தேகங்களை அவர்களுடன் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள். எங்களுடைய சந்திப்பின் ஞாபகர்த்தமாக எனது இந்தச் சிறிய பரிசை நீங்கள் மறுக்காமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி ஒரு புத்தம் புதிய மெஸ்டா காரை உமாமகேஸ்வரனுக்கு கொடுத்துவிட்டு அப்துல்லா விடைபெற்றுக்கொண்டார்.
இது நடந்த ஒரு வாரகாலத்தின்பின் றோ அதிகாரி ஒருவர் கொழும்பு வந்து உமாமகேஸ்வரனைச் சந்தித்து அடுத்த சந்திப்பு கேரளாவின் துறைமுக நகரமான கொச்சினில் நடைபெறும் என்றும் இந்த விபரம் வேறு ஒருவருக்கும் தெரிய வேணடாம் என்றும் குறிப்பாக றோவுக்கும், புளொட்டுக்கும் இடையிலான வழமையான தொடர்பாளரான பாலபுத்தருக்குக்கூட இது தெரியக்கூடாது என கேட்டுக்கொண்டார்.
பாலபுத்தர் தங்களுக்கு நெருக்கமானவர் என்றாலும் ஈஎன்டிஎல்எப் ஈபிஆர்எல்எப் ரெலோ மற்றும் ரியுஎல்எப் காரர்களுடனும் அவருக்கு தொடர்பு இருந்தது. இதனால் அவர் மூலம் இரகசியம் வெளியில் போகக்கூடும் என்று றோ அஞ்சியது.
அடுத்த சந்திப்புக்காக இம்முறை உமாமகேஸ்வரன் இந்திய இராணுவ விமானத்தில் செல்லவில்லை. சாதாரண இந்தியன்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விhமன நிலையத்திற்கூடாகவே திருவானந்தபுரம் சென்றார். ஆனால் சொந்தப் பெயரில் அல்ல. திருவானந்தபுரம் விமான நிலையத்தில் உமாமகேஸ்வரனை வரவேற்ற றோ அதிகாரிகள் தங்களது காரில் கொச்சினுக்கு அழைத்துச் சென்றார்கள்.
கொச்சின் துறைமுகத்தில் தரித்து நின்ற சிங்கப்பூர் கப்பல் ஒன்றில் 1987 ஒக்ரோபர் மாதம் 14ம் திகதி அந்த முக்கியமான சந்திப்பு நடந்தது.
தாடிக்கார அப்துல்லா உமாமகேஸ்வரனுக்கு முன்பே அங்கு வந்திருந்தார். கூடவே சிங்கப்பூரிலிருந்து மற்றைய இரு மாலதீவுக்காரர்கள், இரண்டு றோ அதிகாரிகள் ஆகியோர் அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
முதலில் றோ அதிகாரிகளை தனியாக சந்தித்த உமாமகேஸ்வரன் தனது அதிருப்தியை வெளிக்காட்டி தனக்கு அந்த விடயத்தில் அக்கறை இல்லாதது போல் காட்டிக் கொண்டார். உண்மையில் உமாமகேஸ்வரனுக்கு இதில் ஈடுபட விருப்பம். ஆனால் விலை வைத்து றோவிடம் காரியத்தை சாதிக்க வேண்டும் என விரும்பினார்.
றோ அதிகாரிகள் முன்பு போல் இனி நடக்காது, நாங்கள் உங்களுக்கு எல்லா உதவிகளும் செய்கின்றோம். இந்தக் காரியத்தை நீங்கள் நடத்தி முடிந்தால் மாலைதீவில் உள்ள முக்கிய தீவுகளில் இரண்டு தீவுகளே நீங்கள் தங்கியிருக்கவும், தளம் அமைத்து பயிற்சி எடுக்கவும் உங்களிற்கு ஏற்பாடு செய்து தருகின்றோம். அந்தத் தீவுகளில் வரும் வருமானத்தையும் நீங்களே எடுத்துக்கொள்ளலாம் என்று உமாமகேஸ்வரனுக்கு நம்பிக்கை ஊட்ட முயன்றனர்.
எதற்காக நீங்கள் மாலைதீவு விகாரத்தில் இவ்வளவு அக்கறை எடுக்கின்றீர்கள் என்று உமாமகேஸ்வரன் அவர்களை திருப்பிக் கேட்டார்.
இந்தியா எவ்வளவு பெரிய நாடு, ராஜீவ்காந்தி எவ்வளவு பெரிய தலைவர், இது உங்களுடைய ஜே.ஆருக்கும் சிங்கள அரசியல்வாதிகளுக்கும் புரியவில்லை. அவைக்கு அதை புரிய வைக்க எங்களுக்கு ஒரு தளம் வேண்டும். தமிழ் நாட்டை முன்புபோல பயன்படுத்த முடியாது. அங்கே புலிகள் எல்லா இடத்திலேயும் ஊடுருவிவிட்டார்கள். ஜே.ஆர், ஜே.வி.பி, புலிகள் எல்லோருக்கும் பாடம் படிப்பிக்க வேண்டும். நாங்கள் அதற்கான திட்டங்கள் வைத்திருக் கின்றோம். நீங்கள் மட்டும் இந்தக் காரியத்தை வெற்றிகரமாக முடித்துத் தந்தால் என்றைக்கும் எங்களின் நம்பிக்கைக்குரிய நண்பராக உங்களை நினைத்து உங்களுக்கு வேண்டியதை நாங்கள் செய்து தருவோம். என்று தமது திட்டத்தை விளக்கினார்கள் றோ அதிகாரிகள்.
உமாமகேஸ்வரன் றோவுடன் பேசிக்கொண்டிருந்த காலத்தில் புளொட் நுவரெலியா மாவட்டத்தில் ஜே.வி.பிக்கு ஆயுதப்பயிற்சி கொடுக்க நடவடிக்கை எடுத்துக்கொண்டிருந்ததும் மன்னார் மாவட்டம், செட்டிகுளம், முள்ளிக்குளம் பகுதியில் ஜே.வி.பியை எதிர்த்துப் போராட விஜயகுமாரதுங்காவின் மக்கள் கட்சி உறுப்பினர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்து வந்ததும் றோவுக்குத் தெரியாது.
ஏறத்தாள மூன்றுமணிநேரம் நடந்த அந்தப் பேச்சுவார்த்தையில் மாலைதீவின் அப்துல் கயூமின் ஆட்சியை இராணுவ அதிரடி மூலம் கவிழ்ப்பது என்று இறுதி முடிவாகியது.
உமாமகேஸ்வரன தன்னிடம் ஜோர்ச் கபாஸ் தலைமையிலான பலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணியிடம் பயிற்சி பெற்ற வீரர்கள் இருப்பதாகவும் அவர்கள் மூலம் இந்தக்காரியத்தை திறம்பட செய்து முடிக்க முடியும் என்றும் தனக்குத் தேவை ஆயுதமும், பணமும், போக்குவரத்து வசதியும் தான் என்று கேட்டுக் கொண்டார்.
அது ஒன்றும் பிரச்சினை இல்லை எல்லா ஒழுங்குகளையும் நாங்கள் செய்து தருவோம். கொழும்பில் உங்களுக்கு நண்பர் அப்துல்லா ஒரு கோடி ரூபா இலங்கைக் காசு தருவார். காரியம் முடிந்ததும் 10 கோடி ரூபா இலங்கைக் காசு தருவோம். அடுத்த வாரம் ஆயுதங்கள் உங்கள் கைக்கு கிடைக்க ஏற்பாடு செய்கின்றோம். என்று சொன்ன றோ அதிகாரிகளுக்கு திடீரென ஒரு சந்தேகம் வந்தது. நாங்கள் தரும் ஆயுதங்களை நீங்கள் தமிழ் நாட்டில் வைத்திருக்கப் போகின்றீர்களா அல்லது உங்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்லப் போகின்றீர்களா? என்று அவர்கள் கேட்டனர்.
தமிழ் நாட்டில் வைத்திருந்து என்ன செய்வது, எங்களது பயிற்சி முகாம்கள் எல்லாம் இலங்கையில் தான் இருக்கின்றது. அதனால் அங்கு கொண்டு போவது தான் நல்லது என்று உமாமகேஸ்வரன் சொன்னார்.
அங்கே கொண்டு போவது ஆபத்தில்லையா. புலிகள் அவற்றை உங்களிடமிருந்து பறித்துக்கொண்டுவிட்டால் என்ன செய்வீர்கள் என்று திருப்பிக் கேட்டனர் றோ அதிகாரிகள்.
அப்படி ஒருநாளும் நடக்காது மன்னார் மாவட்டம், முள்ளிக்குளம், செட்டிகுளம், முருங்கன் பகுதிகள் எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அங்கே நாங்கள் பலமான பாதுகாப்பு முகாம்களை அமைத்திருக்கின்றோம். புலிகள் வந்து எம்மை ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்களுக்கு பதிலளித்தார் உமாமகேஸ்வரன்.
புலிகள் ஒருபோதும் உங்கள் பகுதிக்கு வந்ததில்லையா. முருங்கன் பகுதியில் புலிகளுக்கும் உங்களுக்கும் மோதல் நடந்ததாக நாங்கள் கேள்விப்பட்டோமே என்று மீண்டும் றோ அதிகாரி ஒருவர் கேட்க அது ஒரு சிறிய சம்பவம் அடிக்கடி இப்படி நடப்பதில்லை. எப்போதாவது இப்படி வந்து எதிர்பாராத விதமாக சந்திக்கும் போது நடக்கும் மற்றப்படி அது எங்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதி என்றார் உமாமகேஸ்வரன்.
அவரது பதிலைக் கேட்டு சிறிது நேரம் யோசித்த றோ அதிகாரிகள் புலிகள் உங்கள் பகுதிக்குள் வராமல் தடுக்க நாங்களும் ஒரு காரியம் செய்யலாம். அதாவது IPKF இன்னமும் உங்கள் பகுதிக்கு வரவில்லை. நாங்கள் உங்கள் பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும்படி அவர்களுக்குச் சொல்கின்றோம். அதன்மூலம் புலிகளின் ஊடுருவலை தடுக்கலாம்.
அவர்களது இந்த யோசனை உமாமகேஸ்வரனுக்குப் பிடிக்கவில்லை. IPKF எங்கட பகுதிக்கு வருவது தேவையில்லை என்று நான் நினைக்கின்றேன். அவர்கள் வரும் போது அவர்களுடன் கூட இருக்கும் EPRLF ENDLF TELO ஆட்களும் வருவார்கள். பிறகு காரியம் நடக்காது எல்லாம் குழம்பிப் போகும் என்றார்.
அதைப்பற்றி நீங்கள் பயப்பட வேண்டாம். மிஸ்டர் உமாமகேஸ்வரன் IPKF உங்களுடைய பகுதிக்கு வராவிட்டால் ஏதோ உங்களுக்கும் இந்தியாவிற்கும் சம்மந்தம் இருப்பதாக மற்றவர்களுக்குச் சந்தேகம் வரும். அதுதான் ஆபத்து LTTEயை மட்டுமல்ல மற்ற எந்தக் குழுக்களையும் உங்களுடைய பகுதிக்கு வரவிடாமல் செய்வது எங்கள் பொறுப்பு என்று றோ அவருக்கு உறுதி தந்தது.
IPKF வரட்டும். ஆனால் புளொட் முகாம்களுக்கோ உறுப்பினர்களுக்கோ எந்தப்பாதிப்பும் இல்லாதவிதத்தில் அவை நடந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையோடு அவர்களின் யோசனையை அவர் ஏற்றுக் கொண்டார். எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். நீங்கள் IPK யையும் இந்தியாவையும் எதிர்க்கின்ற மாதிரி நடந்து கொள்கின்றார்கள் என்று அவருக்கு ஆலோசனை கூறியது றோ.
நாடு திரும்பிய உமாமகேஸ்வரன் செய்த முதல் வேலை புலிகள் மீது தொடர்ந்து இந்திய இராணுவம் தாக்குதல் நடாத்தினால் புளொட் இந்திய இராணுவத்தை எதிர்த்துக் களத்தில் இறங்கும் என்று அறிக்கைவிட்டதுதான்.

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2008

நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும்

நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும்
“எதிரியின் ஓராயிராம் பொய் பரப்புரைகளை புரட்சியாளர்களின் ஒரே ஒரு வெற்றிகரமான தாக்குதல் ஒரு சில நிமிடங்களில் முறியடித்துவிடும்;” இது பொலீவிய புரட்சிக்களத்தில் சேகுவேரா உதிர்த்த வார்த்தைகளாகும்.

இது இன்றைக்கு எமது தாயக போர்களத்திலும் நிரூபணமாகி இருக்கிறது
விடுதலைப் புலிகளின் போரிடும் ஆற்றல் சிதைக்கப்பட்டவிட்டது. அவர்களுடைய கடைசி தளப் பிரதேசமான கிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் அடுத்த மாவீரர் தினத்துக்கு முன்னர் பிடித்துவிடுவோம். கிளிநொச்சிக்கு இன்னமும் 15 கிலோ மீட்டர் தூரம் தான் இருக்கிறது. முல்லைத்தீவுக்கு இன்னுமும் 25 கிலோ மீட்டர் தூரம் தான் இருக்கிறது. வன்னியின் அடர்ந்த காட்டின் நடுவிலுள்ள பங்கர்களுக்குள் தான் அவர்கள் இந்த வருட மாவீரர் தினத்தை நினைவு கூரவேண்டும்.அவர்களுடைய விமானங்கள் வான்பரப்பில் மேலெழுவதற்கு முன்னரே எங்களது ராடர்களில் அவற்றை கண்டுபிடித்து அழித்துவிடுவோம். என்றெல்லாம் சிறீலங்கா அரசு செய்த வந்த பரப்புரைகளை குறிப்பாக நாளாந்தம் விடுதலைப்புலிகளின் இழப்புகள் தொடர்பான அரசாங்கம்; வெளியிட்ட எண்ணிக்கைகளை தென்பகுதி சிங்கள மக்கள் நம்பி பால்சோறு பொங்கி கொண்டாடினாலும் சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் சந்தேகக் கண் கொண்டே பார்த்தன.

ஆனால் ஒரே பொய்யை திருப்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையென நம்பப்பட்டுவிடும் என்கின்கின்ற கோயபல்ஸ் தத்துவத்துக் கிணங்க விடுதலைப் புலிகள் பலவீனப் பட்டுப் போய்விட்டார்கள் என்கின்ற ஒரு மாய பிம்பம் சர்வதேச மட்டத்தில் உருவாகியிருந்தது என்னவோ உண்மை தான்.

தேசத்துரோகக் கும்பல்களும் அவற்றின் ஊதுகுழல் ஊடகங்களும் ஆஹா புலியின் கதை முடிந்துவிட்டது.வடக்கின் முதலமைச்சர் நாங்கள் தான்.யாழ்ப்பாணம் வன்னிக்கான அபிவிருத்திட்டங்களுக்கான முகவர்கள் நாங்கள் தான்.இனிமேல் எந்தத் தடையும் இல்லாமல் கோவில்களை வைத்து மோதல்களை துண்டிவிடலாம். சாதியை வளர்க்கலாம்.ஊர் பிரதேச வேறுபாடுகளை துளிர்விடச் செய்யலாம் என்றெல்லாம் குதூகலித்துக் கொண்டார்கள்.போராட்டம் விடுதலை எல்லாம் சாத்தியமில்லை.பௌத்த சிங்கள மேலாதிக்க வாதிகளுக்கு அடிமைச் சேவகம் செய்து அவன் போடும் பிச்சையை பெற்றுக் கொண்டு அவனுடைய படையினரின் இச்சiயை தீர்ப்பதற்கு இளம்; பெண்களை பிடித்தோ காட்டியோ கொடுக்கலாம்.இது தான் பிழைப்பதற்காக உன்னதமான வழி.இதைவிட்டு தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை என்பதெல்லாம் மக்களின் அழிவுக்கு வழிவகுக்கும் காலத்துக்கு பொருந்தாத கோட்பாடுகள் என்று நாங்கள் சொன்னதெல்லாம் உண்மையாகிவிட்டது பாருங்கள் என்று பெருமையடித்துக் கொண்டார்கள.;

சிறீலங்கா அரசின் கோயாபல்ஸ் பாணியிலான பரப்புரை புலத்திலுள்ள தமிழ் தேசிய பற்றாளர்களிடையேயும் ஒருவித அவநம்பிக்கைணையும் சோர்வையும் தோற்றுவித்தது.

எது உண்மை? எது பொய்;? எதை நம்புவது- எதை நம்பாமல் இருப்பது? ஏன்கின்ற ஒருவித குழப்பான மனநிலையில் தான் புலம் பெயர்ந்த சாதாரண மக்களில் பலர் இருந்தனர்.

இந்தப் பின் புலத்தில் தான் திருகோணமலை துறைமுகம் மற்றும் அங்குள்ள சிறீலங்கா கடற்படைத் தளம் மீதான விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் நடந்திருக்கிறது.

இந்தத் தாக்குதலில் முக்கியமான அம்சம் அதை நடத்துவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடமாகும்

திருகோணமலை கடற்படைத்தளத்திற்குமான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புக்கென அதிஉயர் சக்தி வாய்ந்த ராடார்களையும் அவற்றை கையாள்வதற்கான துறைசார் நிபுணத்துவ பயிற்சிகளையும் அமெரிக்கா வழங்கியிருந்தது.

இந்த துறைமுக பாதுகாப்புக்கென சீனாவும் இந்தியாவும் விமான எதிர்ப்பு பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகளை வழங்கியிருந்தன. விமானத் தாக்குதல்களை முறிடிப்பதற்கென்று இந்தியாவிலிலும் பாகிஸ்த்தானிலும் சிறப்புப் பயிற்சி பெற்ற கொமாண்டோ படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.
விடுதலைப்புலிகளின் விமானங்கள் திருமலைத் துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அவற்றை விரட்டிச் சென்று வானத்தில் வைத்து அழிப்பதற்கென்று திருமலைத் துறைமுகத்தை அண்டிய சீனன்குடா விமானப்படை தளத்தில் தாக்குதல் வானூர்திகளும் தாயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இவையெல்லாவற்றையும் விட அமெரிக்க இஸ்ரேலிய இந்திய உளவுச் செய்மதிகளின் வான் வழிக் கண்காணிப்பு இந்திய கடற்படை மற்றும் விமானப்படையினரின் ராடார் கண்காணிப்பு உதவி என்று கொழும்புத் துறைமுகத்தை விட அதி உச்சப்பாதுகாப்பு பொறிமுறைக்கு உட்பட்ட ஒரு பகுதியாக இந்த திருகோணமலை துறைமுகப்பகுதி இருந்து வருகிறது .

ஆனால் வான் புலிகள் இந்த அதி உச்சப் பாதுகாப்பு பொறிமுறையை செயலற்றதாக்கிவிட்டு சர்வ சாதாரணமாக அந்தப் பகுதிக்கு வந்து தாக்குதல் நடத்திவிட்டுச் பாதுகாப்பாக திரும்பிச் சென்றிருக்கிறார்கள்.அதிலும் இரண்டு தடவைகள் 3 மணி நேர இடைவெளி விட்டு இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எப்படி இது சாத்தியமானது என்ற கேள்வி சாதாரண மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களிலும் எழுப்பப்பட்டிருக்கிறது.
முதல் தடவை நடந்த தாக்குதல் தொடர்பான செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இரண்டாவது தடவை தாக்குதல் நடந்தாகக் கூறப்படுவது வெறும் ஊகங்களாகவே உள்ளன.முதல் தாக்குலையே தங்களது வழமையான பாணியில் மூடி மறைக்க முடியாமல் மழுப்பிவரும் சிறீலங்கா அரச தரப்பும் அதன் படைத் தரப்பும் இந்த இரண்டாவது தாக்குதல் பற்றி முதலில் மூச்சே விடவில்லை. இரண்டாவது தாக்குதல் நடந்ததோ இல்லையோ ஆனால் மக்கள் மத்தியிலும் பல சர்வதேச ஊடகங்கள் மத்தியிலும் அது நடந்திருக்க வேண்டும் என்ற ஐயப்பாட்டை அது தோற்;றிவித்திருக்கிறது.இது தாக்குதலில் கிடைத்த பெரிய வெற்றி என்றே சொல்ல வேண்டும்.
இந்தத் தாக்குதல் மூலம் விடுதலைப் புலிகள் சர்வதேசத்துக்கும் போர் வெறி கொண்ட சிங்கள இனத்திற்கும் அவர்களது எஜமானர்களான மகிந்த ராஜபக்ஷ அன் கொம்பனிக்கும் ஒரு முக்கியமான செய்தியை சொல்லி இருக்கிறார்கள். சிறீலங்கா அரசிடம் எவ்வளவு நவீன ஆயுதங்கள் உயர் வலுக்கொண்ட எவ்வளவு கண்காணிப்பு சாதனங்கள் எத்தனை வல்லரசுகளின் படைபல- நிபுணத்துவ உதவிகள் இருந்தாலும் அவர்களின் எத்த இலக்கையும் எந்தச் சந்தர்ப்பத்திலும் சென்று தாக்கும் வல்லமை தங்களுக்கு எப்போதும் உண்டு என்பதே விடுதலைப்புலிகன் சொன்ன அந்தச் செய்தியாகும்.
போர் களத்தில் ஆயுத பலமும் ஆள் பலமும் அடிப்படைத் தேவைகள் என்றாலும் அதைவிட முக்கியமானது மனோபலம் என்பதையும் அதையும் விட இலட்சிய உறுதியும் சலுகைகளுக்கு மண்டியிடாத சமரசத்துக்கு இடங்கொடுக்காத வெற்றிகளைக் கண்டு மயங்காத தோல்விகளைக் கண்டு துவண்டு போகாத தலைமைத்துவத்தின் திட்டமிடலும் வழிகாட்டலும் முக்கியமானது என்பதையும் அந்த சிறந்த தலைமைத்துவும் எப்போதுமே தமிழர் தரப்புக்கு உண்டென்பதும் இந்தத் தாக்குதல் மூலம் வெளிப்பட்ட மற்றொரு செய்தியாகும்.
அரசியலில் தங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் சொந்த வங்கிக் கணக்கை நிரப்புவதற்காகவும் யுத்தத்தை ஒரு வியாபாரமாகவே மேற்கொள்ளும் மகிந்த அன் கொம்பனிக்கு இந்தத் தாக்குதல் உடனடியாக இரண்டுவிதமான நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஓன்று சர்வதேச அளவிலான நெருக்கடி.மற்றது உள்ளுர் மட்டத்திலான நெருக்கடி.
சர்வதேச மட்டத்திலான நெருக்கடி என்கிற போது மகிந்த அரசு விடுதலைப்புலிகளை சமதரப்பாக ஏற்று பேச்சு வார்த்தை நடத்தவது என்ற முன்னைய அரசின் நிலைப்பாட்டில் இருந்து விலகி அவர்கள் மீது ஒரு தலைப் பட்சமான போரை திணித்து அந்தப் போரை அவர்களின் பிடியில் இருந்து தமிழ் மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை என்று பறைசாற்றியிருந்தது.விடுதலைப் புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்று சர்வதேசத்துக்கு கூறிக் கொண்டு தழிழர் தாயகப் பகுதி மீது அப்பட்டமான இனச் சுத்திகரிப்பு மற்றும் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை செய்து வந்தது.ஆட்கடத்தல்கள் படுகொலைகள் மக்களை கட்டாயமாக இடம்பெயர வைப்பது மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவது என்று போர் குற்றங்களாக சர்வதேச அளவில் வரையறுக்கப்பட்ட அனைத்தையும் செய்தது.இதை மூடி மறைப்பதற்கு ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் வாய்ப்பூட்டு போட்டதுடன் கொலை அச்சுறுத்தலும் விடுத்து தனது தரப்பு செய்திகள் மட்டும் வெளியே செல்லும்படி பார்த்துக் கொண்டது.சுருக்கமாகச் சொல்வதானால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட ஒரு சக்தி.அரசியலில் சமதரப்பாக இருந்து அவர்களுடன் பேச வேண்டிய தேவையோ அவசியமோ தங்களுக்கு இல்லை என்ற பிம்பத்தை மகிந்த அரசு சர்வதேச அளவில் கட்டமைத்து வந்தது.இன்றும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் விடுதலைப் புலிகளின் கதை முடிந்து விடும்.அதன் பின்பு அவர்கள் ஒரு சிறு பயங்கரவாத குழுவாகத் தான் இயங்க முடியும் என்று மகிந்த அன் கொம்பனி கதை விட்டுக் கொண்டிருந்த நேரத்தில் நடந்த இந்தத் தாக்குதல் அவர்கள் இத்தனை நாட்களும் திட்மிட்டுச் செய்து வந்த பொய் பரப்புரைகளின் சாயத்தை வெளுக்கச் செய்திருக்கிறது.
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட அல்லது தோற்கடிக்கப்பட வேண்டிய பயங்கரவாத அமைப்பாக இனியும் கதைவிட முடியாத ஒரு நெருக்கடியையும் யுத்தத்தை நிறுத்தி இனப் பிரச்சனைக்கு தீpர்வு காண்பதற்கு விடுதலைப்புலிகளுடன் பேசியே ஆக வேண்டும் என்று சர்வதேசம் கொடுக்கும் அழுத்தத்துக்கு முகம் கொடுக்கும் நிலையையும் சிறீலங்கா அரசுக்கு இந்தத் தாக்குதல் ஏற்படுத்தியிருக்கிறது.
அடுத்தமாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்திலும் ஐரோப்பிய நாடாளுமன்றக் கூட்டத்திலும் ரஷ்யாவால் அண்மையில் அங்கீகரிக்கபட்ட ஒசெத்தியா மற்றும் அப்காசிய நாடுகளில் ஜோர்ஜிய படைகளால் மேற்கொள்ளப்பட்ட இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைள் பற்றிய விவாதம் மேற்கொள்ளப்படும் போது தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா மேற்கொண்டுவரும் மனித உரிமை மீறல்கள் பற்றியும் தங்களது விடுதலைக்காக போராடும் தேசிய இனங்கள் மற்றும் தேசிய விடுதலை இயக்கங்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தி இனச்சுத்திகரிப்பில் ஈடுபடும் அரச பயங்கரவாதம் பற்றியும் விவாதிக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன.இதற்கான முயற்சியில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் சிலவும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஈடுபட்டு வருகின்றனர்.இத்தகைய ஒரு விவாதம் நடைபெறும் பட்சத்தில் சிறீலங்கா அரசு பெரும் நெருக்கடியை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
உள்ளுரை பொறுத்தவரை கடந்த 4 வருடங்களாக யுத்தத்தை மூலதனமாக வைத்தே மகிந்த அரசு தனது அனைத்து அரசியல் காய் நகர்த்தல்களையும் மேற்கொண்டு வந்தது- .சிங்கள மக்களுக்கு பொய்யான தகவல்களை வழங்கி பௌத்த சிங்கள பேரினவாத வெறியை ஊட்டி வெற்றி மாயையில்-போதையில் அவர்களை கட்டுப்படுத்தி வைக்கும் மலினமான அரசியல் தந்திரத்தை கையாண்டதுடன் தங்களது அரசியல் பொருளாதார நெருக்கடிகளை யுத்தத்தை நோக்கி திசை திருப்பிவிட்டது.
நவீன ஆயுதங்கள் மூலம் விடுதலைப்புலிகளை அழித்துவிடலாம் ஒடுக்கி விடலாம் என்ற மமதையை படையினருக்கு ஊட்டி வந்தது.
கிழக்கில் இருந்தும் வன்னிப் பெருநிலப்பரப்பின் சில பகுதிகளில் இருந்தும் விடுதலைப்புலிகள் தந்திரோபாய அடிப்படையில் பின்வாங்கியதை அவர்களின் பலவீனமாக சித்தரித்து அவர்களது அழிவு நெருங்கிவிட்டது என்று மகிந்த அன் கொம்பனி கொக்கரித்தது.
இந்த அரசியல் பம்மாத்துக்கள் பேரினவாதத் திமிர் இராணுவக் கொக்கரிப்புகள் எல்லாவற்றுக்கும் முடிவுரை எழுதும் நேரம் வந்துவிட்டது என்ற செய்தியை இந்தத் துறைமுகத் தாக்குதல் மூலம் சிங்களப் போர் வெறியர்களுக்கும் சிங்களப்படையினருக்கும் மகிந்த அன் பிறதேர்சுக்கும் விடுதலைப்புலிகள் தெட்டத் தெழிவாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்தத் தாக்குதல் மகிந்த அன் கொம்பனிக்கு ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பது இந்த தாக்குதலில் பின்னர் இந்தக் கொம்பனியின் நிறைவேற்ற இயக்குனர்களில் முக்கியமானவரான கோத்தபாய ராஜபக்ஷ நடத்திய ஊடகர் மகாநாட்டில் வெளிப்பட்டது.
அனுராதபுர விமானப்படைத்தள தாக்குதல் நடந்த போது இது விடுதலைப்புலிகளின் பலவீனத்தின் வெளிப்பாடு. நாங்கள் படைத்துறையில் எற்கனவே நவீன தொழில் நுட்பத்தை கொண்டிருக்கிறோம். இன்னும் அதை நவீனப்படுத்தி விடுதலைப்புலிகளின் விமானங்களை அழிப்போம். இந்த ஆண்டு இறுதிக்குள் விடுதலைப் புலிகளை முற்றாகத் தோற்கடித்து வெற்றிவாகை சூடுவோம் என்று திமிராகப் பதிலழித்திருந்தார்.
ஆனால் இந்தத் திருமலைத் துறைமுக தாக்குதலுக்குப் பின்னர் கருத்துரைத்த அவர் விடுதலைப்புலிகளிடம் உள்ள விமானங்களை உலகின் எந்த நாட்டாலும் கண்டுபிடிக்க முடியாதென்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு கால எல்லை வகுப்பது முட்டாள் தனமானது என்றும் கூறியுள்ளதை ஒப்புநோக்கினால் இந்தத் தாக்குதல் அவர்களுக்கு எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
அதாவது அவர்கள் கடந்த நான்கு வருடகாலமாக திட்டமிட்டு கட்டி எழுப்பி வந்த அரசியல் இராணுவ மூலோபாயத்தில் விடுதலைப்புலிகள் ஒரே ஒரு தந்திரோபாயத் தாக்குதல் மூலம் ஒரே இரவில் மிகப் பெரிய சறுக்கலை எற்படுத்தி விட்டார்கள்.
சுருக்கமாகச் சொல்வதானால் சிறீலங்காவின் மொத்தப் படைபலத்தின் அதி உச்ச திரட்சியை கூட்டி பாதுகாத்து வந்த ஒரு தளத்தை விடுதலைப்புலிகளின் வான் படை வெற்றிகரமாக தாக்குவிட்டு தங்களது தளத்துக்கு திரும்ப முடியும் என்றால் அவர்களால் குடாநாட்டிலோ வன்னியிலோ தென் தமிழீழத்திலுள்ள எந்தப்படைத்தளத்தின் மீதும் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தமுடியும் என்பதும் தென் பகுதியில் உள்ள எந்த இலக்கையும் தாக்க முடியும் என்பதும் உணர்த்தப் பட்டிருக்கிறது.
இந்தச் செய்தி மகிந்த அன் கொம்பனியின் தடைகள் மூடி மறைப்புக்களைத் தாண்டி போர் களத்திலுள்ள படையினரையும் போர் வெறியில் வெற்றி மாயையில் மதிமயங்கியிருக்கும் சிங்கள மக்களையும் எட்ட ஆரம்பித்திருக்கிறது.கொழும்பு ஊடகங்களில் இந்தத் தாக்குதல் பற்றிய தகவல்கள் வெளிவர ஆரம்பித்திருப்பது குறிப்பிடத் தக்கது. விடுதலைப்புலிகள் தற்போதைய தற்காப்பு நிலையில் இருந்து முழுமையான தாக்குதல் நிலைக்கு திரும்பும் போது நிச்சயமாக அதன் தாக்கத்தை அதன் உக்கிரத்தை போர் வெறி கொண்ட சிங்களம் அறுவடை செய்யும்.
அப்போது ஏற்கனவே பலரும் சுட்டிக்காட்டியபடி வன்னிக் காடுகள் மட்டுமல்லாது தென் தமீழக்காடுகளும் யாழ்ப்பாணக் குடாநாட்டு உவர்நிலங்களும் நவீன ஸ்டாலின் கிராட்டுகளாக உருவெடுத்து சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தின் புதை குழிகளாக மாறும்.அன்று தமிழீழத் தனியரசு மலரும்

ஞாயிறு, 10 ஜூன், 2007

சுதந்திரபுரம் படுகொலைகள் நினைவாக…..

சுதந்திரபுரம் படுகொலைகள் நினைவாக…..

பௌத்த சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்கள் மீது நடத்திய கொடூரமான இனப்படுகொலைகளில் பெரிய அளவுக்கு அனைத்துலக கவனத்துக்கு வராத படுகொலைகளில் வன்னிப் பெருநிலப்பரப்பிலுள்ள சுதந்திரபுரத்தில் இடம்பெற்ற படுகொலைகளும் ஒன்றாகும்.
1998 ஆண்டு யூன் மாதம் 10 ம் திகதி…
அதாவது 9 வருடங்களுக்கு முந்திய இதே நாள்….
காலை 8 மணிக்கும் 9 மணிக்கும் இடையில் என்று நினைக்கிறேன்….
ஒரு சின்னஞ்சிறிய கிடுகுக் கொட்டில்…..
அதில் ஒரு ஏழைத்தாய் தனது நான்கு பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்புவதற்காக பழைய சோற்றை தண்னிர் விட்டுப் பிசைந்து ஊட்டிவிடுகிறார்….
தீராத நோயில் விழுந்து படத்த படுக்கையாக உள்ள கணவனையும் தனது 4 பிள்ளைகளையும் அந்தத் தாய் அக்கம்பக்கத்திலுள்ள வசதிபடைத்தவர்களின் தென்னந்தோப்புகளில் கிடுகு பின்னிக் கொடுத்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் காப்பாற்றி வருகிறார்.
அவரது மூத்த இரண்டு பிள்ளைகளும் கடந்த ஒரு மாதமாக பள்ளிக் கூடம் போவதற்கு கொப்பி வாங்க வேண்டும் என்று கேட்டு வந்தார்கள்.வறுமையிலும் கூட தனது பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று விரும்பிய அந்தத்தாய் பணம் கிடைத்ததும் வாங்கித் தரலாம் என்று அவர்களுக்கு சமாதானம் சொல்லி வந்தார்.
அன்று ‘எப்படியும் கொப்பியுடன் பாடசாலைக்கு வரவேண்டும். இல்லாவிட்டால் வரக்கூhது’ என்று வாத்தியார் கண்டிப்பாக சொல்லிவிட்டதாக பிள்ளைகள் இருவரும் கூறிவிட்டார்கள். ‘பிள்ளைகளை பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்திவிடுவார்களே’ என்ற பயந்து போன அந்தத் தாய் தான் கிடுகு பின்னும் வசதிபடைத்த ஒருவரின் வீட்டுக்கு சென்று காரணத்தைச் சொல்லி தனக்கு 10 ரூபா பணம் தரும்படி இரந்து கேட்கிறார்…
அவரது அவசரத்தை புரியாத அவர்கள் மரத்தில் இருந்து விழுந்த தென்னோலைகளை எடுத்து துரவுக்குள் (குளமும் அல்லாத கிணறும் அல்லாத ஒரு சிறு நீர் நிலை) ஊறப் போட்டுவிட்டு வருமாறு கூறுகிறார்கள்..எப்படியும் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்தத்தாய் ஓடி ஓடி தென்னோலைகளை இழுத்து இழுத்து அந்த விட்டு தென்னந்தேப்பின் மூலையில் இருந்த துரவுக்குள் போட்டுக் கொண்டிருந்த போது…..
சிங்கள வான்படையின் இரண்டு கிபீர் விமானங்கள் பேரிரைச்சலுடன் வந்து அந்தப் பகுதியில் குண்டுகளை போட்டுவிட்டுச் செல்கின்றன….பேரிரைச்சல்…..இடி முழக்கம் போன்ற பாரிய வெடியோசை… அதைத் தொடர்ந்து… “ஐயோ என்ரை பிள்ளைகள்… என்ரை அம்மா…என்ரை அப்பா …”என்கின்ற அவலப் பேரொலிகள் காற்றைச் கிழித்துவர… அந்தத்தாயும் “ஐயோ என்ரை பிள்ளைகள்” என்று கத்திக் கொண்டு வீதிக்கு ஓடி வருகிறார்…..
அதன் பின் என்ன நடத்தது என்பதை அந்தத் தாய் சொன்னதை அப்படியே சொல்கிறேன்….(2003 ம் அண்டு நான் வன்னிப் பெருநிலப்பரப்புக்கு சென்றிருந்த பொது அந்தத் தாயை சந்தித்த போது அவரது வாழ்வில் பேரிடியாக விழுந்த அந்த அவலத்தை அவர் கண்ணீருடன் விபரித்தார்….)
“நான் அவையின்ரை வீட்டை விட்டு வெளியே ஓடி வாறன்… ஓரே புழுதி மண்டலம்.. எல்லாரும் கத்திக் கதறிக் கொண்டிருக்கினம்…என்ரை பிள்ளையளுக்கு என்னாச்சோ என்று என்ரை நெஞ்சு பதறுது…அழ முடியாமல் எனக்கு தொண்டை அடைக்குது….குண்டு விழுந்த இடத்துக்கு கிட்டப் போய் பாக்கிறன்.... இரத்மும் சதையுமா உடம்புகள் சிதறிக்கிடக்குது..அங்காலை பாத்தால் என்ரை இரண்டு பிள்ளைகள் ஒருவருக்க பக்கத்தில ஒருதர் உடல்சிதறி செத்துப் போய் கிடக்குதுகள்…அங்கால மற்ற இரண்டு பிள்ளைகள் காயம் பட்டு குற்றுயிரும் குலையிருமாக கிடந்து துடிக்குதுகள்…. என்ரை ஐயோ(கதறி அழுகிறார்) நான் என்ன செய்வேன்…செத்துப் போன பிள்ளைகளை பாப்பனா காயப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிற பிள்ளைகளை ஆசுப்பத்திரிக்கு கொண்டுபோகப் பாப்பனா… எந்தத் தாய்க்கும் இப்பிடி ஒரு கொடுமை நடக்கக் கூடாது ராசா…(மீண்டும் கதறி அழுகிறார்) பிறகு காயமடைஞ்சவையை பொடியள் ஒரு ரைக்ரறிலை (உளவு இயந்திரம்) ஏத்தி புதுக்குடியிருப்பு ஆசுப் பத்திரிக்கு கொண்டு போச்சினம். நான்னும் சொத்துப் போன என்ரை இரண்டு பிள்ளைகளையும் தெருவில விட்டுட்டு மற்றப்பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு ரைக்ரறில போனன் .அந்த ரைக்ரர் ஆசுப்பத்திரிக்கு போகக்கு முன்னம் என்ரை இன்னொரு பிள்ளையும் என்ரை மடியிலேயே செத்துப் போச்சு..(மீண்டும் கதறி அழுகிறார்) இப்ப கடைசியா எனக்கு இருக்கிறது இவன்தான்”; என்று அந்த தாக்குதலில் காயமடைந்து வலுவிழுந்த நிலையில் உயர் வாழும் அந்த மகனை காட்டுகிறார்….
சிங்கள வான் படையினர் நடத்திய இந்தக் கொலைத் தாக்குதலில் 28 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரியவருகிறது.
இந்தத் ஏழைத் தாயக்கு நேர்ந்த கொடுமையைப் போல் இன்னும் எத்தனை கொடுமைகளை எத்தனை அவலங்களை எங்கள் இனம் சந்திக்கிறது.எங்கள் மண்ணை எங்கள் தாயகத்தை மீட்பதற்கு நாங்கள் என்ன செய்தோம்? ஏன்பதை ஒரே ஒரு கணம் நினைத்துப் பார்ப்போம்….