சிறீலங்கா அரசுகள் இந்திய அரசுடன் இணைந்து ஆறுதசாப்தங்களுக்கு மேலாக மேற்கொண்டுவரும் இனப்படுகொலையின் உச்ச அவலங்கள் இடம்பெற்ற நாளின் இரண்டாவது ஆண்டு நினைவு இன்று (18). சிங்கள அரசும் அதன் படைகளும் வார்த்தைகளால் வடிக்க முடியாத கொடூரங்களை மேற்கொண்டு80,000 தொடக்கம் 145,000 தமிழ் மக்களை படுகொலை செய்த தினம் இன்று. குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள், நோயாளிகள், காயமடைந்தவர்கள் என்ற பாகுபாடு பார்க்காது தனது இனவெறியின் வக்கிரத்தை தீர்த்துக்கொண்டன சிங்கள இனவாதப் பேய்கள். அதனை அனைத்துலகசமூகம் கைகட்டி வேடிக்கை பார்த்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக