திங்கள், 13 ஜூன், 2011

கனிமொழி ஜாமீன் மனு மீதான விசாரணை 20 ம் தேதிக்கு தள்ளி வைப்பு!

கலைஞர் தொலைக் காட்சிக்கு ரூ 214 கோடி கைமாறியதில் கூட்டுச் சதி செய்ததாக சி பி ஐ யால் குற்றச்சாட்டப் பட்டு திகார் சிறையில் அடைக்கப் பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஜாமீனில் தம்மை விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார்.

இன்று காலை கனிமொழி ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த நிலையில் இது குறித்து வரும் 20 ம் தேதிக்குள் சி பி ஐ விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ 200 கோடி கலைஞர் தொலைக் காட்சிக்கு கைமாறியதில் என்ன நடைபெற்றது என்றும் ராசாவின் பதவிக் காலத்தில் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியதில் அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும் தெரிவிக்குமாறு சி பி ஐ க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத்தால் கடந்த புதன்கிழமை கனிமொழியின் ஜாமீன் மனு நிராகரிக்கப் பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா என்று வரும் 20 ம் தேதி தான் தெரிய வரும்.

கருத்துகள் இல்லை: