ஐ.நா நிபுணர் குழு அறிக்கையும் நோர்வே உட்பட்ட அனைத்துலக சமூகத்தின் பொறுப்புகளும்' எனும் தலைப்பிலான கருத்தரங்கு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் ஏற்பாடு செய்யப்படுகின்றது.
நோர்வே தமிழ் கற்கை மையத்தின் ஏற்பாட்டில், மே மாதம் 19ம் நாள் வியாழக்கிழமை [19.05.2011] பிற்பகல் 4 மணியிலிருந்து 6:30 மணி வரை ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் [Historisk museum, Fredriksgate 2] நடைபெறும் இக் கருத்தரங்கிற்கு ஒஸ்லோ பல்கலைக் கழகத்தின் சமூக மானிடவியல் துறைப் பேராசிரியர் Øivind Fuglerud தலைமை தாங்குகிறார்.
முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலங்களுடன் போர் முடிவுக்கு வந்த 2வது ஆண்டினை நினைவுறுத்தவும், நிபுணர் குழு அறிக்கையினை முன்னிறுத்தவும், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் மீதான கவனக்குவிப்பினை ஏற்படுத்தவும், நோர்வே உட்பட்ட அனைத்துலக சமூகத்தின் கடப்பாடுகளை வலியுறுத்தவும் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்படுகின்றது.
இக்கருத்தரங்கில் நோர்வேஜிய வெளியுறவு ஆய்வு மையத்தின் [Norwegian Institute of International Affairs] தலைவரான Jan Egeland கலந்து கொண்டு கருத்துரை நிகழ்த்த உள்ளார். Jan Egeland அவர்கள் இந்த ஆண்டு நடுப்பகுதியிலிருந்து அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் [Human Rights Watch] ஐரோப்பாவிற்கான தலைவராக பொறுப்பேற்கவுள்ளவர்.
அத்துடன் இவர், 2003 முதல் 2006 வரை ஐ.நாவின் மனிதாபிமான மற்றும் அவசர உதவிகளுக்கான துணைப் பொதுச் செயலராக கடமையாற்றியவர். நோர்வேயின் முன்னாள் பிரதி வெளியுறவு அமைச்சர் என்பதோடு, நோர்வே அரசியல் தளத்திலும் பல்வேறு அனைத்துலக அமைப்புகளிலும் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இக்கருத்தரங்கில்,
நோர்வேயின் ஆப்தன்போஸ்தன் நாளிதழில் அனைத்துலக அரசியல் கட்டுரைகளையும் பத்திகளையும் எழுதி வரும் ஊடகவியலாளர் Kristoffer Rønneberg [இவர் வன்னியில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் போர்ப் பகுதிக்குச் சென்று வந்தவர்],
வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு விவகாரக் குழு உறுப்பினருமான Peter Skovholt Gitmark ,
முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற மற்றும் வெளியுறவு, பாதுகாப்பு விவகாரக் குழு உறுப்பினரும் SCPAR அமைப்பின் [Standing Committee of Parliamentarians of the Arctic Region] தலைவருமான Morten Høglund,
சுவீடன் விவசாய அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர் [Swedish University of Agricultural Sciences] நடராஜா சிறிஸ்கந்தராஜா ஆகியோர் கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.
இக் கருத்தரங்கில் பங்குபற்ற விரும்புவர்கள் ntsfmail@gmail.com எனும் மின்னஞ்சல் ஊடாகத் பதிவுகளை மேற்கொள்வதன் மூலம் தமது வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு நோர்வே தமிழ் கற்கை மையம் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக