சிறிலங்கா விவகாரத்தில் கருத்துகளை வெளியிடும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை முறியடிக்க சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு சிறப்பு கண்காணிப்பு பிரிவு ஒன்றை அமைக்கவுள்ளது.
தமிழ்நாட்டின் நிலைமைகளை இந்தக் குழு கண்காணித்து, எதிர் நடவடிக்கைளை மேற்கொள்ளவுள்ளது.
ஐ.நா அறிக்கை வெளியான பின்னர், சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் வலுப்பெற்று வருகிறது.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் கருத்துகள் ஆங்கிலத்தில் அதிகளவில் வெளியாவதால், அவை அனைத்துலக ஊடகங்களில் இலகுவாகவே இடம்பிடித்து விடுகின்றன. இது சிறிலங்கா அரசுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் தமிழ்நாட்டைக் கவனிக்க சிறப்புக் குழுவொன்றை அமைக்க வெண்டும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதையடுத்தே, தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைக் கண்காணித்து எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் சிறப்புப் பிரிவு ஒன்றை உடனடியாக அமைக்கவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக