செவ்வாய், 10 மே, 2011

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரவு

சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கைத் தலைவர் கதரின் அஸ்ரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

போரின்போது, அனைத்துலக மனிதஉரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் இடம்பெறுள்ளதற்கான நம்பகமாக குற்றச்சாட்டுகள் இருப்பதாக ஐ.நாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது ஒரு முக்கியமான முன்னேற்றம்.

மோசமான குற்றச்சாட்டுகள் குறித்து சுதந்திரமான முறையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நல்லிணக்க முயற்சிகளை வலுப்படுத்துவதுடன், சிறிலங்காவில் இறுதியான சமாதானத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.

http://www.puthinappalakai.com/

சிறிலங்கா அரசாங்கம் இந்த அறிக்கையின் ஆக்கபூர்வமான நோக்கங்களை உணர்ந்து கொள்ளும் என்று ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக நம்புகிறது.

அத்துடன் அறிக்கையின் உள்ளடக்கங்கள் குறித்து ஐ.நா பொதுச்செயலருடன் சிறிலங்கா அரசு தொடர்பு கொள்வதையும் ஊக்குவிக்கிறது.“ என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: