பிரேமதாசாவைச் சந்தித்து விட்டு வந்த பின் பெரும் சுமை ஒன்று இறங்கியதைப் போல் இருந்தது உமாமகேஸ்வரனுக்கு. கொஞ்சக்காலம் பிரச்சினை இல்லாமல் கொழும்பில் இருக்கலாம் என்று அவர் நம்பினார். எதற்கும் பிரேமதாசாவிற்கு எதிராக தன்னிடம் உதவி கோரிய ஐ.தே.கட்சியின் “முதலான” பிரமுகரையும் சந்தித்து சமாதானப்படுத்திவிட்டால் இன்னும் நிம்மதியாக இருக்கலாம் என்று அவர் நினைத்தார்.
அதே சமயம் இந்த முதலான பிரமுகருக்குக்கூட ளுவுகு அல்லது பச்சைப் புலிகளைக் கொண்டு உமாமகேஸ்வரனது கதையை முடித்துவிட்டால் அந்தப் பழி தன் மீது விழுந்துவிடுமோ என்று பயம் வந்துவிட்டது. அதாவது உமாமகேஸ்வரன் தன்னைப்பற்றி பிரேமதாசாவிடம் சொல்லியிருந்தால் இந்தச் சமயத்தில் அவரைக் கொலை செய்வது அதை உறுதிப்படுத்துவதோடு தன்னை அந்தக் கொலையோடு நெருக்கமாக முடிச்சுப் போட்டுவிடும் என்று அவர் பயந்தார். எனவே உமாமகேஸ்வரனை உடனடியாக கொலை செய்வதற்குப் பதில் தன் பக்கம் இன்னும் நெருங்கிவர வைத்து கொஞ்சக் காலம் பயன்படுத்திவிட்டு அப்புறம் தேவைப்பட்டால் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொலை செய்து விடலாம் என்று அசருக்குத் தோன்றியது.
உமாமகேஸ்வரன் அவரைச் சந்திக்க வந்த போது தனக்கு அவர் மேல் மனஸ்தாபம் இருப்பதாக அவர் காட்டிக்கொள்ளவில்லை. உங்களுக்கென்ன ஜனாதிபதியின் நேரடி தொடர்பு கிடைச்சாச்சு, எங்கட தயவு எனி தேவைப்படாது தானே என்றும் உமா பிரேமாவை சந்தித்த விடயம் தனக்குத் தெரியும் என்பதை நாசுக்காகச் சொன்னார்.
உமாமகேஸ்வரனுக்கு உடனடியாக எதுவும் சொல்லத் தோன்றவில்லை. ஆனாலும் சுதாகரித்துக் கொண்டு புது சிNநிகதத்திற்காக பழைய சிநேகிதத்தை விட முடியுமா? என்று சமாளித்தார். தான் பிரேமதாசாவைச் சந்தித்த விடயம் அவருக்குத் தெரிந்திருக்காது என்று தான் அவர் நினைத்திருந்தார். அதற்கேற்றபடி இருவருக்குமுள்ள முரண்பாட்டை பயன்படுத்த திட்டமிட்டே இவரைச் சந்திக்க அவர் வந்திருந்தார். ஆனால் தற்போது முதலானவரும் பிரேமதாசாவும் ஒன்று சேர்ந்துவிட்டார்களோ என்ற சந்தேகமும் அவருக்கு வந்தது. அரசியல்வாதிகளின் பேச்சும், நட்பும், பகைமையும் என்றென்றைக்கும் மாறாமல் .நிரந்தரமாக இருப்பதில்லை என்பது அவருக்குத் தெரியும்.
ஆனால் அவர் சந்தேகப்பட்ட அளவுக்கு ஒன்றும் நடக்கவில்லை. முதலானவர் தொடர்ந்து பேசிய சில விடயங்கள் அவர் இன்னமும் பிரேமதாசா மீது பனைமையே கொண்டுள்ளார் என்பதை காட்டியது.
உமா தான் பிரேமதாசாவைச் சந்தித்து வெறும் சம்பிரதாயத்திற்காகவே தான் என்றும், தான் என்போதும் அவர் பக்கம் தான் என்றும் முதலானவருக்கு காதில் பூ சுற்றிவிட்டு வந்தார்.
இந்தச் சந்திப்பு நடந்த சில நாட்களுக்குள் பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளி வந்தது.
அதனைத் தொடர்ந்து ஏற்கனவே தான் உருவாக்கி வைத்திருந்த திட்டம், யாப்புக்கள் பிரகாரம் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (னுPடுகு) என்ற தனது கட்சியை உமாமகேஸ்வரன் சிறிலங்கா அரசியலமைப்பு விதிக்கு அமைய பதிவு செய்து தேர்தல் சின்னமாக நங்கூரம் சின்னத்தையும் தெரிவு செய்து கொண்டார்.
கொழும்பு கொள்ளுப்பிட்டி சந்திக்கு அண்மையிலிருந்த புளொட்டினது கொழும்பு அலுவலகம் டி.பி.எல்.எப் கட்சியினது தேர்தல் அலுவலகமாக மாற்றப்பட்டது. முதலில் யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலேயே தேர்தலில் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் பின்பு மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்த விவகாரத்தில் அதிக அக்கறை காட்டாததாலும் மன்னார் மாவட்டத்தில் புளொட்டின் இராணுவ முகாம்கள் உள்ள இடங்களில் தேர்தலில் போட்டியிட்டு அதில் தோற்றுப் போய்விட்டால் பின்பு மக்கள் தங்களை மதிக்கமாட்டார்கள் என்ற பயத்தாலும் அந்த இரண்டு மாவட்டங்களிலும் போட்டியிடுவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது.
தற்போது யாழ்ப்பாண மாவட்டம் தான் எஞ்சியிருந்தது. அங்கு புளொட்டுக்கோ, டி.பி.எல்.எப்.இற்கோ ஆட்கள் யாரும் கிடையாது. பிரச்சினையை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே வசந்தனுக்கு யாழ்ப்பாண மாவட்டத்து ஈ.பி.எல்.எப். அமைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால் அவன் யாழ்ப்பாணம் போவதாகச் சொல்லி விட்டு கொழும்பு வந்து தமிழ் நாட்டுக்குச் சென்றுவிட்டான். இது உமாமகேஸ்வரனுக்குத் தெரியும். எனவே இப்போது அவர் உண்மையிலேயே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேட்பாளர்களாக நிறுத்துவதற்கும் கட்சிக்கு சேவை செய்வதற்கும் ஆட்களைத் தேட ஆரம்பித்தார்.
கொழும்பிலுள்ள பல யாழ்ப்பாண மாவட்ட பிரமுகர்களை அணுகி இது பற்றி கதைத்தார். அவர் தேர்தல் பேச்சை எடுத்தவுடனேயே எல்லாப் பிரமுகர்களும் ஐயோ தம்பி ஆளை
விட்டால் போதும் என்று தலை தெறிக்க ஓடிவிட்டார்கள். புலிகளை விரோதித்துக் கொண்டு ஒருவர் கூட டி.பி.எல்.எப் சார்பில் தேர்தலில் நிற்க முன்வரவில்லை.
இந்தச் சமயத்தில் கரவைக் கந்தசாமியினது அறிமுகம் உமாமகேஸ்வரனுக்கு கிடைத்தது. அந்த அறிமுகம் கூட சுவாரசியமான விடயம் தான்.
புளொட்டின் மலையகப் பொறுப்பாளராக இருந்த கதிரவன் - சண்முகதாசனுடைய ஆதரவாளர்களில் ஒருவர். அவர் மலையகத்திலிருந்த சண்முகதாசனது கட்சியின் புதிய செங்கொடிச் சங்கத்துடன் (தொழிற்சங்கம்) இணைந்து வேலை செய்வதற்காக சண்முகநாதனைச் சந்திக்கச் சென்ற போது அவர் கதிரவனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
தோழர் என்னிடத்தில் ஒருவர் இருக்கிறார். ஆரம்பகாலத்தில் அவர் மிக நல்ல தோழர். எங்களது கட்சி நடவடிக்கைகள் பலவற்றில் அவர் பங்புபற்றினார். ஆனால் இப்போ கட்சியினது கொள்கைக்கே அவர் விரோதமாக போய்விட்டார். இப்ப எங்கட கொழும்பு அலுவலகத்தில் தங்கியிருந்து கொண்டு என்ர பெயரை கெடுக்கிறதுக்கெண்டே சில வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார். தண்ணி அடிக்கிறதுக்காக ஒரு நாளைக்கு ஒரு தரம் என்றாலும் ஏமாத்துறது அதுவும் மாக்சிசம் பேசி தோழர் என்று சொல்லி ஏமாத்துறது எனக்கு மகா கேவலாமாக இருக்கு. நான் எத்தனையோ தடவை சொல்லிப் பாத்திட்டன் அவர் திருந்திறதாயில்லை. வலுக்கட்டாயமாக நீ அலுவலகத்தில் தங்கியிருக்க வேண்டாம். வெளியே போ என்று சொல்ல எனக்கு மனம் வரயில்லை. நீங்கள் அவரை இங்கேயிருந்து கூட்டிக் கொண்டு போனால் அத எனுக்கு செய்யிற பெரிய உதவியாயிருக்கும் என்று கேட்டுக் கொண்டதுதான் அந்த வேண்டுகோள்
கதிரவன் இதைச் சென்று உமாமகேஸ்வரனிடம் தெரிவித்த போது, பெரிய சந்தோசப்பட்ட உமாமகேஸ்வரன் குடிக்கிறது என்ன பெரிய தப்பா. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பலவீனம் இருக்கும். நாங்கள் அவரை பயன்படுத்தலாம். கூட்டிக் கொண்டு வாரும் என்று சொன்னார்.
கதிரவனள் கரவையாரை அழைத்து வந்து உமாமகேஸ்வரனை சந்திக்க வைத்ததும் தேர்தலில் போட்டியிடும் விடயத்தை உமா அவருக்குச் சொன்னார். உடனேயே கரவையார் எனக்குப் பயம் கிடையாது, யாழ்ப்பாணத்தில நான் நிற்கிறன் உங்கட கட்சியின் சார்பில் மலையகத்திலும் போட்டியிடலாம். எனக்கு அங்கே 25 வருடத் தொடர்பு இருக்கு என்றும் சொன்னார்.
உமாமகேஸ்வரனுக்கு உடனே அது சரி என்றுபட்டது. கதிரவனிடம் ஆலோசனை கேட்டார். அதற்கு கதிரவன் அங்கேயும் நாங்கள் போட்டியிடலாம். ஆனால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நாங்கள் அங்கை வேட்பாளரா நின்றால் ஒருத்தரும் எங்களக்கு ஓட்டுப் போட மாட்டாங்கள் என்றார். அதைக் கேட்ட உமா, நாங்கள் ஏன் நிக்கோணும், அங்கேயுள்ள ஆட்களை நிப்பாட்டுவம். நீர் கரவை அங்கிளையும் கூட்டிக் கொண்டு போய் உடனே ஏற்பாடு செய்யும் என்று கதிரவனுக்கு உத்தரவிட்டார்.
அதன்பின் தேர்தலில் நிறுத்த ஆள் பிடிக்க கதிரவன் கரவையாரை அழைத்துக்கொண்டு நுவரெலியாவிற்கு திரும்பினார்.
நுவரெலியாவிற்கு சென்ற அன்றே, இன்றைக்கே ஆள் கொண்டு வாறன் என்று சொல்லிப் புறப்பட்டுப் போன கரவையார், அன்று மாலை ஹட்டன் பகுதியிலிருந்து வாட்டசாட்டமான நடுத்தர வயதுக்காரர் ஒருவரை பிடித்து வந்தார்.
அந்த நேரம் கதிரவன் வீட்டிற்கு வந்திருந்த மலையகத் தோழர்கள் அந்த ஆளைப் பார்த்ததும் ஐயோ என்று தலையில் கைவைத்தார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக