வெள்ளி, 19 செப்டம்பர், 2008

காந்தி தேசத்தின் மறுபக்கம் -10

10
கராச்சிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நாடு திரும்பிய உமாமகேஸ்வரனுக்கு பெரும் நெருக்கடி காத்திருந்தது. முள்ளிகுள கொலையும் மாணிக்கதாசன் விவகாரமும் இயக்கத்தை விட்டு நீக்கி அவனைக் கைது செய்து விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் பெரும் பிரச்சினைகயாக இருந்தன.
சங்கிலி மாணிக்கதாசன் ENFLF பக்கம் சாய்ந்து விட்டான்; என்றும் அவர்களின் திட்டப்படி இயக்கத்தை உடைப்பதற்கென்றே அவர் திட்டமிட்டுச் செயல்படுகின்றான் என்றும் நீண்ட விரிவான ஒரு கடிதத்தை எழுதி தனது நம்பிக்கைக்குரிய ஒருவர் மூலம் உமாமகேஸ்வரனிடம் சேர்க்கும்படி கொழும்புக்கு அனுப்பியிருந்தான்;.
அந்தக் கடிதத்தை படித்த உமாமகேஸ்வரனுக்கு இதெல்லாம் வசந்தனின் வேலை என்று உடனேயே புரிந்தது. வசந்தன் மாணிக்கதாசனையும் தன் பக்கம் மாற்றிவிட்டான் என்று அவர் நம்பினார். உடனேயே சங்கிலியை கொழும்பு வரும்படி தொலைத்தொடர்பு சாதனத்தின் வழியாக செய்தி அனுப்பியிருந்தார்.
முள்ளிக் குளத்திலிருந்து கற்பிட்டியூடாக சங்கிலி கொழும்பு வந்து சேர்ந்ததும் வசந்தனுடைய திட்டம் பற்றி எடுத்துச் சொல்லி அவரை உடனே தட்டிவிடும்படி உத்தரவிட்டார்.
சங்கிலிக்கு முதலில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. வசந்தன் இப்படிச் செய்வான் என்று அவனால் நம்பமுடியவில்லை. அவரைப் பற்றி உமா சொன்ன விடயங்களுக்கும் அவன் எழுதிய கடிதமும் முள்ளிக்குளத்தில் தனக்கு விசுவாசமானவன் போல நடந்து மாணிக்கதாசன் பற்றி சொன்ன தகவல்களையும் ஒப்பிட்டுப் பார்த்த போது அவன்தான் குழப்பத்தின் சூத்திரதாரி என்று சங்கிலிக்குப் புரிந்தது.
ஆனால் அப்போதிருந்த சூழ்நிலையில் வசந்தனைத் தட்டினால் அது இயக்கத்திற்குள இன்னும் பெரிய குழப்பத்தை உண்டு பண்ணிவிடும் என்றும் அவனை தனது கண்காணிப்பிலேயே விடும்படியும் சமயம் வரும் போதுதான் அவனைத் தட்டிவிடுவதாகவும் சங்கிலி உமாமகேஸ்வரனைக் கேட்டுக்கொண்டான்;.
உமாமகேஸ்வரனுக்கும் அவன் சொல்வது சரி என்று பட்டது. வசந்தனைத் தட்டுவதற்கு முன் மாணிக்கதாசனின் அதிகாரங்களைக் குறைத்து அவனுக்குச் சார்பான பொறுப்பாளர்களை அவர்களது பொறுப்புக்களிலிருந்து அகற்றிவிட்டு தனக்கு எப்போதும் விசுவாசமாக நடக்கக்கூடிய சங்கிலியின் ஆட்களைப் பொறுப்பாகப் போட அவர் தீர்மானித்தார்.
முகாம்களின் நிர்வாக அமைப்பு முறையையும் முற்றாக மாற்றி ஒவ்வொரு முகாமையும் கண்காணிப்பதற்கென்று ஒவ்வொரு கண்காணிப்புக்குழுக்களை அமைக்கவும் அவர் முடிவு செய்தார். முகாம்களிலேயே தங்கியிருக்கும் இந்தக் கண்காணிப்புக்குழுக்கள் தான் அனைத்து ஆயுதங்களுக்கும் பொறுப்பாக இருக்கும் முகாம் பொறுப்பாளர்கள் இந்தக் கண்காணிப்புக் குழுவுக்கு கட்டுப்பட்டவர்கள். எல்லாக் கண்காணிப்புக் குழுக்களும் தனது நேரடிக்கட்டுப்பாட்டுக்குள் இயங்க வேண்டும் என்று அதிகாரங்களை வரையறை செய்தார்.
முள்ளிக்குளம் பொறுப்பாளர் சங்கிலிக்கு நம்பிக்கையானவர் அதுபோல் குஞ்சுக்குளம் பொறுப்பாளரும் மாணிக்கதாசனுக்கு எதிரான பாருக் ஆதரவாளர். செட்டிக்குளம் பொறுப்பாளர், வவுனியா நகரப் பொறுப்பாளர் ஆகியோரே மாணிக்கதாசனின்; ஆட்கள். தன்னால் உடனடியாக அந்த இரு பொறுப்பாளர்களுக்கும் வேறு பொறுப்பு கொடுப்பதாகவும் அவர்களது இடத்திற்கு வேறு இருவரை (சங்கிலியன் ஆட்கள் ) நியமிப்பதாகவும் கடிதம் எழுதி சங்கிலியிடம் கொடுத்து அவனை முள்ளிக்குளத்திற்கு திரும்பிப்போய் நிலைமையை சீர் செய்யும்படியும் மாணிக்கதாசன்; தொடர்பான பிரச்சினைகளுக்கும், முள்ளிக்குளம் கொலைக்கும் விசாரணைக்குழு ஒன்று அமைத்து விசாரிக்கப்படும் என்று சொல்லும்படியும் சொல்லி அனுப்பினார்.
இதற்கிடையில் நுவரெலியாவிலிருந்து ஜே.வி.பி. தலைவர்கள் தங்களை உடன் வந்து சந்திக்கும்படி உமாமகேஸ்வரனுக்கு தகவல் அனுப்பியிருந்தனர். அப்போது நடக்கவிருந்த ஜனாதிபதித் தேர்தலில் பிரேமதாசாவை ஆதரிப்பதா, அல்லது தேர்தலை முற்றாக நிராகரிப்பதா என்பதில் அவர்களுக்குள்ளேயே (ஜேவி.பி) பிரச்சினை இருந்தது. இதில் உமாமகேஸ்வரன் யாரை ஆதரிக்கின்றார் என்பதை அறிய அவர்கள் விரும்பினார்கள்.
உமாமகேஸ்வரனுக்கு அவரது முகாம் பிரச்சினைகள் பெரும் தலையிடியாக இருந்தாலும் ஜே.வி.பி.யினரது அழைப்பு அவற்றைவிட முக்கியமானதாகப் பட்டது. அவர் அன்றே ராபினை அழைத்துக் கொண்டு நுவரெலியாவிற்குச் சென்றார்.
மறுநாள் காலை பத்து மணிக்கு நுவரெலியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர் ஒருவர் வீட்டில் ஜே.வி.பி.யினருடனான அந்தச் சந்திப்பு நடந்தது. ஜே.வி.பி.யின் தரப்பில் ரோஹண விஜயவீராவும், உபதிஸ்ஸ கமநாயக்காவும், சரத் ரூபசிங்க என்பவரும் கலந்து கொண்டனர். புளட்டின் சார்பில் ஜே.வி.பி தொடர்பாளரும் மலையகப் பொறுப்பாளருமாகிய கதிரவனும் உமாமகேஸ்வரனும் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்புத்தான் விஜய வீர கமநாயக்கா, உமாமகேஸ்வரன் மூவரும் கொலை செய்யப்பட முன் சந்தித்த இறுதிச் சந்தர்ப்பமாகும். ஜே..வி.பி.க்கு ஜனாதிபதித் தேர்தலை முற்றாகப் பகிஸ்கரிக்கும் நோக்கம் இருக்கவில்லை. தேர்தலில் குழப்பத்தை உண்டுபண்ணி , அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தி , ஆட்சியைக் கைப்பற்றுவது அவர்களது நோக்கமாக இருந்தது. விஜய வீர, சிறிமாவோவை விட பிரேமதாசாவை ஆட்சிக்குக் கொண்டு வருவதுதான் நல்லது என்று கருதினார்.
சிறிமாவோ ஓரளவுக்கு படித்தவர் அரசியல் பாரம்பரியம் உள்ளவர் . ஏற்கனவே பிரதமராக இருந்த அனுபவம் உண்டு. இந்தியாவுடன் நெருக்கமான தொடர்பு உள்ளவர். ஆனால் பிரேமதாசா படிக்காதவர் 5ம் வகுப்பு அரசியல்வாதி, அவருடைய பலம் அவரைச்சுற்றியிருக்கும் குண்டர் படைதான். அந்தக் குண்டர் படையின் முக்கிய தலைவர்களைத் தட்டிவிட்டால், பிரேமதாசாவைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியை சுலபமாக கைப்பற்றிவிடலாம் என்று தனது கருத்துக்கு அவர் விளக்கம் சொன்னார்.
ஆனால் உபதிஸ்ஸ கதநாயக்கா, சிறிமாவோவை ஆட்சிக்குக் கொண்டு வருவதுதான் நல்லது. அவரது கட்சிக்குள் தங்களுடைய ஆட்கள் இருக்கின்றார்கள். கட்சிக்காரரை வைத்தே, சிறிமாவோவை விழுத்திவிடலாம் என்று மாறுபட்ட கருத்தைச் சொன்னார். கமநாயக்காவின் கருத்தையே உமாமகேஸ்வரனும் ஆதரித்தார்.
ஐ.தே.கட்சி தொடர்ந்து ஆட்சியிலிருந்து வரும். கட்சி. அவர்களிடம் பணப்பலம் மட்டுமல்ல, பாதுகாப்புப்படைகளிலும் அவர்களுடைய ஆட்கள்தான் இருக்கின்றார்கள். சிறிமாவோ பதவிக்கு வரும் போது, அவருக்கு உடனடியாக பணபலம் கிடையாது. பாதுகாப்புப்படை உயர் அதிகாரிகளை மாற்ற முயற்சி எடுக்கும் போது பிரச்சினை வரும். அந்தச் சமயத்தில், சரியாக காய் நகர்த்தி ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தை நீங்கள் கைப்பற்றிக்கொள்ளலாம். இந்திய இராணுவத்தின் வருகைக்கு எதிராக இந்தத் தேர்தலை நீங்கள் பயன்படுத்தினால் ஆட்சிக்கு வருகின்ற எவரும் உங்களை அழிக்க இந்திய உதவியை நாட முடியாமல் செய்யலாம் என்று அவர் தனது கருத்தை விளக்கிச் சொன்னார்.
சுமார் 4 மணிநேரம் நடைபெற்ற அந்தச் சந்திப்பில் அரசியல் குண்டர்களை ஒழிப்பது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை குழப்புவதன் மூலம் மட்டுப்படுத்துவது முதலான பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்ட போதும் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுபற்றிதங்களது மத்திய குழுவில் கலந்து ஆலோசித்து தங்களது முடிவை உமாமகேஸ்வரனுக்குத் தெரிவ்ப்பதாகச் சொல்லிவிட்டு ஜே.வி.பி தலைவர்கள் சென்றுவிட்டனர்.

உமாமகேஸவரன் இவ்வாறு ஜே.வி.பி தலைவர்களுடன் பேச்சு நடந்து கொண்டிருந்த நேரத்தில், சங்கிலி கற்பிட்டி முள்ளிக்குளம் வழியாக செட்டிகுளம் சென்று உமாவின் கடிதத்தின் பிரகாரம் பொறுப்பாளர்களை மாற்றும் நடவடிக்கையை மேற்கொண்டான். மாணிக்கதாசன் எங்கே என்று அவன் கேட்ட போது ஐயாவையும் மற்றவரையும் விசாரிக்க அவன் குஞ்சுக்குளம் சென்றிருப்பதாக அங்குள்ளவர்கள் சொன்னார்கள்.
முள்ளிக்குளம் முருகதாசின் கொலை விவகாரத்தின் பின் உமாமகேஸ்வரன் எடுத்த இன்னொரு முடிவு பொதுமக்கள் யாரையும் மறு அறிவித்தல் வரை கைது செய்யக்கூடாது. அவ்வாறு கைது செய்யப்பட்டு யாராவது சிறைவைக்கப்பட்டிருந்தால் அவர்களை உடன் விடுவிக்க வேண்டும் என்பதாகும். இதை அவர் சங்கிலியிடம் கொடுத்து அனுப்பிய கடிதத்தில் எழுதியிருந்தார்.
சங்கிலி, உடனே குஞ்சுக்குளம் பொறுப்பபளருடன் வோக்கிடோக்கியில் தொடர்பு கொண்டு ஐயாவையும் மற்றயவரையும் விடுவிக்கும்படியும் இது உமாமகேஸ்வரனின் உத்தரவு என்றும் தெரிவித்தான். சங்கிலி சொன்னதால் குஞ்சுக்குளம் பொறுப்பாளர் உடனேயே அவர்கள் இருவரையும் அழைத்து அவர்களது உடமைகளை அவர்களிடம் கொடுத்து பிரச்சினை இல்லை நீங்கள் போகலாம், உங்களை விடுவிக்கும்படி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது என்று சொன்னார்;.

அவர்கள் மிகுந்த சந்தோசத்துடன் அங்கிருந்தவர்களுக்குச் சொல்லிவிட்டு குஞ்சுக்குளம் சந்திக்கு பஸ் ஏறுவதற்கு புறப்பட்டனர். அவர்கள் சென்ற ஒரு 5 நிமிடத்தில் அங்கு வந்த மாணிக்கதாசன் முகாம் பொறுப்பாளரிடம் எங்கே அவர்கள் என்று வினவினான்.
இப்பத்தான் அவர்களைவிட்டனாங்கள். பெரியவர் (உமா) விடச்சொல்லியிட்டார் என்றான் அவன். மாணிக்கதாசனுக்கு அடக்கமுடியாத கோபம் வந்தது. ஆரட்டைச் சொல்லி அனுப்பினவர் என்று திரும்பக் கேட்டான். சங்கிலியிடம் என்று பொறுப்பாளர் சொல்ல , அவன் அங்கு நிற்கவில்லை. தான் வந்த ஜீப்பை எடுத்துக் கொண்டு குஞ்சுக்குளச் சந்தியை நோக்கி விரைந்தான்.
குஞ்சுக்குளம் சந்தியில் ஒரு 200 மீற்றர் தூரத்தில் ஐயாவும் அவரது சகாவும் மகிழ்ச்சியோடு சிரித்துக்கதைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். மாணிக்கதாசன் தனது ஜீப் சாரதிக்கு வேகத்தை குறைக்கும்படி சொல்லிவிட்டு தனது ரி 56 ரக துப்பாக்கியை ஓட்டோவில் விட்டு அவர்களைக் குறி வைத்து விசையை இழுத்தான்.
ஜீப் சத்தத்தோடு வெடிச்சத்தமும் கேட்டு அவர்கள் திடுக்கிட்டு திரும்பமுன் சரமாரியாகச் சன்னங்கள் அவர்களது உடலை த்துளைத்தன. இருவரும் சுருண்டு விழுந்தனா

கருத்துகள் இல்லை: