கரவையார் DPLF வேட்பாளராக மலையகத்தில் நிறுத்துவதற்கு கூட்டி வந்த ஆள் அங்குள்ள ஒரு பிரபல கேடியாகும். ஒரு கற்பழிப்பு வழக்கிலும் சிறை சென்று திரும்பி வந்தவன். மலையகத்தில் தொடர்பை விட்டு 15 வருடத்திற்கு மேலாகி விட்டதால் அவனைப்பற்றிய விடயங்கள் அவருக்குத் தெரியாது.
ஆனால் புளொட்டுக்காக வேலை செய்த மலையக உறுப்பினர்கள் மலையகத்தையே உறுப்பினர்களாக கொண்டவர்களாதலால் அவனது முழுச் சரித்திரமே அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அவனுடன் தொடர்பு வைத்திருந்தாலே மக்கள் தங்களையும் அவனைப் போன்றவர்கள் என்று நினைத்துவிடுவார்கள் என்று அவர்கள் பயந்தார்கள். அத்தோடு இப்படிப்பட்ட ஆட்களுடன் நீங்கள் தொடர்பு வைத்திருந்தால் நாங்கள் உங்களுக்கு வேலை செய்யமாட்டோம் என்றும் கதிரவனிடம் சொன்னார்கள்.
கதிரவன் கரவையருக்கு சரியான டோஸ் கொடுத்து இனி நீங்கள் ஒன்றும் ஆள் பிடிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக் கொள்கின்றோம் என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
அதன்பின் மலையகத்தில் போட்டியிடும் முடிவை விட்டுவிடலாம் என கதிரவன் நினைத்த போது மலையகத் தோழர்கள் அதை மறுத்து சந்திரசேகரனை அணுகும்படி ஆலோசனை சொன்னார்.
தற்போது சிறிலங்கா அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் சந்திரசேகரன் முன்பு தொண்டமானது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரசினது இளைஞர் அணியின் முன்னணி உறுபபினர். ஆனால் இச்சம்பவம் நடந்த காலத்தில் அமைச்சர் தொண்டமானுக்கும் அவருக்கும் பெரிய கருத்து முரண்பாடு தோன்றியிருந்தது.
தொண்டமான் அமைச்சர் பதவிக்காக அரசாங்கத்துடன் சேர்ந்திருந்து மலையக மக்களுக்கு சலுகைகளைப் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றாரே அன்றி மலையக மக்களின் உரிமைகளைப் பெற போரடவில்லை என்பது சந்திரசேகரனது எண்ணம்.
மலையக மக்களுக்கு அமைச்சர் தொண்டமான் பிரஜா உரிமையைப் பெற்றுக் கொடுத்தாலும் அது அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. தோட்டத் தொழிலாளர் குடியிருக்கும் எட்டடிக் குச்சு லயம் கூட அவர்களுக்குச் சொந்தமில்லை. அவர்கள் குடியிருக்கும் நிலம் அவர்களுக்குச் சொந்தமில்லை. நாட்டின் பிறபகுதியிலே வாழுகின்ற மக்களைப் போல் கிராமம் வட்டாரம், கிராமசேவகர், உதவி அரசாங்க அதிபர், பிரிவுகள் என்ற அடிப்படையில் இல்லாமல் தோட்டத்துரைமாரின் நேரடி நிர்வாகப் பிரிவுகளுக்கு உட்பட்ட நவீன கொத்தடிமைகளாகவே அவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். தோட்டத்துரை தோட்டத்தைவிட்டு விரட்டிவிட்டால் அவர்கள் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டிய நிலை பிரஜா உரிமை கிடைக்காமல் நாடற்றவர்கள் என்ற நிலையில் இருக்கும் தொழிலாளர்களின் நிலை இன்னமும் மோசம். இவற்றையெல்லாம் நீக்குவதற்கு அமைச்சர் தொண்டமான் முயலவில்லை என்பது சந்திரசேகரன் தரப்புவாதம்.
வடக்கு கிழக்கிலே நடந்து கொண்nருக்கும் ஆயுதப்போராட்டத்தின் தாக்கம் “உரிமைகளைப் போராடித்தான் பெறவேண்டும்” என்ற மனப்பான்மையை மலையக இளைஞர்கள் மத்தியில் அரும்பச் செய்தது.
70களில் கூட்டணித் தலைமையின் மீது வடபகுதி இளைஞர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதைப் போல மலையக இளைஞர்களுக்கு இ.தொ.க. தலைமை மீதும் அதிருப்தி ஏற்படத் தொடங்கியது.
அமைச்சர் தொண்டமானும் சரி, மற்றைய இ.தொ.க. தலைவர்களும் சரி, இந்த அதிருப்திக்கான காரணத்தை அவற்றின் நியாயத்தன்மையைக் கண்டறிந்து அவற்றை நீக்குவதற்குப் பதில் அதிருப்திக்குள்ளான இளைஞர்களை வடபகுதிப் பயங்கரவாதிகளின் கையாட்கள் இ.தொ.க.வின் ஒற்றுமையை குலைக்க முயலும் சதிகாரர்கள் என்றெல்லாம் பகிரங்கமாக வசைமாரி பொழிந்தார்கள்.
மலையக மக்களின் வாக்குப்பலத்தை சிதறிப்போகாமல் தக்கவைத்து அதன்மூலம் பதவிக்கு வரும் அரசாங்கங்களை தன்னைச் சார்ந்திருக்கும்படி செய்யும் அமைச்சர் தொண்டமானின் தந்திரோபாயம் 50, 60களில் யாழ்ப்பாண தமிழ் தலைமைகள் செய்ததைப் போன்றதுதான். இது மலையக மக்களுக்கு தற்காலிகமாக சில நன்மைகளையும், பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்தாலும் தொண்டமானின் மறைவுக்குப்பின் அவரின் இடத்தை நிரப்பக்கூடிய அவரைப் போல் மலையக மக்களை ஒன்றுபடுத்தி வைத்திருக்கக்கூடிய புதிய தலைமை உருவாக்கப்படவில்லை என்பதும், இது அந்த மக்களை மிக மோசமான இன ஒடுக்கு முறைக்கும், நிற்கதியான நிலைக்கும் தள்ளிவிடும் என்றும் மலையக இளைஞர்கள் கவலைப்பட்டதிலும் நியாயம் இருந்தது.
இந்த இளைஞர்களுக்கு சந்திரசேகரன் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் தோன்றினார். அவரை வடபகுதி இளைஞர் தலைமைகளுடன் ஒப்பிட முடியாது. அவருக்கு வடபகுதி இளைஞர் தலைவர்களைப் போல் அரசுக்கெதிரான ஆயுதப் போராட்டம் நடத்த வேண்டுமென்ற எண்ணமோ, அதற்கான துணிச்சலோ கிடையாது. மலையகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் இளைஞர்களைக் கவரும் வசீகரமும் அவரிடம் நிறைய இரு;தது. குறிப்பாகச் சொன்னால் அமைச்சர் தொண்டமான் சரியானமுறையில் அவரை வழிகாட்டியிருந்தால் அவரது பாணியிலான அசைக்க முடியாத அரசியல் வாரிசாக சந்திரசேகரன் இருந்திருப்பார்.
பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் நியமனத் திகதி அறிவிக்கப்பட்ட நிலையிலும் சந்திரசேகரன் இ.தொ.கட்சியை விட்டு விலகுவதா? இல்லையா? தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது இ.தொ.கட்சியை தனக்கு தொகுதி ஒதுக்கித் தரும்படி நிர்ப்பந்திப்பதா என்று ஊசலாடிக்கொண்டிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ், புளொட் ஆகிய 3 அமைப்புக்களும் அவரைத் தங்கள் அணியில் போட்டி போட வைக்க முயன்றன.
ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈரோஸ், இரண்டும் தங்களது அகண்ட ஈழம் வரைபடத்தின் கீழ் மலையகத்தை தங்களது வடக்கு கிழக்கு நடவடிக்கைகளுக்கு பணம் ஈட்ட கொள்ளையிடும் தளமாக பயன்படுத்தியிருந்தன. மலையத்தில் நடந்த இவர்களது கொள்ளை மற்றும் குண்டு வைப்பு முயற்சிகள் காரணமாக நூற்றுக்கணக்கான மலையக இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருடக்கணக்காக சிறையில் வாடிக்கொண்டிருந்தார்கள். இது யாழ்ப்பாணத்தாங்கள் வந்து நம்மடை பிள்ளைகளை சிறைக்கு அனுப்பியிட்டாங்க என்ற துவேச மனப்பான்மையை மலையகத்திலேயே வளர்த்திருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் இ.தொ.கவும் யாழ்ப்பாண பயங்கரவாதிகள் மலையகத்தை சீர்குலைக்க சதி செய்கிறார்கள். எச்சரிக்கையாயிருங்கள் என்று பகிரங்கமாகப் பிரசாரம் செய்தது.
எனவே, சந்திரசேகரன் ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல.எப். ஆகிய இரண்டு கட்சிகளிலும் போட்டியிட முடியாதென்று மறுத்துவிட்டார். புளொட்டின் சார்பில் கதிரவன் அவரை அணுகிய போது அவரால் அதை மறுக்க முடியவில்லை. சந்திரசேகரனுக்கு உமாமகேஸ்வரனைப் பற்றி நல்ல அபிப்பிராயமும் பெரிய தலைவர் என்ற எண்ணமும் இருந்தது. பொதுவாகவே அக்காலகட்டத்தில் பிரபாகரன், உமாமகேஸ்வரன் ஆகிய இருவருமே மலையக மக்கள் அறிந்த வடபகுதி இளைஞர் தலைவர்களாக இருந்தார்கள். மற்றவர்களை அவர்கள் கொள்ளைக் கோஸ்டிகளாகத்தான் நினைத்தார்கள். புளொட்டினது உட்பூசல்களும், பிளவும் அங்கே அவர்களுக்குத் தெரியாது.
சந்திரசேகரன், டி.பி.எல்.எப் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட சம்மதிப்பதற்குமுன் சில நிபந்தனைகளை முன் வைத்தார்.
அதாவது நான் ஈ.பி.டி.பி.எல்..எப். சின்னத்தில் போட்டியிட்டாலும் மலையகத்தில் மலையக மக்கள் முன்னணி என்ற அமைப்பை உருவாக்குவேன். அந்த அமைப்பு புளொட்டுக்கோ, டி.பி.எல்.எப்.க்கோ கட்டுப்பட்டதல்ல. இதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அது.
கதிரவன் இந்தவிடயத்தை உமாமகேஸ்வரனுக்கு தெரிவித்த போது அவர் அதற்கு ஒத்துக்கொண்டார்.
இந்த இடத்திலே உமாமகேஸ்வரனுக்கு ஏற்பட்ட சுடலை ஞானம் பற்றி வாசகர்களுக்கு தெரிவிப்பது நல்லதென்று எண்ணுகின்றேன்.
உமாமகேஸ்வரன் என்னதான் புலிகளின் நடவடிக்கையை தனிநபர் பயங்கரவாதம் என்று விமர்சித்து பிர்ந்து வந்தாலும் புலிகளின் இராணுவக் கட்டுப்பாடு அமைப்புக்காகவும், நாட்டு விடுதலைக்காகவும் அவர்கள் செலுத்துகின்ற உண்மையான அர்ப்பணிப்பு இவை இரண்டும் அவர் மனதை உறுத்தவே செய்தது. புளொட்டினது சீரழிவிற்கும் தொடர்ச்சியான தோல்விகளுக்கும் இவை இரண்டும் இல்லாமையே காரணமென்று அவர் நினைத்தார். உண்மையிலேயே இயக்கத்திற்கும், போராட்டத்திற்கும் விசுவாசமான அடிமட்ட உறுப்பினர்களது தியாகங்கள் உழைப்பு என்பவையெல்லாம் கூட சாதிய பிரதேச மற்றும் குறுகிய சுயநலம் கொண்ட நபர்களின் கூட்டுக் கதம்பமாக இருக்கும் புளொட் என்ற அமைப்புக்குள் வீணடிக்கப்படுவதாக அவர் நினைத்தார். யாழ்ப்பாண சைவ வேளாளர் என்ற தனக்கிருந்த ஒரே தகுதிக்காக தன்னை நோக்கிஅணிதிரண்ட கூட்டம் தங்களுடைய சாதிய, பிரதேச நலன்களை தக்கவைத்துக்கொள்ள தன்னை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டுவிட்டது என்பதை அவர் உணர்ந்தார். தன்னுடைய தலைமை மீது நம்பிக்கை வைத்த இயக்கத்திற்காக உயிரைக்கூடக் கொடுத்த சமூகத்தின் கீழ் நிலையில் மற்றும் பின்தங்கிய பிரதேசங்களிலிருந்து வந்த உண்மையான தொண்டர்களின் உண்மையான உழைப்பைக்கூட தான் தனது சந்தர்ப்பவாத போக்கால் அனைவரையும் அரவணைத்துப் போக வேண்டும் என்ற சமரச எண்ணத்தால் மதிக்கத் தவறிவிட்டதாக அவர் வருத்தப்பட்டார்.

மக்கள் விடுதலை, மக்கள் போராட்டம் என்பதெல்லாம் யாழ்ப்பாணத்து மேட்டுக்குடியினர் போராட்டத்தின் போரால் தங்களின் நலன்களை தக்கவைத்துக்கொள்ள போட்டுக்கொண்ட வேசம் என்று அவருக்குப் புரிந்தது. தன்னுடைய தவறுகளிலிருந்து தான் மீள வேண்டுமானால் புளொட்டை புலிகள் போல் கட்டுப்பாடு மிகுந்த அமைப்பாக மாற்ற வேண்டும் என்று எண்ணினார். ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றும் அவருக்குத் தெரிந்தது. ஏனென்றால் பல பத்துக்கணக்கானவர்களைத் தட்டினால் தான் அது முடியும். எனவே, புளொட்டுக்குப் பதிலாக இரகசியமாக கட்டுப்பாடு மிகுந்த வேறு ஒரு அமைப்பை உருவாக்கி அந்த அமைப்பு நிலை பெற்றதும் புளொட்டைக் கலைத்து அதிலிருக்கும் உண்மையான, நேர்மையான போராளிகளை அந்த அமைப்புக்குக் கொண்டு போவதன் மூலம் அதைச் செய்யலாம் என அவர் நினைத்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக