ஞாயிறு, 8 மே, 2011

இலங்கை மீது ஐரோப்பிய வர்த்தக தடை !: ராஜபக்ச அச்சம்

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதை காரணம் காட்டி இலங்கை மீது ஐரோப்பிய நாடாளுமன்றம் வர்த்தக தடை கொண்டு வரக்கூடும் என்று அதிபர் ராஜபக்ச அச்சமடைந்துள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய நாடர்ளுமன்றம் வரும் வியாழக்கிழமை அவசர விவாதம் ஒன்றை நடத்தவுள்ளது.

இந்த விவாதத்தை நடத்த வேண்டும் என்று ஐரோப்பிய நாடர்ளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 50 உறுப்பினர்களை கொண்ட கிரீன் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது.

பான் கீ மூனின் நிபுணர் குழு, இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கையை வெளியிட்ட பின்னரே கிரீன் கட்சி தமது கோரிக்கையை முன்வைத்தது.

இந்நிலையில் இந்த அவசர விவாதம் மூலம் ஐரோப்பிய நாடர்ளுமன்றம் இலங்கைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று இலங்கையின் அயலுறவுத் துறை அமைச்சக தரப்புகள் அச்சம் வெளியிட்டுள்ளன.

பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கையின்படி சுயாதீன சர்வதேச விசாரணைகளை மேறகொள்ளுமாறு ஐரோப்பிய நாடாளுமன்ற வலியுறுத்தக்கூடும்.

இதனடிப்படையில் இலங்கை மீது ஐரோப்பிய நாடுகள், வர்த்தக தடையை கொண்டு வரலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை ரத்துச் செய்வதற்கான அவசர விவாதத்தை கடந்த வருடம் மே மாதம் நடத்திய பின்னர், ஐரோப்பிய நாடாளுமன்றம் முதல் தடவையாக இலங்கை தொடர்பில் விவாதத்தை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.webdunia.com/

கருத்துகள் இல்லை: