புளொட் ஒரு முற்போக்கான இயக்கம், அது முற்போக்கான கொள்கைகளைக் கொண்டிருந்தது. என்று எவராவது சொன்னால் அவர் ஒன்றில் முற்போக்கு என்பதற்கு அர்த்தம் தெரியாதவராக இருப்பார். அல்லது யாழ்ப்பாண சாதி அமைப்பு எப்போதும் தகர்ந்து போகாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்ட ஒரு சாதிமானாக இருப்பார்.
1970களில் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் அடியெடுத்து வைத்த காலத்தில் தமிழீழ கோரிக்கை உருவாகுவதற்கான பிரதான காரணியாக தரப்படுத்தல், கொள்கை முன்வைக்கப்பட்டது. அதாவது தமிழ் இளைஞர்களுடைய உயர் கல்வி வாய்ப்பு பறிக்கப்பட்டதால் அவர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்றும் சொல்லப்பட்டது.
உண்மையில் கல்வி உரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றுதான். அந்த அடிப்படை உரிமைகளில் பாரபட்சம் காட்டப்படும் போது அதற்கெதிராக கிளர்ந்தெழுவது என்பதும் நியாயமானதுதான். ஆனால் யாழ்ப்பாண சமூக அமைப்பைப் பொறுத்தவரை 1980களின் பிற்பகுதிவரை உயர் கல்வி என்பது ஒட்டுமொத்தமான தமிழ் சமூக அமைப்பின் நலனை நோக்கமாகக் கொண்டதாக இருக்கவில்லை. மாறாக சமூக அந்தஸ்துக்கும் வரதட்சனைக்குமான அளவுகோலாகவே அது இருந்தது. அதாவது ஒரு வைத்தியராகவோ, பொறியியலாளராகவோ ஆவதென்பது நமது சமூகத்திற்கு சேவை செய்வதற்காக இருக்கவில்லை. கொழுத்த சீதனத்துடன் சாதி அந்தஸ்து பார்த்து திருமணம் செய்து கொள்வதற்கும் அந்த சீதனப்பணத்தைக் கொண்டு லண்டனில் சென்று குடியேறும் லண்டன் கனவையும் மட்டுமே அது அடிப்படையாகக் கொண்டிருந்தது.
ஒரு சிலர் இதுக்கு விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் தங்களது உயர் கல்வியை லண்டன் கனவுக்கான அடிப்படைத் தகுதியாகவே பார்த்தார்கள் என்பதே உண்மை.
யாழ்ப்பாண சமூக அமைப்பைப் பொறுத்தவரை 30 வீதமானவர்கள் கடற்தொழிலை ஆதாரமாகக் கொண்ட மீனவர்கள். 31 சதவீதமானவர்கள் தொழில் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஒடுக்குமுறைக்கு உள்ளான தாழ்த்தப்பட்ட மக்கள். 24 சதவீதமானவர்கள் சிறு விவசாயம், சிறு வியாபாரம், சாதாரண தரத்திலான அரசு ஊழியம் என்பவற்றில் ஈடுபட்ட நடுத்தர வர்க்;கத்தினர். மிகுதி 15 வீதமானவர்கள் மட்டுமே கல்வியை தங்களது சமூக அந்தஸ்தை உயர்த்துவதற்கும் அதன் மூலம் யாழ்ப்பாண சாதிய சமூக அமைப்பு தகர்ந்து போகாமல் பார்ப்பதற்குமான மூலதனமாகப் பயன்படுத்தியவர்கள், யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னனான சங்கிலியனை போர்த்துக்கேயர் வீழ்த்தி யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றிய போது அவர்களுக்கு நில பாவடை விரித்து வரவேற்ற காலம் முதல் பிரித்தானிய எஜமானர்கள் தங்களுடைய நலனுக்காக உருவாக்கிய ஒற்றை ஆட்சி என்ற சிறிலங்கா சிறைக்குள் தமிழீழ தேசத்தை அடைத்த போது தங்களுடைய இலட்சியக் கனவான லண்டன் கனவுக்காகவும், தென்னிலங்கையில் இருந்த தங்களது சொத்துக்களுக்காகவும் மாட்சிமை தங்கிய பிரித்தானிய மகாராணியை எதிர்க்க விரும்பாமல் அதற்கு ஒத்துழைத்து சம்மதமும் தெரிவித்து முதற்கொண்டு இவர்களே யாழ்ப்பாண சமூக அமைப்பினது மட்டுமல்ல ஒட்டுமொத்தமான சமூக அமைப்பினதும் தலைவர்கள் என்று முடிசூடிக்கொண்டு உலா வந்தார்கள்.
1947 பெப்ரவரி 4ம் நாள் பிரித்தானிய எஜமான் இலங்கைத் தீவைவிட்டு போனபோது இவர்களுக்கு லண்டன் கனவோடு புதிய கனவொன்றையும் உருவாக்கித் தந்துவிட்டுப் போனான். அதுதான் பாராளுமன்ற நாற்காலிக் கனவு. இந்த நாற்காலி என்பது சிறைக்குள் அடைக்கப்பட்ட தமிழீழ தேசத்தை காவல் புரியும் அடிமை நாற்காலி என்பதை மறைத்து தமிமீழ மக்களுக்கு விமோசனம் பெற்றுத் தரப்போகின்ற உரிமை நாற்காலியாக இவர்கள் கபடத்தனமாகப் பொய் சொன்னார்கள். தாங்கள் இந்த நாற்காலிகளை அடைவதற்கும் அதன் மூலம் தங்களது பிரிவைச் சார்ந்தவர்களது நலனைப் பேணுவதற்கும் ஒட்டுமொத்தமான தமிழீழ மக்களை இவர்கள் படிக்கற்களாகப் பயன்படுத்தினார்கள்.
உண்மையில் தரப்படுத்தல் சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன்பே கிழக்கிலும் வடக்கின் எல்லைப்புறங்களிலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் தமிழ் மக்களது பாரம்பரிய பிரதேசம் அபகரிக்கப்பட்டது. இத்தகைய சிங்களக் குடியேற்றங்கள் மூலமும் துரித மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் தமிழ் விவசாயிகளின் நிலத்தில் பாய்ந்த மகாவலி நீரை திசை திருப்பி புதிதாக உருவாக்கிய சிங்கள குடியிருப்பு விவசாயிகளுக்கு வழங்கியதன் மூலமும் பரம்பரை பரம்பரையாக தமது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்த தமிழ் விவசாயிகளினது (விவசாய) தொழில் உரிமை பறிக்கப்பட்டது. முல்லைத்தீவு, மணலாறு முதற்கொண்டு அம்பாறைவரை திட்டமிட்ட சிஙகள மீனவக் குடியேற்றங்களை உருவாக்கியதன் மூலமும் தமிழீழத்தின் கடற்பரப்புக்கூட சிறிலங்கா அரசால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. காலகாலமாக இப்பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த தமிழ் மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமை மறுக்கப்பட்டது. தமிழ் மண் பறிக்கப்பட்டபோது பரந்துபட்ட தமிழ் மக்களின் வாழ்வுக்கான உரிமை பறிக்கப்பட்ட போது இவர்கள் தமிழீழ தேசியம் பற்றியோ, தமிழீழம் பற்றியோ கதைக்கவில்லை. மாறாக தரப்படுத்தல் இவர்களது லண்டன் கனவில் கையை வைத்த போது இவர்கள் கிளர்ந்தெழுந்தார்கள். அடைந்தால் தமிழீழம், இல்லையேல் சுடுகாடு; செய்து முடிப்போம் இல்லையேல் செத்து மடிவோம் என்றெல்லாம் வீரமுழக்கம் செய்தார்கள். உண்மையில் இது கூட ஒருவகை மோசடிதான்.
இவர்களது அதாவது இந்த மேட்டுக்குடி தமிழ் குழுக்களது தமிழீழ கோசம் என்பது முன்பு வாக்குச்சீட்டை வைத்து சிறிலங்கா அரசுடன் பேரம் பேசியதைப் போல இப்போது கொஞ்ச ஆயுதத்தை வைத்துக் கொண்டு விடுதலைப்புலிகளைக் ;காட்டிக் கொடுப்பதாகக் கூறி சலுகைகளுக்காக பேரம் பேசுவதை நோக்கமாகக் கொண்டதே அன்றி உண்மையான தமிழீழ இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டதில்லை. இது சிறிலங்கா அரசுக்கே தெரியும்.
ஒரு சமயம் அத்துலத்முதலி உமாமகேஸ்வரனுடன் பேசிய போது நாங்கள் உங்களைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் நீங்கள் யாழ்ப்பாண சமூக அமைப்பின் மேல் மட்டத்தில் இருந்து வந்தவர்கள். நீங்கள் எப்போதும் சமரசத்திற்கு வருவீர்கள் என்பது எமக்கத் தெரியும். எங்களது கவலையெல்லாம் பிரபாகரனைப் பற்றித்தான். ஏனேன்றால் அவர் உங்களைப் போல் அற்ப சலுகைகளுக்காக மாறிவிடுபவர் அல்ல. பரந்துபட்ட மக்களின் துயரங்களைப் புரிந்து கொண்டவர் என்று குறிப்பிட்டார்.
உண்மையில் தங்கள் பிள்ளை 10வது படித்தாலே போதும் என்று நினைக்கும் மீனவர்களக்கும், மரமேறுபவர்களுக்கும், பறைமேளம் அடிப்பவர்களுக்கும், துணி தோய்ப்பவர்களுக்கும், தோட்டி வேலை செய்பவர்களுக்கும் தரப்படுத்தல் ஒன்றும் பாதிப்பைக் கொடுக்கவில்லை. மண்ணும் கடற்பரப்பும் பறிக்கப்படுவதும் தொழில் செய்யும் உரிமை மறுக்கப்படுவதும் தான் அவர்கள் முகங்கொண்ட உடனடிப் பிரச்சினை.
லண்டன் கனவாளர்களைப் பொறுத்தவரை மண்ணும் கடலும் பறிக்கப்படுவதும், தொழில் செய்யும் உரிமை மறுக்கப்படுவதும் அவர்களுக்கு சம்மந்தமில்லாத விடயங்கள். அவர்களைப் பொறுத்தவரை பட்டம், பதவி. அந்தஸ்து, சாதிப் பெருமை, குலப் பெருமை, பணப் பெருமை இவைகள் பாதிப்புள்ளாகாமல் இருந்தால் சரி.
இத்தகைய பின்னணியில் ஆயுதப் போராட்டம் உருவெடுத்த போது உருப்பெற்ற தலைவர்களில் தங்கள் பிரிவிலிருந்து வந்த உமாமகேஸ்வரன் இவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக தெரிந்தார். உமாமகேஸ்வரனை பலப்படுத்துவதன் மூலம் தங்களுடைய சாதிய சமூக நலன்களைப் பலப்படுத்துவதற்கென்றே இவர்கள் ஆயிரக்கணக்கில் புளொட் அமைப்பில் சேர்ந்தார்கள்.
1983, 84 பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் எங்கெல்லாம் சாதி அமைப்பு மிக இறுக்கமாக இருந்ததோ, எங்கெல்லாம் சாதிய அடக்குமுறை கூர்மையாக இருந்ததோ அந்த இடங்கள் எல்லாம் புளொட்டின் கோட்டைகளாக இருந்தன. தமது சொந்தச் சகோதரர்களே சாதியின் பெயரால் ஒதுக்கிவைத்த ஒடுக்கி வைத்த பிரிவினரே புளொட்டின் அமைப்பாளர்களாகவும், பொறுப்பாளர்களாகவும் இருந்தனர்.
புளொட்டில் இருந்த இந்தச் சாதிய கனவான்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று தங்களது உடல் பலத்தின் மூலம் வன்முறை கொண்டு மற்றவர்களை அடக்கியாண்டு பழக்கப்பட்டவர்கள், இரண்டாவது தங்களது மூளைப்பலத்தின் மூலம் மிகத் திட்டமிட்ட தந்திரமாக மற்றவர்களை அடக்கியாண்டு பழக்கப்பட்டவர்கள்.
முதலாவது பிரிவினருக்கு அரசியல் ஒன்றும் தெரியாது. எப்போதும் சாகாசங்கள் செய்து கொண்டிருக்க வேண்டும். மற்றவர்களை அதிகாரம் செய்து கொண்டிருக்க வேண்டும். சக தோழர்கள் மத்தியிலும், சமூகத்திலும் தாங்கள் ஹீரோக் (கதாநாயகர்) களாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.
இரண்டாவது பிரிவினர் மூளைசாலிகள் இவர்களது மூளை என்பது ஏறத்தாள பார்ப்பணிய மூளைதான். இன்றைக்குத் தங்களை மாக்ஸிட்டுக்களாகவும், மனித உரிமைவாதிகளாகவும் சொல்லிக் கொள்ளும் இவர்களைக் கேட்டால் தங்களை பரம்பரை மார்க்ஸிச வாதிகளாகச் சொல்வார்கள். புளொட்டிற்கு வரும் போது உண்மையில் இவர்களுக்குத் தோழர் முற்போக்கு, பிற்போக்கு, ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் போன்ற இப்படி சில மார்ஸிச சொற்கள் தான் தெரியும். புளொட்டிற்கு வந்த பின்தான் இவர்கள் மாக்ஸிசத்தை கற்க முனைந்தார்கள். அதுவும் இவர்கள் கற்றதென்னவோ பார்ப்பணிய மூலாம் பூசி மெருகூட்டப்பட்ட இந்திய மொடல் மாக்ஸிசம்தான். மக்கள் விடுதலை, மக்கள் ஜனநாயகம், மக்கள் போராட்டம் என்றெல்லாம் கொள்கை வகுத்து மக்கள் மயங்கும்படி மாஜாஜால பிரசாரம் செய்த இவர்கள் இந்தக் கொள்கைகளை வகுப்பதற்கு முன் புளொட்டினதும் அதன் தலைவர் உமாமகேஸ்வரனதும் வர்க்கக் குணாம்சம் என்ன என்பதை ஒரு போதும் சிந்தித்துப் பார்க்கவில்லை. ஏனென்றால் இவர்களுக்கு அந்தத்தேவை இருக்கவில்லை. இவர்களது அன்றைய நோக்கம் சமதர்மம், சமத்துவம், என்றெல்லாம் பேசி மக்களை புளொட்டின் பக்கம் இழுத்து தங்களது சாதியத் தலைமையை பலப்படுத்தி தங்களது சாதிய நலனை தக்க வைத்துக் கொள்வதுதான்.
எனவே, இவர்கள் முதலில் தங்களை புளொட்டினது அமைப்பாளர்களாகவும் பிரதேசப் பொறுப்பாளர்களாகவும் நிலைநிறுத்திக் கொண்டு தங்களுக்கு கூலிப்படையாக இருந்து போராடுவதற்கென்று தாழ்த்தப்பட்ட மற்றும் மன்னார், வன்னி, கிழக்கு, மாகாணங்களின் பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களை ஆறு மாதம் பயிற்சி, பயிற்சி முடிந்தபின் கையில் ஆயுதம், ஆயுதம் வந்ததும் பரந்துபட்ட மக்கள் போராட்டம் என்று கவர்ச்சிகரமாக பிரசாரம் செய்து பிடித்துப் பார்த்தார்கள்.
இவர்களது இந்த ஆள் பிடிப்பது என்பது மலையகத் தோட்டத்திலே வேலை செய்ய தமிழகத்தில் 18ம் 19ம் நூற்றாண்டில் பிரித்தானியர்களின் கைக்கூலிகள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு ஒப்பானது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக