சனி, 20 செப்டம்பர், 2008

காந்தி தேசத்தின் மறுபக்கம் -11

11

மாணிக்கதாசன் ஈரோஸ் ஐயாவையும் அவரது சகாவையும் கொலை செய்தது முகாம்களில் இன்னும் பெரிய குழப்பத்தை உண்டுபண்ணியது. பெரியவர் (உமா) விடுதலைச் செய்யச் சொன்ன பின்பு அவர்களை இவர் சுடுவதென்றால் இவர் பெரியவரை விடப் பெரியவரா? ஏன்று அடிமட்ட உறுப்பினர்கள் கூட குமுறி எழுந்தனர்..

நாங்கள் யாரை மன்னித்தாலும் ஈரோஸ்காரரை மன்னிக்க முடியாது. அவர்கள் எங்களது நடேசனை (புளொட்டின் மன்னார் பொறுப்பாளர்) புலிகளுக்குக் காட்டிக் கொடுத்தவர்கள். அதனால் அவர்கள் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் தான் என்று மாணிக்கதாசன் தன்னுடைய தன்னிச்சையான கொலைகளுக்குச் சொன்ன விளக்கம் முகாம்களில் எடுபடவில்லை.

இந்த விடயம் சங்கிலியினால் கொழும்பு அலுவலகத்தினூடாக நுவரேலியாவில் தங்கியிருந்த உமாமகேஸ்வரனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாகவே மாணிக்கதாசனிடமிருந்து ஆயுதங்களை வாங்கும்படியும் அவனை தற்காலிகமாக சகல பொறுப்புக்களிலுமி;ருந்தும் நீக்கியிருப்பதாக அறிவிக்கும்படியும் சங்கிலிக்கு தகவல் அனுப்பினார்.
வசந்தனைப்போல், மாணிக்கதாசனை தட்டச்சொல்ல அவருக்கு மனம் வரவில்லை. சிறிலங்கா இராணுவத்துடன் தொடர்பு கொள்வதற்கு அவனை விட்டால் வேறு ஆள் இல்லாதது அதற்கு ஒரு காரணம். அதனால் அவனை முற்றுமுழுதாக ஒதுக்கிவிடாமலும் வசந்தன் குழுவின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடாமலும் தடுத்து நிறுத்த உமா தீர்மானித்தார்.

ஆனால் அப்போதிருந்த சூழ்நிலையில் மாணிக்கதாசனுக்கு சாதகமாக எதைச் செய்தாலும் அது முகாம்களில் எதிர்மாறான விளைவுகள் உண்டாக்கும் என்றும் அவருக்குத் தோன்றியது. எனவே, முதலில் எல்லோருடைய கவனத்தையும் திருப்ப எதாவது செய்ய வேண்டும் என்று அவர் நினைத்தார்.
இது பற்றி மலையகப் பொறுப்பாளர் கதிரவனுடனும் அவர் ஆலோசித்தார். அதற்கு கதிரவன் மாநாடு ஒன்றை கூட்டி பிரச்சினைகளை விவாதிப்பது நல்லது என்று கருத்துச் சொன்னார். ஆனால் அதை உடனடியாக செயற்படுத்துவது சாத்தியம் இல்லை என்று உமாமகேஸ்வரனுக்குத் தோன்றியது.

மாநாடு என்று ஒன்று கூட்டும் போது மாலைதீவு விவகாரம், மாணிக்கதாசன் விவகாரம் என்று சூடான விவாதங்கள்; அங்கே தோன்றும். அது கைகலப்புக்கள், மோதல்கள் உருவாக்கிவிடக் கூடும் என்றும் அதனால் நிலைமை இன்னும் மோசமடையலாம் என்றும் அவர் எண்ணினார்.

அப்போது நடக்கவிருந்த ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடன் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற இருந்தது. புளொட்டை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்து தேர்தலில்; போட்டியிட்;டு முகாம்களில் முடங்கிக் கிடப்பவர்களை தேர்தல் பிரசாரம் அது இது என்று பரவலாகத் திர்ந்து வௌ;வேறு இடங்களுக்கு அனுப்பிவிட்டால் அவர்களது கவனம் திசை திரும்பிவிடும் என்ற எண்ணம் அவர் மனதில் உதித்தது.

தேர்தல் வருவதற்கு எப்படியும் 4 அல்லது 5 மாதங்களாவது ஆகும் அதற்குள் கட்சி ஒன்றை உருவாக்கி முகாம்களில் பிரச்சினைகளை உண்டாக்குபவர்களை கட்சிப் பொறுப்பாளர்கள், அமைப்பாளர்கள் என்யு நியமனம் கொடுத்து முகாம்களுக்கு வெளியே மாவட்ட ரீதியாக அனுப்பிவிட்டால் தலையிடி தீர்ந்துவிடும் என்று அவர் நம்பினார்.



இதுபற்றி கதிரவனிடம் சொன்ன போது நீங்கள் பிரச்சினைகளை சமாளிக்க பார்க்கின்றீர்களே அல்லாமல் அவற்றை தீர்த்து வைக்க முயற்சிக்கவில்லை என்று அவர் விமர்சனம் செய்தார்.

“பிரச்சினைகளை ஒருநாளும் நிரந்தரமாக தீர்க்க முடியாது. தீர்க்க, தீர்க்க பிரச்சினைகள் உருவாகிக் கொண்டுதான் இருக்கும். சமாளித்துக் கொண்டு போவதுதான் புத்திசாளித்தனம்” என்று அதற்கு விளக்கம் சொல்லிவிட்டு கொழும்பு திரும்பிய உமாமகேஸ்வரன் முதல் வேலையாக கட்சியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்.

ஒரு வாரம் சட்டத்தரணிகள், அரசியல்வாதிகள் என்று பலரைச் சந்தித்து ஆலோசனைக் கேட்டு கட்சியின் அமைப்பு வடிவம் மற்றும் யாப்பு, கொள்ககைத்திட்டம் என்பன தயாரிக்கப்பட்டன. கட்சிக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி DPLFஎன்று பெயர் வைக்கப்பட்டது.
இயக்கத்தில் பிரச்சினைக்கு உhரியவர்களாக இருந்த நபர்கள் கட்சியினது முக்கிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். வசந்தனுக்கு யாழ் மாவட்ட அமைப்பாபளர் பதவி கொடுத்து யாழ்ப்பாணம் சென்று இரகசியமாக புளொட் ஆதரவாளர்களைச் சந்தித்து கட்சியின் உறுப்பினர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு சொல்லப்பட்டது.
வசந்தனது ஆதரவாளர்கள் சிலருக்கு மன்னார் நகர, முல்லைத்தீவு நகர, மட்டக்களப்பு நகர அமைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. இந்த இடங்கள் அனைத்தும் இந்திய இராணுவத்தின் கண்காணிப்புக்கு மத்தியிலும் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தியிருந்த பகுதிகள் நிச்சயமாக அங்கே போய் வேலை செய்ய முடியாது என்பதும் இவர்கள் அங்கே போக மாட்டார்கள் என்பதும் உமாமகேஸ்வரனுக்குத் தெரியும்.

ஆனால் இராணுவ வேலைக்குத்தான் ஆயுதமும் பாதுகாப்பும் தேவை. அரசியல் வேலை ஆள் தெரியாமல் இருந்து மிக இரகசியமாகச் செய்யலாம். லெனின், மாவோ, சேகுவாரா, பிடல் காஸ்ரோ, எல்லாம் நெருக்கடிக்கு மத்தியிலேதான் அரசியல் வேலை செய்தார்கள் என்று காரணங்கள் சொல்லி அவர்களது பொறுப்புகளுக்கான உத்தரவு கடிதங்களை அனுப்பிவைத்தார். அவரது நோக்கம் அவர்கள் தாங்களாகவே இயக்கத்தை விட்டு தப்பி ஓடும் அளவிற்கு அவர்களுக்கு நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்பதே. அப்படி வெளியே சென்ற பின் அவர்களுக்கு தண்டனை கொடுக்கலாம் என்று அவர் எண்ணினார்.

உமாமகேஸ்வரன் கொழும்பில் இருந்து கொண்டு வசந்தன் குழுவிற்கு தண்டனை கொடுக்க தீர்மானித்துக் கொண்டிருந்த நேரத்தில் கராச்சியிலிருந்து றோவிற்கு ரஜீவ்காந்தியின் பிள்ளைகளை கடத்த உமாமகேஸ்வரன் திட்டமிட்ட விடயம் இரகசியமாக தெரிய வந்தது. யார் மூலம் இது தெரிய வந்தது என்று இன்னமும் சரியாகத் தெரியாது. பாருக்தாதா தான் இதைச் சொல்லியிருக்க வேண்டும் என்றும் தான் அதற்காக மிக மிக வருத்தப்படுவதாகவும் ஹமால்டின் (பாலஸ்தீன நண்பர்) உமாவிற்கு அறிவித்திருந்தார்.

றோ, உமாமகேஸ்வரன் இப்படி ஏதாவது செய்யக்கூடும் என்று எதிர்பார்த்துத்தான் இருந்தது. ஆனால் ரஜீவ்காந்தியின் பிள்ளைகளை கடத்தும் அளவிற்கு அவர் துணிவார் என்று எதிர்பார்க்கவில்லை. கடுமையான பாதுகாப்பு வலயத்திற்குள் நடமாடும் அவர்களை கடத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லை. என்றாலும் பாகிஸ்தான் பாலஸ்தீன் ரீதியில் தொடர்புகள் இருப்பதால் இதை சாதாரண விடயம் என்று ஒதுக்கித் தள்ள அவர்களால் முடியவில்லை. எனவே எப்படியும் உமாமகேஸ்வரனது கதையை விரைந்து முடித்து விட வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்தார்கள்

கருத்துகள் இல்லை: