தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தவறு செய்திருந்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஹனுமந்தராவ் தெரிவித்துள்ளார்.
திருமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு எதிரானது என்றும் அதனால்தான் அண்ணா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரது கோரிக்கையையும் நிறைவேற்றியது என்றும் கூறினார்.
காமன்வெல்த் போட்டியில் ஊழல் நடைபெற்றதால் கல்மாடி கைது செய்யப்பட்டார் என்று கூறிய ஹனுமந்தராவ், 2 ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்றும் தற்போது நீதிமன்ற விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ள தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தவறு செய்திருந்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார் என்றும் கூறினார்.
அதே போல அதிக அளவில் சொத்து வைத்துள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி மீதும் வருங்காலத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் ஹனுமந்தராவ் கூறினார்.
http://tamil.webdunia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக