07
20 நிமிடங்கள் அந்த விமானம் அரபுக்கடலின் மீது எரிபொருளை தீர்ப்பதற்காக பறந்து கொண்டிருந்த நேரத்தில் அதிலுள்ள கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் விமானம் பத்திரமாக கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
20 நிமிடங்கள் அந்த விமானம் அரபுக்கடலின் மீது எரிபொருளை தீர்ப்பதற்காக பறந்து கொண்டிருந்த நேரத்தில் அதிலுள்ள கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் விமானம் பத்திரமாக கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
பாகிஸ்தானிய குடிவரவு பகுதியிலிருந்து எந்தவித பிரச்சினையும் இல்லாமல் ராபினுடன் வெளியேறிய உமாமகேஸ்வரன் கராச்சியின் புறநகர் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் அன்று இரவு தங்கினார். மறு நாள் காலை 9.00 மணிக்கு வாடகை கார் ஒன்றை பிடித்துக்கொண்டு கராச்சி நகரத்தின் மையப்பகுதியிலருந்த அஹ்ரம் நகருக்குச் சென்றார். அங்கிருந்த பங்களாவிலேயே உமாவினது பாலஸ்தீன நண்பர் தங்கியிருந்தார்.
அவருடன் தொலைபேசியிலும், கடிதம் மூலமும் அடிக்கடி தொடர்பு கொண்டாலும் நேரில் சந்தித்து 5 வருடங்களாகிவிட்டது. இவர்கள் சென்று அழைப்பு மணியை அழுத்தி வந்தவிடயத்தைச் சொல்ல வந்து பார்த்த கமால்டினுக்கு உமாமகேஸ்வரனை உடனே அடையாளம் தெரியவில்லை. யார் இது எனது பெயரை விசாரித்து வந்திருக்கும் புது மனிதன் என்று அவர் திகைத்துப் போய்விட்டார்.
அவரின் திகைப்பிற்கான காரணத்தை புரிந்து கொண்ட உமாமகேஸ்வரன் தன்னையும், ராபினையும் அறிமுகப்படுத்தி தான் இப்போது உமா மகேஸ்வரனல்ல முஹமட் இப்ராஹிம் என்றார். ஹமால்டினுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
மிஸ்டர் உமா வேசப் பொருத்தம் பிரமாதமாக இருக்கின்றது. அசல் முஸ்லிமைப் போலவே நீங்கள் இருக்கின்றீர்கள். என்று கூறி அவரையும் ராபினையும் உள் அழைத்துச் சென்றார்.
கொஞ்ச நேரம் பரஸ்பர நலன் விசாரிப்பின் பின் காலை உணவு மேசையில் பேச்சுவார்த்தை தொடங்கியது. முதலில் மாலைதீவு எதிர்காலத்தைப் பற்றி ஹமால்டின் விசாரித்தார். றோவின் சொற்படி உமாமகேஸ்வரன் நடந்து கொண்டதற்காக அவரை கண்டித்தார்.
உண்மையிலேயே நீங்கள் மிகப்பெரிய தவறு செய்து விட்டீர்கள், உமா மாலைதீவில் தாக்குதல் நடத்தியது அதுவும் இந்தியாவின் சொல்லைக்கேட்டு தாக்குதல் நடத்தியது படு முட்டாள்தனமானது என்று அவர் குறைபட்டுக் கொண்டார்.
உமாமகேஸ்வரன் பாடு சங்கடமாகிவிட்டது. தான் செய்ததை அவரால் நியாயப்படுத்த முடியவில்லை.
உண்மையிலேயே நான் தவறு செய்துவிட்டேன். இந்தியாவைப்பற்றி தெரிந்து வைத்திருந்தும் அவர்கள் விரித்த வலையில் விழுந்து விட்டேன் என்று அவர் ஹமால்டினுக்குச் சொன்னார்.
”மிஸ்டர் உமா இந்தியர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள், உலகத்திலேயே அதிகளவிற்கு அகிம்சையைப்பற்றி பேசுபவர்கள் அவர்கள்தான். ஆனால் இது அவர்கள் தாங்கள் நடத்துகின்ற அப்பட்டமான மனித உரிமை மீறல்களையும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் மூடி மறைப்பதற்கு போடுகின்ற வேசம் என்று உலகத்திற்குத் தெரியாது.” என்று கூறிவிட்டு சற்று மௌனமாக இருந்;த ஹமால்டின் பின்னர் “மாலைதீவு விவகாரம் நீங்கள் எதிர்பாhத்தபடி வெற்றியளித்திருந்தால் இந்தியா உங்களைவிட்டுவைத்திருக்கும் என்று நினைக்கின்றீர்களா? நிச்சயமாக உங்களை கொலை செய்திருப்பார்கள். அவர்களுக்குத் தேவை மாலைதீவை தங்களது நிழலுக்குக் கீழே கொண்டு வருவதுதான். உங்களை தாக்குதலுக்கு அனுப்பிய போதே எதிர்த்தாக்குதலுக்கும் அவர்கள் திட்டம் தீட்டிவிட்டார்கள்.” ஏன்றாh;
உமாமகேஸ்வரன் அவர் சொன்னதை மௌனமாக கேட்டுக் கொய்டிருந்தார்
“வெற்றியையும் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொள்ள வேண்டும், தோல்வியையும் தங்ககளுக்கு சாதகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது திட்டம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் நட்பு நாடான பாகிஸ்தான், அதுவும் முஸ்லிம் நாடான பாகிஸ்தான் உதவிக்கு
செல்லுமுன் ஏன் இந்தியா உதவிக்குச் செல்ல வேண்டும். ஏற்கனவே இதை எதிர்பார்த்து அவர்கள் தயாராகவே இருந்திருக்கிறார்கள். பாகிஸ்தானின் நண்பரான ஹயும் (மாலைதீவு ஜனாதிபதி) இப்போது இந்தியாவுக்கு கடமைப்பட்டவராகிவிட்டார். ஏமாந்து போனது நீங்கள்தான் என்று ரோவின் போட்ட திட்டத்தை ஹமால்டீன் அம்பலப்படுத்தினார்.
செல்லுமுன் ஏன் இந்தியா உதவிக்குச் செல்ல வேண்டும். ஏற்கனவே இதை எதிர்பார்த்து அவர்கள் தயாராகவே இருந்திருக்கிறார்கள். பாகிஸ்தானின் நண்பரான ஹயும் (மாலைதீவு ஜனாதிபதி) இப்போது இந்தியாவுக்கு கடமைப்பட்டவராகிவிட்டார். ஏமாந்து போனது நீங்கள்தான் என்று ரோவின் போட்ட திட்டத்தை ஹமால்டீன் அம்பலப்படுத்தினார்.
”உண்மை தான் இதைப்பற்றியெல்லாம் அப்போது யோசிக்கவில்லை.” என்று அவர் சொன்னதை ஒப்புக் கொண்ட உமாமகேஸ்வரன் “இப்போது எனக்குள்ள பிரச்சினை எங்களுடைய ஆட்களை மாலைதீவுச் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும். அதற்காகத்தான் இங்கே வந்து தங்கியிருந்து உங்களுடைய உதவியைக் கேட்டேன்” என்றார்.
இங்கிருந்து அதற்கு என்ன செய்யப் போகின்றீர்கள் என்று ஹமால்டின் திருப்பிக் கேட்க உமாமகேஸ்வரன் தனது திட்டத்தை (அதாவது ரஜீவ்காந்தியின் பிள்ளைகளைக் கடத்தி பணயம் வைத்து தனது சகாக்களை மேற்படி) அவருக்குச் சொன்னார். அதைக் கேட்டு ஒரு சில வினாடிகள் யோசித்த ஹமால் இது சாத்தியமா என்று நினைக்கின்றீர்களா என்று கேட்டார்.
சாத்தியமாகுமா என்றால் உங்களது கேள்வி எனக்கு விளங்கவில்லை. ரஜீவின் பிள்ளைகளை கடத்துவது சாத்தியமாகாது என்று நினைக்கின்றீர்களா என்று உமா கேட்க, இல்லை இல்லை நான் அதைச் சொல்ல வரவில்லை. இதைச் செய்தால் மாலைதீவு அரசாங்கம் பணிந்து வந்து உங்களது ஆட்களை விடுவிக்கும் சாத்தியக்கூறு இருக்குமா? என்று தான் கேட்டேன் என்றார் ஹமால்.
" நிச்சயமாக சாத்தியமாகும். மாலைதீவு என்னமும் இந்தியாவின் மேற்ப்பார்வையின் கீழ் தான் இருக்கின்றது. எங்களது ஆட்கள்கூட இந்திய மாலைதீவு கூட்டுக் கண்காணிப்பில்தான் இருக்கின்றார்கள். பிரச்சினையாக இருப்பது மாலைதீவு அரசாங்கமல்ல இந்தியா தான். இந்தியாவைப் பணிய வைக்க வேண்டும் என்றால் நேரு குடும்பத்தில் கைவைக்க வேண்டும். இந்தியாவில் நீங்கள் போய் ஒரு ஆயிரம் பேரை சுட்டுத் தள்ளிப் பாருங்கள். அங்கே எதிர்ப்பு பெரிதாக ஒன்றும் இருக்காது, தேசத் தந்தை என்று சொல்கின்ற காந்தியின் வாரிசை கடத்தினால் கூட அவர்கள் கவலைப்படமாட்டார்கள் ஆனால் நேரு குடும்பத்தில் கைவைத்துப் பாருங்கள் உடனேயே சீறி எழுந்துவிடுவார்கள் என்று அவருக்கு விளக்கமளித்தார் உமா. ஹமால் அவரது விளக்கத்தை ஏற்றுக் கொண்டார்.
அதன்பின் இருவரும் ரஜீவின் பிள்ளைகளுக்கு இருக்கக்கூடிய பாதுகாப்பு அதை உடைப்பதற்கான வழிமுறைகள் அவர்களை கடத்தினால் இந்திய பொலிஸ் மற்றும் பாதுகாப்புப்படையினரின் கண்ணில் படாமல் காரியம் முடியும் மட்டும் பாதுகாப்பாக வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டிய இடங்கள் இந்த விசயத்தை செய்து முடிக்க இந்தியாவுக்குள் அணுகக்கூடிய நம்பிக்கைக்குரிய நபர்கள். இந்த நடவடிக்கையினுடைய சாதகபாதகமான அம்சங்கள் இந்திய பாதுகாப்புத்துறையிலுள்ள பலவீனங்கள் என்பது பற்றியெல்லாம் விரிவாக ஆராய்ந்தார்கள்.
இந்த விடயத்தில் தங்களால் முழு உதவியையும் தங்களால் செய்ய முடியும் என உறுதியளித்த ஹமால் உங்களுக்குமட்டுமல்ல இஸ்லாமுக்கே அவர்கள் எதிரிகள். பொது எதிரிக்கு எதிராக நாங்கள் ஐக்கியப்பட வேண்டும். இதற்காக நீங்கள் நாங்கள் எல்லோரும் சேர்ந்து சர்வதேச நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்க வேண்டும். அதைவிட நீங்கள் இன்னொருதடவை றோவின் வலையில் விழாமல் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதன்பின் அவர்கள் பாரூக்தாதாவை சந்திக்கப் புறப்பட்டனர். கராச்சி நகரத்தின் பிரபல்யமிக்க பெரும் புள்ளியான அவர் பெயருக்கு ஏற்றபடி அடியாட்கள் சகிதம் பெரும் தாதாவாகத்தான் காட்சியளித்தார்.அவரைப் பார்த்த போது பம்பாய் வரதராஜ முதலியாரின் நினைப்புத்தான் உமாவுக்கு வந்தது.
ஹமால் உமாவை அவருக்கு அறிமுகம் செய்து வைத்து உமா கராச்சியில் தங்கியிருக்க ஏற்பாடுகள் செய்து தரவேண்டும் என்றும் ஏதாவது ஒரு தொழில்துறையில் முதலீடு செய்ய அவருக்கு தாதா உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தான் அவற்றை நிச்சயமாக செய்து தரலாம் என்று தாதா ஒத்துக்கொண்டார். தாதாவுக்கு கடத்தல் விடயத்தை உடனே சொல்லவில்லை. அவரிடம் தான் அதை பின்பு விபரமாகச் சொல்வதாகவும் விரைவிலேயே எல்லா ஏற்பாடுகளுடனும் கராச்சிக்கு வரும்படியும் தானும் தனது நாட்டுக்கு போய்விட்டு திரும்பி வருவதாகவும் ஹமால் உமாவுக்குச் சொன்னார்.
தான் எதிர்பார்த்தது போல் அல்லாது வந்தவிடயம் சுலபமாக முடிந்துவிட்டதாக உமா திருப்திப்பட்டுக்கொண்டார். அந்த சந்தோசத்தில் ஹமாலுடனும் தாதாவுடனும் விடைபெற்றுக் கொண்டு கராச்சி நகருக்கு சுற்றிபார்க்கச் சென்றார்.
அவர் இவ்வாறு கராச்சி நகரத்தை சுற்றிப்பார்த்துக்கொண்டிருக்கும் போது நாட்டில் முள்ளிக்குள முகாமில் ஒரு கொலை நடந்தது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக