சனி, 7 மே, 2011

கனிமொழி போலி ஆவணங்கள் தயாரித்தார் : சி.பி.ஐ

கலைஞர் டி.வி., க்கு 214 கோடி ரூபாய் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பாக கனிமொழி போலி ஆவணங்களை தயார் செய்துள்ளதாக கோர்ட்டில் சி.பி.ஐ., வக்கீல் தெரிவித்தார். கலைஞர் டி.வி.,க்கு பெருந் தொகை பரிவர்த்தனை செய்யப்பட்டதற்கு கனிமொழி தான் காரணம் என அவர் தெரிவித்தார்.

2ஜி ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் எம்.டி.,ஷாகித் பால்வாவிடம் இருந்து பல்வேறு ககிளை நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட பணத்துக்கு முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை. பிரச்னைகள் பூதாகரமான பின்னரே கனிமொழி பண பரிவர்த்தனை குறித்து போலி ஆவணங்களை தயாரித்துள்ளார். பண பரிவர்த்தனை குறித்து சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் உண்மையானது என நம்ப எந்த முகாந்தரமும் இல்லை.

மேலும் கலைஞர் டி.வி., யை நிறுவுவது தொடர்பாக கனிமொழி தொடர்ந்து மாஜிஅமைச்சர் ராஜாவை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். கலைஞர் டி.வி.,யின் மூளையாக கனிமொழி செயல்பட்டிருக்கிறார். இவ்வாறு வக்கீல் தெரிவித்தார்.
http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: