பாகிஸ் தானின் அபோதாபாத்பகுதியில் அமெரிக்க படைகளால் நேற்று முன்தினம் சுட்டுக்கொல்லப்பட்ட பின்லாடனின்இறுதிச்சடங்கில் நடந்தது:உடம்பை சுத்தம் செய்தல்பின்லாடனின் உடல் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்படும் போதே சுத்தம் செய்யப்பட்டது. உடலை மூடுதல்ஒசாமாவின் உடல் முழுமையான வெள்ளைத் துணியால்மூடப்பட்டது. இறுதி பிரார்த்தனைஅமெரிக்க அதிகாரி ஒருவர்ஆங்கிலத்தில் சடங்குகளுக்கான வரிகளை வாசித்தார். அதைமற்றொருவர் அரபு மொழியில் மொழி பெயர்த்தார் என்றுஅமெரிக்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அடக்கம்பின்லாடனின் உடலை கனமான பைக்குள் வைத்து மூடி, அதை மரப்பலகையில் கிடத்தி ஆழ்கடலின் நடுவில் இறக்கினர். நேரம்பின்லாடனின் உடல், அவர் இறந்து 10 மணி நேரத்திற்கு பின், அமெரிக்க நேரப்படி திங்கள் அதிகாலை 2 மணிக்கு (பாகிஸ்தான் நேரப்படி காலை 11மணி) அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடையாளம் காணப்பட்ட விதம்அமெரிக்க மூத்த உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியது:*அமெரிக்க சிறப்பு அதிரடி படை வீரர்கள், பின்லாடன் உடலை அடையாளம் கண்டனர். அவருடைய மனைவிகளில்ஒருவரை அழைத்து வந்து உறுதி செய்தனர்.* "பேஷியல் ரெக்கனிஷன்' என்ற தொழில்நுட்பத்தால்பின்லாடனின் போட்டோவுடன் ஒப்பிட்டு அடையாளம் கண்டனர். * பின்லாடனின் உறவினர்களிடமிருந்து ஏற்கனவே பெறப்பட்ட டி.என்.ஏ.,மாதிரிகளிடம் ஒப்பிட்டு பார்க்கையில், இறந்தது பின்லாடன் தான் என்று 99.9 சதவீதம் உறுதி செய்யப்பட்டது.
http://www.dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக