செவ்வாய், 10 மே, 2011

நீதிமன்றத்தில் ஆஜர்: கனிமொழிக்கு 2 நாள் விலக்கு

கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து 2 நாட்களுக்கு விலக்கு அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

2ஜி ஊழ வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் சிபிஐ தன்னைக் கைது செய்யாமல் இருக்க கனிமொழி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த சிபிஐ நீதிமன்றம்,அதன்மீதான தீர்ப்பை மே 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதுவரை கனிமொழி தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி கனிமொழியும், சினியுக் பிலிம்ஸ் இயக்குநர் கரீம் மொரானியும் நீதிமன்றத்தில் இன்று ஆஜராயினர்.

கனிமொழி தமது கணவர் அரவிந்தனுடன் நீதிமன்றம் வந்தார். அவர்களுடன் தூத்துக்குடி எம்.பி .ஜெயதுரை உடன் வந்திருந்தார்.

இந்நிலையில் சென்னை வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டியதிருப்பதால், மே 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்களுக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து தமக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கனிமொழி தாக்கல் செய்த மனுவை ஏற்று, மேற்கூறிய இரு தினங்களிலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திடுவதில் இருந்து விலக்கு அளித்து, நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

http://tamil.webdunia.com

கருத்துகள் இல்லை: