தமிழக காவல் துறை உயர் அதிகாரிகள் 25 பேரை துறை மாற்றம், இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சட்டம்-ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி ஆக ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறை புதிய ஏடிஜிபி ஆக ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உளவுத் துறையில் இருந்து ஜா·பர் சேட் மண்டபம் அகதிகள் முகாம் ஏடிஜிபி ஆக மாற்றப்பட்டுள்ளார்.
புறநகர் காவல் ஆணையராக இருந்த ஜாங்கிட் காவலர் தேர்வு ஆணையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி ஆக இருந்த ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு மின்வாரிய விஜிலன்ஸ் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை சட்டம்-ஒழுங்கு கூடுதல் ஆணையராக தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மண்டல காவல் ஆணையர் சிவனாண்டி போக்குவரத்து காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
http://tamil.webdunia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக