2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி பிணை கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.
2 ஜி ஊழல் வழக்கில் கனிமொழியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் கைது செய்யப்பட்டு மே 20ஆம் தேதி முதல் திகார் சிறையில் உள்ளனர்.
2ஜி வழக்கில் சி.பி.ஐ தாக்கல் செய்த 2வது குற்றப்பத்திரிகையில் இருவரின் பெயர்களும் இடம்பெற்றிருந்ததைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இருவரும் தாக்கல் செய்திருந்த பிணை மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 9ஆம் தேதி நிராகரித்தது. அவர்களுக்கு எதிரான குற்றச்சாற்றுக்கு ஆதாரம் உள்ளதாக கூறிய நீதிமன்றம், அவர்களை பிணையில் விடுவித்தால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தது.
இந்த நிலையில் பிணை கோரி உச்ச நீதிமன்றத்தில் கனிமொழி, சரத்குமார் ஆகியோர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
http://tamil.webdunia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக