செவ்வாய், 10 மே, 2011

உலகில் மிகஉயரமான புத்தர்சிலைக்கு சிறிலங்காவில் அடிக்கல்

உலகில் மிகஉயரமான புத்தர்சிலையை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 10.06 மணியளவில் அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.

குடாகெலெரேவ சிறிசாரங்கராமய குருந்தன்குளம என்ற இடத்தில்- 522 அடி உயரமான சமாதிநிலைப் புத்தர்சிலை அமைக்கப்படவுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் உயிரிழந்த சிறிலங்கா படையினர் நினைவாகவே – உலகின் மிகப்பெரிய புத்தர்சிலையை சிறிலங்கா அரசாங்கம் அமைக்கவுள்ளது.

இந்த நிகழ்வில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

முன்னதாக இந்தப் புத்தர் சிலையை வவுனியாவில் நிறுவப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது.

பௌத்தர்கள் அதிகம் வசிக்காத வவுனியாவில் இந்தப் புத்தர்சிலை அமைக்கப்படுவதற்கு தமிழர்தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து அனுராதபுரவில் இந்தப் புத்தர் சிலையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
http://www.puthinappalakai.com

கருத்துகள் இல்லை: