நம் எதிர்காலம் எப்படி இருக்குமோ, நமது குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்குமோ, கணவர் காலையில் அலுவலகத்துக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பும்போது மனைவி உயிருடன் இருப்பாளா? இல்லையா? என்றெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. ஒரு சராசரி மனிதர் வேலைக்கு சென்று வீட்டுக்கு வரும்போது வயதான தாயார் உயிருடன் இருப்பாரா? இல்லையா? என்ற கவலை தேவையில்லை. சூழ்நிலைகள் மாறும். சட்டம்-ஒழுங்கு செம்மையாக காக்கப்படும்'' என்று தமிழகத்தின் முதலமைச்சராக 3வது தடவையாகப் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா அதிரடியான அறிவிப்பை நேற்று வெளியிட்டு இருந்தார்.
கடந்த தி.மு.க. ஆட்சியின்போது கொலை, கொள்ளை, கற்பழிப்பு, காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தது உண்மைதான். அதனை யாரும் மறுக்க முடியாது. ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட சென்னை மாம்பலத்தில் வீட்டில் இருந்து இரண்டு சகோதரிகள் நகைக்காக கொள்ளையர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் குற்றவாளிகள் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த குற்றவாளிகளை முதலில் கண்டுபிடிக்குமா காவல்துறை? அந்த வழக்கின் விசாரணை ஒருநாள் கூத்தோடு முடிந்துவிடக்கூடாது.
முதலில் காவல்நிலையத்தில் காவல்துறையினரே கட்டப்பஞ்சாயத்து நடத்துவதை முதலமைச்சர் ஜெயலலிதா தடுக்க வேண்டும். அப்படி தடுத்தால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நன்றாக இருக்கும். அது நடக்கவில்லையெனில், இந்த ஆட்சி மாற்றத்தால் எந்தப் பயனும் இருக்காது.
2001-06 அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் ரவுகளின் சாம்ராஜ்ஜியத்தை ஒழித்த பெருமை ஜெயலலிதாவை சேரும். அந்த அளவுக்கு ரவுடிகளுக்கு பயம் இருந்தது.
ரவுடிகளை அரசியல்வாதிகளே வளர்த்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் எப்படி மக்கள் அச்சமின்றி வாழ வேண்டும் என்பதே பலரது கேள்வியாக இருக்கிறது.
அசைக்க முடியாத பெரும்பான்மையுடன் அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான அரசு அமைந்துள்ளது. அதற்காக தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் முதலமைச்சர். மக்களின் எதிர்பார்பை புரிந்து, அதனை நிறைவேற்றினால் போதும், நிம்மதி பெருமூச்சுடன் மக்கள் வாழ்வார்கள்.
தமிழகம் அச்சுறுத்தலற்ற அமைதி மாநிலமாகட்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக