ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பிலான எவ்வித பேச்சுவார்த்தைகளி லும் அரசாங்கம் பங்கேற்கக் கூடாது என தேசிய சிங்கள அமைப்புக்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் நடைபெறும் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் அரசாங்கம் கலந்துகொள்ளக் கூடாது என சுட்டிக் காட் டப்பட்டுள்ளது.
தேச அபிமான அமைப்பு, தேசப்பற்றுடைய பிக்குகள் முன்னணி, இலங்கை தேசிய சங்கசம்மேளனம், தேசப்பற்றுடைய தேசிய இயக்கம், மனேல் மலர் அமைப்பு, தவலம அமைப்பு, சிந்தனை அமைப்பு, இலங்கையை காப்போம் அமைப்பு ஆகிய அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன.
இந்த அறிக்கை ஐக்கிய நாடுகள் அமைப்பின் அங்கீகாரத்துடன் தயாரிக்கப் படவில்லை. இந்த அறிக்கை நாட்டின் உள் விவகாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமை யப்பெற்றுள்ளது.
இலங்கை அரசாங்கம் கடந்த காலங்களில் இந்த அமைப்புகளுடன் ரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தியமை வருந்தத் தக்கது. எதிர்காலத்தில் இவ்வாறான சந்திப்புக்களை நடத்தக் கூடாது என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக