சட்டசபைத் தேர்தல் முடிவடைந்த பின்னர் கொடநாடு எஸ்டேட்டுக்கு ஓய்வெடுப்பதற்காக சென்றிருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாளை சென்னை திரும்புகிறார்.
சட்டசபைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்த ஜெயலலிதா தேர்தல் முடிவடைந்ததும் ஓய்வுக்காக கொடநாடு சென்றார்.
இதேபோல திமுக முக்கியத் தலைவர்களில் ஒருவரான மு.க.அழகிரி கொடைக்கானலிலும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மனைவி, மகன், மகள்கள், பேரக் குழந்தைகள் என பெரும் பட்டாளத்துடன் ஏற்காட்டிலும் ஓய்வெடுத்தனர்.
இந்த நிலையில் கொடநாடு சென்றிருந்த ஜெயலலிதா நாளை சென்னை திரும்புகிறார்.
கொடநாடு ஓய்வின்போது அமைச்சர் பட்டியலை அவர் தயாரித்து முடித்து விட்டதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. அடுத்து அதிமுகதான் ஆட்சியமைக்கும் என்று ஜெயலலிதா உறுதியாக நம்புவதாகவும், இதையடுத்து அமைச்சர்கள் பட்டியலை தயாரித்து முடித்து விட்டதாகவும் கட்சி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
நாளை சென்னை திரும்பும் ஜெயலலிதாவுக்கு விமான நிலையத்தில் அதிமுகவினர் தடபுடலான வரவேற்பு தர காத்துள்ளனர்.
http://thatstamil.oneindia.in/news
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக