செவ்வாய், 10 மே, 2011

அனைத்துலகுடன் ஒத்துழைக்க வேண்டும்- சிறிலங்காவுக்கு பிரான்ஸ் அழுத்தம்

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பிரான்ஸ் வலியுறுத்திக் கூறியுள்ளது.

பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஐ.நா. பொதுச்செயலர் நியமித்த நிபுணர்குழுவின் பரிந்துரைகளுக்கு பிரான்ஸ் பூரண ஆதரவை வழங்கும்.

நிபுணர்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் சிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் அனைத்துலகச் சட்டமீறல்கள் தொடர்பாக விசாரிக்க சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

கடந்த 2009ம் ஆண்டும் இதையே நாம் வலியுறுத்தியுள்ளோம்.

ஐ.நா பொதுச்செயலரின் நிபுணர்குழுவைப் போன்றே சிறிலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவையும் பிரான்ஸ் அரசாங்கம் முக்கியத்துவம் மிக்கதாகவே கருதுகிறது.

தவறுகளுக்கு எதிரான நடவடிக்கையானது எந்வொரு நாட்டுக்கும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான உண்மையான கொள்கைகளில் முக்கியமானதொரு காரணியாக உள்ளது.

இந்த விடயத்தில் சிறிலங்கா அதிகாரிகள் தமது பொறுப்பை நடைமுறைப்படுத்த பிரான்ஸ் ஊக்கமளிக்கிறது.

அதேவேளை, சிறிலங்கா அதிகாரிகளை நாம், அனைத்துலக சமூகத்துக்கு ஆக்கபூர்வமான முறையில் ஒத்துழைப்பு வழக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றும் அந்த அறிக்கையில் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
http://www.puthinappalakai.com

கருத்துகள் இல்லை: