திங்கள், 9 மே, 2011

மே 2009ம் ஆண்டு ஐ.நா மனித உரிமைச் சபைத் தீர்மானத்தினை மீள்பரிசீலனைசெய்தல்

ஐ.நா வல்லுநர்கள் குழுவின் அறிக்கை – புவிசார் அரசியலில் ஈழ விடுதலைப் போராட்டம்' என்ற தலைப்பிலமைந்த கருத்தமர்வு ஒன்று கடந்த சனியன்று சென்னை லயோலா கல்லூரியில் இடம்பெற்றிருந்தது. தமிழர்களைக் காப்போம் என்ற அமைப்பு இந்த மாநாட்டினை ஒழுங்கு செய்திருந்தது.

பெங்களூரைச் சேர்ந்த அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக பேராசியர் கலாந்தி போல் நியூமன் அவர்கள் ஐ.நா வல்லுநர் குழுவினால் வெளியிடப்பட்ட சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கையின் முக்கிய அம்சங்களை எடுத்துவிளக்கினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மணிவண்ணன் இந்த விடயத்தில் உள்ள அரசியல் பிரச்சினைகள் தொடர்பாகக் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இப்பிராந்தியத்தில் தமக்கான திட்டங்களுடன் செயற்படும் பல்வேறு தரப்பினர் குறித்து தமிழர்களைக் காப்போம் என்ற இணையத்தைச் சேர்ந்த செந்தில் விரிவாகக் கருத்துக்களை முன்வைத்தார். தமிழ் மக்களை மிகவும் சிறுபான்மையினராக்கி ஒற்றையாட்சி முறைமையை உருவாக்குவதற்காக சிறிலங்கா அரசு தமிழ் இனத்தை அழிப்பதற்கான கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.

தனது சொந்த நலன்களுக்காக ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு விரும்பியது. ஐக்கிய அமெரிக்காவினைப் பொறுத்தவரையில் திருகோணமலைத் துறைமுகம் அமெரிக்கர்களைக் கவரும் ஒன்றாக இனியில்லை. தனது கடல்வழி எண்ணெய் விநியோகப் பாதையினைப் பாதுகாப்பதற்கும் சிறிலங்கா மீதான இந்தியாவினது செல்வாக்கினைக் கட்டுப்படுத்துவதற்குமாக சிறிலங்காவினது தென்முறையில் சீனா தனக்கானதொரு தளத்தினை அமைக்க விரும்புகிறது.

நல்லிணக்கம் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஆகியவற்றைக் கொண்டுவருவதற்கு விரும்பும் இந்தியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வலுப்படுத்த விரும்புகிறது. ஈழமக்கள் மோசமானதொரு நிலையில் இருக்கும் சூழமைவில் புவிசார் அரசியல் நிலைமைகளைத் திரு செந்தில் விளக்கினார்.

ஐ.நா வல்லுநர்கள் குழுவின் போர்க் குற்ற அறிக்கையில் தவறவிடப்பட்ட குறிப்பிட்ட சில அம்சங்கள் தொடர்பில் தமிழர்களைப் பாதுகாப்போம் என்ற குழுமத்தின் உறுப்பினர் பொன்ராஜ் விபரித்தார்.

சிறிலங்கா தொடர்பான டப்பளின் தீர்ப்பாயத்தில் சிறிலங்காவில் இடம்பெற்றது இனக்கொலையே எனக் கூறப்பட்டிருந்தபோதும் ஐ.நா வல்லுநர்கள் குழுவின் அறிக்கை இதுவிடயம் தொடர்பாக மௌனம் காக்கிறது என அவர் கூட்டிக் காட்டினார்.

ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மாத்திரமே வல்லுநர்கள் குழுவின் அறிக்கை கவனம் செலுத்துகிறது என்றார் அவர். இலங்கைத் தீவினது சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் 'பொதுவான தாயகம்' என்றே இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் சிறிலங்காவில் இரண்டு இனங்களைக் கொண்ட தனித்தனியான இரண்டு தேசங்கள் இருக்கிறது என்ற உண்மையினை ஐ.நா அறிக்கை மறைமுகமாக மறுக்கிறது என்றார் அவர்.

பான் கீ மூனின் தனிப்பட்ட ஆலோசகராகச் செயற்பட்ட விஜய் நம்பியார் 'வெள்ளைக்கொடி' விவகாரத்தில் வகித்த பங்கு தொடர்பாக வல்லுநர்கள் குழுவின் அறிக்கையில் எந்த விபரங்களுமில்லை. விஜய் நம்பியார் வழங்கிய உறுதிமொழியினையடுத்து வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த நடேசன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பின்னர் போர் நெறிமுறைகளுக்கு முரணாக சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.

விஜய் நம்பியாரின் சகோதரன் சிறிலங்கா இராணுவத்தின் ஆலோசகராகச் செயற்பட்டவர். இது தோல்வியில் முடிந்த ஐ.நாவினால் உத்தியோகப்பற்றற்ற வகையில் ஒழுங்குசெய்யப்பட்ட சரணடைந்தல் நடவடிக்கை தொடர்பில் சந்தேகத்தினை எழுப்புகிறது. இதுவிடயம் தொடர்பாக இனர் சிற்றி பிறஸ் பன் கீ மூனைக் கோரியபோது அவர் மௌனமாக இருந்திருக்கிறார்.

ஐ.நா வல்லுநர்கள் குழுவின் அறிக்கை தொடர்பான சந்தேகத்தினை வெளிப்படுத்தும் மேற்குறித்த இந்தக் கருத்துக்களை திரு பொன்ராஜ் வெளியிட்டிருந்தார். ஐ.நா வல்லுநர்கள் குழுவின் அங்கத்தவர்களின் கேள்விக்கிடமற்ற ஒருமைப்பாடு தொடர்பாக இந்தக் கருத்தமர்வினைத் தலைமையேற்று நடாத்தியிருந்த கலாநிதி போல் நியூமன் ஏற்கனவே விளக்கியிருந்தார். வல்லுநர்கள் குழுவின் அறிக்கையானது முன்னோக்கிச்சிந்திக்கும் ஒன்று என திரு மணிவண்ணன் வரவேற்றிருந்தார்.

லயோலா கல்லூரியில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலின்போது சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அடுத்ததாக என்னசெய்யமுடியும் எனத் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு கலாநிதி போல் நியூமன் பதிலளித்தார்.

மே 2009ம் ஆண்டு ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என அங்கத்துவ நாடுகளிடத்தில் எழுத்துமூல வேண்டுகையினை விடுக்குமாறு கலாநிதி போல் அங்கு கலந்துகொண்டவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

ஐ.நா வல்லுநர்கள் குழு இந்த நடவடிக்கையினைத் தனது அறிக்கையில் பரிந்துரைத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. குறித்த இந்த விடயத்தினை மேற்குக்கும் உலகின் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினையாக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கருதியமையினால் மனித உரிமைச் சபையில் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானம் சிறிலங்காவிற்குச் சார்பாக மாறியிருந்தது. ஆதலினால் கியூபா உள்ளிட்ட இலத்தீன் அமெரிக்கா நாடுகள் சிறிலங்காவிற்குச் சார்பாகவே வாக்களித்திருந்தன.

தற்போது சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா வல்லுநர்கள் குழுவின் அறிக்கை அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கப்பெற்றிருப்பதோடு சிறிலங்காவில் நிலவுகின்ற உண்மையான நிலைமைகள் தொடர்பாக இந்த நாடுகள் தற்போது நன்கறியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை மீளாய்வு செய்வதோடு அந்தத் தீர்மானத்தினை நிறைவேற்றப்படுமிடத்து சிறிலங்காவிற்கு எதிரான அனைத்துலக போர்க்குற்றவிசாரணைகள் சாத்தியமானதொன்றாக மாறும்.

மே 2009ம் ஆண்டு மனித உரிமைச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்னமானத்தின்போது கீழ்க்காணும் நாடுகள் அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தன: அங்கோலா, அசேர்பஜன், பகரெயின், பங்களாதேஸ், பொலீவியா, பிறேசில், பேர்கினியா பசோ, கமறோன், சீனா, கியூபா, எகிப்து, கானா, இந்தியா, இந்தோநேசியா, ஜோர்தான், மடகஸ்கர், மலேசியா, நிக்கரகுவா, பாகிஸ்தான், பிலிப்பைன், கட்டார், ரசியா, சவுதி அரேபியா, செனகல், தென் ஆபிரிக்கா, உருகுவே மற்றும் சிம்பாவே ஆகிய 29 நாடுகளே அவை.

பொஸ்னியா மற்றும் கொர்சகோவினா, கனடா, சிலி, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, மெக்சிகோ, நெதல்லாந்து, செல்வாக்கியா, செல்வேனியா, சுவிஸ்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய 12 நாடுகளும் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்திருந்தன.

ஆஜன்ரீனா, காபன், யப்பான், மொறிசியஸ், கொறியா மற்றும் உக்ரேய்ன் ஆகிய ஆறு நாடுகளும் இந்தத் தீர்மானம் தொடர்பான வாக்களிப்பில் பங்குகொள்ளவில்லை.

[The following 29 countries voted in favour of the resolution in May 2009 :Angola, Azerbaijan, Bahrain, Bangladesh, Bolivia, Brazil, Burkina Faso, Cameroon, China, Cuba, Djibouti, Egypt, Ghana, India, Indonesia, Jordan, Madagascar, Malaysia, Nicaragua, Nigeria, Pakistan, Philippines, Qatar, Russian Federation, Saudi Arabia, Senegal, South Africa, Uruguay, and Zambia.
The following 12 countries voted against the resolution : Bosnia and Herzegovina, Canada, Chile, France, Germany, Italy, Mexico, Netherlands, Slovakia, Slovenia, Switzerland, and United Kingdom.
There were 6 Abstentions : Argentina, Gabon, Japan, Mauritius, Republic of Korea, and Ukraine.]

ஐ.நா வல்லுநர்கள் குழுவின் அறிக்கை வெளிவந்த பின்னர் ரசியா மற்றும் சீனா ஆகியன அதனை நிராகரித்திருந்தன. கியூபா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் விடயத்தில் ஆக்கபூர்வமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. சிறிலங்காவினது மனித உரிமை நிலைமைகளின் மோசமான தன்மையினை மேலும் 10 நாடுகள் உணரத் தலைப்படுவதோடு தங்களது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளுமெனில் சிறிலங்காவில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பான அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகள் இடம்பெறுவதற்காக வாய்ப்புகள் ஏற்படும்.

சிறிலங்காவினது தமிழர்களுக்கு எதிராக இந்தியாவின் பிராமணர்கள் செயற்படுவது தொடர்பாக கோபத்துடன்கூடிய கேள்விகள் இந்த மாநாட்டின் போது தொடுக்கப்பட்டிருந்தன. இந்து பத்திரிகையின் என். ராம் தொடர்பாக இவர்கள் எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்தனர்.

இந்த மாநாட்டின் ஆரம்பத்தின் சிறிலங்கா இராணுவத்தினால் புரியப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக காட்சிகளை உள்ளிடக்கிய 'முல்லைத்தீவு சாகா' என்ற விபரணப்பட்டம் திரையிடப்பட்டது. பெருந்திரளானோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

செய்தி வழிமூலம்: TruthDive - By Guest Writer Sidharth Goutham Sundar
http://www.puthinappalakai.com

கருத்துகள் இல்லை: