திங்கள், 23 மே, 2011

2ஜி ஊழல்: பெரு நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு பிணைய விடுதலை மறுப்பு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் பயனடைந்ததாக குற்றஞ்சாற்றப்பட்டுள்ள பெரும் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் பிணைய விடுதலை அளிக்க மறுத்துவிட்டது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனமான ஸ்வான் டெலகாமின் வினோத் கோயங்கா, யுனிடெக் நிறுவனத்தின் சஞ்சய் சந்திரா, அனில் திருபாய் அம்பானி நிறுவனத்தின் கெளதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகிய ஐந்து பேரும் சி.பு.ஐ.சிறப்பு நீதிமன்றத்தால் பிணைய விடுதலை மறுக்கக்கட்டவர்களாவர்.

ம.பு.க.சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இவர்கள் செய்த மேல் முறையீட்டை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதி அஜித் பாரியோக், ம.பு.க. சார்பாக வாதிட்ட அரசு வழக்குரைஞர் லலித் முன்வைத்த வாதத்தை ஏற்று இவர்களின் பிணைய விடுதலை கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

“2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் இவர்களும், இவர்களின் நிறுவனங்களும் பெரும் பயனை அடைந்துள்ளன. அது மட்டுமின்றி, இந்த முறைகேட்டை அமைச்சராக இருந்த ஆ.இராசாவுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டி நிறைவேற்றியும் உள்ளனர். எனவே இவர்களுக்கு பிணைய விடுதலை அளிக்கக் கூடாது” என்று லலித் வாதிட்டார்.

இதே நீதிமன்றத்தி்ல்தான் கனிமொழியின் சார்பாக பிணைய விடுதலை கோரிக்கை மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.webdunia.com

கருத்துகள் இல்லை: