புதன், 15 ஜூன், 2011

தலைமைச் செயலக மாற்றத்திற்குத் தடையில்லை - தீர்ப்பு

தலைமைச் செயலகம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்படுவதற்குத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாறியவுடன் தலைமைச் செயலகமும் மாறியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல மனுவிற்கு அரசு பதில் அளிக்கவேண்டும் என்று கூறி வழக்கை இன்றைய தினத்திற்குத் தள்ளி வைத்தது உயர்நீதிமன்றம்.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தலைமைச் செயலகம் செயிண்ட்ஜார்ஜ் கோட்டையில் செயல்படுவதற்கு தடை விதிக்க இயலாது என்று கூறி தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தது.

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
http://tamil.webdunia.com

கருத்துகள் இல்லை: