புதன், 15 ஜூன், 2011

சிபிஐ இயக்குனருடன் நீரா ராடியா திடீர் சந்திப்பு

சிபிஐ இயக்குனர் ஏ.பி. சிங்கை அரசியல் தரகரும், 2ஜி வழக்கின் சாட்சிகளில் ஒருவருமான நீரா ராடியா இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

2ஜி வழக்கில், இரண்டாவது துணை குற்றப்பத்திரிகையை ஜூலை முதல் வாரத்தில் சிபிஐ தாக்கல் செய்யவுள்ளது.

இந்நிலையில்,2ஜி விவகாரத்தில் தொடர்புடைய நீரா ராடியா, சிபிஐ இயக்குனரை இன்று திடீரென சந்தித்துப் பேசினார்.

டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள வடக்கு பிளாக்கில், இச்சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது.

2ஜி ஊழல் வழக்கில் மொத்தம் 125 சாட்சிகள் உள்ள நிலையில், நீரா ராடியா இதில் 44 ஆவது சாட்சியாக இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://tamil.webdunia.com

கருத்துகள் இல்லை: