ஞாயிறு, 12 ஜூன், 2011

முதல்வர் வீட்டிற்குள் புகுந்த மர்மப்பெண் யார்?

முதல்வர் ஜெயலலிதா வீட்டிற்குள், இரவு நேரத்தில் புகுந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. அவர், போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.சென்னை, போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதா வீட்டிற்குள், மர்மப் பெண் ஒருவர் நேற்று இரவு, செல்ல முயன்றார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. போலீசார், அப்பெண்ணை பிடித்து தேனாம்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், குரோம்பேட்டை, ராதா நகரைச் சேர்ந்த ராஜமாணிக்கத்தின் மகள் மேகலா, 21, என தெரிந்தது. கணவர் கைவிட்டதால் தனியாக இருப்பதாகவும், ஜெயலலிதாவிடம் புகார் கொடுத்தால், குடும்பத்துடன் சேர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில், அவரைச் சந்திக்க வந்ததாகவும் கூறினார்.அவர், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போலவும் காணப்பட்டார். பெற்றோரை வரவழைத்த போலீசார், மேகலாவை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: