சிறிலங்காவின் இடம்பெற்ற போர்க்குற்றங்கள்- ஐ.நாவின் அறிக்கையும், அதன் சம்பந்தப்படுத்தல்களும்” என்ற தலைப்பிலான கருத்தரங்கு ஒன்று புதுடெல்லியில் நாளை நடைபெறவுள்ளது.
புதுடெல்லி உச்சநீதிமன்றத்துக்கு எதிரேயுள்ள கிருஸ்ணமேனன் பவானில் நாளை பிற்பகல் 2.30 மணி தொடக்கம் 7.30 மணிவரை நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கின் தொடக்கத்தில் ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
அதையடுத்து சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான காணொலிப் பதிவுகளும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இதையடுத்து மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள நடைபெறவுள்ள முதலாவது அமர்வில் எழுத்தாளர் அருந்ததி றோய், புதுடெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் பிரதம நீதிபதி ரஜிந்தர் சச்சார், மும்பை நீதிபதி சுரேஸ், பஞ்சாப் நீதிபதி அஜித்சிங் பாஜின்ஸ், புதுடெல்லிப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.கீலானி, உலக சீக்கிய பேரவையின் பேராசிரியர் ஜக்மோகன் சிங், பேராசிரியர் மணிவண்ணன், ஊடகவியலாளர் சத்யா சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கவுள்ளனர்.
மாலை 5.30 தொடக்கம் 7.30 வரை நடைபெறவுள்ள இரண்டாவது அமர்வில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் டி.ராஜா, ராஸ்டிரீய ஜனதா தளத்தின தலைவர் லல்லு பிரசாத் யாதவ், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுவாப்பன் முகர்ஜி, சமாஜ்வாடி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மீரட் சேகர், பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அம்பேத் ராஜன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
பொது அமர்வான இந்தக் கருத்தரங்கில் அனைவரையும் பங்கேற்குமாறு அமைப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
http://www.puthinappalakai.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக