வெள்ளி, 10 ஜூன், 2011

சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி வழ‌க்‌கி‌ல் இ‌ன்று ‌தீ‌ர்‌ப்பு

சம‌ச்‌சீ‌‌ர் க‌ல்‌‌‌வி‌த் ‌தி‌ட்ட‌‌ம் ‌நிறு‌த்‌தி வை‌க்க‌ப்ப‌ட்ட வழ‌க்‌கி‌ல் ‌விசாரணை முடிவடை‌ந்த‌தை தொட‌ர்‌ந்து செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் இ‌ன்று மாலை ‌தீ‌ர்‌ப்பு அ‌ளி‌‌க்‌கிறது.

கட‌ந்த தி.மு.க. ஆட்சியில் கொ‌ண்டுவர‌ப்ப‌ட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தை அ.இ.அ.‌தி.மு.க. அரசு நிறுத்தி வைத்தது. இதை எதிர்த்து சென்னை உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஷியாம் சுந்தர், மணிமேகலை, பிரின்ஸ் கஜேந்திரபாபு உட்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான சட்டத்திருத்த மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்து, அதை சட்ட‌ப்பேரவையில் நிறைவேற்றியது.

இந்த சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து மணிமேகலை, பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் மீண்டும் மனு தாக்கல் செய்தன‌ர்.

இந்த மனுக்க‌ள் அனை‌த்து‌ம் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆ‌கியோ‌ர் கட‌ந்த 2 நா‌ட்களாக ‌விசாரணை நட‌ந்து வ‌ந்தது. இ‌ந்த வழ‌க்‌கி‌‌ன் ‌விசாரணை இ‌ன்று காலை முடிவடை‌ந்தது.

இதையடு‌த்து வழ‌க்‌கி‌ன் ‌தீ‌ர்‌ப்பை இ‌ன்று மாலை 4 ம‌ணி‌க்கு அ‌றி‌வி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற‌ ‌நீ‌திப‌தி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
http://tamil.webdunia.com

கருத்துகள் இல்லை: