புதன், 11 மே, 2011

ஒசாமா மகன் எங்கே : புதிய சர்ச்சை

பாகிஸ்தானின் அபோதாபாத் மாளிகையில் கடந்த 2ம் தேதி மேற்கொண்ட அதிரடி வேட்டையில் ஒசாமா பின் லாடன் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது ஒசாமாவின் மூத்த மகன் ஹாலித்தும் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் ஒசாமாவின் இளைய மகன் ஹம்சா காணாமல் போய் விட்டதாக பாகிஸ்தான் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்கா ஒசாமா வேட்டைக்குப் பிறகு ஒசாமாவின் உடலை மட்டும் எடுத்துச் சென்றதா இல்லை, அந்த சடலத்துடன் ஒசாமாவின் இளைய மகனையும் கைது செய்து சென்றதா என கேள்வி எழுந்துள்ளது. ஒசாமாவுக்கு 5 மனைவிகள். அவருக்‌கு மொத்தம் 16 குழந்தைகள் இருக்கின்றனர்.
http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: