சாத்தான்குளத்தில் மகள் இறந்த அதிர்ச்சியில் தாயும் இறந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் நாராயணன். நகை தொழிலாளி. அவரது மனைவி உச்சினிமாகாளி. நாராயணன் இறந்த பிறகு உச்சினிமாகாளி குலசை ரஸ்தா தெருவில் உள்ள தனது மூத்த மகள் வள்ளியம்மாளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் தென்காசியில் உள்ள தனது இரண்டாவது மகள் வீட்டிற்கு அவர் சென்றார்.
இதற்கிடையே மூத்த மகள் வள்ளியம்மாள்(42) திடீர் என்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். இது பற்றிய தகவல் தென்காசியில் உள்ள அவரது தாயார் உச்சினமாகாளிக்கு தெரிவிக்கப்பட்டது.
உடனே புறப்பட்டு அதிகாலை சாத்தான்குளம் வந்தார். வீட்டு வாசல் அருகே வரும்பொழுதே கதறி அழுதவாறு வந்தவர் திடீரென மயங்கி விழுந்தார். அதே இடத்தில் உச்சினமாகாளி உயிர் பிரிந்தது.
இறந்த இருவரது சடலமும் ஒரே இடத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.
மகள் இறந்த அதிர்ச்சியில் தாயும் இறந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
http://thatstamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக