2ஜி வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி., கனிமொழி டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது தந்தையும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி, இன்று டில்லி திகார் சிறையில் இருக்கும் கனிமொழியை சந்திக்கிறார். காலை 11 மணிக்கு விமானம் மூலம் டில்லி வருகிறார். இருப்பினும் மாலை 5 மணிக்கு தான் கனிமொழியை சிறையில் கருணாநிதி சந்திக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கருணாநிதியுடன் அவரது மகனும் மத்திய அமைச்சருமான அழகிரியும் டில்லி செல்கிறார். ஸ்டாலின் இன்று மாலை டில்லி செல்வார் என தெரிகிறது. 2ஜி வழக்கில் கனிமொழி கடந்த வெள்ளிக் கிழமையன்று கைது செய்யப்பட்டார். அவர் தாக்கல் செய்திருந்த ஜாமின் மனு டில்லி பட்டியாலா சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு கனிமொழி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக