புதன், 11 மே, 2011

ஜெ., வெற்றிக்காக"கோ' தானம்

ஜெயலலிதா, "ஸ்ரீரங்கத்தில் வெற்றி பெற வேண்டும்; மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டும்' என, பல்வேறு பரிகாரங்களை, அ.தி.மு.க., வினர் செய்து வருகின்றனர்.அவ்வகையில், திருச்சி மாநகர் மாவட்ட இளைஞரணி சார்பில், மாவட்ட செயலர் பத்மநாபன், கன்றுடன் கூடிய பசுவை, ரங்கநாத ஸ்வாமி கோவிலுக்கு, "கோ' தானம் செய்தார்.ஜெயலலிதா பெயரில், "கோ' தானம் வழங்கப்பட்டதாக, கோவில் நிர்வாகத்திடம் ரசீதும் பெறப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் திருச்சி மாவட்ட முக்கிய, அ.தி.மு.க., நிர்வாகிகள், இந்த நிகழ்ச்சியிலும், தொடர்ந்து நடந்த விசேஷ பூஜையிலும் பங்கேற்றனர்.
http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: