: நான் எப்போதும் ரிலாக்சாக உள்ளேன் என ராஜ்யசபா தி.மு.க., எம்.பி., கனிமொழி கூறியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக கனிமொழியின் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பு மே மாதம் 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டில்லியில் பேட்டியிளித்த கனிமொழி, நான் எப்போதும் ரிலாக்சாகவே உள்ளேன். ஜாமீன் மனுமீதான தீர்ப்பு எவ்வாறு வரும்என்பதை மே 20ம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார். தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., தோல்வியடைந்தது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். ஜாமீன் மனு மீதான வழக்கின் போது கனிமொழியுடன் அவரது கணவர் மற்றும் ஒரு சில தி.மு.க., எம்.பி.,க்கள் உடன் வந்தனர். கோர்ட் வளாகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுடன் கனிமொழி சில மணி நேரம் பேசிவிட்டு சென்றார்.
http://www.dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக