ஞாயிறு, 12 ஜூன், 2011

ஜெயலலிதா-சோனியா சந்திப்பு நடைபெறுமா?-பரபரப்பில் டெல்லி

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா நாளை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவை சந்திப்பார் என்று டெல்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

ஜெயலலிதாவின் டெல்லி பயணம் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை பிற்பகல் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

14-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, தமிழகம் தொடர்பான முக்கிய விஷயங்கள் குறித்து அவர் விவாதிக்கிறார். அன்று மாலையே முதல்வர் ஜெயலலிதா சென்னை திரும்புகிறார் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஜெயலலிதா முதன்முறையாக டெல்லி சென்று பிரதமரை சந்திக்க உள்ளார்.

அப்போது இலங்கை அரசுக்கு எதிரான பொரளாதார தடை, மத்திய மின் தொகுப்பில் இருந்து ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டுதல், கச்சத்தீவை மீட்க வேண்டுதல், தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அவற்றிற்கான நிதி உதவி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.

மேலும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை முதல்வர் ஜெயலலிதா மரியாதை நிமித்தமாக சந்திப்பார் என்று டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தகவல் பரவி வருகின்றது.
http://thatstamil.oneindia.in

கருத்துகள் இல்லை: