ஒசாமா பின்லேடனை அமெரிக்கா இராணுவத்தினர் சுட்டுக் கொன்றது மிகவும்கொடூரமான செயல் என்று அவரது மகன் உமர் பின்லேடன் கூறியுள்ளார்.
ஒசாமாவின் 4வது மகனான அவர், அமெரிக்கா நாளிதழான நியூயார்க் டைம்ஸ்க்கு அளித்துள்ள அறிக்கை ஒன்றில், அல் காய்தா தலைவரான ஒசாமா கொல்லப்பட்டது குறித்த விவரத்தை தமது குடும்பத்தினர் அறிந்து கொள்ள விரும்புவதாகவும் உமர் கூறியுள்ளார்.
தமது தந்தையின் செயல்பாடுகள் பிடிக்காததால் அவரை விட்டு விலகி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்ட விதிகளை மீறி ஒசாமா பின்லேடன் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும், உலக மக்களுக்கு அந்த உண்மை மறைக்கப்பட்டு இருப்பதாகவும் உமர் குற்றம்சாற்றியுள்ளார்.
தூக்கிலிடப்பட்ட ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன், செர்பிய அதிபர் மிலோ செபி ஆகியோர் கூட விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டதாகவும் உமர் கூறியுள்ளார்.
ஒசாமாவின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதும், தங்களது குடும்பத்தின் உரிமையை பறித்த செயல் என்றும் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு முரணானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://tamil.webdunia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக