திங்கள், 13 ஜூன், 2011

25 நாள் ஜெயிலில் இருந்தாச்சு : இன்றாவது கனிமொழிக்கு ஜாமின் கிடைக்குமா?

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தி.மு.க., எம்.பி., கனிமொழியின் ஜாமின் மனு மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடக்கிறது. கடந்த 20 ம் தேதி முதல் ஜெயிலி்ல் அடைக்கப்பட்டிருக்கும் கனி‌மொழி இன்றுடன் 25 நாள் அவஸ்தை பட்டுள்ளார். இன்றாவது ஜாமின் கிடைக்குமா என்ற எதிர்பர்ப்புகளுடன் தி.மு.க., வின் முக்கியப்பபுள்ளிகள் டில்லியில் முகாமிட்டுள்ளனர்.


ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற டி.பி.ரியாலிட்டி நிறுவனம், தன் துணை நிறுவனங்கள் மூலம், பிரதிபலனாக 200 கோடி ரூபாயை கலைஞர் "டிவி'க்கு வழங்கியது. இது குறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ., இரண்டாவது குற்றப்பத்திரிகையில், கலைஞர் "டிவி' பங்குதாரர்களான தி.மு.க., எம்.பி., கனிமொழி, நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரை சேர்த்தது. இதை தொடர்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். கடந்த மாதம் 20ம் தேதி முதல் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

கனிமொழியும், சரத்குமாரும் ஜாமின் கோரி, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். "இருவரையும் ஜாமினில் விடுவித்தால் சாட்சிகளை கலைப்பதற்கு வாய்ப்பு உள்ளது' எனக் கூறி, நீதிபதி ஜாமின் வழங்க மறுத்தார்.இதை தொடர்ந்து கனிமொழியும், சரத்குமாரும் ஜாமின் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இதன் மீதான விசாரணை இன்று நடக்கிறது.
தற்போது சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறையாக உள்ளது.விடுமுறை கால கோர்ட் நீதிபதி பி.எஸ். சவுகான், ஸ்வாட்ந்தர் குமார் தலைமையிலான பெஞ்ச் விசாரிக்க உள்ளது. சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்கும் வழக்குகளில், கனிமொழியின் மனு, 16வது இடத்தில் உள்ளது.

http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: